திங்கள், 18 நவம்பர், 2019

சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19


ஆண்களுக்கு ஒரு தினம் – ஏன்?

 ‘சர்வதேச ஆண்கள் தினம்’ (நவம்பர் 19).  எதற்கு ஆண்களுக்கு  என்று ஒரு தினம்? இந்த தினத்தின்முக்கியத்துவம் என்ன?

‘சர்வதேச பெண்கள் தினம்’ (மார்ச் 8) பிரபலம் அடைந்த அளவுக்கு, ஆண்கள் தினம் அவ்வளவு பிரபலமாகவில்லை. சமீப காலமாகத்தான் இதற்கான கொண்டாட்டங்கள், வருடா வருடம் அதிகரித்து வருகின்றன.

இதைப் பற்றிய ஒரு பார்வை…

IMD (International men’s Day) உலகம் முழுவதும், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு தினமாகக் குறிப்பிடப்படுகிறது.

உண்மையில் 1960களிலேயே  ‘ஆண்கள் தினம்’  தேவை என்ற அறை கூவல்கள் தொடங்கிவிட்டன. 1992ல் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில், தாமஸ் ஆஸ்டர் என்பவரால் முதன் முதலில் இதற்கான விதை விதைக்கப்பட்டது.  எனினும், சட்ட பூர்வமாக, Dr Teelucksingh என்பவரால் 1999ம்ஆண்டு, Trindad – Tobagoவில்  கொண்டாடப்பட்டது.

இந்தியாவில், முதன் முதலில் 2007ம் வருடம்  ‘ஆண்கள் உரிமைகள் கழகம்’ என்ற அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாடியது. 2009ம் வருடம் முதல், ஆண்களின் பிரத்யேக ஆடைத் தயாரிப்பு நிறுவனமான  ‘Allen Solly’ உடன் இணைந்து, கொண்டாட்டங்கள் சூடு பிடித்துவருகின்றன.

Happy-International-Mens-Day-Wallpaper

இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் யாதெனில் –

சமுதாய முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சிறந்த ஆண்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் கௌரவப்படுத்துவது.
சமூகத்தில் அதிகரித்து வரும் ஆண்களின் தற்கொலை விகிதம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, தந்தை – மகன் உறவு சிக்கல்கள், சமூகத்தில் ஆண்கள்  எதிர்கொள்ளும் பாலினரீயிலான பிரச்னைகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, விவாதித்து, தகுந்த உதவிகள் மூலம் இவற்றை தீர்க்க  விழையும் முயற்சி ஆகும்.
இப்படிப்பட்ட தினங்களை கடைப்பிடிப்பது ,

இனப் பாகுபாடுகளை கடந்து,
பாலின உறவுகளை மேம்படுத்தி,
ஆண்-பெண் சமத்துவத்தை ஊக்குவித்து
பெண்கள் மற்றும் சக மனிதர்களை பரஸ்பரம் மதித்து பல முன் மாதிரியான ஆண்களை உருவாக்க ஏதுவாகும்.
இந்த கட்டுரையைப் படிக்கும் ஆண்கள் மற்றும் இணையம் தாண்டியும் வாழும் ஆண் குலத்துக்கும் ‘குங்குமம் தோழி’யின் இனிய ‘ஆண்கள் தின வாழ்த்துகள்.’ மேம்பட்ட மனித உறவுகளால் அமைந்த ஒரு சிறந்த சமுதாயமே நம் வருங்கால சந்த்தியினருக்கு நாம் அளிக்கும் கொடை. மனிதம் வளர்ப்போம்!
ஆண்கள் தின வாழ்த்துக்கள்...
நன்றி குங்குமம் தோழி.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக