வெள்ளி, 27 டிசம்பர், 2019

மார்கழி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?... என்னென்ன செய்யக்கூடாது?


மார்கழி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?
என்னென்ன செய்யக்கூடாது?


🔯மார்கழி மாதம் என்றாலே அது தெய்வீக மாதமாகும். இம்மாதம் தெய்வ வழிபாட்டிற்கும், நல்ல அறநெறிகளை பின்பற்றக்கூடியதாகும்.

🔯மார்கழி மாதத்தை செல்வம் தரும் மாதம் என்று அழைக்கின்றனர். மார்கழி மாதம் மிகவும் மகத்துவம் நிறைந்த மாதமாகும். வருடம் முழுவதும் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

🔯மார்கழி மாதம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது பனி. அதிகாலையில் புகைப்போல் படரச் செய்து, சூரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கிவிடும்.

🔯இவ்வாறு தெய்வீகமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்வோம்...!!

மார்கழியில் செய்யக்கூடியவை :

🔯மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்திலேயே கண் விழிக்க வேண்டும்.

🔯மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.

🔯அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, வாசலில் வண்ணக் கோலமிட்டு இரண்டு அகல் விளக்குகளை வைக்க மகாலட்சுமியின் அருள் அதிகாலையிலேயே கிடைத்துவிடும்.

🔯ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும்.

🔯அதிகாலையில் பஜனை பாடுவதுடன், திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பாடுவதும், கேட்பதும் புண்ணியம். இல்லாவிட்டால் கோலம் போடும் நேரத்தில் மட்டுமாவது பாட வேண்டும்.

🔯மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு வரன், பொருத்தம் பார்ப்பதோடு ஜாதகம் பரிமாற்றமும், கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தமும் செய்யலாம்.

🔯நிலம் மற்றும் வீடு வாங்க முன்பணம் கொடுப்பதோடு பத்திர பதிவும் செய்யலாம்.

மார்கழியில் செய்யக்கூடாதவை :

🔯முதல் நாள் இரவே கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.

🔯மார்கழியில் விதை விதைக்கவோ, திருமணம் செய்யவோ கூடாது.

🔯அதிகாலைக்குப் பிறகும், சூர்ய உதயத்திற்கு பின்பும் தூங்கக்கூடாது.

🔯அதிகாலையில் குளித்துவிட்டு வாசல் தெளித்து அரிசி மாவில் கோலம் போட வேண்டும்.

🔯மார்கழி மாதத்தில் புதுமனை புகுவிழா, வாடகை வீடு மாறுதல், அலுவலகம் மாறுதல், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்தல், காது குத்துதல், புதிய வீடு மற்றும் புதிய வாகனமும் வாங்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக