வெள்ளி, 18 அக்டோபர், 2019

தீபாவளி ஸ்பெஷல்


தீபாவளி ஸ்பெஷல் !

தீபாவளி என்றால் நினைவிற்கு வருவது புது புது ஆடை மற்றும் வெடி வெடிக்கும் பட்டாசும் தான். இந்த நாளை ஏன் தீபாவளியாக அனைவரும் கொண்டாடுகிறோம். 'தீபம்" என்றால் 'விளக்கு". 'ஆவளி" என்றால் 'வரிசை". அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும்.

புராணக் கதை :

🎉 இரண்யன் எனும் அசுரன், பு மிதேவியை கடத்தி கொண்டு பாதாளத்தில் மறைந்தான். பு மிதேவியை மீட்க, பன்றி வடிவெடுத்து, தன் பற்களால் பு மியை அகழ்ந்து சென்றார், மகாவிஷ்ணு. இரண்யனை வதம் செய்த பின், பு மியை, தன் தெற்றுப் பல் நுனியில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பு மாதேவிக்கும், வராகருக்கும் ஏற்பட்ட இந்த ஸ்பரிசத்தில், பவுமன் பிறந்தான். பவுமன் என்றால், பு மியின் பிள்ளை என்று பொருள். ஆனால், இவன் சென்றால், அவ்விடத்தில் இருள் படியும் அளவுக்கு மிகவும் கறுப்பாக இருந்தான்.

🎉 பவுமன் திருமாலின் பிள்ளை என்ற தைரியத்தில், மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்து வந்தான். அத்துடன், தேவலோகத்துக்கு சென்று, இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், அவனது தாய் அதிதி அணிந்திருந்த, அமுதம் சொட்டும் குண்டலங்களையும் பறித்து வந்தான்.

🎉 மனிதனாய் பிறந்திருந்தாலும், அசுர குணத்துடன் விளங்கியதால், இவனை, நரகாசுரன் என்றே மக்கள் அழைத்தனர். அவன் தேவர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

💣 இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பு மி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும், பு மாதேவி சத்யபாமாவாகவும் பு மியில் அவதாரம் செய்தனர். பிறகு போர் நடந்தது.

💣 அசுரன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்யபாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்யபாமா பு மியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

💣 அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், மனம் திருந்திய நரகாசுரன், தன் இறந்த நாளை மக்கள் ஆனந்த திருநாளாக கொண்டாட வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும், சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

💣 தித்திக்கும் தீபாவளியை தேன் சுவைக் கொண்ட இனிப்புகளோடு வெடி வெடித்து வண்ண வண்ண ஆடை அணிந்து கொண்டாட இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக