திங்கள், 19 பிப்ரவரி, 2018

முடி கொட்டுவதைத் தடுக்கும் சில எளிய வழிகள்!!!



முடி கொட்டுவதைத் தடுக்கும் சில எளிய வழிகள்!!!

தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும். ஒரு வகையில் நாமும் கவரிமானைப் போலத் தான். எப்படி என்று கேட்குறீர்களா? பொதுவாக கவரிமான் தன் உடம்பில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விடும் என்று சொல்வர். அதே போல் தான் நாமும். சொத்து, சுகம் பறிபோவதை விட, முடி பறிபோவதை நம்மால் தாங்கி கொள்ளவே முடியாது. அவ்வாறு முடி கொட்டுவதைப் பற்றியும், அதனை தடுப்பதை பற்றியும் கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
முடி கொட்டுதல் என்பது மிக இயல்பான நிகழ்வு. இதை அனுபவிக்கும் பலருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொண்டு, முடி கொட்டிய இடத்தை தலை வாரி மறைக்க முயல்வர். குளிக்கும் போது கழிந்த முடிச்சுருள்களை பார்க்கும் போதோ அல்லது தலை வாரும் போது சீப்புகளில் காணும் முடிச்சுருள்களை பார்க்கும் போதோ பலருக்கும் மனச்சோர்வு ஏற்படுவது உண்டு. பல பேருக்கு முடி கொட்டுதல் என்பது ஒரு இயற்கையான செயல்பாடு என்பது தெரியாது. நாம் என்ன செய்தாலும் சரி, முடி கொட்டுவதை நிறுத்த முடியாது. ஆனால் சிறிது தடுக்கலாமே. ஆம், நாம் மனது வைத்தால் முடி கழியும் அளவை குறைக்க முடியும்.
சந்தையில் கிடைக்கும், முடி கொட்டுதலைத் தடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விகள் எப்போதும் இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு, எதையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டாலும் வேகமாக முடி கழிந்து கொண்டிருப்பவர்களுக்கு அபாயம் நிற்கப் போவதில்லை. இதற்கு ஒரே நிவாரணம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை உபயோகிப்பதே. இப்படி பயன்படுத்துவது இயற்கை சார்ந்த பொருட்கள் என்பதால் பக்க விளைவுகள் பற்றிய கவலைகளை விட்டெறியலாம். தலையில் வானூர்தி இறங்கும் தளம் அமைப்பது, அதாங்க வழுக்கை விழுவதை தடுக்க சிறந்த ஒரே வழி இயற்கையான பாட்டி வைத்தியத்தை மேற்கொள்வதே. அதற்கு கீழ்கண்டவைகளை படித்து, தலை முடி கொட்டுவதை எவ்வாறு குறைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.


முடியை அலச வேண்டும்

எப்போதுமே தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். மேலும் தலை முடியின் வகையை பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

கடுகு எண்ணெய்

ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியத்தை பெரும்.

வெந்தயம்

சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.

மசாஜ்

முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டுவதை தடுக்கும்.

வெங்காயம்

தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

முட்டை

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் முடி கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை, சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.

இயற்கை ஷாம்பு

5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.

தேங்காய் எண்ணெய்

ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு

நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.

பசலைக்கீரை சாறு

தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.

கொத்தமல்லி

பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள். அதுவும் ஒரு தீர்வே.

தேங்காய் பால்

தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.

சிரிப்பு ஒன்றுதான்..


சிரிப்பு ஒன்றுதான்..

சிரிப்பு ஆக்கபூர்வம் ஆனது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது.

மனம் ஆரோக்கியம் அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது.

ஆனால் நாம் அப்படி ஒரு மருந்து உள்ளதை மறந்து விடுகிறோம். அவ்வளவுதான்.

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல.

உலக வாழ் உயிர் இனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.

சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு..

மனிதனுக்கு பல சமயங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க, ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சி என பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்த சிரிப்பு.

நகைச்சுவை மனிதனை சிரிக்க வைக்க மட்டும் இல்லாமல் அது வேறு பல சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச் சுவையும், சிரிப்பும் பஞ்சம்ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம்.

சமுதாய சூழ் நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம்.

நம்மில் சிலர்- பொரிய பதவியிலுள்ளவர்கள் ‘சிரித்துப் பேசக் கூடாது’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள்.இந்தப் போக்கு மாறவேண்டும்.

நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். சிரிப்பது உங்கள் கடமை.

மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.

மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை  உணர்வுதான்.சிரிக்க கூடியசக்திதான்.சிரிப்பு..

இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், துன்பங்களில் இருந்து
 விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி...

உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.

சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது.செல்வத்தைத் தருகிறது.

ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.?..

ஆம்..,நண்பர்களே..,

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது.

சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்..

மனம் விட்டு சிரியுங்கள்..

மனம் சுத்தமாகிறது.

ஆரோக்கியமடைகிறது..

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

நேர்த்தியான உடை எது?



நேர்த்தியான உடை எது?

"நீங்கள் ஏன்  காந்தியைப் போல்
 எளிமையாய் உடுப்பதில்லை?

 புரட்சியாளர் அம்பேத்கரை நோக்கி  நிருபர்கள் கேட்டனர்.
அதற்க்கு அவர் சொன்னார்.

"காந்தி ... கந்தை துணியை கட்டினாலும் அது எளிமை என பெருமைப்படுவர். என்னைப்போல் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்திலிருந்து முயன்று, படித்து , உயர்ந்த பட்டங்களை பெற்றவர் கந்தை துணியை கட்டினால் அதை ஏளனமாகவே பார்ப்பார்கள்.
 நேர்த்தியான உடை என்பது எமது மக்களுக்கு மிக மிக அவசியம்.

அதனாலேயே என் மக்களுக்கு முன்மாதிரியாக நான் கோட் சூட் அணிகிறேன்.

★புரட்சியாளர் அம்பேத்கர்★

எது முக்கியம்?



எது முக்கியம்?

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

 கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்
 அதுல பதிலை எழுதுங்க.

 ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது.

ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.

 உங்களால முடியலேன்னா
 அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க.

அதுவும் முடியலியா….

 படிச்சிகிட்டே போங்க….

ரெடியா.....


1.
உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..


2.
2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…


3.
சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள்
ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க….


4.
நோபல் பரிசு வாங்கிய
 உங்களுக்கு தெரிந்த
ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க…..


5.
கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய
ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்…


உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?

 இல்லே தானே?


நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ
 அல்லது
தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை.

 இத்தனைக்கும் இவங்களெல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல.

அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள்.

 மிகப் பெரிய சாதனையாளர்கள்.

ஆனால்……?

 கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன.

சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன.

விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.


இப்பொழுது இன்னொரு ஐந்து கேள்விகள் கேட்கிறேன்

பதில் உடனே கி்டைக்குதா என்று பாருங்கள்


1)
உங்கள் பள்ளிக் காலத்தில்
மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்கள் பெயரை சொல்லுங்கள்.


2)
உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…


3)
உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…


4)
உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை கூறுங்கள்….


5)
நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ
அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…



சில மணித்துளிகளில்
விடைகளை
பட்டென்று எழுதி குவித்திருப்பீர்களே.......



இதிலிருந்து என்ன தெரிகிறது?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள்
 பணக்காரர்களோ,
 புகழ்பெற்றவர்களோ
அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல.


உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே.

மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.


பணம் பட்டம் பதவி
இவற்றின் மூலம் பெறும் புகழோ
 வெற்றியோ நிலையானதல்ல.

 பிறருக்கு உதவி செய்து,
பிறர் மீது அக்கறை கொண்டு
ஒருவர் பெறும் புகழே
வெற்றியே நிலையானது.


உங்கள் மாணவர்கள்
 நண்பர்கள்
 மற்றும்
 உறவினர்கள்

 சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு
 அவர்கள் ஒருவராவது
 விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்…

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

எனவே

அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால்

எப்போதும் நல்லதே நினையுங்கள்.
எல்லோருக்கும்
 நல்லதையே சொல்லுங்கள்.
 நல்லதையே செய்யுங்கள்.


கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு
கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.

முதலில்
நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனசுல நமக்கு இடம் இருக்கான்னு பார்ப்போம்.

கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்.

சனி, 17 பிப்ரவரி, 2018

உலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்!


உலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்!

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

`கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

இனி, உலர் திராட்சையின் பயன்கள்!

* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

*மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

*உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

*இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

*குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

*தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.

*மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

*உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வரலாம்.

குழந்தைகள் வளர்ச்சிக்கு

வளரும் குழந்தைகளுக்கு ஏற்றபழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான். கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக

பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம்தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும்.

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும்.

குடல்புண் ஆற

அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.

தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்

வியாழன், 15 பிப்ரவரி, 2018

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான பத்து காரணங்கள்!


  மாதவிடாய் தாமதமாக வருவதற்கான பத்து காரணங்கள்!

பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி கால அளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சியானது தவறினாலோ அல்லது ஒழுங்கற்றதாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதிப்பது நல்லது.
மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக முயற்சி எடுக்காத வரை, அவர்களுக்கு மாதவிடாய் தவறிப்போவதை விட, மற்ற எந்த விஷயமும் பெண்களின் இதயத்திற்கு அச்சத்தை கொடுப்பதில்லை.

ஏனெனில் மாதவிடாய் தாமதமானால், முதலில் நினைவுக்கு வருவது கர்ப்பம். ஆனால் தாமதமாக மாதவிடாய் வருவதற்கு கர்ப்பம் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தானா இருக்கிறது என்று கேட்டால், அது தான் இல்லை. ஆம், மாதவிடாய் தவறினால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு அவற்றில் 10 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மன அழுத்தம்

வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கிறது. அதில் மாதவிடாய் சுழற்சியும் ஒன்று. சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

*உடல்நலக் குறைவு*

திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பதில் ஆலோசனை பெறலாம்.

*அட்டவணை மாற்றம்*

மாறிவரும் கால அட்டவணைகள், உண்மையில் உடல் கடிகாரத்தின் ஓட்டத்தை மாற்றிவிடும். இது குறிப்பாக பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று வேலையானது மாறி மாறி அமைந்தால் ஏற்படும். இது போன்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.


*மருந்துகள் மாற்றம்*

தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.

*அதிக எடையுடன் இருப்பது*

அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன், அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.

*எடை குறைவாக இருப்பது*

உடலில் தேவையான கொழுப்பு இல்லை என்றால் வழக்கமான மாதவிடாய் வராது. சில நேரங்களில், இந்த மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதற்கு அம்னோரியா என்று பெயர். ஆகவே இதற்கு எடை அதிகரிப்பது வழக்கமான நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும். மேலும் இந்த காரணம் தான் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. முக்கியமாக அதிக வேலை பளு உள்ள பெண்களுக்கும் அல்லது தொழில்முறை தடகள வீராங்கனைகளுக்கும், இந்த தவறுதல் காரணமாகிறது.

*தவறான கணித்தல்*

மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணில் இருந்து மற்ற பெண்ணிற்கு வேறுபடும். சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, அது எல்லோருக்கும் பொருந்தாது. சில வேளைகளில் தவறாக கணக்கிடுவதனால், அது காலதாமதமாக வருவதாக நம்புகிறோம். ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எப்போது கரு முட்டை உற்பத்தியாகும் என்று தெரியும் பட்சத்தில், கருமுட்டை வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள். அது தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை சரியாக கணிக்க உதவும்.

*பெரி-மாதவிடாய்*

பெரி-மாதவிடாய் என்பது இனப்பெருக்க வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்ய இயலாத வயதுக்கு மாறுவதற்கான காலம் ஆகும்.இந்த கால கட்டத்தில் மாதவிடாய் இலேசாகவும், அதிகமாகவும் காணப்படும். அடிக்கடி அதிகமாகவும் அல்லது அடிக்கடி குறைவாகவும் ஆனால் பெரும்பாலும் சாதாரண மாதவிடாய் சுழற்சி போன்று இருக்காது. ஆகவே கர்ப்பம் ஆக விரும்பவில்லை எனில் கர்ப்பத்தடை காரணிகளை உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் இன்னும் சிறிது காலம் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது.

*இறுதி மாதவிடாய்/மெனோபாஸ்*

மெனோபாஸ் என்பது வாழ்க்கையில் இன்மேல் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத அல்லது மாதவிடாய் நிற்க கூடிய ஒரு பருவம். மெனோபாஸ் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை மூலம் இது சாத்தியமாகலாம் அல்லது ஹீமோதெரபி அதாவது மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலமாக இதை அடைய முடியும்.

*கர்ப்பம் தரித்தல்*

இறுதியாக தான்! கர்ப்பமாக இருப்பதால், மாதவிடாய் தவறி இருக்கலாம்! இதற்கு ஒரு எளிய கர்ப்ப பரிசோதனை செய்வதன் மூலம், அறிந்து கொள்ள முடியும். சிறுநீர் கர்ப்ப சோதனை மற்றும் இரத்த கர்ப்ப சோதனைகள் ஹார்மோன் ஹெச்.சி.ஜியை கண்டறிய உதவும். இது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும். பொதுவாக சிறுநீர் சோதனையை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதற்கான சோதனை கிட் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
                 

புதன், 14 பிப்ரவரி, 2018

வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க சில வழிமுறைகள்


வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க சில வழிமுறைகள்

பெண்கள் எப்போதுமே அழகாகவும், வெள்ளையாகவும் இருக்க விரும்புவார்கள். ஆனால் சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும். இதனை மறைப்பதற்கு பல பெண்கள் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். உங்களுக்கு இப்படி உதட்டின் மேலே கருப்பாக இருப்பதைப் போக்க வேண்டுமா?

அப்படியானால் நம் வீட்டிலேயே அதற்கான சில எளிய தீர்வுகள் கிடைக்கும். அதற்கு நம் வீட்டின் சமையலறை மற்றும் ஃப்ரிட்ஜில் இருக்கும் பொருட்களே போதுமானது. இப்படி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கை வழியில் உதட்டின் மேல் பகுதியில் உள்ள கருமையைப் போக்கினால், எவ்வித பக்கவிளைவுகளையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
இக்கட்டுரையில் உதட்டிற்கு மேலே கருப்பாக இருப்பதைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

வழி #1

ஒரு எலுமிச்சை துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எலுமிச்சை துண்டால் சர்க்கரையைத் தொட்டு, உதட்டின் மேற்பகுதியில் சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். 3-5 நிமிடம் செய்வது மிகவும் சிறந்தது. இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கருமையாக இருக்கும் உதட்டின் மேல் பகுதியை வெள்ளையாக்கலாம்.
 

வழி #2

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கலந்து, உதட்டின் மேல் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை செய்து வந்தால், கருமை நீங்கிவிடும்.

 

வழி #3

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை இரவில் தூங்கும் முன் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், உதட்டிற்கு மேலே கருமையாக இருப்பதைப் போக்கிவிடலாம்.
 

வழி #4

ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை மேல் உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும். இதற்கு கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்து, வெள்ளையாவதற்கு உதவும்.
 

வழி #5

இது மிகவும் எளிமையான வழி. இதற்கு நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஷ் போதுமானது. தினமும் டூத் பிரஷ் கொண்டு கருமையாக இருக்கும் உதட்டிற்கு மேலே 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தினமும் இப்படி செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.
 

வழி #6

ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டையின் உதவியால் உதட்டின் மேற்பகுதியில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வருவதன் மூலம், சீக்கிரம் கருப்பாக இருக்கும் உதட்டின் மேல் பகுதியை வெள்ளையாக்கலாம். இதற்கு உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் தான் காரணம்.
 

வழி #7

சிறிது ரோஜாப்பூ இதழ்களை எடுத்து நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கலவையை உதட்டின் மேலே தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேலே இருக்கும் கருமை போய்விடும்.
 

வழி #8

ஒரு பஞ்சுருண்டையை எடுத்து, கிளிசரினில் நனைத்து, உதட்டிற்கு மேல் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் ஒருவர் செய்து வந்தால், அசிங்கமாக கருப்பாக இருக்கும் உதட்டின் மேல் பகுதியை வெள்ளையாக்கலாம். வேண்டுமானால் இந்த வழியை முயற்சித்துப் பாருங்கள்.
 

வழி 9


பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சாற்றினை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி இரவில் படுக்கும் முன் உதட்டின் மேலே தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் அல்லது வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை செய்து வந்தால், கருமை நீங்கிவிடும்.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

பருவமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?


பருவமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா?

பெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்கும்.. தவறாமல் தவிர்க்காமல் முழுவதும் படிக்கவும்…
பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா!!! கூடவே அத்தனை அத்தனை நோய்களும்?

அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டினார்கள். இதற்கு காரணம் என்ன வென்று எப்போதாவது யோசித்தது உண்டா நீங்கள்..??

பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான். ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் எற்படுத்தில் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.


கம்ப்யூட்டர் மொழியை கற்றுக்கொண்டவர்க்கு உடல் மொழியை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை.

ஆதி காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் உட்கார்ந்து மற்றும் நின்றுகொண்டு செய்யும் வேலை.
ஐ.டி., சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் பணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. ஆகையால், ஹார்மோன்களும் சரிவர இயங்குவதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து, பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் மிகும்.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதிகளே... தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் நாகரீகம், வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

ஆன்மிக - ரகசியங்கள்


ஆன்மிக - ரகசியங்கள்

♥செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்? செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

♥திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன? அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

♥சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

♥கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா? பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

♥பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா? இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.

♥மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன? சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

♥திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள். சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

♥கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா? முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

♥சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்? நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

♥ நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்? பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

♥ பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்? விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.

♥விளக்கேற்றக் கூடிய திசைகள் யாவை?  கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.

♥நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா? இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.

♥ பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?
தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.

♥ புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன? இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், "டிவி' போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.

♥சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே செய்வது சரியா? என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.


♥பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன? காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும். இவற்றைச் சரியாக செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.

♥திருமணத்திற்குப் பின் பெண்கள் பிறந்த வீட்டு குல தெ#வத்தை வழிபடலாமா? புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.

♥ ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டை நதியில் விட்டுவிடலாமா? ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

♥வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா?
சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.

♥வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை. முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.

♥அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா? எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.

♥செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள். செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.

♥சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

♥அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா? நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.

♥ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.

♥ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி? இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.

♥பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்? எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.

♥கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா?  நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது. அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.

♥பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?

♥குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

♥ தற்காலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறார்களா? விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்? புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் இல்லங்களிலேயே செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.

♥ கோயிலில் அரசமரம், வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன? அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை "அசுவத்த நாராயணர்' என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, "அ”வத்த விவாஹம்' எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

♥மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்.இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.

♥வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா? பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்

♥ யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.

""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி

♥ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.

♥கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா? அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.

♥கடவுளின் படம் அல்லது சிலை.. எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.

♥ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?
சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால்,தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்?

♥வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா? வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.

♥ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.

♥சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.

♥நோய்க்கு மருந்தாவான்: காலையில் படுக்கையை விட்டு, ஹரி ஹரி என்று ஏழுமுறை சொல்ல வேண்டும்.பணிக்கு கிளம்பும் போதும், வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் காபி போடுவதற்கு முன்பும் கேசவாய நம என ஏழுமுறை சொல்ல வேண்டும்.
சாப்பிடும் முன்பு கோவிந்தனை(திருப்பதி ஏழுமலையான்) நினைக்க வேண்டும்.

♥இரவில் உறங்கச்செல்லும் போது மாதவா... மாதவா என ஏழுமுறை சொல்ல வேண்டும்.

புதன், 7 பிப்ரவரி, 2018

வாழ்வின் ஏழு உலக அதிசயங்கள்..


வாழ்வின் ஏழு உலக அதிசயங்கள்..

''தாத்தா, எங்க டீச்சர் இன்னிக்கும் ''உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா? என்று கேட்டாள் . எனக்கு தெரியலை. உனக்கு தெரியுமா. சொல்லு '' என் தாத்தாவை கேட்டான்.

''அடே பயலே, எனக்கு தெரிந்த ஏழு அதிசயங்கள் வேறே . புத்தகங்களில் இல்லாதது. தனியாக அதற்கு படமும் கிடையாது'' என்றேன்.

''அது என்ன தாத்தா அப்படிப்பட்ட 7 அதிசயங்கள்?

''உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்து தானே ஆகவேண்டும். அதை இப்போதே தெரிந்து கொள்ளேன்.

1. *உங்க அம்மா இருக்கிறாளே அவள் தான் இந்த உலகில், அதாவது உன் வாழ்க்கையில் முதல் அதிசயம்.*

'' என்ன தாத்தா சொல்றீங்க நீங்க?
'' ஆமாண்டா, அவள் தாண்டா உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுஷி''.

2. உங்க *அப்பா இருக்கிறாரே அவர் தான் ரெண்டாவது அதிசயம்.* நீ சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன பாடெல்லாம் பட்டிருக்கிறார் என்று உனக்கு தெரியுமா?''

3 ''எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்த, பாசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள உதவிய முதல் ஜீவனை கொடுத்தவர். . எனவே தான் *உன்னுடன் கூடப் பிறந்தவனோ/(ளோ ) தான் மூன்றாவது அதிசயம்.*

'' போதும் போதும்'' என்று நான் ஓடிவிட்டாலும் அருகில் இருந்த கமலா டீச்சர் ''தாத்தா சார் மேலே சொல்லுங்க, குழந்தைக்கு என்ன புரியும். எனக்கு சொல்லுங்க'' என்றாள். அடுத்த வீட்டுக்காரி. பேசாமல் வந்து இதுவரை நான் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவள்.

4. *''நண்பனோ நண்பியோ தான் வாழ்வில் நான்காவது அதிசயம்.* விசால புத்தி, மனோபாவம், மற்றவரை புரிந்து கொள்ளும் தாராள மனம் நட்பு என்று ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஸ்வபாவம் வர காரணமானவர்கள்.

5. அடுத்தது. குறைகளை நோக்காமல் நிறைகளை மட்டுமே பார்க்கும் தன்மை யாரால் முதலில் வந்தது என்றால் *உன் மனதை முதலில் கொள்ளை கொண்ட பெண்ணோ ஆணோ தான்.* உலகையே, பெற்றோரையோ, மற்றோரையோ, அவனுக்காகவோ, அவளுக்காகவோ எதிர்க்கும் தைரியம் வந்தது அந்த அதிசயப் பிறவியால் தான். எனவே அந்த ஜீவனே வாழ்வில் கண்ட ஐந்தாவது அதிசயம். மனைவியோ கணவனோ.

6. ஆறாவது அதிசயம் என்ன தெரியுமா? *உன் பிள்ளையோ பெண்ணோ தான் .*
உன்னை சுயநலமற்றவனாக மாற்றிய முதல் ஜீவன். உன்னைவிட மற்றவர் நலம் பற்றி நீ அறிய, எண்ணங்கள் உன் மனதில் உதிக்க, வைத்த அபூர்வ பிறவி. பிள்ளைக்கோ பெண்ணுக்கோ விட்டுக்கொடுக்காத, தியாகம் செய்யாத அப்பனோ அம்மாவோ உலகிலேயே இல்லையே.

''அசாத்தியமாக இருக்கிறது சார்'' கடைசி ஏழாவது அதிசயம் என்று எதை சொல்ல்லப்போறீங்க?'' -- கமலா..

7. வாழ்க்கையிலே இன்னும் என்னம்மா பாக்கி இருக்கு. கடைசியாக இது தான் *ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன் பேத்தி தான்..*

_''அடே தாத்தா, பாட்டியே , உனக்கு மீண்டும் உலகில் வாழவேண்டும் என்ற ஆசையை, எண்ணத்தை முதலில் வளர்த்த அதிசயங்கள்._ திரும்பவும் உன் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதன் பேரன் பேத்திகள் தானே. அவர்களுக்காக நீ டான்ஸ் ஆடலையா , பாடலையா, குதித்து தூக்கிக்கொண்டு ஓடி விளையாடவில்லையா. சிலர் குட்டிக்கரணம் கூட போட்டதில்லையா? அப்படியென்றால் இது நிச்சயம் அதிசயமில்லையா?''.

பின்குறிப்பு: நம் குடும்பமே ஒரு அதிசயம் தான். நாம் எப்படி அதிசயத்தை வெளியில் தேடுகிறேமோ, அதுபோல் மகிழ்ச்சியையும் நம்முள்ளே வைத்துக்கொண்டு, வெளியில் தேடுகிறோம்.

*நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு இதுவே ஆதாரம்.*

உருளைக் கிழங்குக்கு மாற்றாக ஒரு பாரம்பரிய ஊடுபயிர்! காவளிக் கிழங்கு. .



உருளைக் கிழங்குக்கு மாற்றாக ஒரு பாரம்பரிய ஊடுபயிர்! காவளிக் கிழங்கு. .

காவளிக் கிழங்கு… வாயுத் தொல்லைக்குப் பயந்து, கிழங்கு என்றாலே, காத தூரம் ஓடும் பலருக்கும் வரப்பிரசாதம்! ஏனெனில், இது மண்ணுக்குக் கீழே காய்ப்பதில்லை.

இத்தகைய பாரம்பரியப் பெருமை மிக்க இக்கிழங்கை, விவசாயிகள் பலருமே மறந்து போய்விட்ட சூழலில்… இயற்கை விவசாயிகள் சிலர் இன்னமும் சாகுபடி செய்து பாதுகாத்து வருகிறார்கள்.

அப்படி பாதுகாத்து வரும் சீர்காழி அருகேஉள்ள தாண்டவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி புலவர். ராசாராமன், காவளிக் கிழங்கு பெருமை பேசுகிறார் இங்கே…

 *உருளைக்கிழங்குக்கு மாற்று!*

”நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட உணவுப்பொருட்களைத்தான் பயிர்செய்து வந்தார்கள். ஆண்டு முழுவதுக்குமான அவர்களின் உணவுத்தேவையை வீட்டுக் கொல்லைப்புறத்தில் இருந்து கிடைப்பவற்றை வைத்தே பூர்த்தி செய்து விடுவார்கள்.

புடலை, அவரை, வெண்டி, கத்திரி, தக்காளி, மிளகாய், பாகல், கொத்தவரை, துவரை, கடலை என அனைத்தையும் வீட்டைச் சுற்றியே சாகுபடி செய்து விடுவார்கள்.

அந்த வகையில், மலைப்பிரதேசங்களில் விளையும் உருளைக்கிழங்குக்கு மாற்றாக சமவெளிப் பகுதிகளில் விளைய வைத்து வந்த கிழங்குதான் இந்த காவளிக் கிழங்கு”.

”இந்தக் கிழங்கை உணவுக்குப் பயன்படுத்தியது போக மீதியை அப்படியே வைத்திருந்து விதைக்கிழங்காவும் பயன்படுத்திக் கொள்ளலாம். விதைக்காக தனியாக எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. இது வாயுத் தொந்தரவு, சர்க்கரை பிரச்னை… என எதையும் உண்டு பண்ணாது. மார்கழி கடைசி அறுவடைக்கு வரும் காவளிக்கிழங்கை, அப்படியே பறித்துப் போட்டு வைத்து விட்டால், அடுத்த ஆடி மாதம் வரை அப்படியே இருக்கும். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாத்தாலே போதுமானது. உருளைக்கிழங்கில் என்னென்ன கறி சமைக்கிறோமோ… அத்தனையையும் இதில் செய்யலாம். அதே சுவை இருக்கும்.

 *ஒரு கொடியில் 50 கிழங்குகள்!*

உண்மையிலேயே இதைத்தான் *'ஜீரோ பட்ஜெட்'* என்று சொல்ல வேண்டும். இதற்காக எந்தச் செலவும் தேவையில்லை. ஒரே ஒரு கிழங்கை மட்டும் வாங்கி, மண்ணில் பதித்து வைத்தால், அது முளைத்து கொடியாகி, அதில் ஐம்பது கிழங்குகள் வரையிலும் காய்க்கும். முதலில் காய்க்கும் காய் ஒரு கிலோ அளவுக்கு எடை வரும். அடுத்து வரும் காய்கள் கொஞ்சம் கொஞ்சமாக எடை குறைந்து கொண்டே வரும். கடைசியாக காய்க்கும் காய் வெறும் ஒரு கிராம், இரண்டு கிராம் எடையில்தான் இருக்கும். ஆடி மாதத்தில் இவை முளைக்கத் தகுந்த தட்பவெப்பம் நிலவுவதால், தானாகவே முளைத்து குருத்து வந்துவிடும். அந்தப் பருவத்தில் மரப்பயிர்களின் அருகில், இந்தக் கிழங்குகளை விதைத்துவிட வேண்டும். இதில் பூ பூப்பதில்லை. நேரடியாகக் காய் காய்த்துவிடும். ஐம்பது நாளில் முதல் காய் கிடைக்கும்.

இதில்,  *'ஆட்டுக் கொம்புக் காவளி'* என்று ஒரு ரகம் இருக்கிறது. இது 100 கிராம் அளவுக்குத்தான் காய்க்கும். இக்கிழங்கில் ஒரு சிறியக் கொம்பு இருப்பதால்தான் இந்தப் பெயர். இதையும் உணவாகப் பயன்படுத்தலாம்” என்ற ராசாராமன், உருளைக்கு மாற்றான இன்னொரு கிழங்கு பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

 *பெருவள்ளிக்கிழங்கு* என்று ஒன்று உள்ளது. இது கொடி வகையாக இருந்தாலும், மற்ற கிழங்குகள் போல மண்ணுக்கு அடியில் காய்க்கக்கூடியது. ஒரு கிழங்கு பத்து கிலோ வரையிலும் கூட இருக்கும். ஓராண்டு வரை, தோண்டாமல் விட்டு விட்டால்… இருபது கிலோ வரை கூட வரும். இதையும் ஒரு வருடம் வரை வைத்திருந்து உருளைக்கிழங்குக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். வேறு எந்தக்   கிழங்குகளையுமே விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

*செலவில்லாத உணவு!*

இந்த அனைத்துக் கிழங்குகளுக்கும் விதைப்பதைத் தவிர வேறு செலவுகளே இல்லை. கிழங்கு முளைத்து, கொடி வெளியில் வந்ததும் அருகில் உள்ள மரத்தில் ஏற்றி விட்டால் போதும். பூச்சித்தாக்குதல் கிடையாது. மரத்தோடு சேர்ந்து, தன் உணவை, தானே தயாரித்துக் கொள்ளும். அதனால் உரச் செலவும் கிடையாது. ஆடு, மாடுகளும் சாப்பிடுவதில்லை.

மொத்தத்தில் செலவில்லாமல் ஒரு வருட உணவுத் தேவையை சமாளிக்கும் கிழங்கு வகைகள் இவை. இதன் அருமை உணர்ந்துதான் எங்கள் தாத்தா, அப்பாவுக்குப் பிறகு நானும் தொடர்ந்து பயிரிட்டு வருகிறேன். என்னிடமிருந்து கிழங்கு வாங்கிச்சென்று நிறையபேர் தற்போது உற்பத்தி செய்து வருகிறார்கள்” என்றார்.

*ஆடியில் நடவு...மார்கழியில் அறுவடை!*
மூன்றடி அகலம், ஓரடி ஆழம் கொண்ட குழியில்... அரை அடி ஆழத்திற்கு மட்கிய எரு, வேப்பம் பிண்ணாக்கு, அல்லது வேப்ப இலை ஆகியவற்றைப் போட்டு நிரப்பி, முளை வந்த காவளிக் கிழங்கை அதில் வைத்து மண்ணை நிரப்ப வேண்டும். முளைக்குருத்து மேல் நோக்கி மண்ணை விட்டு வெளியே தெரியும்படி இருக்க வேண்டும்.

குருத்து வளர, வளர அதை அருகில் உள்ள மரத்தின் மீது ஏற்றி விட்டு விட வேண்டும். வேம்பு, பூவரசு, கிளுவை, முருங்கை போன்ற மரங்களாக இருப்பது நல்லது. மரங்கள் இல்லாத நிலையில், முதலில் முருங்கை நட்டு, அது வளர்ந்தவுடன் இதை நடலாம். அதிக வெயில் இருந்தால், கிழங்கு காய்க்காது. அதனால் தான் இலைகள் அதிகம் உள்ள மரங்களில் ஏற்றி விட வேண்டும். ஆடி மாதத்தில் கிழங்கு நட்டால்... மார்கழி கடைசியில் பறித்து விடலாம். இடையில் எந்தச் செலவும் கிடையாது. பராமரிப்பு வேலையும் கிடையாது என்றார்.

மரங்கள் பெரும்பாலும் பத்தடி இடைவெளியில் நடவு செய்யப்படுவதால், அவற்றிற்கு இடையே மற்றப் பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது, இந்தக் கிழங்கையும் சேர்த்து சாகுபடி செய்யலாம். அதனால், ஒரே நேரத்தில் மரம், செடி, கொடி மூன்று விதமான பயிரையும் நம்மால் சாகுபடி செய்ய முடியும் என்றார்.

*திசு வளர்ப்பிற்கு முன்னோடி..*
காவளிக் கிழங்குதான் திசு வளர்ப்பிற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று தனது அனுபவம் மூலம் சொல்கறார், ராசாராமன்.
என்வீட்டில் போட்டு வைத்திருந்த கிழங்குகளில் ஒரு கிழங்கை 90 சதவிகித அளவிற்கு எலி சுத்தமாக கடித்து குதறிவிட்டது. மீதம் உள்ள பத்து சதவிகிதம் மட்டும் தோலோடு அப்படியே கிடந்தது. எல்லா கிழங்குகளும் முளைத்து வந்தபோது... எலி கடித்த அந்தக் கிழங்கும் தோலிருந்த பகுதியில் இருந்து முளைத்து வந்தது. அதைப் பதித்து வைத்தபோது மற்ற கொடிகளில் காய்த்தது போலவே அதுவும் காய்த்தது. இதை மற்றொரு முறையும் உறுதிப் படுத்திக் கொண்டேன்.

பெருவள்ளிக் கிழங்கைப் புதைக்கும் போது யாரை அருகில் வைத்துக் கொண்டு புதைக்கிறோமோ அவர்களது உருவத்திலேயே அந்தக கிழங்கு விளைந்து வரும் என்பது ஐதீகம். அது உண்மையும்கூட. அதனால், பெரும்பாலும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டுதான் இக்கிழங்கைப் புதைப்பார்கள் என்கிற அதிசயத் தகவலையும் சொன்னார்.

*கொழுப்பைக் குறைக்கும் காவளி*
காவளி கிழங்கின் மருத்துவப் பயன்கள் குறித்துப் பேசும் கன்னியாகுமரி, அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் ஼ராம், காவளிக் கிழங்கின், அறிவியல் பெயர்   Dioscorea bulbifera  என்றும் ஆங்கிலத்தில்  *ஏர் பொட்டடோ*  என்றும் இதற்குப் பெயர்.

இக்கிழங்கின் சிறப்புகளைப் பற்றி திருக்குறள், கலித்தொகை போன்ற இலக்கியங்களில் சொல்லி இருக்கின்றனர். ஆரம்பக் காலங்களில், ‘ஸ்டீராய்டு’ ஹார்மோன்கள் தயாரிப்பதற்கும், குடும்பக் கட்டுப்பாட்டிற்க்குப் பயன்படுத்தப்படும் ‘டையோஸ்ஜெனின் என்ற மாத்திரை தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. நம்முடைய முன்னோர்கள் பசியை அடக்க, இக்கிழங்கை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை உள்ள பெண்களும், உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களும், காவளிக் கிழங்கை சமைத்து உண்டு வந்தால்... சரியாகிவிடும் என்று சொல்கிறார்.


கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..! - செல்வம் பெருகும்....


கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..! - செல்வம் பெருகும்....

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம். மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை நாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும் ஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில் சொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர். ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக வகுத்துவைத்துள்ளனர்.

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள், ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கால மாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது வேதனைதான்......

இதை அவரவர் மனைவியிடம் சொல்வதால் வரும் பின்விளைவுகளுக்கு கம்பேனி பொறுப்பேற்காது .!!!!!!

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

மனைவியின் கை


மனைவியின் கை
 
 ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.

♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்...

♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது...

♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்...

வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..

♥ஆமா... ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு...

♥அவளும் உட்கார அவள் கையை பற்றி... ஏதோ பேச வந்தவர்... அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்.. முகங்கள் சுருங்கியது... கண்கள் கலங்கியது.. அம்மு என்னது.. கை பூரா வெட்டுக்காயமா இருக்கே... நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்துவரும்போது பட்டு மாதரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா  வழுவழுப்பா இருந்ததே என நிமிர்ந்தார்...

♥அவள் மெல்லிய சிரிப்புடன்
நா எதை என்னவென்று சொல்ல.. 35 வருசதில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம்... அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்... இப்படி எதேதோ நடந்திருக்கும்... என்றால்... மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது...

♥என்னம்மு சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி என்று அதிர்ந்தார்...

♥நீங்க என்னய வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனன் கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே வந்தீங்க... அதான் சூடா இருந்தது என்றாள்...

♥இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே.. அம்மு...

♥நா சொல்லலதாங்க... எந்த காயத்தையும் நா சொல்லலங்க... அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க பொறுப்பிள்ளையா ... பார்த்து நடக்கமாட்டியா... என.. என்றாள்

♥என் கண்களில்  கூட படலயே அம்மு இதெல்லாம்...  என்றார் வலி நிறைந்த குரலில்..

♥என்னை நீங்க அருகில சந்திக்கிறதே இரவு இருட்டில தானே அதுகூட சில நிமிடம்தான்
அப்ப எப்படிங்க என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றாள்...

♥அம்மு... அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன் பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினன்.. உன்னயும் ஒரு குறயும் இல்லாம பார்த்தன்... என்றார்..

♥உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க...

♥என்னய மன்னிச்சிடு அம்மு... பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன்..
என்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்...

♥எனக்கொரு ஆசைங்க... அத இப்பவாவது கேக்கமுடியுமா ... என்றாள் குரல் சுருதி குறைவாக...

♥கேளு அம்மு... என்றார்

♥நாம திருமணமான புதிதில சில நாட்கள் நா உங்க மடியிலயும் நீங்க என் மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்... அப்புறம் 35 வருசமா தலையனிலதான் நாம தலை வைத்து படுத்திருக்கம்... இப்ப உங்க மடியில கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா... என அம்மு கேக்க அவருக்கும் அம்முக்கும் கண்கள் கலங்கியே விட்டது... அவளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.

♥மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை....

♥இதே போல்தான் பெரும்பாளும் எல்லா பெண்களின் வாழ்வும்.. திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது...

♥எத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்...

♥ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள் காயங்கள் இருக்கும் என... இவை ஏன் வந்தது என கேளுங்கள்...
அவளின் மனக்காயம் வெளிவரும்....

கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?


கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.

அப்படி இருக்கும் போது, நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

*தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?*

தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.

அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.

அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம் அல்லவா?

ஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.

*தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்?*

நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.

*தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?*

நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.


மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம்:


மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம்:

உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பாதான் !
உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவுதான் என்கிறார்கள் பல அறிஞர்கள் !
தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாததுதான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் !
ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் !தன்னம்பிக்கை வளர்ப்பவர் !
நம்பிக்கை ஊட்டுபவர் !பண்புகளை ஊட்டுபவர் !
வழிகாட்டி !
என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்.
ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே?
அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.

ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்.
ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்.
எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி,
பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி
ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்.
எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்.
மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்.
திடீரென ஒரு நாள் பார்த்தால்,சட்டென்று வளர்ந்து நிற்பாள். "என் டாடி சூப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள், "டாடிக்கு ஒண்ணும் தெரியாது"என்று பல்டி அடிப்பாள்.
எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல்,மன மாற்றங்கள்தான் !
என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல.
அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள் !
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ! உங்கள் மகள் உங்கள் மகள்தான் !
உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்.
ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில்தான் மாற்றங்கள் !
"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி"என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்....எனக்கு இது வேணும்.முடியுமா முடியாதா?"என பிடிவாதம் பிடிப்பாள்.
உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்.
அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி.
நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்.
"நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்"எனும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர "அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது" என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது.
நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால்தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்.
இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.
அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.
உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ,
செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.
ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.
*மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.
நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்.
அவள் பள்ளியிலோ,கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,
அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.
வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள் !
நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்.சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா?
இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.
டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது.
சுற்றி வளைத்து எதையும் பேசாமல்,உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு
அனுபவங்களால் நிரம்பி வழியும்.
ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.
சக தோழிகளின் கிண்டல்,படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.

அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.
"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை.அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை
எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்.
அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி,உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள்
தீர்வுகள் என சிந்தியுங்கள்.
நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும்,ஆத்
திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு.
அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.
உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்.அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். "அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது"எனும் நிலமை வந்தால் சிக்கல் தான்.
அவளுடைய படிப்பு,நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். "அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.
குறிப்பாக ஆண்களைப் பற்றியும்,ஆண்கள
ின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்,
சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்.
ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்.
பெண்ணின் திருமண வயது வரும்போது "அப்பா தான் உலகம்"எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்,பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.
சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.
"ஸ்ட்ராங் ஃபாதர்ஸ்,ஸ்ட்ராங் டாட்டர்ஸ்"
எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்.
"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்"எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை* என்கிறார் இவர்.
"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.~* அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்!
இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம்.

அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்.


அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும்.

💞பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம்.

💞இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது.

💞மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம்.

💞அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.


கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்....


கற்றுக்கொள்ள வேண்டிய  பாடங்கள்....

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறையும்
   நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,
நன்கு ஆலோசனை செய்த பின்பு
    முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட,
 உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம்,
 தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,
தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும்
 கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல்
 ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,
தேவையான பொருள்களை
  சேமித்து வைத்தல்,
 யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
 தைரியம், எச்சரிக்கை உணர்வு
  ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,
நன்றாக பசி இருந்தும் கட்டளை
 வரும் வரை காத்து இருத்தல்,
  நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,
தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன
  இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

சாணக்கியர்...

அதிக உடல் எடை கொண்டவரா நீங்கள் ? கவலை வேண்டாம்


அதிக உடல் எடை கொண்டவரா நீங்கள் ? கவலை வேண்டாம்...

 அதற்காக பணத்தை விரயம் செய்யாமல் உடல் எடையைக் குறைக்க சில வழிகள். உடல் எடையைக் குறைக்க காலை உணவைத் தவிர்ப்பது தவறான  செயல். ஏனெனில் காலை உணவுதான் நம் உடலுக்கு, அன்றைய தினத்திற்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. அவற்றைத் தவிர்ப்பதால்  உடல் நலம்தான் பாதிக்கப்படும்.

தினசரி கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்:

* உடல் எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாகும். காலை எழுந்தவுடன் 1- 2  டம்ளர். இளம் சூடான தண்ணீருடன் 2  டீஸ்பூன் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத் தூள் சேர்த்து தினமும் குடிக்க வேண்டும்.

* வேக நடை, சைக்கிளிங், ஸ்க்கிப்பிங், குறைந்தது 35 நிமிடம் உடற் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

* காபி, டீ அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தால் அதற்குப்  பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீ-யில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்.பால் சேர்த்து அருந்த விரும்புவர்கள் பாலை நன்கு 3 அல்லது 4 முறை காய்ச்சி பால் ஆடையை  நீங்கிய பின் அருந்தலாம். காரமான உணவுப் பொருள் இஞ்சி,  மிளகு, இலவங்கப்பட்டை மிகவும் சிறந்தது.  இஞ்சி டீயை 2 – 3 முறை குடிக்கலாம்.


* டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி ,கேரட் போன்ற கலோரி குறைவான,அதிக வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.இதனால் உடல் ஆரோக்கியமாக  இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும். அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.u

* காலை உணவு 8.00 – 9.00 மணிக்குள் உண்ண வேண்டும். வெண்ணெய் எடுத்த மோர் - 1 டம்ளர்,  அதனுடன் கொய்யா 3 துண்டு, வெண்ணெய் தடவாத இரண்டு ரொட்டி அல்லது இரண்டு இட்லி.

* மதிய உணவாக 2கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரை, நீர் சத்து நிறைந்த காய்கறிகள் ( வெண்பூசணி,புடலங்காய் ) பருப்பு சேர்த்து கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காமல் இரண்டு கோதுமை சப்பாத்தியை 12.00 – 1.00 மணிக்குள் உண்ண வேண்டும்.


* இரவு உணவு 7.00 – 8.00 மணிக்குள் வேக வைத்த காய்கறிகள் 3கப் அல்லது சூப், பப்பாளி, அன்னாசிப்பழம் அல்லது ஆரஞ்சு 6  துண்டு, கொய்யா 3 துண்டு  உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

* பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும்.உப்புள்ள ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட் போன்றவற்றை தவிர்க்கவும். இரவில் உண்ட பின் சிறிது குறுநடை செய்த பின் உறங்கச் செல்லவும்.

* எப்போதும் உணவு உண்பதற்கு முன்பாக ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட்டால், அதிகமான அளவு உணவு உண்ணாமல், கட்டுபாட்டுடன் உண்ணலாம். இவ்வாறெல்லாம் செய்து வந்தால் நீங்களும் உடல் எடையைக் குறைத்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகளை காணலாம்..



முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகளை காணலாம்..

* பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு

பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

* ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்

ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

* உருளைக்கிழங்கு

எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.

* துளசி

துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக் காணலாம்.


* மஞ்சள் மற்றும் தக்காளி

மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

* பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.

* கடலை மாவு

கடலை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

* புதினா

புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* வாழைப்பழ ஃபேஸ் பேக்

வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும்.

* சந்தன மாஸ்க்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சந்தனப் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம். மேலும் இந்த மாஸ்க் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.

சந்தனத்தில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும். ஆகவே சந்தன பொடியை பால் அல்லது நீரில் கலந்து பேஸ்ட் செய்து, தினமும் முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.

திங்கள், 5 பிப்ரவரி, 2018

உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? சூப்பர் டிப்ஸ்


உங்க முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? சூப்பர் டிப்ஸ்

உங்களுக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமா? சரும பிரச்சனையால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா? எவ்வளவு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தியும் பலன் இல்லையா? என்ன செய்வதென்றே தெரியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பிரச்சனைக்கு ஆயுர்வேதம் சிலவற்றை பரிந்துரைக்கிறது. அவற்றை எண்ணெய் பசை சருமத்தினர் தினந்தோறும் பின்பற்றினால், நிச்சயம் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.

எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் குளிர் காலத்தை விட கோடைக்காலத்தில் தான் அதிகளவு பிரச்சனைகளை சந்திப்பார்கள். கோடைக்காலம் வர இன்னும் சிறிது காலம் தான் உள்ளது. எனவே இப்போது இருந்தே கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு அன்றாடம் என்ன செய்ய வேண்டுமென பலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

முக்கியமாக எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் பிரச்சனை முகப்பரு தான். அதோடு, முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம் கருமையாகவும் காட்சியளிக்க ஆரம்பிக்கும். இங்கு இப்பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க ஆயுர்வேதம் கூறும் சில எளிய தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பயன்படுத்தினால், நிச்சயம் முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பால் பாலில் உள்ள மருத்துவ பண்புகள், எண்ணெய் பசை சருமத்தினருக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். அதற்கு பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலையிலும், இரவில் தூங்கும் முன்பும் செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெயை பசையைத் தடுக்கலாம். அதிலும் பாலுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.


ஆரஞ்சு ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தின் சாற்றினை ஒரு பௌலில் பிழிந்து எடுத்து, அதனை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்

சந்தன பவுடர் மற்றும் மஞ்சள் தூள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு சந்தனம் மிகச்சிறந்த பொருள். சந்தனம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிக்கும். அத்தகைய சந்தன பவுடரை மஞ்சளுடன் சேர்த்து மாஸ்க் போடுவது எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது. அதற்கு சந்தன பவுடர் மஞ்சள் தூளை சரிசம அளவில் எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

சந்தன பவுடர் மற்றும் மஞ்சள் தூள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு சந்தனம் மிகச்சிறந்த பொருள். சந்தனம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிக்கும். அத்தகைய சந்தன பவுடரை மஞ்சளுடன் சேர்த்து மாஸ்க் போடுவது எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது. அதற்கு சந்தன பவுடர் மஞ்சள் தூளை சரிசம அளவில் எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கற்றாழை கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. மேலும் இது அனைவரது வீட்டிலும் எளிதில் வளர்ப்பதற்கு ஏற்ற செடியும் கூட. இந்த செடியின் இலையை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவி வர, முகத்தில் உள்ள அதிகப்படியாக எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும பிரச்சனைகளும் அகலும்.

தேன் தேனில் உள்ள மருத்துவ பண்புகள் மிகச்சிறந்த அழகு சாதனப் பொருள். அதிலும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஸ்கால்பில் நேரடியாக தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால், தலையில் இருந்து முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம்.

தண்ணீர் நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். பின் ஒரு ஐஸ் கட்டியை துணியில் கட்டி, முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில வாரங்கள் தொடர்ந்து செய்ய, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

முட்டை மற்றும் எலுமிச்சை முட்டையின் வெள்ளைக்கருவுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தை மீண்டும் கழுவ வேண்டும். இச்செயலால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம்.

வேப்பிலை வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் இந்த வேப்பிலை நீரால் முகத்தை தினமும் கழுவி வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீயல் பண்புகள் பருக்கள் அதிகம் வருவது தடுக்கப்படுவதோடு, முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசையும் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, அதைக் கொண்டு தினமும் முகத்தை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் எண்ணெய் அதிகம் சுரப்பது தடுக்கப்படுவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

முல்தானி மெட்டி முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, சருமத்தை மென்மையாகவும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ள முல்தானி மெட்டி உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பௌலில் 4 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

டீ பைகள் டீ பைகளைக் கொண்டு டீ தயாரித்த பின், அந்த டீ பைகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து நீரால் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள டானிக் அமிலம், சருமத்துளைகளை அடைத்துள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்துளைகளை சுத்தம் செய்து, முகத்தை பிரகாசமாக காட்டும்.