திங்கள், 19 ஜூன், 2017

யார் இந்த ‘ராம் நாத் கோவிந்த்’?



யார் இந்த ‘ராம் நாத் கோவிந்த்’?

தொழில்முறையில் வழக்கறிஞர், தலித் பிரிவில் பிறந்த தலைவர், இந்துத்துவா சிந்தனை அதிகம் கொண்டவர், அரசியல் ரீதியாக பா.ஜனதா கட்சிக்காக ஆத்மார்த்தமாக பணியாற்றும் தொண்டர் என்றுராம்நாத் கோவிந்த்தை குறிப்பிடலாம்.
பிறப்பு
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 1945ம் ஆண்டு, அக்டோபர் 1-ந்தேதிகான்பூர்,தேராப்பூரில்பிறந்தவர். பி.காம்இளங்கலை பட்டப்படிப்பு முடித்தராம்நாத்கோவிந்த், கான்பூர் பல்கலைக்கழக்கத்தில் எல்.எல்.பி. வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.
வழக்கறிஞர்
அதன்பின், டெல்லி சென்றராம்நாத் கோவிந்த், கடந்த 1971ம் ஆண்டு பார்கவுன்சிலில்தன்னை பதிவு செய்து கொண்டார். 1977-79 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பின் 1980ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தில்மத்தியஅ ரசின்வழக்கறிஞராக பணியாற்றினார். டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஏறக்குறைய 16 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்ராம்நாத் கோவிந்த்.
எம்.பி.

பா.ஜனதா கட்சியில் சேர்ந்தராம்நாத்கோவிந்த் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 1994ம் ஆண்டு முதல்முறையாக மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தார்.

நாடாளுமன்ற குழு

நாடாளுமன்ற எம்.பியாகஇருந்த போது கோவிந்த்பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. நலவாரிய குழு,உள்துறை விவகாரக்குழு,பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயு குழு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழு, சட்டம் மற்றும் நீதிக்குழு,மாநிலங்கள் அவைக்குழுவின் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்தவர்.

தலித் பிரிவு தலைவர்

மேலும், பா.ஜனதா கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளராகவும்,தலித் பிரிவான ‘தலித்மோர்ச்சா’அமைப்பின் தலைவராகவும், ‘அனைத்து இந்திய கோலிசமாஜ்’தலைவராகவும் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2002 வரை கோவிந்த் இருந்தார்.

கல்விப்பணி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் கல்வியைக் கொண்டு சேர்க்கராம்நாத் கோவிந்த் பலநடவடிக்ைககள்எடுத்தார். தனது 12 ஆண்டு கால எம்.பி.பதவியின் போது, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் மாநிலத்தில் பள்ளிகள் கட்டவும் பெரும் உதவிகளை கோவிந்த் செய்தார். லக்னோவில் உள்ளஅம்பேத்கர்பல்கலைகழகத்தில் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராகவும்,கொல்கத்தாஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்திலும் நிர்வாகக்குழுவிலும் கோவிந்த் இருந்துள்ளார்.

சட்ட உதவி

வழக்கறிஞரான கோவிந்த், நலிந்த பிரிவினருக்கும், தலித் மக்களுக்கும் ,பெண்களுக்கும் டெல்லியில் இலவச சட்ட உதவிகளைச் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் மக்களின் ஆதரவு கட்சியானபகஜன்சமாஜ், அதன் தலைவரமாயாவதிக்குமாற்றாக பா.ஜனதா கட்சியால்ராம்நாத் கோவிந்த் வளர்க்கப்பட்டார்.

ஆளுநர்

கடந்த 2015ம் ஆண்டு,ஆக்ஸ்ட்8-ந்தேதிபீகார் மாநிலத்தின் ஆளுநராக கோவிந்த் நியமிக்கப்பட்டு அங்கு செயலாற்றி வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ். பின்புலம்

கடந்த 2002ம் ஆண்டு இந்தியா சார்பில் ஐ.நா சபைக்கு சென்று உரையாற்றிய பெருமையை கோவிந்த் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், பா.ஜனதா கட்சியிலும் அனைத்து தலைவர்கள் மத்தியில்ராம்நாத் கோவிந்த்நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். குறிப்பாக ரூபாய் நோட்டு தடை காலத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு தீவிர ஆதரவாக இருந்து கருத்துக்களைத் தெரிவித்தவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக