வியாழன், 11 ஏப்ரல், 2019

தாய்ப்பால் இல்லாமல் கஷ்ட படுறீங்களா?? கவலை வேண்டாம் இதனை கடைபிடியுங்கள்!

தாய்ப்பால் இல்லாமல் கஷ்ட படுறீங்களா?? கவலை வேண்டாம் இதனை கடைபிடியுங்கள்!

கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கு ஊற ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு கருப்பட்டியின் சுவை இருக்கும். இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள். 
நம் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான இடம் பிடித்த ஒன்று கருப்பட்டி. இன்று இந்த கருப்பட்டியை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் இதில் அடங்கியுள்ள எண்ணற்ற பலன்களைப் பற்றி அறிந்து கொண்டால் நாம் நிச்சயம் இதனை மீண்டும் பயன்படுத்த துவங்குவோம். கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். வறட்டு இருமலை அகற்ற கருப்பட்டியை பாலில் சேர்த்து சாப்பிடவேண்டும்.

கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். மேலும், தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஆரோக்கியம் தரும் கருப்பட்டியை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக