புதன், 17 ஜனவரி, 2018

முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?




முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

கர்ப்பமாக இருக்கும் போது எல்லாம் பெண்களுக்கும் அவர்களை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்து கொண்டேயிருக்கும். இதைச் செய்யலாமா கூடாதா? இவற்றையெல்லாம் மருத்துவரிடம் எப்படி கேட்பது என்ற தவிப்பில் மனம் நிலை கொள்ளாது இருப்பவர்கள் உங்களுடைய சந்தேக கேள்விகளை எங்களுக்கு அனுப்பலாம்.

இப்போது இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் பெண்களுக்காக இந்தக் கட்டுரை...

முதல் குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது கருவுறலாமா? அப்படி கருவுற்றால் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் முதல் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்புகள் வருமா என்பது குறித்து பார்க்கலாம்.

பழமை காலத்திலிருந்து தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருத்தரிக்க கூடாது அப்படி தரித்தால் முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காது என்பார்கள். அதை நம்பி இரண்டாவது குழந்தை குறித்த பயம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

தாய்ப்பால் கொடுப்பது உங்களுடைய ஓவலூசனை தாமதப்படுத்துமே ஒழிய கர்பத்தை தடுக்காது. பலரும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருப்பதால் கர்ப்பமடைய் மாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவும் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு சில சமயங்களில் முறையற்று இருக்கும். மாதவிடாய் முறையற்று இருக்குமென்பதால் தாய்பால் கொடுக்கும் காலங்களில் தாங்கள் கர்ப்பமடைய மாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறானது.


தாய்ப்பால் சுரப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது ப்ரோலாக்டீன் தான். இவை உங்களுடைய இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு அடிப்படையாய் விளங்குகிறது. இந்த ப்ரோலாக்டீன் அதிகமாக இருந்தால் உடலில் மலட்டுத் தன்மையை அதிகரிக்கும்.
ஏனென்றால் இந்த ப்ரோலாக்டீன் உங்களது மாதவிடாயை முறையற்று ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

பொதுவாகப்பார்த்தால்.... உங்களுக்கு மாதவிடாய் சீரானதும் வழக்கம் போல ஒரு மாத இடைவெளியில் மாதவிடாய் வரத்துவங்கியதும் நீங்கள் கர்ப்பமடைவது தான் உங்களுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது ஆரோக்கியமானதும் கூட தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் முன்னர் இதை மட்டுமாவது உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் உங்கள் கருப்பையில் கரு உருவாவதை, வளர்வதை தடுத்திடும். இந்த ஹார்மோனால் கருவிற்கு பாதிப்புகள் உண்டு.
இப்படி ஆக்ஸிடாசினால் கருவின் வளர்ச்சியில் சிக்கல் இருக்கிறது என்பதை கர்ப்பமடைந்து 24வது வாரத்தில் தான் கணிக்க முடியும்.

இதனால் ஓர் குழந்தை தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கும் போது உங்களுக்கு மாதவிடாய் இன்னும் சரியாகாத நேரத்தில் இரண்டாவது குழந்தை கருத்தரிக்க வேண்டாம்.

உங்களுடைய மாதவிடாயை மட்டும் கணக்கிடுங்கள். அதோடு உங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் மாதவிடாய் சீராகிவிட்டது, பழைய உடல் ஆரோக்கியத்திற்கு திரும்பி விட்டேன் என்றால் நீங்கள் தாராளமாக இரண்டாவது குழந்தை கருத்தரிக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் இளம்தாய்மார்கள் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்.
உங்கள் மார்பகங்கள் தான் உங்களது முதல் அடையாளம். ஏற்கனவே ஒரு குழந்தைப் பெற்று தளர்ந்து போய் இருக்கும் உங்கள் மார்பகத்தில் சில மாற்றங்கள் தெரியும். சில நேரத்தில் தளர்ந்திருக்கும் மார்பகம் கட்டியாவதை உணர்வீர்கள்.

தாய்ப்பால் உற்பத்தியாவதற்கு ஏதுவாக தளர்ந்திருக்கும் மார்பகங்கள் மீண்டும் கருத்தரிக்கும் போது சில மாற்றங்களை சந்திக்கும். அதோடு நம் உடலில் கரு உருவாகக்கூடிய ஹார்மோன் அதிகரிக்கும்போது தாய்ப்பால் உற்பத்தியாகிற அளவு குறைய ஆரம்பிக்கும்
இதனால் முதல் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காது. முதல் குழந்தைக்கு பிறந்து தாய்ப்பால் மட்டுமே குடிக்கிற மாதமே ஆகியிருக்கிறது என்றால் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக