40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!
*சொந்த காலில் நில்!*
அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை,
யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.
*உலகம் சுற்றும் வாலிபன்!*
குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியா-வாவது சென்று வந்துவிட வேண்டும்.
புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.
*பேரார்வம்!*
பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது.
ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம்.
ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.
*தோல்வி!*
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான்.
ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.
*முதலீடு!*
சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும்.
அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.
*தீய பழக்கம்!*
ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும்.
புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது.
எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா,
நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.
ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.
*உண்மையான நட்பு!*
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.
*பிடிக்காவிடில் பிரிவு!*
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?
வேண்டவே வேண்டாம்.
முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.
*சேமிப்பு!*
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள்.
எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும்.
இது உங்களுடைய கடமை.
*கைதேர்ந்தவர்!*
நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும்.
அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.
*ஆராய்ந்து செயல்படுதல்!*
கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை.
மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
*நேரம் பொன் போன்றது!*
நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும்.
30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.
*நெட்வர்க்!*
ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள்.
ஆம், 30 வயதுக்கு மேல் நீங்கள் ஓர் நெட்வர்க் போல, பணியிடம், வாழ்விடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
இது உங்களை பல நிலைகள் உயர உதவும்.
*நீங்களாக இருங்கள்!*
மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.
*படிப்பில் உயரம்!*
உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும்.
பி.எச்.டி முடித்தால் முழுமை என்றில்லை.
இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக