சனி, 16 மே, 2020

#பூப்பெய்திய_பெண் #குழந்தைகள்_சாப்பிட #வேண்டிய #10_பத்து #உணவுகளும் #தகவல்களும் !


#பூப்பெய்திய_பெண்
#குழந்தைகள்_சாப்பிட #வேண்டிய
#10_பத்து
#உணவுகளும்
#தகவல்களும் !

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் 'பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

"பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் 'சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்' என்று நினைத்துக் கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.


மேலும் உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும்.

எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்" என்கிறார் சித்த மருத்துவர் மல்லிகா.

♦பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகளில் சில தகவல்கள் இதோ உங்கள் பார்வையில்

1. #கறுப்பு_உளுந்து

தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

2. #நல்லெண்ணெய் -

ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3.#நாட்டு_முட்டை

பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

4.#கம்பு

வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.

5.#பொட்டுக்_கடலை -

பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

6.#அசைவ__உணவுகள்

மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

7.#கீரை_வகைகள் -

மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

8.#பாகற்காய், #சுண்டைக்காய்

சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.

உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

9.#சத்துமாவு_உருண்டை

கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

10.#கொண்டைக்கடலை -

கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும்.

இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை.

சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும்.

சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள்.

இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்...

வியாழன், 14 மே, 2020

சர்வதேச குடும்ப தினம் மே 15 !


சர்வதேச குடும்ப தினம் மே 15 !

 சர்வதேச குடும்ப தினம்!
'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற வரிக்கேற்ப குடும்பம் சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கிறது. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் , ஊர் நன்றாக இருக்கவேண்டும். ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் , வீடு நன்றாக இருக்கவேண்டும். வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும். இன்று மே 15 ஆம் தேதி உலக முழுவதும் சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் நோக்கில் ஐ.நா. சார்பில் மே 15 ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினம் எந்தச் சூழ்நிலையிலும் எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

ஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவது என்பது அரிது. ஒருவரின் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தீர்மானிப்பது குடும்பம்தான். இன்றைய காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது. சுதந்திரம் வேண்டும் என்ற நோக்கில் பெரும்பாலானோர் தனிக் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்கும் முதியோர் இல்லாமையால்,அவர்கள் வழி தவறி செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல், கல்வி,வேலை, போன்ற காரணங்களால் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். நவீன தொழில்நுட்ப காலத்தில்,குழந்தைகள் வாட்ஸ் அஃப், ஃபேஸ்புக்கில் முழுகிக் கிடக்கின்றனர். அவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பேச நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களுடைய துன்பங்களையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள மனிதர்களை விட இயந்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இளைஞர்கள், தங்கள் உறவினர்கள் அனைவரோடும் கூட சந்தோஷமாக இருக்கும் நிகழ்ச்சிகளில், கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டு, பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுகின்றனர். எப்போதுமே, தனிமையில் இருப்பதால், மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நாம் பேசும் ஒருசில வார்த்தைகளால் குடும்பம் கண்ணாடி துண்டு போல், இரண்டாகப் பிரிகிறது. உடைந்த கண்ணாடி துண்டை ஓட்ட வைப்பது எவ்வளவு கடினமோ, அதுபோன்றுதான், பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பது. அதனால், ஒருசில வேளைகளில் நம்முடைய நாவை அடக்கிக் காப்பதும் நன்மை பயக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மனம் விட்டுப் பேசுவதால், எத்தனைப் பெரிய காரியங்களையும் எளிதாகக் கையாள முடியும்.

அதனால், நாம் அனைவரும் நல்ல குடும்பத்தை உருவாக்குவதும், இருக்கின்ற குடும்பத்தை தக்க வைத்துக் கொள்வதும் நமது கடமையாகும். நமக்கு முன் வாழ்ந்துவிட்டுச் சென்ற முன்னோர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நல்ல குடும்பங்களை அமைப்போம் என உறுதிமொழி எடுப்போம்.

செவ்வாய், 12 மே, 2020

விலங்குகளில் நாய்கள் மட்டும் ஏன் மனிதர்களிடம் மிக அன்புடனும் நன்றியுடனும் உள்ளன?


விலங்குகளில் நாய்கள் மட்டும் ஏன் மனிதர்களிடம் மிக அன்புடனும் நன்றியுடனும் உள்ளன?

என்ன பண்றது அதுங்களுக்கு வேற ஏதும் தெரியாதே.

அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்...!

ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது...?

இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

ஆடு,மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள், இலை தழைகள் உள்ளன.

ஆனால் இந்த நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.

உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது???வீட்டிற்குள் இருந்து யாராவது வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறுபங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?


சாலையோரக் கடையிலோ, தள்ளு வண்டிக் கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது, கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது...?

குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்கு மனிதகுலம் இடம் பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்கிறது.

குகையில் வாழ்ந்து பழகியவன், வீடு கட்டி வாழப் பழகுகிறான். மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டி விட்டான்.

“தெரு நாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்...

தொடர்வோம்...

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும் போதும் அவன் மட்டும் வரவில்லை. தனக்குப் பயன்படக்கூடிய, தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.

அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”. "ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.




நரி, ஓநாய், செந்நாய் குடும்ப வகையை சேர்ந்தது தான் நாயும். அவற்றைப் போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்கு தான். அவைகளுக்கு இருந்த எல்லாக் குணமும் நாய்க்கும் இருந்தது.

ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அது தான் நாயை இன்று தெருவில் அலைய விட்டிருக்கிறது. அது தான் அன்பும் நன்றியுணர்வும்….

எலித் தொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலி தான். ஆனால், அன்பைத் தவிர வேறு எதையுமே கொடுக்க முடியாததால் கைவிடப்பட்டுத் தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்று விட்டது.

வேளாண்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூனை போன்றவற்றை மனிதன் வேட்டையாட, பொழுது போக்கிற்காக நாய் தேவைப்பட்டது.


Bayeux Tapestry, C.1073 – 1083

வீட்டைக் காவல் காக்கும் இடத்தை சி.சி.டிவிகள் நிரப்பியதால், வீட்டின் மதிப்பிற்கேற்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும், சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்குத் தெருவே வீடாகிப் போனது.

உங்களோடு அதற்குப் பேச மட்டும் தான் தெரியாது. உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்.

உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என அதற்குத் தெரியும். உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்டத் தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்...,அவ்…,அவ்…என சிணுங்கத் தெரியும்.

உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பித் தாக்காமல் விளையாட்டுக் காட்டத் தெரியும்.

உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்துவிட்டுத் திட்டு வாங்கியிருக்கும். ஆனால், அவள் திருமணமாகிச் சென்று விட்டால் மூலையில் படுத்துக் கவலைப்படும்.

வெளியூருக்குப் போய் வந்த நம்மை பார்த்ததும் முன்னங் கால்களைத் தூக்கி மாரில் வைத்துத் தாடையை நக்கும். வாலை ஆட்டிக் கொண்டு மளிகைக் கடைக்கு அம்மாவோடு கூடவே போய்வரும்.

உங்களுக்கு யார் மூலமாவதும் தீங்கா?...

ஒருகை பார்த்துவிடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்கலமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.

அப்படியானால், வீடு இல்லாத நாய்களின் நிலை???

வீடு கிடைத்தவை செல்லப் பிராணியாகி விடுகிறது.

வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை எனப் பார்க்கப்படுகிறது. பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது.

காட்டிலிருந்து வரும்போது அது எந்த மனிதகுலத்தை நம்பி வந்ததோ, அந்த மனிதகுலம் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

சுற்றுலாவிற்குச் செல்லும் போது அங்குள்ள விலங்குகளுக்கு உணவு காெடுக்க வேண்டாம் எனச் சொல்வது இதற்காகத் தான்.

தெருநாய்களால் இன்று காட்டிற்குச் சென்று வாழவும் முடியாது. நாட்டிற்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்து கொள்ளவும் தெரியாது.

அதனால் தான் நீங்கள் சாப்பிடும் போது தெருவில் நின்று உங்கள் தட்டையே வெறித்துப் பார்த்து நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் நாக்கில் இருந்து சொட்டச் சொட்ட வழிவது எச்சில் அல்ல. கைவிடப்பட்ட ஒரு விலங்கின் கண்ணீர். உங்கள் உணவைப் பரிமாறி அதைத் துடையுங்கள்.

நன்றியுடன் இருப்போம்...

திங்கள், 11 மே, 2020

உலக செவிலியர் தினம் மே 12.


உலக செவிலியர் தினம் மே 12.

செவிலியர்... இன்னொரு தாய்!

பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் "செவிலியர்கள்" என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.


’கை விளக்கேந்திய காரிகை’ நைட்டிங்கேல்!

நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார்.'கை விளக்கேந்திய காரிகை' (The Lady with the Lamp)என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார்.

பிரிட்டனில் செல்வச் செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு, மூன்றாண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.

அந்தக் காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தக் காலத்தில் செவிலியர், உயர் செல்வக் குடும்பங்களில் சமையல்காரியாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

பிளாரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார்.

1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 செவிலியருடன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார்.

வசதி குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். அன்பினாலும் சிகிச்சைகளாலும் பிளாரன்ஸ் டையினரைக் குணப்படுத்தினார்.

இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார்.தங்களை காக்க 'விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை' என ராணுவ வீரர்கள் பிளாரன்ஸைக் கவுரவித்தனர்.

மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் மருத்துவத் துறையில் செவிலியர் பணிக்கான நூலாக இருக்கின்றன.

போரிலிருந்து நாடு திரும்பிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக 'பிபிசி'யினால் இனங்காட்டப்பட்டார்.

நாடு திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவபடுத்த விரும்பினர். அவருக்கு பொன்னும், பொருளும் வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு நர்சிங் பள்ளியை நைட்டிங்கேல் தொடங்கினார். இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக, 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம்' என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

இந்தத் தினத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூறும் அதே நேரத்தில், உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை பாராட்டுவது மிக அவசியம்.

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும்!
Thanks Vikatan.

சனி, 9 மே, 2020

அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !!


♥அம்மாவின் அன்புக்கு💞 நிகர் யார்?💯 🤰 அன்னையர் தின வாழ்த்துக்கள்🎈😍

🤰ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்னையின் தியாகம், பெருமையை போற்றும் வகையில் உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🤰மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 09) அன்னையர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மா என்ற வார்த்தைக்குள் எத்தனை எத்தனை அன்பும், பாசமும் நிறைந்துள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது.

🤰அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.


வீட்டின் பணிகளை செவ்வனே செய்து..
வேலைக்கு சென்று...
குடும்ப பாரத்தை பகிர்ந்து,..
கஷ்டம் இருந்தாலும்.. துன்பம் இருந்தாலும்..
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்..
அமைதியாக அன்புடன்..
நடந்து கொள்ளும் விதம்...
அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.
🤰தாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை என்று கூறும் பழமொழி உண்மை என்றால் அது மிகையாகாது. இவ்வுலகில் தாயை தெய்வமாக மதிப்பவருக்கு அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கும். தான் பிறந்தது முதல் ஒரு பெண்ணானவள் பல்வேறு பரிமாணங்களை பெறுகிறாள். மண்ணில் புதையுறும் வரை தன்னலம் பேணாது உழைத்துக் கொண்டே இருப்பவள் தாய்.


அம்மா !!!!....
எத்தனை உறவுகள்
இந்த உலகத்தில் இருந்தாலும்,
காலத்தின் மோதலினால்
அவை மாறுபடும் !!
ஆனால், தாயே உன் அன்புக்கு இணை இவ்வுலகில் எதுவுமில்லை...!!
🤰பிரம்மா இவ்வுலகில் உள்ள உயிர்களை படைக்கிறார் என்றால், பெண்ணும் அதே பணியை தான் செய்கிறாள் என்றால் அது மிகையாகாது.

மறுபிறவி எடுப்பவள் தாய் :

🤰பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும்போது ஒரு முறையும், இரண்டாவது முறை அவளது குழந்தையை பிரசவிக்கும்போது பெண் மறுஜென்மம் எடுக்கிறாள்.

🤰பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள்.

உயர்ந்த உள்ளம் கொண்டவள் தாய் :

🤰தான் உண்ணாமல் இருந்தாலும் தன் குழந்தை உண்ண வேண்டும் என்று நினைக்கும் ஒரே உள்ளம் தாய் தான். பார்த்து பார்த்து ஒரு குழந்தையை கருவுற்று இருக்கும் போதில் இருந்தே கண்ணை இமை காப்பதற்கு மேலாக தன் குழந்தையை பாதுகாத்து வருகிறாள்.

மின்னல் மின்னும்போது...
அம்மாவைக் கட்டி அணைக்கும்...
குழந்தைக்கு தெரிந்திருக்கிறது...!!
அம்மா அதைவிட பெரிய சக்தி என்று...!!
அன்னையர் தினமான இன்று அம்மாவை மகிழ்விக்க, ஆச்சரியப்படுத்த அவர்களுக்கு ஓய்வு கொடுத்து, பரிசளித்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து அவர்களுடன் இன்று ஒருநாள் உங்கள் நேரத்தை செலவிட நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

தாயை மதிப்போம்!!.... தாய்மையை போற்றுவோம்!!...



வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும் தயார் செய்து கொள்வது நன்று

வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும்  தயார் செய்து கொள்வது நன்று

*கொரானாவுக்கு பிறகு*

உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள், அரசாங்கங்கள், தங்களது ஊழியர்களுக்கு  சம்பளம் போடக்கூட பணம் இல்லாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கணிக்கப்படும் வானிலை வேண்டுமானால் தவறாகப் போகலாம்.  ஆனால் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலும் மாறுவதில்லை. அதன்படி நடக்கப் போகும் சங்கதிகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

🚗 துபாய், அபுதாபி உள்ளிட்ட UAE ல் பணியாற்றும் 17,50,000 இந்தியர்களில் ஏறத்தாழ 30% முதல் 40% பேர் வேலை இழப்பது உறுதி. அதாவது கிட்டத்தட்ட 6 இலட்சம் பேர் - யு.ஏ.ஈ. ல் மட்டுமே வேலை இழப்பார்கள்.

🚔 சவூதியில் பணியாற்றும் 15,40,000 பேரில் வேலை இழப்பவர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேர்.

🚌 இவ்வாறு குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைனில் வேலை இழக்க உள்ளார்கள்.

💰 எனது கணவர் அல்லது மகன்,  ஐரோப்பா அல்லது அமெரிக்காவில், ஐடி வேலையில்  இருக்கிறார்கள் பிரச்சினை எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். முதலில் வேலை இழக்கப் போவதும் அல்லது அதிரடியாக சம்பளக் குறைப்புக்கு ஆளாகப் போவதும் இவர்கள்தான். அதிக பாவம் இவர்கள்தான்.

அதனால் மேற்கண்ட இவர்கள் இந்த இன்னலை சந்திக்க தயாராக வேண்டும்.

💪 வேலை இழந்து வருபவர்களில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் குறைந்த பட்சம் கிட்டத்தட்ட 3,00,000 பேர் வருவார்கள். இது 5,00,000 பேர் வரை ஆவதற்கும் வாயய்ப்புகள் உள்ளது.

சரி, இவர்கள் இனி என்ன செய்யலாம்?
கஷ்டம்தான்!!! முதலில் பின்பற்ற வேண்டியது சிக்கனம்தான்.

1. வருடத்திற்கு லட்சங்கள் பீஸ் வாங்கும் பள்ளிகளை தவிர்த்து விட்டு நார்மலான பள்ளிகளில் அல்லது அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கலாம். காரணம் பெரும்பாலான பசங்கள் தந்தையரின் நேரடி கண்கானிப்பு இல்லாத நிலையில் தாய்மார்களிடம் தங்கள் விரும்பியதை வாங்கிக் கேட்டு, படிப்பில் கவனம் இல்லாமல் பல லட்சங்கள் செலவழித்து கடைசியில் B.Com அல்லது BBA மட்டுமே படிக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பம் இல்லாமல் கடமைக்கு BE படிக்கிறார்கள். ஆக செலவு செய்வது வேஸ்ட். இதே படிப்பை ஒரு பைசா செலவில்லாமலே பல லட்சம் பேர் படிக்கிறார்கள்.

2. அம்மாவுக்கு சுகர், மூட்டுவலிக்கு மருத்துவம் பார்க்க சுற்றுலாவுக்கு போவது போல கார் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு  போய், நம்ம டாக்டர் சொல்லிட்டார் என்று எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை அள்ளி வீசி தேவை இல்லாத டெஸ்டுகள் எல்லாம் எடுத்து, பை நிறைய மருந்துகளும், பைல் நிறைய டெஸ்ட் ரிப்போர்டுகளும் எடுத்துக் கொண்டு, ஜவுளிக்கடைக்குள் புகுந்து, தேவையோ இல்லையோ ஒரு புது டிசைன் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. பேக்கரிக்குள் புகுந்து கண்டதையும் வாங்குவதையும், சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கண்டதை எல்லாம் வாரி கூடையில் போடுவதை நிறுத்த வேண்டும்.

4. நாள் வாடகைக்கு கார் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

5. கார் வைத்திருப்பவர்கள் டிரைவரை வேலைக்கு அமர்த்தி சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

6. எக்காரணம் கொண்டும் பழைய நகையை கொடுத்து புது நகை வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பக் கூடாது. இது ஆக முட்டாள்தனமான முடிவு. காரணம் பத்து பவுன் நகையை மாற்றினால் அது, இது என்று பிடித்து கையில் ஏழரை பவுன்தான் கொடுப்பார்கள். கடைக்காரன் பணக்காரனாகவும் நீங்கள் நஷ்டவாளிகளாக வும் ஆகிவிடுவீர்கள்.

7. பசங்க பைக் கேட்கிறார்கள் என்று எந்தக் காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதற்கு மாத தவணையும், பெட்ரோலும் நீங்கள்தான் போட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

8. அதிக செலவு பிடிக்கும் விருந்து கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

9. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், குதிரை, யானை, பேண்ட் வாத்தியம், வெடி இல்லாமல் சிம்பிளாக நடத்துங்கள்.

10. வரதட்சணை கேட்டால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை பாருங்கள்.

11. கார் எடுத்துக் கொண்டு சுற்றுலா போகலாம் என்ற நினைப்பே வரக்கூடாது. ஒன்லி பஸ், டிரைன் சுற்றுலாதான்

12. வெளிநாடுகளில் சம்பாதித்து விட்டு வேலை இழந்து ஊர் திரும்பும் சிலரிடம் நல்ல சேமிப்பு இருக்கலாம். அதை அறிந்து சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் முள்ளு செடியும், கள்ளி செடியும் வளர்ந்த வனாந்திரத்தை காட்டி இப்போது இதை வாங்கிப் போடுங்கள், இன்னும் இரண்டு வருடத்தில் டபுள் விலைக்கு போகும் என்று ரீல் விடுவார்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். ஐந்து வருடம் ஆனாலும் போட்ட காசில் பாதி கூடக் கிடைக்காது

13. உடம்பு சரியில்லாவிட்டால் முதலில் ஒரு ஜெனரல் டாக்டரிடம் காட்டுங்கள். அவரிடம் உங்களுக்கு நோய்களை பற்றி அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அதிக விபரமாக பேசுபவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் அனுப்பப்பட்டு அனைத்து டெஸ்டுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள். அப்புறம் பணம் போய் விட்டதே என்று வருத்தப்படுவீர்கள்

14. மச்சான் ஒரு நல்ல பிஸினஸ் இருக்கிறது போடுங்க காசை அள்ளலாம் என்று சில மச்சினன்மார்கள் சுற்றி வருவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செல்போன் கடை மீது காதல் இருக்கும். ஆனால் அந்த காதல் இப்போதைய நிலையில் உங்களை பஞ்சர் ஆக்கிவிடும்

15. மச்சான் அஞ்சு ரூபாய் சப்பாத்தி, அதுக்குள்ள பத்து ரூபாய் சிக்கன், அஞ்சு ரூபாய் காய்கறியும், ஒரு ரூபாய்க்கு சாஸ் ம் ஊற்றி நூறு ரூபாய் க்கு விற்கலாம், ஒரு ஷாவர்மா விற்றால் 80 ரூபாய் லாபம், ஒரு நாளைக்கு 100 விற்கலாம், ஒரு பர்கர் விற்றால் 50 ரூபாய் லாபம். தினமும் நூறு பர்கர் விற்கலாம் என்று சிலர் தூண்டுவார்கள். அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்வது உங்களுக்கு லாபம். இல்லாவிட்டால் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத உங்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடை போட்டு பத்து நாள் பந்தாவாக பிஸினஸ் செய்து விட்டு, பிறகு வியாபாரம் டல்லடித்ததும் புரோட்டாக் கடை, பிரியாணி கடை என்று அவதாரம் எடுப்பதும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இனி வரும் ஐந்தாண்டுகள் பணப்புழக்கம் குறைவதால் ஆடம்பர ஹோட்டலுக்கு வருவது நின்று அத்தியாவசியமான, விலை குறைவான  உணவுகளையே மக்கள் வாங்குவார்கள்.

16. பிக்ஸட் டெபாசிட்டுகளை ஒரே பேங்கில் வைக்காமல் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்

*17. அவசியம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை  இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். காசு கொஞ்சம் கூடுதலாக செலவானாலும் நமக்கு பிறகு நமது குடும்பத்தினர் பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கவலை நீங்கி விடும்.*

18. பிள்ளைகளை Neet, Jee போன்ற பரீட்சைகள் எழுதவும் Professional கோர்ஸ் படிக்கவும் தயார் படுத்துங்கள்

19. அரசாங்கத்தின் கடைசி நிலையில் இருக்கும் ஊழியருக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, பணிக்கொடை போன்ற எதுவுமே உங்களுக்கு இல்லை அதனால் பிள்ளைகளை போட்டித் தேர்வுகளுக்கு பழக்கி அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரமாக்க முயற்சி செய்யுங்கள்.

20. அவசரம் வேண்டாம் மூன்று மாதம் சுற்றிலும் உள்ளதை கவனித்து பாருங்கள். எதில் நல்ல வாய்ப்புகளும் எதிர்காலமும் உள்ளது என்று புரியும். அதன்படி செயலாற்றுங்கள்.

21. இனி அதிக நாட்கள் நீங்கள் ஊரிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் பல இயக்கத்தவர்களும் உங்களை இழுப்பார்கள். நாங்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கதை அளப்பார்கள். பிடி கொடுக்காதீர்கள். முடிந்தவரை பெரிய அளவுக்கு அவர்களுக்கு பணம் அன்பளிப்பு செய்யாதீர்கள். நூறு இரு நூறுகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

22. எந்தக் காரணம் கொண்டும் பிற சமுதாயத்தினரோடு சச்சரவுகள் செய்வதோ, விவாதங்கள் செய்வதோ கண்டிப்பாக கூடாது. அனைவருடனும் நல்ல இணக்கத்தோடு வாழுங்கள்

பெண்களே இனி ஒரு குடும்பம் உருப்படுவதும், வீணாகப் போவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. பண வரவு இல்லாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். கணவரை குத்திக் காட்டுவீர்கள். கணவர் பிரிந்திருந்த நேரங்களில் நீங்களாகவே எல்லா முடிவும் எடுத்திருப்பீர்கள். இனி அது முடியாது அதனால் ஒரு இயலாமை ஏற்படும்.
இதெல்லாம் உங்களுக்கு மன அழுத்தம் தரும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த அழுத்தமும் வராது.

கவலைப்படாதீர்கள்.
இதுவும் கடந்து போகும்

விபிஎன் என்றால் என்ன விபிஎன் எதற்கு பயன்படுகிறது

விபிஎன் என்றால் என்ன விபிஎன் எதற்கு பயன்படுகிறது


விபிஎன் என்பது விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் ஆகும். இந்த விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் தனது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது அதிகாரங்களை கொண்ட கணினியை பாதுகாக்க மற்றும் அதிநவீன கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது படிப்படியாக வளர்ந்து பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில் செயலியாக உபயோகிக்கப்படுகிறது.ஆனால் இது இன்றைக்கு மிகவும் ஆபாச படங்களை பார்க்கும் மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகின்றது. இந்த வீட்டின் எதற்கு பயன்படுத்த படுகிறது உதாரணமாக மூன்று நபர்கள் இந்தியாவில் வசிக்கின்றனர் அதில் ஒரு நபர் யூடியூபில் உள்ள ஒரு வீடியோவை பார்க்க முயல்கிறார் அப்போது அந்த வீடியோ இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது இதனால் இந்தியாவில் இருந்து அந்த வீடியோவை காண இயலாது. காணவும் இந்திய அரசு அனுமதிக்காது இதனால் இந்த விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் ஓபன் செய்தால் பிற நாடுகளில் உள்ள அட்ரஸை நாம் பெற்று நாம் தேவை முடியும் வரை உபயோகித்துக்கொள்ளலாம் இப்பொழுது அந்த வீடியோவை பார்த்துக் கொள்ளலாம் இந்தியாவில் மட்டும்தான் அந்த வீடியோ தடைசெய்யப்பட்டுள்ளது வெளிநாடுகளில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் நாம் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் பயன்படுத்துவதால் நமது ஐபி அட்ரஸ் வெளிநாடுகளில் இருப்பது போல் செயலாற்றும் இதனால் யூட்யூபில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள வீடியோக்களை பார்த்து கொள்ள முடியும்.
மற்றொருவர் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ளார் அப்போது கல்லூரியில் இருக்கும் பொழுது பேஸ்புக்,டுவிட்டர்,வாட்ஸ் அப்,யூடியூப் அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் அப்பொழுது விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் நாம் வாட்ஸ்அப்,பேஸ்புக்,டுவிட்டர் இன்ஸ்டாகிராம்,யூடியூப் அல்லது இரண்டிலிருந்தும் படத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். மூன்றாவது நபர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார் அவர் நிறுவனத்திலிருந்து ஒருவருக்கு தகவல் அனுப்புகிறார் ஆனால் அந்நிறுவனத்தில் இருந்து தகவல்கள் ஏதும் வெளியே செல்லாதவாறு அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் அல்லது நாம் அனுப்புகின்றேன் தகவல் அனுமதி கேட்டு அனுப்ப முடியும். இதனால் நாம் ஒருவருக்கு தகவல் அனுப்ப வேண்டுமென்றால் விருச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் மூலமாக அனுப்பப்படும் போது மிகவும் பிரைவேட்டாக மற்றும் பாதுகாப்பாக செல்லும் சாதாரணமாக தகவல் நடத்தும் பொழுது அது பொதுவாக சென்றடையும் ஆனால் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் அது மிகவும் பாதுகாப்பாகவும் நிறுவனத்தில் யாருக்கும் தெரியாமலும் அணைத்துக் கொள்ள இயலும். இந்த விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் ஹேக்கர் இடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் மற்றும் நம் நாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் பெற்றுக்கொள்ள இயலும் மற்றும் யூட்யூபில் நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள அனைத்தையும் உபயோகித்து கொள்ள முடியும். இந்த வீழ்ச்சிக்கு ஒரு பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் நாம் அனுப்பக்கூடிய தகவலோ அல்லது தடை செய்யப்பட்டுள்ள வீடியோக்களை பார்க்கவும் பயன்படுகிறது. சில பொது இடங்களில் பிரீப் நோட்ஸ் பார் கிடைக்கும் பொழுது அதை நாம் கணித்து செய்யும் பொழுது நம்முடைய தகவல்கள் திருட வாய்ப்புள்ளது அதனால் விரிசுருள் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்தினால் நம் தகவல்களை பாதுகாப்பு கொள்ள இயலும். இந்த விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் அளிப்பதாக உள்ளது நெட்வொர்க் ஐ அதிக நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

வெள்ளி, 8 மே, 2020

ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரேநாளில் எடுத்துக்க முடியும்! எப்படி?

ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரேநாளில் எடுத்துக்க முடியும்! எப்படி?


    ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரே நாளில் எடுத்துக்க முடியும்!  எப்படி? 


        வாரம் முழுவதும் ஏசி அறையில் அதிகபட்சம் நாளை, நேரத்தை ஆபீஸ்லேயே  கழிக்க வேண்டியதாக இருக்கு.  இந்தக் காலத்தில். உடம்பு ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவதில்லை. 
பசிக்கும் மட்டும்தான் சாப்பிடும் சூழ்நிலை  தான் இருக்கு. இப்படியே  போய் என் உடல் எடையை ஏறியது தான் மிச்சமே தவிர எந்த உடற்பயிற்சியும் இல்லை என்றும் ஹெல்தி டயட் கடைபிடிக்க முடியவில்லை என்று ஒரே கவலையா? 

   சரி இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அட்லீஸ்ட் வாரத்தில் ஒரு நாளாவது வீட்டு சமையலில் கவனம் செலுத்தி அன்றைய தினத்திலேயே ஒரு வாரத்திற்கான ஆரோக்கியம் டயட் பெற்றுவிடலாம். 

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். 
முதலிலும் வாரத்துல ஒரு நாள், அந்த ஒரு நாளைக்கு முந்தைய நாள் இரவு ஆறு அத்திப்பழம் அல்லது உலர்ந்த அத்திப் பழங்களை மற்றும் இரண்டு பேரிச்சம் பழத்தையும்  பாலுடன்சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து குடித்து விட்டு பின்பு தூங்க செல்லவும்.
    காலையில் எழுந்த பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் கல்லுப்பு, சிறிது எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து நிதானமாக குடிக்க வேண்டும். இது இறந்த செல்களை புதுப்பிக்க உதவும். 

    பின்பு அரை மணி நேரம் விட்டு கொஞ்சம் கருவேப்பிலை, 2 பேரிச்சம்பழம் போட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கவும். இது ரத்தத்தை உற்பத்தி செய்யும். 

பின்பு இளம் சூடான காலை உணவானது இட்லி, தோசை இன்னும் வேறு சைவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
   பின்பு பகல் 12 மணி அளவில் கேரட், பீன்ஸ், கொத்துமல்லி இலை, கருவேப்பிலை, புதினா, பீட்ரூட், துளசி இலை மற்றும் வெள்ளை பூசணிக்காய் இவற்றையெல்லாம் சிறிதளவு எடுத்துக்கொண்டு நன்கு வேக வைக்க வேண்டும். பின்பு அதன் நீரை எடுத்து அதனுடன் ருசிக்கேற்ப உப்பு கொஞ்சம் மிளகு சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணை போட்டு நன்கு கலந்து விடவேண்டும். இது ஒரு காய் சூப்ஆகும். சூப்பை இளம் சூட்டில் மெல்ல ரசித்து ருசித்து குடிக்க வேண்டும். இது உடலை புத்துணர்ச்சி பெறச் செய்து அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான சத்தை கொடுக்கும். 

     இந்த நாளில் மட்டும் 10 அல்லது 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 

      பின்பு மதியம் 2 மணிக்கு சைவம் அல்லது அசைவம் இரண்டில் எது வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அதில் வேகவைத்த முட்டை ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். சைவம் சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டை 1 எடுத்துக்கொள்ளலாம் . 

  
   சாயங்காலம் 4 மணி அளவில் ஹெர்பல் டீ எடுத்துக்கொள்ளுங்கள். அது எப்படி செய்வது என்றால் நீரில் கொஞ்சம் டீ பவுடர், சிறிது கொத்தமல்லி விதை, ஒரு கிராம்பு, இரண்டு மிளகு, ஒரு துண்டு இஞ்சி, சிறிது சோம்பு போட்டு நன்றாக வேகவைத்து பால் சேர்க்காமல் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும். 

   இரவு அரை வயிறு அளவு மட்டும் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இரவு 9 மணியளவில் கொஞ்சம் துண்டுகளாக்கிய பழங்களை சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் காபி,  டீ, பால், பாலில் செய்த பொருட்கள் எதையும் சாப்பிட வேண்டாம். கடைசியாக தூங்குவதற்கு முன் கண்டிப்பாக இரண்டு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். 

     இவ்வாறாக வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது. மற்ற நாட்களில் எடுத்துக்கொள்ளாத ஊட்டச்சத்து இந்த ஒரு நாளிலே பெற்றுக்கொள்ளலாம். 

     மற்ற நாட்களில் நெய் அரை ஸ்பூன் மற்றும் சிறிதளவு எண்ணையில் செய்த உணவு வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். 

  அலுவலகத்திற்கு செல்லும் போது உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் போன்ற ஏதேனும் சில உலர்ந்த பழங்களை வைத்திருந்து டீ குடிக்கும் நேரத்தில் அல்லது வீட்டிற்கு செல்லும் நேரத்தில் கொஞ்சம் சாப்பிடுங்கள். இது உங்களது எனர்ஜி  வீணாகாமலும், பசியால் வயிறு அடைத்தாற் போல் ஏற்படும் உணர்வுகளை சீர்செய்யும். உங்களுடைய உணவு பழக்கங்களை நல்லபடியாக வைக்கும். 

    ஏசி அறையில் இருந்து நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் தாகம் எடுப்பதில்லை என்றாலும் சிறிதளவு தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறுநீர் கடுப்பு ஏற்படாது. 

   ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தாலே போதும், உங்களது உள்மனது, மூளையும் அதற்கான வாய்ப்புகளை தானாகவே தேடித்தரும். 

  இந்த டயட்டை கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வாரம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும். 


இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. 

நன்றி.

அன்னையர் தினம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை


அன்னையர் தினம்: போற்றுவோம் வாருங்கள் அன்னையை!!

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.

அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

அம்மாவுக்கு அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்கு சென்று, குடும்ப பாரத்தை பகிர்ந்து, கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அமைதியாக அன்புடன் சிரித்து நடந்து கொள்ளும் பாங்கு. இத்தனையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.

பரிசு கொடுங்கள்...

அந்த அன்னையைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று அன்னையர் தினம். இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை குளிர்விக்க, ஆச்சரியப்படுத்த, அன்று ஒரு நாளாவது அவளை அமர வைத்து ஓய்வு கொடுத்து, பரிசுகள் கொடுத்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் வாசித்து, அவளுடன் பொழுதை போக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

சரி. இனி அன்னையர் தினம் எப்படி பிறந்தது என்று பார்ப்போம்.

அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ''மதர்ஸ் டே ஒர்க் கிளப்'' என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, பேணி காத்தல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்.

ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் ''அன்னையர் தினம்'' வரும் என்று பாடி இருந்தது அவரது காதுகளிலும், நினைவிலும் வந்து வந்து சென்றது.

இந்நிலையில் அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட, அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்கு, 1908, மே 10ஆம் தேதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார். அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார்.

அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார். இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 2வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.

அப்படி பிறந்ததுதான் அன்னையர் தினம். இன்றைய தினத்தில் உங்களது அன்னைக்கு பரிசு கொடுத்து மகிழ்ச்சியை பகிருங்கள்

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் மே 2 ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடினாலும், பிரிட்டனில் ஈஸ்டர் திருநாளில் இருந்து மூன்று வராங்களுக்கு முன்பு வரும் ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுகின்றனர்.

#International_Mother's_day 

அன்னையர் தினம் மே மாதம் 2 வது ஞாயிறு


அன்னையர் தினம்... அம்மா என்றழைக்காத உயிரில்லையே!

சென்னை: தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை என்பது பழமொழி. ஆம்.. இவ்வுலகில் தாயை தெய்வமாக மதிப்பவனுக்கு அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கும்.

தான் பிறந்தது முதல் ஒரு பெண்ணானவள் பல்வேறு பரிமாணங்களை பெறுகிறாள். ஒரு கால கட்டம் முதல் தான் மண்ணில் புதையுறும் வரை தன்னலம் பேணாது உழைத்துக் கொண்டே இருப்பவள் தாய். அவளை தூக்கி வைத்து கொண்டாடவிட்டாலும் அவரை போற்ற ஒரு நாள் கொண்டாடப்படுகிறது.

அதுதான் அன்னையர் தினம்... நாடெங்கும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடடப்படுகிறது.

பெண் எனும் பிரம்மா

பெண் என்பவள் பூப்பெய்தும் வயதை அடைந்து, திருமண பந்தத்தில் இணைந்து, கருவுற்று தாயாகி குழந்தையை பெற்றதும் முழுமை அடைகிறாள். பிரம்மா இவ்வுலகில் உள்ள உயிர்களை படைக்கிறார்கள் என்றால் பெண்ணும் அதே பணியை செய்கிறாள்.

மறுஜென்மம்

பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும் போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது ஒரு முறை என பெண் மறுஜென்மம் எடுக்கிறாள். பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள்.

என்ன கைமாறு

தான் உண்ணாமல் தன் குழந்தை உண்ண வேண்டும் என்று நினைக்கும் ஒரே உள்ளம் தாய்தான். பார்த்து பார்த்து ஒரு குழந்தையை கருவுற்று இருக்கும் போதில் இருந்தே கண்ணை இமை காப்பதற்கு மேலாக தன் குழந்தையை பாதுகாத்து வருகிறாள். அத்தகைய தாயை கடைசி காலத்தில் காக்க முடியாமல் முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகளை என்னவென்று சொல்வது.

கணக்கு பார்ப்பது
தம்மை வளர்க்க தாய் பட்ட பாடுகளை மறந்த சில பிள்ளைகள் தன் தாய்க்கு ஒரு பிடி உணவு அளிக்க மனதளவில் வக்கற்று போய், அந்த தாய்க்கு மூன்று பிள்ளைகள் என்றால் மாதம் ஒருவர் பராமரிப்பது என்று கணக்கு போடுகின்றனர். அவர் இருக்கும்போது ஒரு பிடி உணவுக்கு சண்டையிட்டு கொள்ளும் சகோதரர்கள் அவர் இறந்தபின்னர் வடை, பாயாசம் என அறுசுவை உணவுகளை செய்து படைப்பதில் என்ன பயன்!

மகனோ, மகளோ தங்களை உள்ளங்கையில் தாங்குவதை பார்த்து பூரித்து போகும் தாய், தந்தையரை காட்டிலும் இந்த உலகில் எது நமக்குக் கிடைத்தாலும் அது துச்சமே!

Super Flower Moon 2020: இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண லாஸ்ட் சான்ஸ்


Super Flower Moon 2020: இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண லாஸ்ட் சான்ஸ்!
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கடந்த மாதம் இயற்கையின் பிரமிப்பாய் தோன்றிய சூப்பர் பிங்க் மூன் நிகழ்வை நீங்கள் தவறவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம், இன்னொரு சூப்பர் மூன் நிகழ்வு இன்னும் இன்று நிகழவுள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நிகழ்வாக இது மட்டுமே இருக்கும். இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண இன்னும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி? எந்த நேரத்தில் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

*சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்பு*

சூப்பர் மூன் நிகழ்வை காண ஆர்வமாக இருக்கும் மக்களுக்கு வரும் மே 7 ஆம் தேதி, சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்புள்ளது. சூப்பர் ஃப்ளவர் மூன் குறிப்பாக வசந்தம் முழுமையாகப் பூக்கும் நேரத்தில் தோன்றும் என்பதால் இந்த நிகழ்விற்கு இப்படிப் பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த சூப்பர் மூன் நிகழ்விற்கு வேறு சில பெயர்களும் உள்ளது.


*இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன்*

இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்விற்கு *முழு சோளம் நடவு நிலவு (Full Corn Planting Moon) மற்றும் முழு பால் நிலவு (Full Milk Moon)* என்றும் அழைக்கப்படுகிறது. சூப்பர்மூனின் நிகழ்வு முழு நிலவு பெரிஜியுடன் (perigee) ஒப்பிடப்படுகிறது. நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான புள்ளி பெரிஜி என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியை நிலவு நெருங்கும் நேரத்தில் வழக்கத்தை விட பெரியதாகத் தோன்றி சூப்பர் மூன் நிகழ்வாக உருவம் எடுக்கிறது.


*இதை தவறவிட்டால் அடுத்த சூப்பர் மூன் நிகழ்வு எப்பொழுது?*

இந்த 2020 ஆம் ஆண்டு, ஏற்கனவே இரண்டு சூப்பர்மூன்களைக் கண்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வார்ம் மூன் தோன்றியது. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்தில் சூப்பர் பிங்க் மூன் தோன்றியது. இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வாக இந்த சூப்பர் ஃப்ளவர் மூன் தோன்றுகிறது. இதற்குப் பின் சூப்பர் மூன் நிகழ்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 2021 இல் மட்டுமே தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*பூமியிலிருந்து நீண்ட தொலைவில் தோன்றும் சூப்பர் மூன் இது*

சூப்பர் ஃப்ளவர் மூன் நிகழ்வை மற்ற இரண்டு சூப்பர் மூன் நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதன் தோற்றம் மற்ற சூப்பர் மூன் தோற்றத்தை விட சிறியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக இது பூமியிலிருந்து நீண்ட தொலைவில் தோன்றுகிறது என்று கூறப்பட்டுள்ளது. பூமியிலிருந்து தூரத்தில் இந்த நிகழ்வு தோன்றுவதால் மற்ற இரண்டு சூப்பர் மூனை போல் இது பெரியதாக இருக்காது ஆனால், பிரகாசமாக இருக்கும்.


*சூப்பர் ஃப்ளவர் மூன் நிகழ்வை எந்த நேரத்தில் பார்க்கலாம்*

நாசாவின் கூற்றுப்படி, சூப்பர் ஃப்ளவர் மூன் மே 7ம் தேதி அன்று மாலை 04:15 மணிக்கு அதன் உச்ச வெளிச்சத்தை எட்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில், சந்திரன் பூமியிலிருந்து சுமார் 361,184 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வைக் காணச் சிறந்த நேரமாக நிலவொளி உதயம் மற்றும் நிலவொளி மறையும் நேரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*சந்திரனின் மேற்பரப்பை காண வாய்ப்பு*

இந்த வாரம் பௌர்ணமியின் இரவுக்கு முன்னும் பின்னும் சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களைக் கூட மக்கள் காணச் சிறந்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிக பிரகாசமான சூப்பர் மூன் நிகழ்வு இது என்பதால், நிலவின் மேற்பரப்பை காணவும் வாய்ப்புள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
Smartphone கேமராவை இந்த 10 ஆப்ஸ் இருந்தா வேற லெவலில் பயன்படுத்தலாம்! கேமரா டிப்ஸ்!

*நிலவின் மேற்பரப்பை எப்படி காண்பது?*

நிலவில் உள்ள கோப்பர்நிக்கஸ், டைகோ போன்ற பள்ளங்கள் மற்றும் நிலவின் ட்ராங்குவாலிட்டி கடல் மற்றும் அப்பல்லோ 11 இன் தரையிறங்கும் இடம் போன்ற இடங்களைத் தொலைநோக்கியின் உதவியுடன் அல்லது அடிப்படை உருப்பெருக்கம் கொண்ட தொலைநோக்கி மூலம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் முயற்சி செய்து இதையும் பாருங்கள்.

சனி, 2 மே, 2020

*30 வயதை கடந்தும் திருமணம் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது* *ஐம்பதுக்கும் மேற்பட்ட* *ஆண்மகன்கள்* *உள்ளார்கள்,*

*30 வயதை கடந்தும் திருமணம் இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது*
*ஐம்பதுக்கும் மேற்பட்ட* *ஆண்மகன்கள்*
*உள்ளார்கள்,*

# இதற்கு சொத்து மதிப்பே காரணம் அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும்,

# அவரே சென்னை, பெங்களூர் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்,

# வீட்டுக்கு ஒரே பையனா இருந்த ரொம்ப நல்லா இருக்கும்.

# அப்புறம் இதெல்லாம் இருந்தாலும்
தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய் அஜித் அவர்கள் போல்.

1995 வரை திருமண செய்தவர்கள்
சொத்து...

# தகுதி பார்த்து இருந்தால் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது,

# இதில் இப்ப என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும் பெண்ணும் அதிகமாக இருப்பது தான்,

# சரி இதன் விளைவு என்ன என்று பார்ப்போம்...

1979 வரை ஒவ்வொரு கிராமத்திலும்
பலருக்கு 10 👨‍👩‍👧‍👧 குழந்தைகள், எட்டு குழந்தைகள்,

குறைந்தது 5 குழந்தைகளை சர்வசாதர்னமாக👨‍👩‍👧‍👦 பெற்று கொண்டார்கள்,

1980 க்கு பின் 100 யில் 90 குடும்பம் இரண்டு குழந்தைகள்👨‍👩‍👦‍👦.

எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு,
1990 க்கு பின் ஒரே குழந்தை👨‍👩‍👧 தான்,

👨‍👩‍👧2000 க்கு பின் ஒரு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது,

ஆனால் 2010 க்கு பின் ஒரு குழந்தையாவது வேண்டும்
இறைவா என்று போகாத கோவிலும் இல்லை,

பார்க்காத மருத்துவமும் ☢ இல்லை,
என்ற நிலையில் உள்ளோம்,

# இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம்,
ஆனால்
முதல் காரணம் ஆரோக்கியம்,

👉1979 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 19 யில் திருமணம்,
💥உணவு : ராகி, கம்பு, சோளம்.

👉1989 க்கு மேல் பெண் 17 ஆண் 21,
💥உணவு : அரிசி,

1992 க்கு மேல் பெண் 18 ஆணுக்கு 24
உணவு பட்டைதீட்டப்பட்ட அரிசி,

👉2000 க்கு மேல் பெண் 25, ஆண் 30 க்குள்
💥உணவு: துரித உணவு,

👉2010 க்கு மேல்
💥உணவு:
மைதா மாவில் தயாரித்த உணவு,

# வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம்,

# தரம் குறைந்த எண்னெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மையின் தாக்கத்தில் இருக்கிறோம்,

🤐☹இந்நிலையில்
28 க்கு மேல் 35 வரையில் பெண் அதிகளவில் இருக்கிறார்கள்,

😰ஆண்கள் 30 முதல் 40 வயது வரை உள்ளார்கள்,

👉வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது
வியாபாரம்,

👉திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து,
பிற்காலத்தில் பணம் புகழ்பெற்ற மனிதர்கள் ஏராளம்,

முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து,
திருமணம் முடிந்து சில ஆண்டுகளில்
ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்,

எனவே வரும்காலம்
இப்படி தான் இருக்கும் என்று தீரமானம்
செய்யாமல், நல்லதை மற்றும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யலாம்.

# இதை வெறும் தகவலாக படித்துவிட்டு போக வேண்டாம்.

தயவுசெய்து
கொஞ்சம் யோசித்துப்🤔 பாருங்கள் குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு

# பணம் தேவைதான்🙌 ஆனால்.

# பணத்தால் வாழ்க்கையை இழந்து விடக்கூடாது,

# நல்லொழுக்கம் உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்.
*படித்ததில் மனதில் பதிந்தது*

அனைவருக்கும்_சமமா


#அனைவருக்கும்_சமமா

பக்கத்து வீட்டுக்கு பாத்திரம் தேய்க்க லட்சுமி அக்கா வருவாங்க. அவங்களுக்கு இரண்டு பசங்க. ஒரு பையன் ஒரு பொன்னு என சொல்லி இருக்காங்க. ஒரு நாள் நான் வேலைக்கு போகல. அந்தக்காவ பார்த்து சிரித்தேன். அவங்களும் சிரிக்க "பசங்க ரெண்டு பேரும் எனக்கா பண்றாங்க?"ன்னேன். அவங்க படிக்கிறாங்கம்மா என சொல்ல "எந்த ஸ்கூல்க்கா?" என்றேன்.

பையனை மெட்ரிக் ஸ்கூல்லயும் பொன்ன கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயும் படிக்கறதா சொன்னாங்க. "ஏன்க்கா இப்படி ஒரே ஸ்கூல்ல சேக்காம, பையனுக்கு ஒன்னு பொன்னுக்கு ஒன்னுன்னு பார்க்கிறீங்க?" என கொஞ்சம் சத்தமாத்தான் கேட்டேன்.

ஆமாம்மா பொன்ன படிக்கவச்சி என்ன ஆகப்போகுது? இன்னொருத்தன் கைல புடிச்சி குடுத்துட்டா முடிஞ்சது. ஆனால் பையன் தான் எங்களுக்கு காலம் புல்லா கஞ்சி ஊத்துவான். அவன் நல்ல பள்ளி கூடத்துல படிக்க வச்சாத்தானே நல்ல வேலை கிடைக்கும் என அவங்க சொன்னத கேட்டு BP அதிகமா ஆகிடுச்சி .

விடக்கூடாது இவங்களன்னு முடிவு பண்ணி, "சரிக்கா, உங்ககூட பிறந்தவங்க எத்தனை பேர் எப்படி இருக்காங்க?"ன்னு ஆரம்பிச்சேன். நா ரெண்டு தம்பிங்க அவங்க தனியார் கம்பெனியில் நல்ல வேலையில கைநிறைய சம்பாதிக்கிறாங்க.  இதுல நான் மட்டும்தான் இப்படி வீட்டு வேலைமா என சொன்னதும் "நான் கேட்டேன் நீங்களும் நல்லா படிச்சிருந்தா இந்த வேலைக்கு வராம ஆபீஸ் உத்யோகத்துக்கு போயிருக்கலாம் இல்லையா?" என்று கேட்டேன். 

"இதே நிலமை உங்க பொன்னுக்கும் வரலாம்க்கா. அவ நல்லா படிச்சா அவ வாழக்கை தரம் உயரும்க்கா" என சொன்னேன். மண்டைய மண்டைய ஆட்டுச்சி...

எந்த காலத்துல இருக்கோம் நம்ம பெண் குழந்தைகளையும் சமமா பார்க்கனும். அரசு பள்ளிகளை குறை சொல்ல வரவில்லை. ஏன்னென்றால் அரசு பள்ளிகளிலிருந்தும் நல்ல அறிஞர்களும், அறிவியலாளர்களும் வந்திருக்காங்க.  என்னோட கேள்வி இருவரையும் ஒரே மாதிரியான பார்வையில் வைக்கவேண்டும். அனைத்துமே அனைவருக்கும் சமமா கிடைக்கனும் என்பதுதானே நியாயம்...

உலக சிரிப்பு தினம் மே மாதத்தின் முதல் ஞாயிறு.


உலக சிரிப்பு தினம் மே மாதத்தின் முதல் ஞாயிறு.

நகைச்சுவையின் வெளிப்பாடே இந்த சிரிப்புதான். சிரிப்பு மனதை இலகுவாக்குகிறது. மகிழ்ச்சி தருகிறது. இதனால் மன அழுத்தம் ரத்த அழுத்தம் குறைகிறது. அதனால் தான் ‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்று நம் முன்னோர்கள் அன்றே சொல்லிவைத்தார்கள். நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை என்றால் ‘நான் என்றோ தற்கொலை செய்துகொண்டு இருப்பேன்’ என்று சொன்னார் மகாத்மா காந்தி. வாழ்வு தவம் என்றால் சிரிப்பு தான் மனிதனின் வரம்.

உலகில் எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் உலக மக்களை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினுக்குத் தான் சிலை வைத்தார்கள். நம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு நாம் சிலை வைத்து பெருமை தேடிக்கொண்டோம். மிருகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ‘சிரிப்பு’ தான் என்று சொன்னார் கலைவாணர்.’ சிரிக்காத ஒவ்வொரு தினமும் வீணான தினமே என்றார் சார்லி சாப்ளின். சிரிக்கும்போது இதயத்துக்கு நல்ல ரத்தம் ஓட்டம் கிடைக்கிறது. நுரையீரல் முழுவதும் சுருங்கி விரிவதால் நிறைய ஆக்ஸிஜன் ரத்தத்தில் கலக்கிறது. மகிழ்ச்சி ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே தான் சிரிப்பை மருந்து என்று அழைக்கிறார்கள். அந்த வகையில் அந்த மருந்தை கொடுக்கிற நானும் என் போன்ற நகைச்சுவை நடிகர்களும் கோட் போடாத ஸ்டெதாஸ்கோப் மாட்டாத டாக்டர்கள் தான். இப்பேர்ப்பட்ட உலக சிரிப்புத் தினம் எப்படி உருவாயிற்று? 1998-ல் டாக்டர் மதன் கட்டாரியா என்ற இந்தியரால் தான் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையை உலக சிரிப்பு தினமாக அறிவித்தார். அவர்தான் உலக சிரிப்பு யோகா மையத்தின் நிறுவனர் ஆவார்.

வளர்ந்து நிற்கும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு எவ்வளவோ சிக்கல்கள் நெருக்கடிகள். சீட் கிடைத்து (அல்லது வாங்கி) நல்ல படிப்பு படிக்க வேண்டும். அதன் பின் படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்கவேண்டும். அதன்பின் தன் பணிக்கும் வாழ்விற்கு ஏற்ற துணை தேடி திருமணம் செய்ய வேண்டும். அதன்பின் குழந்தையை படிக்க வைக்க வேண்டும். குடும்பத்தை பராமரிக்க பதவி உயர்வு வேண்டும்.

இப்படி தொடர் நெருக்கடி சங்கிலிகளை தன் மேல் மனிதன் பிணைத்துக்கொள்கிறான். இதனால் மன அழுத்தம் ...தூக்கமின்மை... ரத்த அழுத்தம் என்று வியாதிகள் வேறு. பணம் தேடி அலையும் மனிதா ஒன்று சொல்கிறேன்!

எவ்வளவு தான் சொத்து சேர்த்து வைத்தாலும் ...ஆள்... அம்பு... அரண்மனை... ஆஸ்தி... என்று வாழ்ந்தாலும் ...தங்கத்தில் சட்னி செய்து... வெள்ளியில் இட்லி செய்து சாப்பிட முடியுமா? ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று கார்களை ஓட்ட முடியுமா? சுகர் வந்து விட்டால் ...எல்லோரும் விருந்து சாப்பிட்டாலும் நீ கஞ்சி தான் குடித்தாக வேண்டும்.

இவ்வளவு தான் வாழ்க்கை! ‘மேல இருந்து போன் வந்தால் ...கீழே வேன் வந்துரும்’. கிளம்ப வேண்டியது தான்!. எனவே... எல்லாம் கொஞ்ச காலம் தான்.. என்று தெளிவு நிலை பெற்று.. மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே இருப்பதைக்கொண்டு திருப்திகரமாக வாழ வேண்டும். கோபத்தை பொறாமையை எரிக்க வேண்டும். எப்போதும் குழந்தை போல சிரிக்க வேண்டும். மற்றவரை சிரிக்க வைப்பவர்கள் ஆண்டவனின் அருகில் இருக்கிறார்கள் என்றார் அப்துல்கலாம். ஏழையா இருக்கும் போது சதா சிரிக்கும் ஒருவன் பணக்காரன் ஆனதும் அந்த சிரிப்பை தொலைத்துவிட்டு நிற்கிறான்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்னு’

நீங்க டென்ஷனா இருக்கும் போதோ, இல்லை கோபமா இருக்கும்போதோ உங்க முகத்தை கண்ணாடியில் பார்த்து இருக்கிறீர்களா? உங்களுக்கே உங்களை பிடிக்காது. ஆனா மகிழ்ச்சியா இருக்கும்போது புன்னகை புரிந்துகொண்டே கண்ணாடியில் பாருங்கள். உங்களை உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். மனிதனின் ஆழ்ந்த அடிப்படை குணமே சிரிப்பது தான். அதனால் தான் ‘மண்டைஓடு’ -எப்பவும் சிரிச்ச மாதிரியே இருக்கும்.

ஆகவே பொன் நகையை விட புன்னகைக்கு மதிப்பு அதிகம். எல்லாவற்றையும் அரசு இலவசமாக கொடுக்குமா என்று எதிர்பார்க்கும் மக்களே! உங்களிடமே இருந்து உருவாகும் ஒரு உயர்ந்த உன்னத இலவசம்- சிரிப்புதான் செலவு இல்லாத மருந்து. என்வே வாய்விட்டு சிரியுங்கள். -அந்த 32 வெள்ளைப்பூக்கள் நன்றாகப் பூக்கட்டும்...!

மே முதல் ஞாயிறு-உலக சிரிப்பு தினம்


சிரித்து வாழ வேண்டும்..!

 மே முதல் ஞாயிறு-உலக சிரிப்பு தினம்!

''சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம் வெளியேறிவிடுகிறது..!" என்பது  கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள்.

''உன் மனம் நோகும் போது சிரி... பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை...!''

உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன்  கதாரியா (Dr. Madan Kataria) 1998 - ம் ஆண்டு உருவாக்கினர்.இவர்  மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் 'லாப்டர்  யோகா' இயக்கத்தை (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.

மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக  கொண்டாடப்படுகிறது.முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும்  மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.

இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம் ஆண்டில்  அனுசரிக்கப்பட்டது.உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இத்தினம்  அனுசரிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000-க்கும்  மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.

இத்தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய்  கொண்டாடுகிறார்கள்.அப்போது, 'சிரிப்பு மூலம் உலக அமைதி', வாழ்க்கைக்காக  சிரிப்பு, அன்பும் சிரிப்பும், சிரிப்புக்கு மொழி இல்லை, சிரிப்பு ஒரு உலக மொழி,ஹோ  ஹோ ஹா ஹா, சிரிப்பு & ஒரு பாசிடிவ் சக்தி, போன்ற பேனர்களுடன்  செல்கிறார்கள். சிறப்பாக சிரிக்கும் சிறுவர்-


சிறுமிகள்,பெண்கள்,வயதானவர்களுக்கு  பரிசளிக்கப்படுகிறது.

ஏன் சிரிப்புத் தினம்?

இன்றைய தேதியில் உலகம் முழுவதும் பயங்கர வாதம் பரவி அதன் மூலம்  அச்சுறுத்தலான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள்.இதுதவிர, ஓய்வு ஒளிச்சல்  இல்லாமல் பணிபுரிவதால் அதிக மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும் போது,இன்றைக்கு மன  அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை  உருவாக்கி விடுகிறது.மேலும்,அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள்  உருவாக அதுவே காரணமாக இருக்கிறது.

அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது.  உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து மந்தமாக்கிறது.இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு  மாமருந்தாக இருக்கிறது.நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன்  ஆரோக்கியமானவனாகவும் இருக்கிறான்.அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து  போய்விடுகின்றன.

'லாப்டர் யோகா' மனிதனின் உள்ளம், உடல் இரண்டையும் வலிமையானதாக  மாற்றுகிறது. இதன் பலன் நன்றாக இருப்பதால் பல உடற்பயிற்சி மையங்களில் இந்த  லாப்டர் யோகாவை சேர்த்து வருகிறார்கள்.

இது அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத தொழில் வல்லுனர்கள் மற்றும் வணிகர்களுக்கு  ஏற்றதாக இருக்கிறது. வழக்கமாக ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சியின் பலனை  இந்த லாப்டர் யோகாவை 20 நிமிடங்கள் செய்வது மூலம் பெற முடியும் என்று  ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்லியம் ஃப்ரே  கண்டுபிடித்துள்ளார்.

சிரிப்பு ஒரு சிறந்த மருந்து

ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.நுரையீரலுக்கு பயிற்சி  கிடைக்கிறது.உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை  அதிகரிக்கிறது.வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது.  வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது.

சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150  தடவைகள் கலகலவென சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக  சுருங்கி விடுகிறது.கை, கால்கள் இதர உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும்,  வலிமையானதாகவும் இருக்க ஜாக்கிங் போகிறோம் அல்லவா அது போல சிரிப்பு மூலம்  உள் உறுப்புகளை வலிமையாக வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த  ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக  இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்றை  கொழுப்பு கரைகிறது.

வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!
நன்றி விகடன்.

அக்னி_நட்சத்திரம்_பிறந்த_கதை

#அக்னி_நட்சத்திரம்_பிறந்த_கதை

ஹரிஓம் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.

தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது.

அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும்.

எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன.

"அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்' என வருணன் கூறினான்.

இதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, "நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்' என முறையிட்டான்.

கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான்.

அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

அப்போது கிருஷ்ணர், "21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்' என்றார்.

அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.

அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது.
பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.

அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து இறைவனை வணங்கி வழிபாடு செய்து, கத்திரி வெயிலில் கடவுள் அருள் பெறலாமே...


வெள்ளி, 1 மே, 2020

#எழுதி #வையுங்கள்...* *இல்லையெனில்

*#எழுதி #வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

காய்கறிச்
சந்தைகளாய் மாறிப்போன
*பேருந்து நிலையங்கள்.*!

நடமாடும்
மருத்துவ மனைகளாக
மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*

கதவடைக்கப்பட்ட
*வழிப்பாட்டுத் தலங்கள்.!*

காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
*மருத்துவப் பணியாளர்கள்.!*

தீண்டாமை ஒரு
புண்ணியச் செயலென
மாற்றிய *நுண்ணுயிரி.!*

இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த
*திருமணங்கள்.!*

சாலை விபத்துகள்
பற்றிய செய்திகளின்றி
வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*

காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*

சமையலறைக்குள்
தஞ்சமடைந்த *கணவன்கள்.!*

சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில் நேரம்
செலவழித்த *மனைவிகள்.!*

பரபரப்புகளில் ஓடித்திரிந்து
நிதானத்தை பழகிக்கொண்ட
*இன்றைய தலைமுறையினர்.!*

தானாகவே
குறைந்துபோன *காற்றின் மாசு.!*

சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
*பறவைகள், விலங்குகள்.!*

பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி குடும்பமாய்
மாறிய *குடும்பங்கள்.*!

இவற்றோடு...
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய *நாடோடி*
*உழைப்பாளிகளின் கால்கள்*

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

*தனிமை நாட்கள்-35*

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா?

* பூ உற்பத்தி செய்பவர்
* மாலையாக கட்டுபவர்
* அதனை விற்பனை செய்பவர்
* அர்ச்சகர்
* அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்
* கோயில் காவலாளிகள்,
* தேங்காய் உற்பத்திசெய்பவர்,
* தேங்காய் விற்பனைசெய்பவர்.
*  ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்
* அதனை விற்பனை செய்பவர்கள்
(மொத்தமாகவும் சில்றையாகவும்,)
* கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,
* அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,
* சந்தனம்,குங்குமம், பழவகைகள்,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்

* பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள்,
* வாழைமரம் வளர்ப்பவர்கள்
* அவற்றைவிற்பனைசெய்பவர்கள்,
* கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,
* இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,
* வாசலில்அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள்
* கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்
* அதன் ஓட்டுனர்கள்
* கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்
* மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)
* தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.

* கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம்
முகாமையாளர் வரை
* உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள்
* ஓதுவார்கள்,
* நாதஸ்வர,தவில் கலைஞர்கள்
* ஒலி, ஒளி அமைப்பாளர்கள்
* சிற்ப கலைஞர்கள்
* ஓவியர்கள்
* கட்டட கலைஞர்கள்
* ஆசாரிமார்கள்
* விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,
இப்படி கோயில்களால் ஏராளமான மக்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கிறது.
என்பதால்தான் அன்றைய
மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை
உருவாக்கினார்கள்.

தமிழ் மன்னர்கள்
வாழ்த்தப்பட வேண்டியவர்கள்..

மே தின வரலாறு உணர்த்தும் உண்மை


மே தின வரலாறு உணர்த்தும் உண்மை

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய தினம்.

அமெரிக்காவில் 1890ஆம் ஆண்டு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு, ஈவிரக்கம் அற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்ப்ட்டனர்.

உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாறின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்றும் கூறினார் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் காரல் மார்க்ஸ். இவ்வாறு அவர் கூறி 42 ஆண்டுகள், உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது.


தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை உணர்ந்தனர். தாம், விலங்குகளைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காககப் போராடினர்.

1886ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பயிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890ஆம் ஆண்டு ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சென்னையில்தான் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி ம.சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினர்.

இந்தியாவில் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து, தங்கள் உரிமையை அடைவதற்கான போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து தொழிலாளர்கள் என்னும் உணர்வுடன் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தின வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.


 மே தின நல்வாழத்துக்கள்..

வியாழன், 30 ஏப்ரல், 2020

அடுத்து_என்ன...?

#அடுத்து_என்ன?

‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’ - கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது. சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது - ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்.’
பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.

இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன. கங்கை நதி குடிநீராக மாறுகிறது. சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது. மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது. இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது.
தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். *‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்*.

இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது. விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.
இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை. முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது. கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.

மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.
கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள். ‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.
விளம்பரம்

துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது. என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.

ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன. வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.

கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.
1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். 65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள். இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்.
பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும். அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.
“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும். பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்? ‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.

‘உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.
இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம். வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.
கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன. தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.

நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர். இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.
மருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும். சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது. கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில்தான் தளர்த்தினார்கள். எனில் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?
ஒரு நாள். பிறகு 21. பிறகு 19. பிறகு? இது தொடரும் நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும். முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.
அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.
அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.

இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள். ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம். மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?
இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும். முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான். அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.
சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது. ‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.
இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.

பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.
இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள். உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?
வெளியேறுவது என்பது கதவின் வழியாக மட்டும் அல்ல ஒரு நூலின் வழியாக, சமூக ஊடகம் வழியாக, திரைப்படத்தின் வழியாகவும் வெளியேற முடியும். எனவே தனித்திரு என்பதை வள்ளலாரின் பொருளில், விழிப்புடன் இருங்கள் என்பதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பொருளில், விலகி இருங்கள் என்பதை ஓஷோவின் அர்த்தத்தில் யோசிக்கும்போது இந்தத் தனிமையின் அர்த்தம் என்ன?
எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும். இதுபோல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும். எனவே இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.
தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை. இதுபோல என் மனைவி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.
‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார். நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை. சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.
ஸ்பார்டகஸ் நாடகத்தில் ‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’ என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன். ‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
இந்தப் பேரிடரை முன்வைத்து தமிழரின் மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
தனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.

திரு. செழியன் அவர்கள் எழுத்தில் இருந்து சில பக்கங்கள்.