திங்கள், 22 ஏப்ரல், 2019

அவதானப்பட்டி சிறுவர் பூங்கா


இது புதுசு... சாகச படகு சவாரி... இயற்கையை ரசிக்க வேண்டுமா...?
அவதானப்பட்டி சிறுவர் பூங்கா !!


🚣 கிருஷ்ணகிரியிலிருந்து ஏறத்தாழ 7கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து ஏறத்தாழ 107கி.மீ தொலைவிலும், தருமபுரியிலிருந்து ஏறத்தாழ 48கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய ஏரி மற்றும் சிறுவர் பூங்காதான் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா.

சிறப்புகள் :

🚣 அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு பயணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய இடமாகும்.

🚣 இந்த ஏரிக்கு தேவையான நீர் ஆதாரம் கிருஷ்ணகிரி அணைக்கட்டில் இருந்து ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறுகிறது.

🚣 எனவே, இது வற்றாத ஏரியாக ஆண்டு முழுவதும் திகழ்கிறது. இந்த ஏரி சாகச படகு சவாரிக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

🚣 இங்குள்ள பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் விளையாடி மகிழும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.

🚣 நிழல் தரும் மரங்கள், பரந்த புல் தரைகள், இளைப்பாறும் கூடங்கள், படகு இல்லம் போன்ற பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

🚣 இந்த சிறுவர் பூங்கா மற்றும் ஏரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


🚣 மேலும், ஏரியின் அருகே இயற்கையை ரசிக்கக்கூடிய வகையில் பசுமையான வயல்கள் உள்ளன.

🚣 குழந்தைகளுடன் ஏரியில் படகு சவாரி செய்ய உகந்த இடமாகும். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

🚣 குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இப்பூங்கா மற்றும் ஏரிக்கு வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் உள்ள+ர் சுற்றுலாப்பயணிகள் இவ்விடத்திற்கு அதிகமாக வருகை புரிகின்றனர்.

எப்படி செல்வது?

🚌 கிருஷ்ணகிரிக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

🚙 கிருஷ்ணகிரியிலிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் மூலம் இந்த ஏரிக்குச் செல்லலாம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.


எங்கு தங்குவது?

🏠 கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள் :

ஏரி.
படகு பயணம்.


கிருஷ்ணகிரி அணை.
அரசு அருங்காட்சியகம்.
கெலவரபள்ளி அணை.
காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்.
சந்திரசூடேஸ்வரர் கோவில்.
தளி ஏரி மற்றும் பூங்கா.


 செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/XOqGPp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக