வியாழன், 14 நவம்பர், 2019

சுவாமி ஐயப்பன் பெண்களை மதிக்ககூடியவர் என்பதற்கு நான் கூறும் உதாரணங்கள்

சுவாமி ஐயப்பன் பெண்களை மதிக்ககூடியவர் என்பதற்கு நான் கூறும் உதாரணங்கள்..

சபரிமலைக்கு  (மண்டல பூஜை ) வருடாவருடம் என 23 வருடங்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று பதினெட்டாம் படி ஏறி ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்து இருக்கிறேன்.ஸ்ரீ ஐயப்பனின் அற்புதங்கள் என் வாழ்வில் நிறைய நடந்து இருக்கிறது. அதனால் என் உடன் பிறவா சகோதரிகளுக்கு இந்த பதிவை வெளியிடுகிறேன்🔱

சபரிமலை ஐயப்பனை சில  இளம்பெண்கள் 18ம் படி ஏறி தரிசனம் செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.இது தவறானசெயல்.🔱

தமிழ் நாட்டில் முருகருக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் கேரளாவில்
 ஐயப்பனுக்கு ஆறுபடை வீடு உள்ளது. 🔱
1.பந்தள அரண்மனை-- குழந்தையாக

2.குளத்துபுழா -- பால சாஸ்தாவாக

3.ஆரியங்காவு -- இளைஞராக

4.அச்சன் கோவில்-- அரசனாக

5.எருமேலி-- மகிஷியை வதம் செய்த தர்ம சாஸ்தாவாக.

6.சபரிமலை-- பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் பிரம்மசாரியாக

இதில் முதல் 5 படைவீட்டுக்கு எல்லா பெண்களும் செல்லலாம். 6ம் படை வீடான சபரிமலைக்கு 10 வயதிற்குள்   50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் தரிசனம் செய்யலாம் என முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன் படியே நடப்பது சால சிறந்தது. 🔱

சுவாமி ஐயப்பன் பெண்களை மதிக்ககூடியவர் என்பதற்கு நான் கூறும் உதாரணங்கள்,

1. பந்தளத்தில் வாழ்ந்த போது தன் அன்னையின் உடல்நலத்திற்க்காக  காட்டிற்குள் சென்று புலி பால் கொண்டு வந்தவர்.🔱

2.அட்டூழியம் செய்த மகஷியை எருமேலியில்  வதம் செய்த பின் தன்னுடைய பசியை போக்கிய மூதாட்டிக்கு தன்னுடைய வாளை பரிசாக கொடுத்தவர்.இன்றும் இந்த வால் எருமேலி பஸ் நிலையம் எதிரே உள்ள புத்தன் வீட்டில்(குடிசை வீடு) காணலாம்.🔱

3. தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பிய மாளிகைப்புரத்தம்மனை தன்னுடைய பிரம்மசாரி அவதாரத்தை எடுத்து கூறி தன் அருகிலேயே இருந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்க வழி வகை செய்தார்.🔱

ஸ்ரீஐயப்பனை வளர்த்து ஆளாக்கிய பந்தள மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்கள் சபரிமலை வந்து  தரிசனம் செய்யகூடாது.என்ற கட்டுபாடு உள்ளது. 🔱

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புகள் மறு விசாரணைக்கு பின் திருத்திய தீர்ப்புகளாக  வந்துள்ளது.எனவே பெண்கள் நிதானமாக நடந்து கொள்வது . சாலசிறந்தது.🔱

உலகம் எங்கும் உள்ள இளம் பெண்களே வீம்பாக, விளம்பரத்துகாக சபரி மலை வராதீர்கள். துளசி மணி மாலை அணிந்து தொடர்ந்து ழுழுமையாக 48 நாள் விரதம் இருந்து சபரிமலைக்கு வாருங்கள். இந்த விரதம் 50 வயதுக்கு பிறகு இருந்தால் சால சிறந்தது.

பெண்களை மதிக்கும் இந்து நாடு என்றைழைக்கபடும்  நமது இந்தியாவில், குறிப்பாக நமது தமிழ்நாட்டில் பெண்களை மதிக்கிறார்கள். இது போல் மதம் சார்ந்த வழிபாட்டில் யாரும் தலையிடகூடாது.என  உலகில் உள்ள அனைத்து இளம் பெண்களை இந்த பதிவின் கேட்டுகொள்கிறேன் .🔱

ஸ்ரீஐயப்பனை அமைதியாக  வணங்குவோம்!🔱

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக