வெள்ளி, 21 ஜூன், 2019

முதல்வரின் அதிரடியால் கண்கலங்கிய செகரட்டரி... அப்படி என்ன செய்தார்? காமராஜர்.



முதல்வரின் அதிரடியால் கண்கலங்கிய செகரட்டரி... அப்படி என்ன செய்தார்? காமராஜர்.

காமராஜர் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள்...!!

👉முதல்வராக கர்மவீரர் காமராஜர் பதவியேற்ற முதல் ஆண்டு. அப்போது இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில் வழங்கப்படும். இதற்காக தேர்வு செய்யப்பட்ட நூறு விண்ணப்பங்களை முதல்வர் மேஜையில் வைத்தார் சீப் செகரட்டரி. அப்போது காமராஜர் கேட்டார் இது என்ன கோப்புகள் என்று?

👉அதற்கு சீப் செகரட்டரி, ஐயா! ஒவ்வொரு ஆண்டிலும் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில் வழங்கப்படும். அதற்காக மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட நூறு விண்ணப்பங்கள் இங்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இருபது விண்ணப்பங்களை நீங்கள் பொறுமையாக தேர்வு செய்து தாருங்கள். இன்னும் இதற்கு கால அவகாசம் உள்ளது என்று கூறினார் சீப் செகரட்டரி.

👉அதற்கு காமராஜர் அவ்வளவு நேரம் எதற்கு? உடனே தருகிறேன் என்று விண்ணப்பங்களை பார்த்து இருபதை தேர்வு செய்து சீப் செகரட்டரியின் கையில் கொடுத்தும் விடுகிறார். சீப் செகரட்டரிக்கு ஒரே ஆச்சரியம். முதல்வரை பார்த்து, எதை வைத்து உடனே விண்ணப்பங்களை தேர்வு செய்தீர்கள் என்று கேட்கிறார்.

👉அதற்கு காமராஜர், 'பெற்றோர் கையொப்பம்" என்ற இடத்தில் யாரெல்லாம் 'கைரேகை" வைத்திருக்கிறார்களோ அவற்றைத்தான் தேர்ந்தெடுத்தேன். மேலும் முதல் தலைமுறையில் படிக்காதவர்களின் வீட்டு பிள்ளைகள் அடுத்த தலைமுறையிலாவது படித்து முன்னேறட்டுமே என்று காமராஜர் சொன்னவுடன் கண்கலங்கி நின்றாராம் சீப் செகரட்டரி.


👉காமராஜர் 'படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு (ஒரே ஒரு ஆசிரியர் வைத்து இயங்கும் பள்ளி) ஆசிரியர்களாக நியமித்துவிட்டால் என்ன? 'அ" - 'ஆ", 'அம்மா, அப்பா, படம், பட்டம், மரம், மாடு"-ன்னு கற்றுத் தரப் பயிற்சி ஆசிரியர்தான் தேவையா?" என்று வினவினார். அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு.நெ.து.சுந்தர வடிவேலு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

👉எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அரசாங்கத்தின் செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.

👉இதன்பிறகு எல்லா கிராமங்களிலும் இரவுப் பாடச்சாலைகள் தொடங்கப்பட்டன. முதியோர்கள் கல்வி கற்கலானார்கள். எழுத்துக்கள், எண்கள் எழுத படிக்க கற்றுக்கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் கல்வி நிலை உயர்வடைந்தது.

காமராஜர் கல்வித்துறை மட்டுமல்லாது மற்ற துறைகளில் செய்த திட்டங்களை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக