நம் உணவில் சிறுதானியங்கள்... ஏன் அவசியம்?... தெரிந்து கொள்ளுங்கள்..!!
சிறுதானியங்களும்... அதன் பயன்களும்...!

👉 பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
👉 அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.
👉 நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும். சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும்.
👉 அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.
👉 குடல் புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும்.
👉 இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
👉 மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள், கால் வீக்கம், முகவீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை பயன்படுகிறது.
👉 பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். புரதம் இதில் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
👉 சோளம் செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல்பருமனை குறைக்க உதவும். செல்களை புத்துணர்வு பெறச்செய்யும். செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.
👉 கேழ்வரகு உடல்பருமன் குறைய உதவும். சர்க்கரைநோயைக் குணப்படுத்த உதவும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்யும்.
👉 கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும்.
👉 கம்பு மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவறட்சி போன்றவை நீங்க மோரில் கலந்து பருகலாம்.
👉 சிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.
👉 ஏனென்றால் சிறுதானியங்களில் உள்ள உயர்ந்த அளவு மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலியினை வராமல் தடுக்கிறது.
👉 சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக