ஞாயிறு, 6 அக்டோபர், 2019

கயிறு தாண்டல்


#கயிறு_தாண்டல்

Skipping Rope அல்லது Jump Rope

இது மற்ற உடற்பயிற்சிகளையும் விட குறைந்த நேரத்தில் அதிக அளவு சத்துக்களை எரிக்கும். கயிறு தாண்டும்போது இதயத்துடிப்பு 150 அல்லது அதற்கு மேலும் செல்லும். எனவே இது இதயத்தை வலுப்படுத்தும்.

உடல் எடையைக் குறைக்க இதைவிட சிறந்த பயிற்சி இல்லை என்றே சொல்லலாம். வழக்கமாக Zym செல்வதற்கு நீங்கள் சோம்பேறித்தனப்படுபவராக இருந்தாலும் Skipping பழகிவிட்டால், அதன்மேல் ஆர்வம் வந்துவிடும்.

நாள் தவறாமல் தினமும் 10 நிமிடம் செய்தாலே போதுமானது. நல்ல பலன் தரும். நன்கு வியர்க்கும். 20 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் செய்தால், நீங்கள் அனிந்திருக்கும் உடை நனைந்துவிடும் அளவிற்கு வியர்க்கும்.

மேலும் நீங்கள் எங்கு சென்றாலும் இதனைக் கூடவே எடுத்தும் செல்லலாம்.

ஆனால் உங்கள் இலக்கு ”கட்டுடல் மேனி” என்றால் Skipping மட்டுமே போதாது. Zym-தான் சென்றாக வேண்டும். ஆனால் Skipping உங்கள் உடலுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்கும் (கட்டுடல் அல்லாமல்).

Skipping-ல் பலவகை உள்ளது. அவற்றில் முக்கியமானவை,

1. சாதரணமாகக் குதித்துக்கொண்டே கயிற்றைச் சுற்றுவது (Regular Skipping)

2. நின்ற இடத்தில் ஓடிக்கொண்டே கயிற்றைச் சுற்றுவது (Sprint Jumping)

3. கயிற்றைப் பக்கவாட்டில் சுற்றுவது (Side Swing)

4. கயிற்றைக் குறுக்காகச் சுற்றுவது (Cross overs அல்லது Criss Cross)

5. நின்ற இடத்தில் ஓடிக்கொண்டே கயிற்றைக் குறுக்காகச் சுற்றுவது (Sprinting Cross overs)

6. ஒருமுறை தாவும்போது கயிற்றை இருமுறை சுற்றுவது (Double Unders)

7. ஒருமுறை தாவும்போது கயிற்றை இருமுறை (ஒருமுறை நேராகவும் ஒருமுறை குறுக்காகவும்) சுற்றுவது (Double Under Cross Overs)

Skipping-ல் மேலும் பலவகை உள்ளது. ஆனால் இவை ஏழும் அடிப்படையானவை.

மேலும் நாம் பயன்படுத்தும் கயிற்றின் எடையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். கயிற்றின் எடை அதிகரிக்க அதிகரிக்க நமது உடல் வழுவும் அதிகரிக்கும். ஆனால் கனமான கயிற்றைச் சுற்றுவது எளிதல்ல. முதலில் சாதரனமான கயிற்றில் நன்கு பழகிய பின்னரே கனமான கயிற்றைப் பயன்படுத்த வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக