திருமணம் முடிந்த மற்றும் முடியாத பெண்களுக்கு ஏற்படும் நோய்கள்? மருந்துகள் என்ன?..!!
பொதுவாக பெண்களுக்கு சில சமயத்தில் உடல்நலக்குறைவானது ஏற்படும். இது அவர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தது. அந்த வகையில்., பெண்கள் தங்களின் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவரை சரி செய்யும் வழிமுறைகள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும்..
*வெள்ளைபடுதல்:*
வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
*பிறப்புறுப்பில் புண்:*
பிறப்புறுப்பில் புண் போன்று இருந்தால்., மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
*சீரற்ற மாதவிலக்கு:*
சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வர., சீரற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.
*மாதவிலக்குக் கால வயிற்று வலி:*
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு., முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
*உடல் நாற்றம்:*
ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர., உடல் நாற்றம் நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
*திருமணத்துக்குப் பின்பு வரும் நோய்கள் மற்றும் மருந்துகள்:*
கர்ப்பகால வாந்தி: கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை சரி செய்ய அரிநெல்லிக்காயை உண்டு வர சரியாகும்..
*பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண்:*
பிரசவ காலத்தில் ஏற்பட்ட வயிற்றுப்புண்ணை சரி செய்ய வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கி., குழந்தையை பிரசவித்த பெண்கள் நலமும் பெறுவார்கள்..
*பிரசவத்திற்கு பின் உடல் மெலிவு:*
பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் உடல் மெலிவை சரி செய்ய சீரகம்., பூண்டு மற்றும் குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்றும்.
*தாய்ப்பால் பற்றாக்குறை:*
தாய்ப்பால் குறைவை சரி செய்ய பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
*வயிற்று சதை குறைய:*
சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி., நன்கு மெழுகு போல் அரைத்து., அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக