திங்கள், 10 ஜூன், 2019

பெண்கள் எத்தனை வகைகள்.


♥பெண்கள் எத்தனை வகை??

♥பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால் செண்பக மரம் பூக்கும் என்கிறது வடமொழி.

♥தமிழர்களும் வேங்கை மரத்தை பெண்களின் திருமணத்தோடு இணைத்துப் பேசுவர். அது பெண்களுக்கும் மரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிப் பேசுகிறது.

♥அசோக மரத்தைப் பெண்கள் உதைத்தால் அது பூக்கும்
பெண்கள் #உதைத்தால் பூக்கும் அசோகமரம்
பெண்கள் #சிரித்தால் பூக்கும் செண்பக மரம்
பெண்கள் #பேசினால் பூக்கும் நமேரு மரம்
பெண்கள் #தழுவினால் பூக்கும் குராபக மரம்
பெண்கள் #பார்த்தால் பூக்கும் திலக மரம்

♥பெண்கள் எத்தனை வகை?
பெண்களை #வடமொழி வித்தகர்கள் #நாலு வகையாகவும்,
#பரத சாஸ்திர அறிஞர் பரத ரிஷி #எட்டு வகையாகவும்
#தமிழர்கள் வயதின் அடிப்படையில் #ஏழு வகையாகவும்,
#ஜப்பானியர்கள் #ஒன்பது வகையாகவும், #ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டி.என்.ஏ. அடிப்படையில் #ஏழு வகையாகவும் பிரித்தனர்.

♥#பத்மினி, #சங்கினி,#ஹஸ்தினி, #சித்ரினி என வடமொழி நூலர்கள் குணத்தின் அடிப்படையில் பெண்களை நாலு வகையாகப் பிரித்தனர்.

♥பத்மினி வகை பெண்களைப் பார்ப்பது அபூர்வம். அவர்கள் மிகவும் அழகானவர்கள், மென்மையானவர்கள்,புனிதமானவர்கள். முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அவர்கள் சுஹாசினி (மலர்ந்த முகம்). சுபாஷினி ( இனிய சொல்), சாருஹாசினி (புன்சிரிப்புடையோர்) ஆவர். அழகிய கவர்ச்சிகரமான பார்வையால் எதிரிகளையும்  வசப்படுத்துவர்.
உலகத்தமிழ் மங்கையர் மலர்.

♥சங்கினி வகைப் பெண்கள் அழகானவர்கள், புத்திசாலிகள், சுறு சுறுப்பானவர்கள். சங்கு வடிவத்தில் சில உடல் அம்சங்கள் ஒல்லியாக இருக்கும். சுதந்திர சிந்தனை படைத்தவர்கள். அதிக சக்தி உடைய இவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோர் கார்கி, வைதேகி, சுரவந்தியா ஆவர்.

♥ஹஸ்தினி வகைப் பெண்கள் பார்பதற்கு இனியவர்கள், ஆனால் பருமனானவர்கள். பின் தூங்கி பின் எழும் பத்தினிகள். கேளிக்கை விரும்பிகள். நீங்கள் முடிவு எடுத்தால் கோபிப்பார்கள். தானாகவும் முடிவு எடுக்க மாட்டார்கள். கேளிக்கையே வாழ்க்கையின் குறிக்கோள். பிரபுக்கள் வம்சம்.

♥சித்ரினி மிக மெல்லிய தேகம் உடையோர். மூங்கில் குச்சியோ எனலாம். அலங்காரத்திலும் கலைகளிலும் ஆர்வம் அதிகம். அலமாரி முழுதும் ஆயிரம் உடைகளைப் பார்க்கலாம். படுக்கப் போகும் போதும் படுத்து எழுந்திருக்கும் போதும் அலங்காரத்துடன் வருவர். அலங்காரி, சிங்காரி ஒய்யாரி-பேஷன் பேர்வழிகள்.

♥2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் 40 வயதுக்குக் குறைவான பெண்களை மட்டும் வயது அடிப்படையில் ஏழு பிரிவுகளாகப் பிரித்தனர். அதற்குப் பிறகு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
உலகத்தமிழ் மங்கையர் மலர்


♥பேதை (5—7),
♥பெதும்பை (8—11),
♥மங்கை (12—13),
♥மடந்தை (14—19),
♥அரிவை (20—25),
♥தெரிவை (25—31),
♥பேரிளம் பெண் (32 முதல் 40 வயது).

♥காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலியல் ரீதியில் ஆண்களையும் பெண்களையும் பலவகைகளாகப் பிரித்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.

♥நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையோடு இவ்விஷயங்களை அனுகினர் என்பதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

♥பெண்ணின் குணங்கள்
♥தாயின் கருணை,
♥அடியாள் போல தொண்டு,
♥பூமாதேவி போல பொறுமை,
♥படுக்கை அறையில் மகிழ்விக்கும் பெண், ♥குடும்ப நிர்வாகத்தில் மந்திரி போல அற்புத மூளை—
அத்தனையும் வாய்கப் பெற்றவள் தான் தாய் மனைவி சகோதரி மகள் என்ற பெண்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக