மனதிற்கு இரெண்டு குணம் கொண்ட தன்மைகள் உண்டு...
*ஒன்று ஆதரவு குணம்*
*மற்றொன்று எதிர்ப்பு குணம்*
ஆதரவு குணம் என்பது நேசம்
அது பகிர்ந்திட தயாராகவே இருக்கும்
ஆதரவு குணம் கொண்ட மனம் காத்திருக்கும்
ஆதரவு குணம் நிம்மதியை கொண்டிருக்கும்
ஆனால்......
எதிர்ப்பு குணம் என்பது பொறாமை தன்மை கொண்டது
அது உரிமை கொண்டாடி உருக்க வைக்கும்
எதிர்ப்பு குணம் எப்போதும் சந்தேகப்படும்
இது எப்போதும் நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டே இருக்கும்
ஒவ்வொரு மனித மனதிற்குள்ளாகவும் ஆதரவு குணமும் உண்டு, எதிர்ப்பு குணமும் உண்டு
எதிர்ப்பு குணத்திற்கு கவனம் செலுத்தாமல்,
ஆதரவு குணத்திற்கு வலிமையைக் கூட்ட வேண்டும்
எதிர்ப்பு குணத்திற்கு அதிக கவனம் தந்தால்
அத்தனையும் இழந்து போகும் நிலை வந்துவிடும்
ஆதரவு குணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால்
இருப்பதையும் தக்க வைத்துக்கொள்ளாலாம்,
மேலும் ஆனந்தம் பெருகி அன்புடனே வாழலாம்
மிக மிக கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான குறிப்பு :
ஆதரவாக இருப்பவர்களை
மேலும் ஆதரவு கேட்டு
தொல்லை கொடுத்தால்
ஆதரவும் விலகிப் போகும்
அனுபவத்தில் கண்ட உண்மை இது
அன்பாய் இருப்பவர்களுக்கு
ஆதரவு இருப்பாக இருப்பதை
உணர முடியாத நிலையில் இருப்பவர்கள்
இதை கவனித்தில் கொண்டால்
எப்போதும் ஆதரவு நிலைக்கும், நீடிக்கும்
எதை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பது அவரவரே முடிவு செய்து கொள்ளலாம்
மன அலசலின் அனுபவத்தில் : உள் முக பயணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக