திங்கள், 16 டிசம்பர், 2019

மார்கழி மாதத்தில் கோலம் போடுவதன் சிறப்புகள்



பிறந்தது மார்கழி மாதம்... கோலம் போடுவதில் இத்தனை சிறப்புகளா?
மார்கழி மாதத்தில் கோலம் போடுவதன் சிறப்புகள் !!


🔆 தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் சிறப்புகளுடன் விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம். அதில் மார்கழி மாதம் பக்தி மணம் நிறைந்த மாதமாகும்.

🔆 நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப் பொழுதாகவும் அமையும்.

🔆 அப்படி பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருப்பதால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்ததாகிறது.

🔆 இந்த ஒரு மாதம் தினமும் விடியற்காலை ஆலயத்திற்கு சென்றால் வருடம் முழுதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

🔆 மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும், எல்லா மாதங்களும் கோலம் போடுவோம். ஆனால், மார்கழி என்றால் தனிச் சிறப்பு. இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக இதை கூறுகிறார்கள்.

🔆 வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நிறைந்த இறைவனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரப் போகும் துன்பங்களும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்துவிடும்.

🔆 அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசல் தெளித்து கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம்(கதிரவன்) கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.

🔆 வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும், ஆசிகளும் கிடைக்கும். நல்ல காற்று, ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும்போது ஒளி ஆற்றல் கிடைக்கிறது. கோவிலை வலம் வரும்போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.

🔆 அக்காலத்தில் அரிசி மாவால்தான் வீட்டின் முற்றத்தில் பலவகை கோலம் போடுவார்கள். கோலங்கள் தீயசக்திகளை வீட்டினுள் வருவதை தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பித்துருக்கள் வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும், அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும் அமாவாசை, சிரார்த்த தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு.

🔆 ஊருக்கு முன் வாசல் தெளித்து கோலம் போடு, இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் போவதாய் இருந்தால் அவர்கள் போவதற்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு, அவர்கள் போனபின் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள். கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும்.

🔆 கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மன ஒருமைப்பாடு இருந்தால்தான் புள்ளிகளை சரியாக இணைத்து கோலம் போடமுடியும். நம் மனதை பிரதிபலிப்பதுதான் கோலம். கோலம் மனமகிழ்ச்சியை தரும்.


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக