செவ்வாய், 30 ஏப்ரல், 2019

'உழைக்கும் கரங்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்"


உழைக்கும் நண்பர்களுக்கு ஒரு தினம் - அதுதான் உழைப்பாளர் தினம் !

உலகம் முழுதும் எத்தனையோ இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள் இன்று. காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த நாளே நாம் மே தினமாக கொண்டாடுகிறோம்.

உலகின் படைப்புகளெல்லாம் உழைப்பின்
சிதறல்களே..!
உலகத்திலிருந்து உழைப்பை கழித்தால்
வெறும் மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..!
அதனால், உழைப்பாளிகளை மதிப்போம்..!
💪 1880 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890 - ஆம் ஆண்டு பாரீசில் உருவானது தான் மே தினம் அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1. இது பள்ளி விடுமுறைக் காலத்தில் வருவதால் பலரும் இந்த நாளைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை.

💪 மற்ற விடுமுறை நாட்களைப்போல இதுவும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம்.

💪 மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம் ஆகும்.

மே தின வரலாறு :

1889 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் 'சர்வதேச தொழிலாளர் மாநாடு" கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது.

முன்னோர்களின் தியாகம் :

உழைக்கும் வர்க்கத்துக்கு
உண்மைநிலை உணர்த்தி
உயர வைக்குமா இந்த மே தினம் !!
அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. அமெரிக்காவில் தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலை நாட்டப்பட்டது.

எல்லோரும் எல்லாமும் பெற :

இது எல்லோருக்குமான உலகம். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும். இந்த மே தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கேள்வி இது.

'உழைக்கும் கரங்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக