திங்கள், 22 ஏப்ரல், 2019

கோணலாய் வளரும் மரங்கள்... மர்மக்காடு...!!


கோணலாய் வளரும் மரங்கள்... மர்மக்காடு...!!


🌲மரங்கள் என்றாலே உயரமாக வளர்வது என்பது அனைவருக்கும் தெரியும்... ஆனால், வளைந்து வளரும் மரங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

🌲ஆமாங்க... ஆராய்ச்சியாளர்களுக்கே ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் தொண்ணூறு பாகை அளவில் வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் அடங்கிய காடு ஒன்றுள்ளது.

🌲அப்படியொரு அதிசய காட்டைப் பற்றி தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.



🌲போலந்து நாட்டின் மேற்கே அமைந்துள்ளது விசித்திர வடிவிலான ஒரு பைன் மரக்காடு. இந்த காட்டை பார்க்கும் அனைவருக்கும் இங்குள்ள மரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

🌲ஏனெனில், இந்த காட்டின் மரங்கள் யாவும் அடிப்பகுதியில் ஏறத்தாழ ஒரே வகையாக வளைந்து காணப்படுகின்றன.

🌲போலந்து என்னும் நாடு உருவாவதற்கு முன்னர், அதாவது ஜெர்மானிய மாகாணமான போமேரேனியாவில் இருந்தபோது இம்மரங்கள் நடப்பட்டது என்று கூறுகின்றனர்.


🌲மேலும், அங்கு நடப்பட்ட இந்த மரங்கள் விஞ்ஞானிகளே வியக்கும் வண்ணம், அடிப்பகுதியில் ஏறத்தாழ தொண்ணூறு பாகை அளவில் வளைந்து பின் நீண்டு வளர்கின்றன.

🌲ஒவ்வொரு பைன் மரமும் வடக்கிற்கும் மேலாக மேலே தரையில் வளைந்து, பின்னர் மூன்று முதல் ஒன்பது அடி பக்கவாட்டாக சென்று, மீண்டும் வளைந்து நீண்டு வளர்கிறது.

🌲இன்றும் புரியாத புதிராய் இருக்கும் இந்த காடு தற்போது கோணல் மர காடு (ஊசழழமநன குழசநளவ) என அழைக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக