செவ்வாய், 31 டிசம்பர், 2019

2019ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட்கள் ..!!

2019ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட்கள்
..!!

123456.. இது உங்கள் பாஸ்வேர்டா? நீங்கள் படிக்க வேண்டிய பதிவு இது..!!


இன்றைய டிஜிட்டல் சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டியுள்ளது. இந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகமாவதால், பயனாளர்கள், பல பாஸ்வேர்ட்களை நினைவில் கொள்ள சிரமப்பட்டு, ஒரே பாஸ்வேர்டினை அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ-மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வேர்ட்களை விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான்.

நமக்கு எளிதாக நினைவில் நிற்கும் பாஸ்வேர்ட்கள், ஹேக்கிங்கில் ஈடுபடுவோர் திருட்டு வேலைகளில் ஈடுபட மிக எளிதாக அனுமதிக்கின்றோம் என்பதே உண்மை.

தற்போது 2019ஆம் ஆண்டின் மோசமான Pயளளறழசன-களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது :

சர்வதேச அளவில் 2019ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட எளிதாக கணிக்கக்கூடிய 10 பாஸ்வேர்ட்களின் பட்டியலை, றழசளவ pயளளறழசனள ழக 2019 என்ற பெயரில் ளுpடயளா னுயவய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இப்பட்டியல் வெளியிடப்பட்டாலும் இதில் இடம்பெறும் பாஸ்வேர்ட்களில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. டாப் 10ல் உள்ளவையே மாறி மாறி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.

பட்டியல் விவரம் பின்வருமாறு :

1. 123456

2. 123456789

3. ஙறநசவல

4. pயளளறழசன

5. 1234567

6. 12345678

7. 12345

8. டைழஎநலழர

9. 111111

10. 123123

நீங்கள் இந்த புத்தாண்டிற்கு ஒரு தீர்மானத்தை எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் உங்கள் பாஸ்வேர்ட்களை மேம்படுத்த சபதம் செய்யுங்கள். மின்னஞ்சல், வங்கி மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற உங்கள் முக்கியமான கணக்குகளுக்கு குறைந்தபட்சம் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளுங்கள்.

பாஸ்வேர்டை கவனமாக கையாள சில டிப்ஸ் :

பாஸ்வேர்டுகள் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் அல்லது 10 முதல் 12 எழுத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

உங்கள் பாஸ்வேர்டு குழப்பமானதாக இருக்க வேண்டும். அதாவது பாஸ்வேர்டு எளிதாக இருக்கக்கூடாது.

ஒரு ஆங்கிலச் சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் வரிசையாக எழுதிவிட்டுப் பின்னர் இடையிடையே எண்களையும், நிறுத்தல் குறிகளையும் சேர்க்கலாம்.

திருமண நாள், பிறந்த நாள், செல்லப் பிராணியின் பெயர், பள்ளியின் பெயர் நினைவில் கொள்ள எளிதாக இருக்கும். ஆனால், இத்தகைய பாஸ்வேர்ட்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன.

நம் பாஸ்வேர்டை அவ்வப்போது அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பாஸ்வேர்ட் எவ்வளவு சிக்கலானதாக, பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டிருந்தாலும், அடிக்கடி மாற்றப்பட வேண்டும். இல்லையெனில் அது இணையக் கள்வர்கள் கையில் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.

பாஸ்வேர்ட்டை மூன்று வகைகளாக பிரிக்கலாம்...

ரேஅடிநசள (1இ2இ3...)

யுடிhயடிநவள (யஇடிஇஉ...)

ஊhயசயஉவநசள (!இ;இசூ...)

123456, யடிஉன இந்த மாதிரியான பாஸ்வேர்டுகள் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தக்கூடியவை. ஆனால், நம்முடைய பாஸ்வேர்ட்டை யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் வைக்க வேண்டும்.

நீங்கள் வைக்கும் பாஸ்வேர்டில் கண்டிப்பாக ரேஅடிநசளஇ யுடிhயடிநவளஇ ஊhயசயஉவநசள என மூன்று நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

டிஜிட்டல் உலகில் பாஸ்வேர்ட் மிகவும் இன்றியமையாத ஒன்று...

பிறக்கும் புத்தாண்டில் உங்களின் பாஸ்வேர்ட்டை மாற்றி அமையுங்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக