கோடையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்!!
 கோடை வெப்பத்தை தவிர்க்க வேண்டுமா?
👉 தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு தான் முதலிடம். தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும்.
👉 கோடைக்காலத்தையும், கோடைக்கால நோய்களைத் தவிர்க்கவும், தினமும் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், ஜூஸ், மோர், எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.
👉 கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது. இதில் 93 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.
👉 கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க, அதிக அளவில் வியர்வை வெளியேறும். அதனால், அதற்கேற்ப தண்ணீர் அருந்த வேண்டும்.👉 மேலும், அதிக அளவு டீ, காபி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
அதிக அளவு குளிரூட்டப்பட்ட பானங்கள் :
👉 கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள்.
👉 உடல் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்கொள்வதன் மூலம் தோல் இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும். எனவே, மிகுந்த குளிரூட்டப்பட்ட பானங்களை தவிர்ப்பது நலம்.
குறைவாக தண்ணீர் குடிப்பதால் வரும் நோய்கள் :
👉 அவரவர் வேலை மற்றும் அவர்களின் உடலின் வியர்வைக்கேற்ப தண்ணீரின் தேவை மாறுபடும். உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
👉 உடலில் நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மாலையில் களைப்பு, உடல்வலி, நீர்க்கடுப்பு, காலையில் மலச்சிக்கல், நாள்பட சிறுநீர்ப் பாதை கல், மூலம், வயதானவர்களுக்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உதடுகள் காய்ந்துபோவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது, எப்போதும் தூக்கம் வருவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.பொதுவான டிப்ஸ் !
👉 வெயில்கால பாதிப்புகள் பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு தான் எளிதில் தொற்றும். அதிக உஷ்ணம் காரணமாக, அம்மை, வியர்க்குரு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றைத் தவிர்க்க தினந்தோறும் இருமுறை குளிப்பது நலம்.
👉 வெளியில் செல்லும்போது, கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக