குளிர்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள் !!

🍜 குளிர்காலங்களில் ஏற்படும் கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
🍜 மழை, பனி போன்ற குளிர்காலத்தில் சுற்றுப்புறச்சூழலின் வெப்பம் குறைவாக இருப்பதால் உடலில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் நாம் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
🍜 உடல் வெப்பத்தை தக்க வைக்கும் உணவுகளை உண்பதன் மூலம் உடலை குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வைத்துக்கொள்ள இயலும். குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்னென்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியவை :
🍜 குளிர்காலங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் நீங்கள் அவதிப்பட நேரிடலாம். பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால் பரவும் நோய்களை எதிர்க்கும் சக்தி பூண்டில் உள்ளது. இதனால், குளிர்காலத்தில் தொண்டைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு 2-3 பூண்டு பற்களை மென்று விழுங்குவதன் மூலம் தீர்வு காண முடியும்.
🍜 குளிர்காலங்களில் உணவில் தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.
🍜 குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும், தேவையான பிராணவாயுவை உட்கொள்வதற்கும், வேர்க்கடலையை சிறிதளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
🍜 பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.
🍜 நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவிலேயே சாப்பிடலாம்.
🍜 காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
🍜 இரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதனால், ஜலதோஷம் தொடர்பான பிரச்சனைகள் வராது.
சாப்பிடக்கூடாதவை :
🍜 உணவில் இனிப்பு அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.
🍜 எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
🍜 இரவு உணவில் பச்சைப் பயிறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க வேண்டாம்.
🍜 சிலருக்கு மழைக்காலத்தில் எலுமிச்சை பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் பருகினால் ஒத்துக்கொள்ளாது. அதனால், பருகாமல் இருப்பது நல்லது.
🍜 மழைக்காலங்களில் இரவில் கீரை வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
🍜 பால், தயிர், வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக