புதன், 21 செப்டம்பர், 2016

வாழைப்பழம்

சருமத்தை மெருகேற்றும் வாழைப்பழம்.

குளிர் காலமோ, கோடை காலமோ சருமத்தின் அழகு தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தேன் கலந்து முகம், கை, கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் சருமம் பொலிவு பெறும்.
ஒரு வாழைப்பழத்துடன் சிறிதளவு வெள்ளரி விதை பவுடர் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவினால், வெயிலாலும் தூசியாலும் சருமத்தில் உண்டான கருமை நீங்கும். பாலுக்கு பதில் தயிர் சேர்த்தால், முகம் குளிர்ச்சி பெறும்.
வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி, இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கருவளையமும் காணாமல் போகும்.
பால் மற்றும் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்து, முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் ஊற விடவும். அதன்பின், ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கவும். இதனால், சருமத்தின் மெருகு கூடி பளபளப்பாகும்.
கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைத்து அதனுடன் சிறிது நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், ஒரு எலுமிச்சம்பழத் சாறு, சிறிது வெந்தய பவுடர் மற்றும் சிறிது புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் பேக் போடவும். பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.
இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக