வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

பூனைகளைப் போற்றுதும்

பூனைகளைப் போற்றுதும்


பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமாபூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை. மதில்மேல் பூனை. ருசி கண்ட பூனை. பூனையைப் பற்றிச் சிந்தித்தால் நம் நினைவில் இம்மாதிரி பழமொழிகள்,சொற்றொடர்கள் வருவது இயல்பு.  பெரும்பாலும் பூனைகள் குறித்து  எதிர்மறையான எண்ணங்களே நம் மனித மனத்தில் பதிவாகியுள்ளன.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி பூனைகள் பற்றி இரண்டு கவிதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று:

வித்தியாசமான மியாவ்
எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
'
இந்தப் பூனையின் மியாவ் மியாவ்                                   
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...



                சுந்தர ராமசாமி 

இதில் பூனையைப் பற்றித்தான் பேசுகிறார் என்று நினைக்கிறீர்களா? தேவையற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள், வழக்குகள்,போலித்தனங்கள் பற்றி இதனில் கேள்வி எழுப்புகிறார். பிரபஞ்சக் குளத்தில் தோன்றிய இடத்திற்கே உயிர்கள் திரும்புகையில் சலனங்கள் எழுவது இயற்கை. தவளை தான் எங்கிருந்து வந்ததோ அந்தக் குளத்திற்குள் குதிப்பதுபோல.  எனவே,  அதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற சிந்தனை இதனில் பதிவாகியுள்ளதாக நான் எண்ணுகிறேன். 

ரப்பர் தோட்டத்தில் வாழ்ந்த காலத்தில் ஆடு,மாடு, கோழி, நாய் இவற்றோடு பூனையும் எங்கள் குடும்பத்தின் வளர்ப்புப் பிராணியாக இருந்தது. ஒரு நாள், அதிகாலை ஐந்து மணிவாக்கில் பூனையின் உரத்த மியாவ் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தால் எங்கள் பூனை வீட்டின் உத்திரத்தில்  அமர்ந்து கீழே இறங்கும் வழியறியாது தவித்துக்கொண்டிருந்தது. எலியைத் துரத்திக்கொண்டு மேலே ஏறியதால் வந்த விளைவு.  கடமை என்று வந்து விட்டால் பூனையைப் போன்ற செயல்வீரனைப் பார்க்க முடியாது. அன்று பூனையைக் கீழே இறக்கி விடப் பெரும்பாடாகிவிட்டது.

தோட்டத்திலிருந்து நகருக்குக் குடிபெயர்ந்து விட்ட பிறகு, வளர்ப்புப் பிராணிகளைப் பிள்ளைகளின் பள்ளிப் பாட நூல்களில் மட்டும் பார்க்க முடிந்தது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மைக் கவனிக்கவே நேரத்தோடு அல்லாடும்போது, இன்னபிற உயிர்களையும் உடன் வைத்துப் பராமரிக்கும் நிலைக்குச் சூழலும்  மனமும் இடம்தரவில்லை. தொலைக்காட்சியில் இடம்பெறும் டோம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் நிகழ்ச்சியை எங்காவது பார்க்கும்பொழுது, பூனையின் அழகுக் கண்களையும் மீசையையும் ரசித்து அதன் தலையை ஆசையாய்த் தடவிப் பார்த்த பழைய நினைவுகள் வந்து போகும்.

அண்மைய காலமாகப் பூனைகளின் மீது எங்களுக்கு வெறுப்புக் கூடி வருவதற்கு எங்கள் அண்டை வீட்டார்தாம் காரணம்.  ஆசைக்கு ஒன்றிரண்டு பூனைகள் வளர்க்கலாம். ஆனால்,ஒரு பூனைப் பட்டாளமே அண்டை வீட்டில் வாசம் செய்தால் நமக்கு எத்தகைய துன்பம் வந்து சேரும் என்பது உங்களில் அனுபவித்துப் பார்ப்பவர்களுக்கு எளிதாய்ப் புரியும். பூனைகளை வளர்ப்பவர்கள் அவர்கள், நம் வீட்டு வாசலில் சுகமாய் அமர்ந்துபோகும் அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவது நாம் எனும் நிலைதான் சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. நல்ல வேளையாக, அவ்வப்போது நாய்களின் நடமாட்டம் இருப்பதால் பூனைகள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன.

இப்படிப் பூனைகள் மீதான வெறுப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அண்மையில் குடும்பத்தோடு விடுமுறையில் கூச்சிங் நகருக்குப் போனபோது பூனைகளைக் கொண்டாடும் மனங்களைக் கண்டு வியந்து போனேன். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பார்கள். கிழக்கு மலேசியாவின் தலைநகரான கூச்சிங்கைப் பொறுத்தவரை பூனைக்கு நல்ல காலம்தான்.



                              சாலைச் சந்திப்பில் வரவேற்கும் பூனைகள்


பூனை பெயரிலேயே ஒரு நகர் என்பது  வியப்புதான். கூச்சிங் என்பது இடுகுறிப் பெயரா? காரணப்பெயரா? அங்கே இரண்டுக்கும் தலையசைக்கிறார்கள். அதிகமாக பூனைகள் வளர்க்கப்பட்ட இடம் என்பதால் அந்தப் பெயர் வந்தது என்கிறார்கள். கூச்சிங் என்ற பெயர் அமைந்ததால் அந்நகரைச் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் முயற்சிக்குப் பூனைகளின் தயவை நாடியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால், வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் வேறு கதைகள் இருக்கின்றன. மேற்கு இந்தியாவின் கொச்சின்துறைமுகத்தையொட்டி இந்தப் பெயர் அமைந்திருக்கலாம் என்ற தகவல் உண்டு. இந்தியர்கள் பயன்படுத்திய கலைப் பொருள்கள் கூச்சிங் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளன. ஒரு தவறான புரிந்துணர்வால் இப்பெயர் வந்தது என்ற தகவலும் உண்டு. 1841இல் ஜேம்ஸ் புரூக் தன் ரோயலிஸ்ட் கப்பலில் இங்கு வந்தபோது, “இந்த இடத்தின் பெயர் என்ன?” எனக் கைநீட்டி வழிகாட்டியிடம் கேட்க, கைநீட்டிய இடத்தில் பூனை ஒன்று இருந்ததால் அதைத்தான் கேட்கிறார் என்றெண்ணி, “கூச்சிங்” என்று சொன்னாராம். இதற்குச் சாத்தியம் குறைவு.  ஏனெலில், ஜேம்ஸ் புரூக் இங்கு வந்தபோது இந்த ஊரின் பெயர் சரவாக். பின்னர்தான், ஜேம்ஸ் புரூக் வழிதோன்றலான சார்ல்ஸ் புரூக் காலத்தில் 1872இல் இந்த நகர் கூச்சிங் எனப் பெயர் சூட்டப்பட்டது. மாத்தா கூச்சிங் எனும் பழத்தின் பெயரிலிருந்தும் கூச்சிங் பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

வரலாற்றுப் பக்கங்களில்தான் தெளிவில்லை. ஆனால், கூச்சிங் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் பூனைகளைக் கொண்டாடுகிறார்கள். நமக்குத்தான் பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை. அவர்களுக்குப் பூனைகளைப் பார்க்காமல் பொழுதுகள் நகர்வதில்லை. கூச்சிங் நகரில் பயணித்தால் சாலைச் சந்திப்புக்களில் பல வண்ணங்களில் நம்மை நோக்கிக் கைதூக்கும் பூனை சிலைகளைக் காணலாம்.  சுருக்கமாகச் சொன்னால், கூச்சிங் போனால் பூனைகளின் முகத்தில் விழிக்காமல் நம்மால் எந்தச் சாலையிலும் பயணிக்க முடியாது. பூனைகள் முகத்தில் விழித்ததால் கூச்சிங்வாழ் இந்தியர்களுக்குத் தீங்கேதும் நேர்ந்ததாக இதுவரை தகவலேதும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. விழாக் காலங்களில் பூனை சிலைகளை அலங்காரம் செய்து (பூவும் பொட்டுமிட்டு) அழகுபார்ப்பதாக கூச்சிங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் நந்தினி கூறினார். 



                                      உள்ளே பூனை அருங்காட்சியகம்


கூச்சிங் பயணத்தின்போது  அங்கிருக்கும் பூனை அருங்காட்சியகம் போய்வரலாம் என்று என் மனைவியும் பிள்ளைகளும் அழைத்தார்கள். எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. மனத்தில் பூனை மீதான வெறுப்பு மிஞ்சியிருந்தது. அதன் கழிவுகளை அகற்றிக் காயம்பட்ட மனத்திலிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?அதுமட்டுமில்லாமல் அங்கு அப்படியென்ன இருக்க முடியும்? படம் பிடிக்கப்பட்ட பூனைகளும் பாடம் செய்யப்பட்ட பூனைகளும்தானே?

ஆயினும் போனேன். என் எண்ணத்தை முற்றாக மாற்றியது அந்த அருங்காட்சியகம். பூனைகளைக் கொண்டாடும் இத்தனை உள்ளங்களா? பூனை பற்றி நாமறியாத இத்தனை தகவல்களா? சரித்திரத்தில் இடம்பிடித்த உலகத் தலைவர்களின், பிரபலங்களின்  உள்ளங்களில் எப்படி இடம் பிடித்தன இந்தப் பூனைகள்? பூனை பற்றி இத்தனை உருக்கமான பதிவுகளா?பூனைகளின் படங்கள், சிலைகள், ஓவியங்கள்,கலைப்பொருள்கள் என நான்காயிரத்துக்கும் மேல் இங்கு உள்ளன. 1993இல் திறக்கப்பட்ட இது,  பூனைகள் குறித்த ஆய்வு மையமாகவும் விளங்குகிறது.

ஹங்காங்கைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் பெத்தி ஜாமி சுங்  1990களில் இந்த அருங்காட்சியத்துக்கு வந்தபோது பூனைக்கான மையம் கண்டு மனம் நெகிழ்ந்து போனாராம். அவரும் பூனைமீது அலாதி அன்பு உள்ளவர் என்பதால் தம் மரணத்துக்குப் பிறகு தாம் சேகரித்த ஆயிரக்கணக்கான பூனை தொடர்பான கலைப்பொருள்களை உயில் எழுதி வைத்துள்ளார்.  அவர் பெயரில் அமைந்த தனி அறையில் அவை வைக்கப்பட்டுள்ளன. அவர் மறைந்தாலும் பூனைகளின் பொருள்களில் அவர் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார். 



                                          பிரபலங்களின் உள்ளங்களில்..

பூனைகளின் அன்பு வலையில் சிக்கிய உலகப் புகழ்பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்தால் “இவருமா?” என வியந்து போவீர்கள். அமெரிக்காவில் அடிமைச் சங்கிலியை அறுத்தெறியப் போராடிய அதன் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பூனைகளின் மீது அன்பு கொண்டவர். உள்நாட்டுக் கலவரம் ஓய்ந்தபோதெல்லாம், தம் இரண்டு பூனைகளோடு பல மணிநேரம் செலவளிப்பாராம். வெள்ளை மாளிகையில் ஒரு முறை விருந்து நடந்தபோது தம் மேசை மீதிருந்த பூனைகளுக்கு உணவு ஊட்டியிருக்கிறார். “என் பூனை டிக்‌ஷி என் அமைச்சரவையைக் காட்டிலும் அறிவானவள். மேலும்,  என் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவள்என்று பூனைக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். 

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தம் பூனைகளோடு நெருக்கமானவர்.  உலகப் போரின்போது குண்டு விழுந்த இடங்களைப் பார்வையிடச்   செல்லும்போது தம் பூனையை உடன் கொண்டுபோவதில் உறுதியானவர். அவரின் அமைச்சரவைக் கூட்டங்களில் அவரின் பூனையும் கலந்துகொள்ளுமாம். இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் என்ஸ்டைன் தன் ஆராய்ச்சியில் மூழ்கி சோர்வுறும்போதெல்லாம் அவரின் தனிமையைப் போக்கி ஆறுதல் அளித்தது பூனைகளின் நெருக்கம்தான் என மனம் திறந்திருக்கிறார்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை ஊர்சுலா என்ரெஸ்சும் பூனைப் பிரியர்தான். “என் அழகும் இளமையும் ஆண்களுக்கு. ஆனால், என் மதிநுட்பமும் அன்பும் 
பிராணிகளுக்கு” என்று கூறியுள்ளார். புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்த சர் ஐசக் நியூட்டன், தாம் வளர்த்த இரண்டு பூனைகள் அதன் உருவ அமைப்புக்கு ஏற்ப வெளியே சுதந்திரமாய் சென்று வர  வீட்டுக் கதவில் பெரியதும் சிறியதாய் இரண்டு துளைகளைச் செய்துள்ளார். புளேரென்ஸ் நைட்டிங்கேல் அறுபது பூனைகள் வரை வளர்த்ததாகவும் எங்குச் சென்றாலும் பூனைகளை விட்டுச் செல்வதில்லை என வரலாற்றுக் குறிப்பு உள்ளது.

“வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுபட இரண்டு வழிகள்: இசையும் பூனைகளும்” என்று கூறினார் நோபல் பரிசு பெற்ற தத்துவமேதை  ஆல்பர்ட் சுவெய்ட்ஷர். இடக்கை பழக்கமுள்ள இவர் தாம் நடத்திய மருத்துவமனையில்  நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டினை வலக்கையால் எழுதுவாராம். ஏன் தெரியுமா? அவரின் ஆசைப் பூனை இடக்கையில் படுத்து உறங்குவதால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது என்பதால்தானாம். ரஷ்யாவின் புரட்சியாளரும் சோவியத்தின் முதல் அதிபருமான லெனினின் இறுகிய உள்ளத்தையும் உருக்கும் வலிமைகொண்டதாக ஒரு பூனை இருந்ததாம்.


இப்படி, இன்னும் எத்தனையோ புகழ்பெற்றவர்களின் இதயங்களைச் சிறைபிடித்த பூனைகளைப்   பற்றிய தகவல்களைக் கண்டு வியந்தவாறும்,எனக்கும் பூனைக்கும் இந்தப் பிறவியில் ஏழாம் பொருத்தமாக ஆனது  ஏன் என்று யோசித்தவாறும் அருங்காட்சியகத்திலிருந்து வெளியேறினேன். “அப்பா, உங்களுக்கு பூனை வாங்கி வளர்க்க ஆசை வந்திருச்சா?” என்று மகள் கேட்டாள். என் வாழ்க்கையில் எப்படி இன்னொரு காதலுக்கு இடமில்லையோ அதுபோல இன்னொரு பூனைக்கும் இடமில்லையென்றே உள்மனம் சொல்கிறது. உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. சரி, என் ஒருவனால் இந்தப் புள்ளிவிபரத்திற்குப் பாதிப்பு வராது என்றே நம்புகிறேன். 


                                                           வின்ஸ்டன் சர்ச்சில்



                                                   ஊர்சுலா என்ரெஸ்               


             
                                                                 லெனின்

இப்படி, இன்னும் எத்தனையோ புகழ்பெற்றவர்களின் இதயங்களைச் சிறைபிடித்த பூனைகளைப் பற்றிய தகவல்களைக் கண்டு வியந்தவாறும், எனக்கும் பூனைக்கும் இந்தப் பிறவியில் ஏழாம் பொருத்தமாக ஆனது  ஏன் என்று யோசித்தவாறும் அருங்காட்சியகத்திலிருந்து வெளியேறினேன். “அப்பா, உங்களுக்கு பூனை வாங்கி வளர்க்க ஆசை வந்திருச்சா?” என்று மகள் கேட்டாள். என் வாழ்க்கையில் எப்படி இன்னொரு காதலுக்கு இடமில்லையோ அதுபோல இன்னொரு பூனைக்கும் இடமில்லையென்றே உள்மனம் சொல்கிறது. உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. சரி, என் ஒருவனால் இந்தப் புள்ளிவிபரத்திற்குப் பாதிப்பு வராது என்றே நம்புகிறேன்.

சுந்தர ராமசாமியின்  பூனை பற்றிய மற்றொரு கவிதையில் ஒரு பகுதி இது:  

                          பூனைகள் குறுக்கே வராமலிருப்பது
                          அவற்றுக்கும் நமக்கும் நல்லது
                          
குறுக்கே தாண்டிய பூனைகள்
                          நெடுஞ்சாலைகளில்
                          
தாவரவியல் மாணவனின் நோட்டில்
                          இலைபோல ஒட்டிக் கிடப்பதைக்கண்டதுண்டு
                          சிறிய பூனைகள்தான்
                          பெரிய பூனைகள் ஆகின்றன.
                          
பூனைகளின் முதுமையைக் கண்டறிவது கடினம்.
                          
அவற்றின் மரணத்திற்குச் சாட்சியாக நிற்பது கடினம்.
                          
அவற்றின் பேறுகால அனுபவங்கள் பற்றி
                          நாம் யோசிப்பது காணாது.
                          
இருப்பினும் அவை இருக்கின்றன
                          பிறப்பிறப்பிற்கிடையே

எளிய உயிர்களுக்கு இதயம் நெகிழும் மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். மனிதரை அண்டிவாழும் பூனை மீதான இரக்கத்தை இக்கவிதையில் பதிவுசெய்கிறார் சுந்தர ராமசாமி.  இப்பொழுதெல்லாம் மதாபிமானம் எங்கும் பெருகி வழிகிறது. அதன் தீவிரவாத கொடும்முகம் நம்மை அச்சமூட்டுகிறது. அதற்கு இடமளித்துவிட்டு ஒதுங்கி  நின்று மனிதாபிமானம் வேடிக்கை பார்க்கிறது. உயிராபிமானம் தான் இனி நாம் உரக்க உச்சரிக்க வேண்டிய பொதுமொழியாக இருக்க வேண்டும்.

என்னை நெகிழச் செய்த பூனை பற்றிய ஹைக்கூ இது:

                          கொட்டும் மழைக்கு
                          வாய் திறந்தபடி
                            இறந்த பூனை                

                                            - மைக்கல் மக்லிண்டால்     


               

நன்றி பச்சைபாலன்

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

மகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!


மகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்!

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.
2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.
5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.
7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.
9. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.
14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
15. நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.
16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.
17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.
20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.
21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.
22. லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.
23. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
25. லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.
26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.
28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.
29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.
30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.
31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.
32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.
34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.
36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.
37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.
38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.
39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.
40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.
41. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.
42. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.
43. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
44. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.
45. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.
46. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.
47. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
48. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.
49. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.
50. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.
51. ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
52. லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.
53. திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
54. லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
55. தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.
56. சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம்.
57. பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கஜலட்சுமியை காண முடியும். கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.
58. திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.
59. சீல கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.
60. கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.
61. ஜைனர்கள் மகாலட்சுமியை ஜீவஜகத்தின் தென்புறத்துப் பாதியைக் காக்கும் தேவதைகளில் ஒருத்தியாகப் பாவிக்கின்றனர். தீபாவளியின்போது இவளை வழிபடுகின்றனர்.
62. மகாலட்சுமி வடிவங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென லட்சண கிரந்தங்கள் உள்ளன. அம்சுபேதாகமத்தின் படி, திருமகள் தாமரையில் வீற்றிருப்பாள்.
63. வராக அவதாரத்தில் திருமால் பூமியை தோண்டி விட்டுத் தம் சிரமத்தை மறந்திருக்கத் திருமகளைத் தம் தொடை மீது நிறுத்தி இன்பமடைகிறார். மாமல்லபுரத்தில் இவ்வமைப்புடைய சிலை உள்ளது.
64. பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.
65. தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.
66. குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
67. மகாராஷ் டிரத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர். மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அத்துடன் துணியில் மறைத்த ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.
68. ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் காரி என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.
69. இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம்.
70. கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.
71. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
72. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
73. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
74. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
75. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
76.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.
77. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
78. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
79. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
80. நாம் செய்யும் பாவ, புண்ணியந்த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
81. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.
82. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
83. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.
84. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
85.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
86. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
87. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
88. வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது.
89. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
90. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.
91. வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.
92. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
93. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.
94. வரலட்சுமி பூஜை தினத்தன்று 3 தடவை அம்மனை வணங் கினால் நல்லது.
95. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.
96. சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.
97. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.
98. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.
99. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.
100. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

குற்றாலம் போறீங்களா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!

குற்றாலம் போறீங்களா? இதை மிஸ் பண்ணிடாதீங்க! 

குற்றாலத்தில் தற்போது சீசன் ஆரம்பமாகிவிட்டது. சீசன் காலங்களில் இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வருவார்கள். குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் இங்குள்ள சொர்க்கப் புரியான சுற்றுச் சூழல் பூங்கா, பலருக்கு தெரியாத நிலையிலேயே உள்ளதால் அங்கு வருபவர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே உள்ளது.

குற்றாலம் ஐந்தருவிக்கு மேலே, இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே, 37 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமைப் படர்ந்து ரம்மியமாகக் காட்சியளிக்கிறது, சுற்றுச்சூழல் பூங்கா. தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காக்களில் பெரியது இது. ஒவ்வொரு பகுதியையும் நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். இதமான சூழலும், இயற்கை அழகு ததும்பும் மலைக்காட்சிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.



 நீரோட்ட நடைபாதையில் சலசலக்கும் காட்டு ஓடையின் ஓசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது மனதை இதமாக்குகிறது. வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணச்சிறகை விரித்து அசைந்தாடும் பட்டாம்பூச்சிகள் உள்ளத்தை வசியப்படுத்துகிறது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மேற்கு நோக்கி பார்த்தால் மேற்குத்தொடர்ச்சி மலையின் சொட்டும் பேரழகும், கிழக்கே குற்றாலத்தை சுற்றியுள்ள பசுமையான கிராமங்களும், வயல்வெளிகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.



சாகசப் பிரியர்களுக்கு தீனி போடும் சாகச விளையாட்டுத் திடல், காட்டுப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மலர் வனம், ஆங்காங்கே வனத்துக்கு நடுவே தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலித்து நிற்கும் சிற்பங்கள், ஜாதிக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப் பயிர்கள் விளைந்துக் கிடக்கும் தோட்டம், பெரணி பூங்கா, மூங்கில் தோட்டம், இயற்கை ஓவியப் பதாகைகள், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, தாழ்தள தோட்டம், நீர் விளையாட்டுத் திடல், பசுமைக் குடில் என சொக்கவைக்கும் அம்சங்கள் எக்கச்சக்கம். ஒவ்வொன்றும் கண்களுக்கு இதமும், மனதுக்கும் புத்துணர்ச்சியும் அளித்து அனுப்புகின்றன. அனைத்தையும் கண்டு ரசித்துவிட்டு திரும்புகையில் அற்புதமான சுற்றுலா அனுபவத்தை உணரமுடிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக சென்று இயற்கையை தரிசித்து மகிழ ஏற்ற இடம்.


குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவை தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன் போன்ற பலவகை பழச்செடிகள், மூலிகைச் செடிகள், அலங்கார தாவரங்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு அவுட்டோர் போட்டோகிராபி, சினிமா பாடல் காட்சிகள் படமாக்கும் ‘ஸ்பாட்’ ஆகவும் ‘எகோ பார்க்’ திகழ்கிறது.  இவ்வளவு அழகும் இத்தனை சிறப்பம்சங்களும் நிறைந்த சுற்றுச்சூழல் பூங்கா சுற்றுலாப் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் உள்ளது. சீசன் காலத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானவர்கள் வரும் நிலையில், ஐம்பது பேர் கூட சுற்றுச்சூழல் பூங்காவைப் பார்க்க ஆர்வம் செலுத்துவதில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.



எனவே சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை இந்தப் பூங்காவை நோக்கி ஈர்க்க வேண்டும் . அதே போல் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் எழில் மிகு தோற்றங்களை அதிகரித்து பாதுகாக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும்.

புதன், 7 ஆகஸ்ட், 2019


பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். அகத்தியர் கால் பதித்த திருத்தலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை அன்னையின் சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

ஒன்பது அருவிகள்

குற்றாலத்தில் மொத்தம் சிறிதும் பெரிதுமாக 9 அருவிகள் உள்ளன. பழைய அருவி, மெயின் பால்ஸ் என்று இனிய தமிழில் அழைக்கப் படும் பேரருவி, புலி யருவி, ஐந்தருவி, சிற்றருவி, புது அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி என்று ஏழு அருவிகள் மலையைச் சுற்றி மலையடிவாரங்களிலும், தேனருவி, செண்பகதேவி என்று இரு அருவிகள் என்று மலையின் மேலேயும் அமைந்துள்ளன.

பேரருவியும், குற்றாலநாதரும்

மெயின் ஃபால்ஸ் எனப்படும் பேரருவி குற்றாலம் நகருக்குள் இருக்கிறது இந்த அருவி 91 அடி உயரத்தில் இருந்து மலையில் பாய்ந்து முதலில் பொங்குமாங்கடல் என்ற பள்ளத்தில் விழுந்து அதை நிரப்பி வழிந்து கீழே இறங்குகிறது. வெகு தூரத்தில் இருந்தே கண்களைக் கவரும் பேரருவி இது. தூரத்தில் இருந்து பார்க்க கண்களை அகலவெட்டாமல் லயிக்கச் செய்யும் எழில் மிகு அருவி இது. தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் அந்த அருவி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காட்சியளிக்கும். பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருவிக்கரையில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயம் சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக திகழ்கிறது. இங்கு அகத்திய முனிவர் நிறுவிய பராசக்தி பீடமும் அமைந்துள்ளது.

சிற்றருவி- இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

செண்பகாதேவி அருவி

பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தேனருவி

செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஐந்தருவி

குற்றாலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஐந்தருவி. அழகிய மலைச்சாரல், சிறு சிறு ஆறுகள், பழத்தோட்டங்கள், தங்குமிடங்கள், ஒரு சிறிய ஏரி எல்லாம் தாண்டி வருகிறது ஐந்தருவி. இங்கு அருவி ஐந்து பிரிவாக வந்து விழுவதால் ஐந்தருவி என்று பெயர். திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. அடர்ந்த கானகங்கள் நிறைந்த மலைத்தொடர். மலையின் மேலே, உயரத்தில் எங்கேயோ, எங்கிருந்தோ பல நூறடிகளுக்கு வெள்ளிக் கம்பியாக ஒரு அருவி விழுந்து மீண்டும் கானகத்திற்குள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.


பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)

ஐந்தருவிக்கு போகும் முன்பாக ஒரு கிளைப் பாதை பிரிந்து மலையின் மேல் செல்கிறது. கொஞ்ச தூரம் சென்றதும் அரசாங்கத்தின் பழத்தோட்டத் துறை நடத்தும் ஒரு பழப்பண்ணை வருகிறது. அந்த பண்ணையின் உள்ளே நுழைந்தால் அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இரு அருவிகள் அங்கே உள்ளன. அதற்குப் பழத்தோட்ட அருவி என்று பெயர். ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க முடியாது. வி ஐ பிக்கள் மட்டுமே குளிக்க முடியும்.

புலியருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.

பழைய குற்றாலம் அருவி

குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது.

பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

சுற்றுலா மையங்கள்

குற்றாலத்தை சுற்றிலும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் பல பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. தென்காசி கோவில் அதில் முக்கியமானது. திருமலைக் குமரன் கோவில் என்று ஒரு அழகிய குன்றத்துக் குமரன் கோவில் தவற விடக் கூடாத இடமாகும். குன்றின் மேல் உள்ள கோவிலில் நின்று பார்த்தால் சுற்றி பச்சை பசலேன வயற்பரப்பும் சுற்றிலும் மேகம் கவிந்த குற்றால மலைத்தொடருமாக இயற்கை அன்னையின் எழில் நமது கண்களையும் மனதையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும். அருகில் உள்ள இலஞ்சி என்ற கிராமத்தில் ஒரு அழகிய முருகன் கோவில் உள்ளது.

கேரளா எல்லை அருவிகள்

குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையைத் தாண்டினால் ஆரியங்காவுக் கணவாயும், கேரளாவும், அச்சன் கோவிலும் வந்து விடும். கேரள எல்லையிலும் சில அருவிகள் உள்ளன. ஆளரவமில்லாத அற்புதமான அருவிகள் அவை. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் குற்றாலத்தின் நெரிசலைத் தவிர்த்தப் பச்சைப் பசேல் என்று போர்த்திக் கொண்ட அற்புதமான பாலருவி இருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளில் பாபநாசம் அகத்தியர் அருவியும், பாபநாசம் அணையும், பரிசலில் சென்றால் வரும் பாண தீர்த்தத்தையும் கண்டு குளித்து அனுபவிக்கலாம். ஒரு வாரம் தங்கி, கண்டு, ரசித்து அனுவவிக்க எண்ணற்ற இடங்கள் குற்றாலத்தைச் சுற்றி அமைந்துள்ளன.


அமைவிடம்

தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

இயற்கை தந்த கொடை... கோரையாறு நீர்வீழ்ச்சி


இது புதுசு... இயற்கையின் கொடை... தென்றல் தவழ்ந்து வரும் அழகு... போலாமா?
இயற்கை தந்த கொடை... கோரையாறு நீர்வீழ்ச்சி...!


🌟 பெரம்பலூரிலிருந்து ஏறத்தாழ 65கி.மீ தொலைவிலும், திருச்சியிலிருந்து ஏறத்தாழ 80கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய இடம் தான் கோரையாறு நீர்வீழ்ச்சி.

சிறப்புகள் :

🌟 பசுமையான இயற்கை எழில் சூழ்ந்த பச்சை மலை அடிவாரத்தில் அழகாக காட்சியளிக்கும் கோரையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

🌟 இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்துச் செல்கின்றனர்.

🌟 இயற்கைக்கு கொடையாக இருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு ஆறுகளைக் கடந்து செல்வது ஒரு சுவாரஸ்ய பயணமாக இருக்கும்.

🌟 இந்த அருவி கருங்கல் பாறைகள் சூழ்ந்த குளத்திற்குள் இருப்பதால் உயரத்தில் இருந்து விழும் நீர்களின் காட்சிகளை பார்க்கும்போது நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.


🌟 இங்கு வீசும் குளிர்வான தென்றல் காற்று, மேகக் கூட்டங்கள் தவழும் இயற்கை காட்சிகள் பார்ப்பதற்கு நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும்.

🌟 குடும்பத்துடன் இந்த அருவிக்கு சென்றால் அங்கிருக்கும் மலைகளின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து, அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழலாம்.


பெரம்பலூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

பெரம்பலூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

இதர சுற்றுலாத் தலங்கள் :

🌟 பச்சை மலை.
🌟 ரஞ்சன்குடி கோட்டை.
🌟 சாத்தனூர் கல்மரம்.
🌟 மயிலூற்று அருவி.

பொதிகை மலை


" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் " , " தென் பொதிகை வைகை நதி " , "பொதிகை  மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா "  இவைகளெல்லாம்  பல்வேறு காலங்களில் வெளியாகிய தமிழ் சினிமா பாடல்களின் முதல் வரி என்பது உங்களுக்கே தெரிந்து இருக்கும் .இப்படி பொதிகை மலையின் பெருமையையும் அழகையும் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வரிகள் தமிழ் சினிமா பாடல்களில்  ஏராளம்.அந்த பாடல்களை எல்லாம் ரசித்த கேட்ட நாம்,கேட்காத ஒரே கேள்வி அந்த பொதிகை மலை எங்கு உள்ளது ? என்பது தான்.இன்றைய இளம் தலைமுறையினரில் பலருக்கும்  இந்த பொதிகை மலை குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.உலகின் மிக பழமையான மலைகளுள் ஒன்று தான் பொதிகை மலை இதன் மேற்கு பகுதி கேரள மாநிலத்திலும் கிழக்கு பகுதி தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலும் தெற்கு பகுதி கன்னியாகுமரி மாவட்டத்திலும் விரிந்து காணப்படுகிறது.மேற்கு தொடர்ச்சி மலைகளின் தென் பகுதியில் ஆனைமலைத் தொடரில் அமைந்துள்ளது தான் இந்த பொதிகை மலை.

இந்த பொதிகை மலைக்கு அகஸ்தியர் மலை என்று இன்னொரு பெயரும் உண்டு.இப்பொழுது உங்களில் ஒரு சிலருக்கு இந்த மலையை தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.அகஸ்தியர் மலை என்று சொன்னால் தான் உங்களில் பலருக்கும் தெரியவருகிறது ஆனால் அதை அப்படி அழைப்பதில்  தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை அரசியல் காரணங்களுக்காகவே அந்த பெயர் திணிக்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.இதில் என்ன அரசியல் இருக்கிறது என்கிறீர்களா ?  வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்நேரம் அது புரிந்திருக்கும் மீதம் உள்ளோருக்கு விளக்கி கூற இது சரியான தருணமில்லை என நினைக்கிறன்.அதில் ஒழிந்துள்ள அரசியலை நாம் வேரோரு பதிவில் விரிவாக விவாதிப்போம். சங்க தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்று இருக்கும் பொதிகை மலை என்ற பெயரிலேயே இந்த பதிவை தொடருவோம்.

பொதிகை மலையின் பெருமைகள் மற்றும் பொதிகை மலை குறித்த சில தகவல்கள்

பொதிகை மலை இந்தியாவின் பழமையான மலை என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது இமயமலை மற்றும் விந்திய மலையுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக பழமையான மலை என்பது பலருக்கும் தெரிந்து இருக்கும்.

இந்த பொதிகை மலையானது ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்பான UNESCO வால் அறிய உயிரனங்கள் வாழும் இயற்கை வளமிக்க பல்லுயிர் காடாக அறிவிக்கப்பட்டுள்ளது .உலகெங்கிலும் உள்ள 120 நாடுகளில் 669 இடங்களுக்கே UNESCO இந்த பெருமையை வழங்கியுள்ளது அவற்றுள் பொதிகை மலையும் இடப்பெற்றுள்ளது.

இரண்டியரத்திற்கும் (2000) மேலாண மருத்துவ குணமுடைய அறிய வகை மூலிகைகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுகிறது.குறிப்பாக உலகின் மிக மிக அரிதான 50 வகையான மூலிகை செடிகள் இங்கே காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு அறிய வகை உயிரினங்களும்,பூச்சி வகைகளும் இங்கே அதிகம் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 1868 மீட்டர் உயரம் உடையதாகிய இந்த மலை  சங்ககால இலக்கியங்களில் பொதியம் என்றும் பொதியில் என்றும் அழைக்கப்பெற்றது.

தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி பொதிகை மலையில் தான் உற்பத்தியாகிறது.

பொதிகை மலையின் உச்சியில் தான் அகத்தியர் தமிழ் வளர்த்ததாக கதைகளில் கூறப்படுகிறது.இந்த மலையின் உச்சியில் அகத்தியருக்கு ஒரு கோவிலும் உள்ளது.

பொதிகை மலைக்கு எப்படி செல்வது ? அதன் தனித்துவம் என்ன ? அங்கு குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு போகலாமா ? போன்ற உங்களுடைய அனைத்து கேள்விக்கான பதிலுடனும் பொதிகை மலை குறித்த மேலும் பல ருசிகரமான தகவல்களுடனும் மீண்டும் ஒரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

மூலிகை வாசத்தில் மணக்கும் குற்றாலம்… கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்கள்


மூலிகை வாசத்தில் மணக்கும் குற்றாலம்… கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்கள்.

குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி மட்டுமல்ல பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம்.

குற்றால மலைகளில் பல அரிய பெரிய வைத்திய குணங்களை இந்த மலையருவிகளும் மலையில் படர்ந்திருக்கும் மூலிகைகளும் கொண்டிருப்பதை உறுதிசெய்கிறார்.

1947 களில் குற்றாலம் மலையை ஆய்வு செய்த வெள்ளைக்கார டாக்டரான ஒயிட் என்பவர். 1008 வகையான மூலிகைகளைக் கொண்ட குற்றாலம் சமய சஞ்சீவி என்கிறார். டாக்டர் ஒயிட். அதோடு பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான மலை என்கிறார் அந்த ஆங்கிலேயர்

மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன.

2000 வகையான மலர்கள்

பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பல வகையான பழங்கள்

ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.


துளிர்க்கும் மூலிகைச் செடிகள்

தென்மேற்கு பருவக்காற்று துவங்கும் மே மாதம் முதல் ஆகஸ்ட்டின் மத்திய நாட்கள் வரையிலும் சுமார் மூன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் சாரல் மழை சீசனில் மலையில் உள்ள மூலிகைச் செடிகள் உயிர்பெற்று துளிர்த்துவிடும்.

தலைவலி குணமாகும்

அந்த மூலிகைச் செடிகளின் வழியே வழிந்தோடி அருவியாய் கொட்டும் தண்ணீரில் குளித்தால் சரும நோய்கள் தீருவதோடு தலைவலியும் குணமாகும் தன்மைகொண்டது.

கடுக்காய் கஷாயம்

குற்றாலநாதர் கோயிலில் சிவனுக்கு, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, "கடுக்காய் கஷாயம்" நைவேத்யம் படைக்கின்றனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர்காய்ச்சல் உண்டாகாமல் இருக்க இந்த கஷாயம் படைக்கின்றனர்.


சிவனுக்கு தலைவலி

குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்தியதால், சிவனுக்கு தலை வலி உண்டானதாம். எனவே, இவருக்கு தலை வலி நீங்க தினமும் காலையில் 9.30 மணிக்கு நடக்கும் பூஜையில், தலையில் தைலம் தடவுகின்றனர்.

தலைவலி நீங்கும்

பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகளைச் சேர்த்து 90 நாட்கள் வேகவைத்து, அந்த கலவையில், செக்கில் ஆட்டி எடுத்த தூய நல்லெண்ணெய் சேர்த்து, இந்த தைலம் தயாரிக்கின்றனர். இதை தேய்த்துக் கொண்டால் தலைவலி பிரச்னை நீங்குவதாக நம்பிக்கை.


கோயிலில் சிவனுக்கு, அபிஷேகம் செய்த தலைவலி நீக்கும் மூலிகை தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.



திங்கள், 5 ஆகஸ்ட், 2019

சுதந்திர சுவாசம் தந்த பெண்கள் இன்று குடியரசு தினம்

இன்று சுதந்திரமாக நாம் இருப்பதற்கு, எண்ணற்ற தியாகங்கள் அரங்கேற்றப்பட்டுஉள்ளன. சுதந்திரம் பெற்றாலும் முழு அரசியல் அமைப்பு சட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட நாள் 1950 ஜனவரி 26. அந்த நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். குடியரசு தினத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல தலைவர்களை நாம் நினைவு கூர்கிறோம். ஆயினும் பலரது போராட்டம் வெளியே தெரியாமல் மறைந்து போய் விட்டது.
அதிலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பெண்களின் பங்களிப்பு பலருக்கு தெரியாமலேயே போனது. தமிழக வரலாற்றில் பெண்கள் அரசியலிலும், கல்வியிலும், ஆரம்ப காலம் தொட்டே ஈடுபட்டு வந்தனர். சங்க கால பெண் புலவர்களான அவ்வையார், பொன்முடியாள் அரசவை புலவர்களாகவும், துாதுவர்களாகவும் செயல்பட்டு வந்தனர். பல்லவர், சோழர், பாண்டியர் கால அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், கல்வி கேள்விகளிலும், சமூக செயல்பாடுகளிலும் சிறப்புடன் திகழ்ந்தனர். விடுதலை வேட்கை 19ம் நுாற்றாண்டுக்கு பின்னரே, தமிழ்நாட்டில் வீறு கொண்டு எழுந்தது. விடுதலை வேட்கை கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த பெண்கள் பலர் உண்டு.ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து, கிளர்ச்சி செய்த பாளையக்கார பெண்களில் முக்கியமானவர் வேலுநாச்சியார். ஆங்கிலேயரை எதிர்த்து அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிர்த்து போராடிய வீரமங்கை இவர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் காந்தியடிகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து சுதந்திர போராட்ட இயக்கங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்சொர்ணத்தம்மாள், பர்வதவர்த்தினி, அகிலாண்டத்தம்மாள், கே.பி.ஜானகி அம்மாள், தாயம்மாள், சீலக்காரம்மாள், விசாலாட்சி, முத்தம்மாள், பத்மாஸனியம்மாள், தமயந்தி அம்மாள், மீனா கிருஷ்ணசாமி, திருக்கொண்டா லட்சுமி, வத்கலாமணி.

சொர்ணத்தம்மாள்:

மதுரை மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் துணிச்சலில் சிகரமாக திகழ்ந்தனர். அவர்களுள் சொர்ணத்தம்மாள் அன்னிய துணிகளை மிதித்து, கடைகளின் முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். 1942-ல் காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம், அவரது வேண்டுகோளான,“செய் அல்லது செத்து மடி” என்பதை உணர்வாக கொண்டு, மதுரை புறநகர் பகுதியில் தெருத் தெருவாக இறங்கி மக்களிடையே சுதந்திரத்தீயை மூட்டினார். ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் வைக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது.

என்.எம்.ஆர்.எஸ்.பர்வதவர்த்தினி:

மதுரையில் அதிகம் வாழும் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த சுப்ராமன் மனைவி பர்வதவர்த்தினி அம்மாள். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சுப்ராமன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருந்த நேரத்தில், கணவர் வழியில் பர்வதவர்த்தினி மதுக்கடை மறியலில் ஈடுபட்டு வந்தார். மறியல் செய்த பெண்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கண்டன ஊர்வலம் நடத்தினார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.

கே.பி.ஜானகியம்மாள்:

மதுரையை சேர்ந்த குருசாமியின் மனைவி ஜானகியம்மாள். நாடகங்கள் மூலம் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகம் வந்தபோது, முத்துராமலிங்க தேவருடன் இணைந்து சுற்றுப்பயணம் செய்து விடுதலை உணர்வை ஊட்டினார். 1937-ல் ஆறு மாதம், 1941-ல் ஒன்பது மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். விடுதலை போராட்ட வீரருக்குரிய ஓய்வூதியத்தை நிராகரித்து இறுதி வரை தியாக வாழ்வு வாழ்ந்தார்.மதுரையில் மட்டும் சுதந்திர வேட்கையை துாண்டிய பெண்மணிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சித்து பாக்கியலெட்சுமி, சீதாலெட்சுமி அம்மாள், தாயம்மாள், சீலக்காரம்மாள், விசாலாட்சி, திருக்கொண்டாலட்சுமி அம்மாள், முத்தம்மாள், பத்மாஸணியம்மாள், மதுரை மேலுாரை சேர்ந்த தமயந்தி அம்மாள்.

ராமநாதபுரம்:

திருவாடானை திருவேகம்புத்துார் செல்லத்துரையின் மனைவி மாணிக்கம்மாள். 1942-ல் ஆகஸ்ட் புரட்சியில் பங்கு கொண்டதற்காக 5 மாத சிறை தண்டனை பெற்றார். திருவாடானை கிழக்கு தெருவை சேர்ந்த வேலம்மள் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றதற்காக 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.ராமநாதபுரம் கீழ்அய்யக்குடியை சேர்ந்த நீலா மெருன்னி, 1941-ல் நடந்த தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று 4 மாத சிறை தண்டனை அனுபவித்தார். ராமநாதபுரம் தெற்கு வானக்கார தெருவை சேர்ந்த ராஜலெட்சுமி, கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.பரமக்குடி சூடியூரை சேர்ந்த ஜெயலட்சுமி தனது 20வது வயதில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஈடுபட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.

விருதுநகர்"

அருப்புக்கோட்டை செல்லம்மாள் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாத சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் அமிர்தம்மாள் அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் ராஜாமணி அம்மாள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். ராஜபாளையம்மஞ்சம்மாள் 1930-ம் ஆண்டு அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். இதற்காக 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் வேலுநாச்சியார், குயிலி, காளியம்மாள் மற்றும் பல்வேறு பெண்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசை கொண்டாடி வரும் நாம், நமக்காக விடுதலை போரில் போராடிய பெண்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏட்டிற்கு வராத எத்தனையோ பெண்கள் உள்ளனர். அவர்கள் தியாகம் இன்னும் வெளிஉலகிற்கு தெரியவில்லை. இந்த விடுதலை போராளிகளின் தியாகம் வெளி வர வேண்டுமாயின், பெண்களின் பங்களிப்பு குறித்தான ஆய்வுகளும், நுால்களும் வெளிவர வேண்டும்

சுதந்திர போராட்டம் ஒரு பார்வை!


சில அரசர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து அதில் வெற்றி பெற்றவர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் செய்துள்ளனர்.
இது போன்ற பல அரசாங்கங்களாக இருந்த இந்திய நாடு வளங்கள் கொழிக்கும் நாடாக இருந்தது. இங்கு இருக்கும் வளத்தை பார்த்தும், இங்குள்ள சில பொருட்களை வாங்க, தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்டு போர்ச்சுகல், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற மேற்கிந்திய நாடுகள் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.

முதலில் வணிக ரீதியாக வந்த நாடுகள், இங்கிருந்து விளைபொருட்கள் மட்டுமல்லாது, தங்கம், வைரம் என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதையடுத்து இந்தியாவை வணீக தளமாக ஆக்கியது. அதிலும் ஆங்கிலேயர்கள் மெல்ல ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் இங்கு ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியது.
இங்குள்ள வளங்களை சுரண்டும் நோக்கிலும், காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் நோக்கிலும், இங்குள்ள சிற்றரசர்களையும், பேரரசர்களிடம் நட்பு உண்டாக்கி, நட்பாய் இருந்த அரசர்களிடையே ஒருவரை ஒருவர் படையெடுக்க செய்யும் தந்திரத்தை புகுத்தினர். போருக்கு தாங்களுக்கு ஆதரவாக இருப்போம் என ஆங்கிலேயர்கள் தெரிவித்தனர். பின்னர் வஞ்சகமாக அந்த அரசர் மீது போர் தொடுத்து அப்பகுதியை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இது போன்ற செயல்களால் இந்தியாவை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஆங்கிலேயர்களுக்கு 150 ஆண்டுகள் பிடித்தது.
இந்த கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவை கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இவர்களின் ஆட்சியில் இங்கிருந்த வளங்கள் சுரண்டப்பட்டதோடு, மக்களை அடிமையாகவும் நடத்தியது. மக்களிடம் வரி வசூலித்தல், விளைபொருட்களில் பங்குகேட்டல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினர். அதோடு இங்கிருந்த மக்களிடம் பிரித்தாலும் தந்திரத்தையும் பயன்படுத்தினர்.
இதுபோன்ற கொடுமைகளிலிருந்து தப்பிக்க இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. முதலில் மனு தாக்கல் செய்தல், பொதுப்பணித்துறைக்கான தேர்வு எழுதுவதற்கான அடிப்படை உரிமைகள், மிதவாத முறைகளான வேண்டுதல் போன்றவற்றை வலியுறுத்தி போராட ஆரம்பித்தனர். 1900 ஆண்டுகளில்
சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது.
1900ம் ஆண்டுகளின் துவக்கத்தில் பால கங்காதர திலகர் , லாலா லஜபத் ராய் ,வ. உ. சிதம்பரம்பிள்ளை, அரவிந்தர் மற்றும் பிபின் சந்திர பால் போன்ற தலைவர்களால் முன்மொழியப்பட்ட அரசியல் சுதந்திரத்தை நோக்கிய போராட்ட அணுகு முறையை கண்டது.
இந்த இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் மோகன்தாஸ் காந்தியால் வழிநடத்தப்பட்ட அஹிம்சை கொள்கைகளை எற்றுக்கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியது. ஒருபுறம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சில தலைவர்கள் இணைந்து இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதோடு சில வெளிநாடுகளின் உதவியையும் கோரினார்.
இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரத்தில், மகாதமா காந்தி அவர்களின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் நேதாஜி அவர்களின் ஐ.என்.ஏ இயக்கம் தீவிரமடைந்தது.
காந்திய இயக்கத்தாலும், ஐ.என்.ஏ இயக்கத்தினாலும் சிதறிக்கிடந்த இந்தியர்கள் ஒன்றுபட்டு போராடினர். இதனால் ஆங்கிலேயர்களின் கடைசி பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் 1947, ஜூலை 3ல் இந்தியா பேரரசை மதசார்பற்ற் இந்தியா என்றும், முஸ்லீம் நாடாக பாகிஸ்தானையும் பிரித்து சுதந்திரத்தை அளிப்பதாக அறிவித்தது.
இதன்படி 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திர தேசமானது.
பல்வேறு போராட்டங்கள், உயிரிழப்புகள் என பாடுபட்டு பெற்ற இந்திய சுதந்திரத்தை நாம் மதிப்போடும், அதை முறையாகவும் அனுபவிப்பது இந்த சுதந்திர இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரின் கடமையாகும். ஜெய்ஹிந்த்.
நன்றி சமயம்

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

ஊஞ்சல் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள்


ஊஞ்சல் ஆடுவதால் ஏற்படும் நன்மைகள்

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.


6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.


10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.