திங்கள், 9 டிசம்பர், 2019

தீபத் திருநாள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?


தீபத் திருநாள்  வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

இன்று திருக்கார்த்திகை தீபத் திருநாள்..!!
🌟திருக்கார்த்திகை நாளில் (இன்று) இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுவது திருக்கார்த்திகை தீபத் திருநாள் ஆகும். இந்த திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள்.

🌟நம் வீட்டில் ஏற்றும் தீபம் என்றுமே நம்முடைய வாழ்க்கையில் ஒளிமயமானதாக இருக்கும். எந்தவொரு கெட்ட சக்திகளும் அண்டாது செல்வ செழிப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிவகை செய்வது இந்த தீப வழிபாடு.


வீட்டின் எந்த இடத்தில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

🌟வீட்டில் குறைந்தபட்சம் 27 விளக்கு ஏற்ற வேண்டும். 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிக்கும்.

🌟கோலமிட்ட வாசல் - 5 விளக்குகள்

🌟நிலைப்படியில் - 2 விளக்குகள்

🌟வாசல் நடைகளில் - 2 விளக்குகள்

🌟திண்ணைகளில் - 4 விளக்குகள்

🌟முற்றத்தில் - 4 விளக்குகள்

🌟வீட்டின் பின்புறம் - 4 விளக்குகள்

🌟மாடக்குழிகளில் - 2 விளக்குகள்

🌟பூஜையறையில் - 2 விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்களம் உண்டாகும்.

🌟சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

🌟தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.


விளக்கேற்ற வேண்டிய நேரம் :

🌟கார்த்திகை தீபத்திருநாளன்று மாலை வேளையில் 5:30 மணிக்குமேல் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வாசனையுள்ள மலர்களைத் தொடுத்து அதை இறைவனுக்கு சமர்ப்பித்து வணங்க வேண்டும்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் :

🌟பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

🌟விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. இதை முன்னிட்டு, அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

🌟காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் காட்சியளித்ததும் சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

🌟கார்த்திகை தீபத் திருநாள் நம் வீட்டிலுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கும்.🌟

🌟இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றி வளமான வாழ்வை பெறுவோம்..!!🌟

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக