ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தீபாவளியை பத்தி இந்த விஷயமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?


வருஷா வருஷம் தீபாவளி கொண்டாடுறீங்களே... தீபாவளியை பத்தி இந்த விஷயமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

ஒவ்வொரு வருஷமும் தீபாவளி வந்துக்கிட்டுதான் இருக்கு, நாமளும் எல்லா வருஷமும் உற்சாகமாக கொண்டாடிட்டுகிட்டுதான் இருக்கோம். தீபாவளி பற்றிய வரலாறும், முன்கதையும் நமக்கு முழுமையா தெரியுமானு கேட்டா அதற்கு பதில் இல்லை என்பதுதான். தீபாவளியை பற்றி நமக்கு தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கு.

தீபாவளிக்காக வருடா வருடம் காத்திருப்பது இந்துக்கள் மட்டுமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? சீக்கியர்களும், சமணர்களும் கூட தீபாவளியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்கள் தீபாவளி இந்தியாவின் பண்டிகை மட்டும்தான் என்று நினைக்கின்றனர், ஆனால் உண்மையில் பல நாடுகளில் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. இந்த பதவில் தீபாவளி பற்றி உங்களுக்குத் தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்.


செல்வத்தின் பண்டிகை
செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு மரியாதை செலுத்தவும், அவரை உங்கள் வீட்டுக்கு அழைப்பதும்தான் தீபாவளி பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். இந்த நாளில் வீட்டு வாசலில் விளக்கேற்றுவது என்பது உங்கள் வீட்டுக்கு லக்ஷ்மியை அழைப்பதன் அடையாளமாகும்.


புராணங்களும், தீபாவளியும்
தீபாவளி நமக்கு பல புராணக் கதைகளை நினைவூட்டுகிறது. அதில் பரவலான நம்பிக்கை கிருஷ்ணர் நரகாசுரனை அழித்ததாகும், வடஇந்தியாவை பொறுத்தவரை தீபாவளி இராமர் இராவணனை அழித்துவிட்டு அயோத்தி திரும்பிய நாளாகும். வங்காளத்தில் தீபாவளியின் போது காளி தேவியை வழிபடுகிறார்கள்.



இந்தியாவின் பண்டிகை
தீபாவளி அளவிற்கு இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடும் திருவிழா எதுவும் இல்லை. இந்த பண்டிகை பல்வறு நிறங்களையும், கொண்டாடங்களையும், வழிமுறைகளையும் கொண்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி இந்தியாவின் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கிறது.


தீபாவளியும், சமணர்களும்
தீபாவளி என்பது சமணர்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும், ஏனெனில் அவர்கள் மதத்தின் கடைசி தீர்த்தங்கரும், கடவுளுமான மகாவீரர் 14 ஆம் நூற்றாண்டில் 527BC , அக்டோபர் 15ல் முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இது அவர்களின் மிகப்பெரிய திருவிழாவாகும்.


தீபாவளியும், சீக்கியர்களும்
சீக்கியர்கள் தீபாவளியை பந்தி சோர் திவாஸ் என்று அழைக்கிறார்கள், வரலாற்றில் கூறியுள்ள படி தீபாவளி தினத்தன்று அவர்களின் குருவான குரு ஹர் கோபிந்த ஜி பொற்கோவிலை தாக்கிய இஸ்லாமிய அரசர்களின்


பிடியில் ஜஹாங்கீரின் சிறையில் இருந்து தன்னையும், சில இந்து அரசர்களையும் விடுவித்ததாக கூறப்படுகிறது. சொல்லப்போனால் 1577 ஆம் ஆண்டு தீபாவளி நாள் அன்றுதான் பொற்கோவிலுக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. அதனால்தான் இது சீக்கியர்களின் புனித நாளாக கருதப்படுகிறது.


இந்தியாவை தாண்டி தீபாவளி
இந்தியாவின் பண்டிகையான தீபாவளியை பல நாடுகள் கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்தியாவிற்கு அடுத்து இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் நின்று வானவேடிக்கைகளையும், நடன நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பார்கள்.



தீபாவளி விடுமுறை
இந்தியாவில் தீபாவளி ஒரு முக்கியமான பொது விடுமுறையாகும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது குறிப்பாக சூரினாம், திரிநாட், டொபாகோ, கயானா, மியான்மர், சிங்கப்பூர், நேபாள், இலங்கை, பிஜி, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக