புதன், 26 டிசம்பர், 2018

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்


எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்!

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.

122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும்.

திங்கள், 17 டிசம்பர், 2018

காபி உங்களுக்கு பிடிக்குமா? அப்போ தினமும் 7 கப் குடிங்க... ஏன்னு தெரியுமா?


காபி உங்களுக்கு பிடிக்குமா? அப்போ தினமும் 7 கப் குடிங்க... ஏன்னு தெரியுமா?

குளிர் காலம் தொடங்கிவிட்டது. சாதாரண நாட்களில் காலையில் எழுவதே கடினம். அதுவும் குளிரான நாட்களில் காலையில் எழுவதே மிகவும் கடினம். இந்த கடினத்தைப் போக்குவதற்கு ஒரு சிறந்த தீர்வு, காபி. ஒரு டம்ப்ளர் காபி பலருக்கும் புத்துணர்ச்சி பானம் என்பது மறுப்பதற்கில்லை.


Here’s What Happens to Your Body When You Drink Coffee Every Day
வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவரை அலுவலகம் அனுப்பிவிட்டு, பருகும் ஒரு கப் காபிக்கு ஈடு இணை இந்த உலகத்தில் இல்லை. ஒரு கப் காபியில் ஒரு சிப் பருகியதும் ஒரு வித மந்திர சக்தி உடலில் வேலை செய்யும். அது என்ன என்பது இன்று வரை மாயமாகவே உள்ளது.

 
*காபி*


காபியின் எந்த ஒரு விதமும், ப்ளாக் காபி, கோல்ட் காபி, ஐஸ் காபி, எதுவாக இருந்தாலும், அதனை ஒரு சிப் பருகியதும் உதட்டில் ஒரு சிறு புன்னகை ஒட்டிக் கொள்ளும். உண்மையில், காபி பருகுவதால் பல வித நன்மைகள் நமக்கு கிடைக்கும். காபி பிரியர்களுக்கான பதிவு தான் இது. இந்த பதிவில் காபியின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். வாருங்கள்.

 
*ஒரு கப்*


தினமும் ஒரு முறை ஒரு கப் காபி பருகுவதால் அல்சைமர் நோயின் அபாயம் குறைக்கப்படுகிறது. அதாவது ஒரே ஒரு கப் காபி மட்டுமே, அதற்கு மேலும் அல்ல குறைவாகவும் அல்ல.


*சர்க்கரை சேர்க்கலாமா?*


தினமும் சர்க்கரை சேர்க்கப்பட்ட காபியை பருகுமாறு நாங்கள் பரிந்துரைக்கவில்லை, ஆனால் எதாவது ஒரு இனிப்பு சாப்பிடும்போது காபி பருகலாம். இது நன்மை அளிக்கும். காபின் மற்றும் க்ளுகோசின் மந்திர ஒருங்கிணைப்பு உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, கவனத்தை கூர்மையாக்குகிறது, மேலும் எளிதில் படிக்கும் ஆற்றலைத் தருகிறது. டோனட் மற்றும் பிஸ்கட் காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கான அருமையான காம்பினேஷன்.

 
*கோல்டு காபி*


ஒரு நாளில் ஒரு முறை தான் காபி பருகும் பழக்கம் உள்ளவர்கள், அதனைப் பருக சரியான நேரம், நீங்கள் யாரையாவது சந்திப்பதற்கு முன். ஒரு ஆராய்ச்சியில், புதிதாக ஒருவரை சந்திப்பதற்கு முன், போட்டியாளர்களுக்கு அவர்களின் விருப்பமான கோல்ட் காபி அல்லது மற்ற காபி வழங்கப்பட்டது. காபி பருகியவர்கள், புதிதாக சந்தித்த நபருடன் நட்பாக பழகினர். ஆகவே நீங்களும் இதனை முயற்சிக்கலாம்.
 

*ஆன்டி ஆக்சிடண்ட்*


காபி பருகுவதால் நட்புணர்ச்சி மட்டும் பெருகுவதில்லை, உண்மையில் காபி பருகுபவருக்கு ஒரு வித இன்பம் கிடைக்கிறது. இது ஜோக் அல்ல. ஒரு நாள் காலையில் காபி பருகாமல் இருப்பவர், தங்கள் நாளில் ஒரு வித சந்தோஷத்தை இழக்கின்றனர். ஒரு முறை காபி பருகும்போது நிச்சயம் மறுமுறை குடிப்பதற்கான ஆர்வம் தோன்றும். அதனால் ஒரு நாளில் இரண்டு முறை காபி பருகுவதால் உங்கள் மனச்சோர்வு தடுக்கப்படுகிறது. இதற்குக் காரணாம் காபியில் உள்ள அன்டி ஆக்சிடென்ட்.

 
*இரண்டு கப்*


ஒரு நாளில் இரண்டு முறை காபி பருகுவதும் நன்மை அளிக்கிறது. குறிப்பாக அதிக மது அருந்துபவர்கள் ஒரு நாளில் இரண்டு முறை காபி பருகலாம். காபி பருகுபவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவது குறைவதாக, 9 ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.


நீங்கள் தினமும் இரண்டு கப் காபிக்கு மேல் பருகுபவரா? அப்படி என்றால் 3? நீங்கள் 3 கப் காபி பருகுவதால், இதய நோய் பாதிப்பின் அபாயம் குறைகிறது.


லோ சுகர்னால கிறுகிறுனு வருதா? இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க... உடனே சரியாகிடும்...

 
*4 கப்*


நீங்கள் தினமும் ஷ4 கப் காபி பருகுவதால், புற்று நோய் தடுக்கப்படுகிறது. பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் 4 கப் காபி பருகுபவர்களுக்கு கருப்பை புற்று நோய் அபாயம் குறைவதாகவும், அதுவே காபி பருகும் பழக்கம் இல்லாத பெண்களுக்கு இந்த அபாயம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

 
*7 கப்*


அதையும் தாண்டி, காபி பருகுவதையே வேலையாக கொண்டிருப்பவர் நீங்களா? அதுவும் நன்மை தான். பார்கின்சன் நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயம், உங்களைப் போன்றவர்களுக்கு தடுக்கப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு கப் காபி பருகுபவரை விட 7 கப் காபி பருகுபவருக்கு நீரிழிவு அபாயம் குறைகிறது                 

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….


பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகள்!….

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது, மூடன் அறிவாளியாகலாம் பைத்தியம் தெளிந்த சித்தமுடையவனாகலாம் ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டுக்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசன் மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. அல்பிரட் ஐன்ஸ்டைன் போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள் உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்.

16. சாட்டையை கையில் வைத்து சொடுக்கிக் கொள்ள வீடு ஒரு சார்க்கஸ் கூடமும் அல்ல, பிள்ளைகள் விலங்குகளும் அல்ல.

17. மென்மையாக சொல்லும்போது வார்த்தைகள் மலர்கள், கடுமையாக சொல்லும்போது அவை குறு வாட்கள்.

18. சராசரியாக ஒரு நாளைக்கு இருபது தடவையாவது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு எதிர் மறையாக புத்தி கூறுகிறோம். இப்படிப் பார்த்தால் ஒரு குழந்தைக்கு இருபது வயதாகும்போது 1.24.000 தடவைகள் செய்யாதே.. நீ செய்வது தவறு ! என்ற எதிர்மறை வார்த்தைகளை சந்திக்க நேரும், இது தவறான வாழ்வு என்பதை பெற்றோர் புரிய வேண்டும்.

19. இவ்வளவு எதிர் மறைகளுக்குள்ளால் நீச்சலடித்து ஒரு குழந்தை வெற்றி பெறுகிறதென்றால் அது இறைவன் தன்னுடைய பிள்ளைகள் மீது கொண்ட அன்பினால்தான்.. வாழ்க.

20. நீ உருப்படமாட்டாய்… நீ தண்டச்சோறு… போன்ற வார்த்தைகளை பேச வேண்டாம்.. இவை நஞ்சு வார்த்தைகள்.. பிள்ளைகளை தாக்கி அழிக்கும் விஷம்.

21. இவன் உருப்படமாட்டானோ வாழ்வில் தோற்றுவிடுவானோ என்று நினைத்தால் அப்படி நடக்கும் ஆகவே அப்படியான நினைவுகளை தவிருங்கள்.

22. பிள்ளைகளை உருப்படுத்த பின்வரும் வார்த்தைகளை சொல்லுங்கள் :
என் மகனே – மகளே நீ வாழ்க..!
நீ உடல் நலமிக்கவனாக இருக்கிறாய்..!
அறிவு நலம் மிக்கவனாக இருக்கிறாய்..!
மன நலம் மிக்கவனாக இருக்கிறாய்..!
வாழ்வில் வெற்றி பெறும் எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் கொண்டுள்ளாய்.
நல்ல குணங்களை கொண்டிருக்கிறாய்..!
நல்ல முயற்சி உடையவனாக இருக்கிறாய்..!
நன்கு உழைப்பவனாக இருக்கிறாய்..!
நல் வாழ்க்கைக்கான எல்லாம் உனக்குக் கிடைக்கிறது..!
உன் உள்ளும் புறமும் தெய்வீகம் நிறைந்திருக்கிறது..!
நல்ல சூழலைப் பெற்றவனாக இருக்கிறாய்..!
நீ அருளாற்றல் பெற்று நலத்துடனும் வளத்துடனும் வாழ்க ! என்று அனுதினமும் வாழ்த்துங்கள்.

23. மேற்கண்ட வாழ்த்துக்களை பிள்ளைகள் உறங்கும்போது அருகில் சென்று சத்தமில்லாமல் மனதிற்குள் சொன்னால் அவனது அல்லது அவளது ஆல்ஃபா மனோநிலை அதை ஏற்கும். ஆழ்மனம் தூண்டப்படும் படிப்படியாக அவனுள் மாற்றங்கள் நிகழும், உடன்பாட்டு சூழல் தோன்றும்.

24. இதைச் சொல்லச் சொல்ல உங்கள் மனோநிலை மாறும், உங்கள் கண்ணோட்டம் மாறும், சூழல் மாறும், எண்ண அலைகள் குழந்தையை தாக்குவதற்குப் பதிலாக தழுவி அன்பு செய்யும். மனம் மாறும், வாழ்வு புதிதாக சேரும்.. வாழ்வு புதிதாக மலரும். வாழ்த்திப் பாருங்கள் வளத்தை சேருங்கள்
.
25. குழந்தைகள் நமது நம்பிக்கைகள், ஒரு குழந்தையின் கௌரவத்தை உணருங்கள், ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள், ஏனெனில் உண்மையிலேயே நாம் அப்படி இல்லை – ராபட் ஹென்றி
நீங்கள், உங்கள் பிள்ளைகள், உங்கள் குடும்பம், உங்கள் சுற்றத்தவர் அனைவரும் நலமாக வளமாக வாழ வேண்டும் அதுவே நம் பேரின்பம்…! அதைவிட்டால் வேறேது இன்பம் !

புதன், 12 டிசம்பர், 2018

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள்


உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள் ...

1 சென்னை மாவட்டம்
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496
3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504
4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512
5 திருவண்ணாமலை மாவட்டம்
Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518
6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526
7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532
8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537
9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542
10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546
11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556
12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562
13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569
14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578
15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
16 Madurai
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyure 94450 00592
17 தேனி மாவட்டம் Theni
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601
19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609
20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615
21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622
22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629
23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637
24 புதுக்கோட்டை மாவட்டம்
Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652
26 ராமநாதபுரன் மாவட்டம்
Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659
27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668
28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679
29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687
30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691...
 *உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...*
                 

வெள்ளி, 7 டிசம்பர், 2018

விடுகதை கேள்விகள் விடைகள்


விடுகதை கேள்விகள் பகுதி ( 01 )
1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?
மிருதங்கம்
02. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?
சாம்பிராணி
03. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
வளையல்
04. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
மதி
05. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?
பாம்பு
06. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன?
தேன் கூடு
07. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்?
நிலா
08. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?
சூரியன்
09. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
காற்று
10. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?
மரம்
11. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?
குடை
12. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?
மூச்சு
13. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?
பம்பரம்
14. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?
வானம்
15. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன?
தண்ணீர்
16. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?
குளிர்
17. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?
நெருப்பு
18. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன?
தீக்குச்சி
19. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன?
உரோமம்
20. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
கடிகாரம்
பகுதி ( 02 )
01. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?
நாய்
02. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
இளநீர்
03. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
அன்னாசிப்பழம்
04. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
நண்டு
05. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
பட்டாசு
06. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?
நுளம்பு
07. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
சோளப்பொத்தி
08. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?
அன்னாசிப்பழம்
09. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
தேங்காய்
10. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?
நத்தை
11. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
கண்ணீர்
12. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
மெழுகுதிரி
13. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?
நுங்கு
14. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
அகப்பை
15. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
முட்டை
16. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்
17. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
கல்வி
18. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
முருங்கைமரம்
19. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?
உப்பு
20. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?
கத்தரிக்காய்
பகுதி ( 03 )
01.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?
புகை
02. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?
வியர்வை
03. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?
உப்பு
04. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?
சட்டை
05. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை?
எறும்புகள்
06. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?
கொடி
07. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?
துத்தநாகம்
08. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன?
முட்டை
09. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?
மழை
10. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?
பெட்ரோல்
11. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?
இள‌நீ‌ர்
12. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?
எறு‌ம்பு
13. வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை?
ப‌ணி‌விடை
14. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?
தீ‌க்கு‌ச்‌சி
15. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?
கா‌லி‌ங்பெ‌ல்
16. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?
க‌ண் இமை
17. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?
அமைதி
18. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?
தென்றல்
19. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
பட்டாசு
20. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
எறும்புக் கூட்டம்
பகுதி ( 04 )
01. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
முத்திரை
02. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
நெருப்பு
03. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?
சவப்பெட்டி
04. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?
தற்கொலை
05. 3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது அது என்ன?
குயில்
06. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
சோளம்
07. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
பஞ்சு
08. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?
மின்விசிறி
09. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?
தொலைபேசி
10. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?
நெருப்பு
11. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?
சேவல்
12. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
சோளக்கதிர்
13. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
உப்பு
14. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?
உளுந்து
15. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?
ஈ
16. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
ஈசல்
17. . உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்?
எறும்பு
18. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
மெழுகுவர்த்தி
19. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
வாழை
20. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
இடியாப்பம்
பகுதி ( 05 )
01. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
தீபம்
02. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
நிலா
03. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
மஞ்சள்
04. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
இதயம்
05. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
தக்காளி
06. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
கடல்
07. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
கண்
08. மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?
காளான்
09. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்கக் கொப்பில்லை அது என்ன?
நெல்லு
10. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?
வேம்பு
11. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
காட்ஸ்
12. கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
கண்ணீர்
13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
வாய்
14. விடுமுறை இல்லாத கடை எது?
சாக்கடை
15. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?
தீக்குச்சி
16. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?
பாம்பு
17. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன?
கண் இமை
18. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?
ஆறு அல்லது அருவி
19. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?
வெங்காயம்
20. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?
நெருப்பு
பகுதி ( 06 )
01. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன ?
முதுகு
02. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
சிலந்தி வலை
03. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார் ?
மின்சாரம்
04. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன ?
சிலந்தி வலை
05. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார் ?
மணிக்கூடு
06. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ?
தேன்
07. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ?
ஊசி
08. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ?
மத்து
09. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ?
துவாரம்
10. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ?
காற்று
11. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ?
வானொலிப் பெட்டி
12. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ?
தலையணை
13. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ?
மெட்டி
14. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ?
தேனீ
15. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?
வாழைப்பூ
16. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?
தலை வகிடு
17. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?
சித்தரத்தை
18. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?
மொடக்கத்தான்
19. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன?
இளநீர்
20. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன?
புடலங்காய்
பகுதி ( 07 )
01. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
நிழல் அல்லது விம்பம்
02. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
சீப்பு
03. வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?
முட்டை
04. ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
உள்ளங்கையும் விரல்களும்
05. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
வாழைப்பழம்
06. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
செத்தல் மிளகாய்
07. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன?
சங்கு
08. தட்டச் சீறும் அது என்ன?
தீக்குச்சி
09. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
தையல் ஊசியும் நூலும்
10. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
நிழல்
11. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
நத்தை
12. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
வழுக்கை
13. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
பென்சில்
14. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?
பலூன்
15. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
கிளி
16. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
அம்மி குளவி
17. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
பூசனிக்கொடி
18. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
கரும்பு
19. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
தலைமுடி
20. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?
விளக்கு
பகுதி ( 08 )
01. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?
புல்லாங்குழல்
02. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?
ரத்தம்
03. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?
உப்பு
04. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
கத்தரிக்கோல்
05. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
துடைப்பம் (தும்புத்தடி)
06. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
ஊதுபத்தி
07. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
பஞ்சு
08. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?
எழுமிச்சம்பழம் (தேசிக்காய்)
09. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
விக்கல்
10. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன?
சேவல்
11. சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?
கொசு
12. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?
வாழைப்பழம்
13. சங்கரன் கோவில் டப்பா தாயும் மகளும் தேய்ப்பா – அவை என்ன?
அம்மி குழவி
14. கோட்டையயைச் சுற்றி மதில் சுவர் உள்ளே மறைந்திருக்கிறான் வேட்டைக்காரன் – அது என்ன?
நாக்கு
15. கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?
மின்விசிறி
16. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?
கரும்பு
17. கோவில் குளம் இல்லாமல் கொட்டி திரிகிறான் ஒருவன் – அவன் யார்?
குயவர்
18. கோவிலைச் சுற்றி கறுப்பு கோவிலுக்குள்ளே வெளுப்பு – அது என்ன?
சோற்றுப்பானை
19. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன?
தேங்காய்
20. கோழிக் குஞ்சு பொரிப்பது எப்படி? தாழி நெய்யை எடுப்பது எப்படி?
முட்டையிட்டு
பகுதி ( 09 )
01. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?
கொக்கு
02. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?
தவளை
03. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?
முட்டை
04. காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?
பாம்பு
05. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
முள்
06. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?
சேவல்
07. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?
வானம்
08. கையுண்டு, கழுத்துண்டு, தலையுண்டு உயிரில்லை அது என்ன?
சட்டை
09. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?
மயில்
10. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
கிளி
11. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?
கப்பல்கள்
12. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
ஒட்டகம்
13. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
தொட்டா சுருங்கிச் செடி
14. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?
விமானம்
15. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
பப்பாளி விதைகள்
16. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?
கைகாட்டி
17. நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?
பச்சை குத்துதல்
18. நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
வெங்காயம்
19. நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?
அன்னம்
20. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?
அச்சு வெல்லம்

வியாழன், 6 டிசம்பர், 2018

குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி?


குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி?

முக்கியமாக இது பெண்களுக்கானது...

இன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை.

இதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி வரும் பெண்கள், சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய, தனியார் விடுதி நடத்துனரே இப்படி இருப்பது கொடுமையான, கொடூரமான, தண்டிக்க வேண்டிய செயல்.

என்ன சொன்னாலும் பாதிப்பிற்கு ஆளாவது பெண்கள் என்பதால், அவர்களைப் அவர்களே பாதுகாத்துக் கொள்வது முதலாவதாகும் அதன் பிறகே மற்றவரின் உதவியை நாடலாம். இந்த செய்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப் மூலம் மேலும் பல ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது.

தனியார் விடுதிகளில் தங்குவோர், பொது வெளியில் உள்ள பாத்ரூம்ங்களை பயன்படுத்துவோர், ஷாப்பிங் மால், மாபெரும் துணிக்கடைகளில் உள்ள பாத்ரூம்கள், துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகள், சுற்றுலா செல்லும் இடங்களில் தனியார் ஹோட்டல் அறைகள் போன்றவற்றில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, உங்களது அந்தரங்க நடவடிக்கைகளை சமுதாய விரோதிகள், காம வெறியர்கள் படம் பிடிக்கும் ஆபத்து உள்ளது.

இதனை எப்படி கண்டு பிடிப்பது? இதற்கென்று ஆப்ஸ்கள் உள்ளன.

அதில் ஒரு ஆப் பற்றி இங்கே விரிவாகச் சொல்கிறேன். இதை பெண்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது.

கூகுள் ஆப் ஸ்டோரில் - Detect Hidden Cameras and Microphones - என்று டைப் செய்தால், Techno95 என்ற நிறுவனத்தின் ஆப் உங்களுக்கு கிடைக்கும். இதில் விளம்பர தொல்லைகள் இருந்தாலும், ஆப் லைன் மூலம் இதை விளம்பரத் தொல்லை இல்லாமல், பயன்படுத்த முடியும்.

இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்ததும், நான்கு ஆப்ஷன்கள் மெனுவாக கிடைக்கும்.

1.Detect by Radiotion Meter

2.Detect Infrared Camera

3.How to Use

4.Manual Camera Detection

இதில் Detect by Radiotion Meter- எனும் முதல் ஆப்ஷனை தேர்வு செய்தால், ஓர் அறையில்...
37 என்ற அளவில் ரேடியோ அலைகள் உள்ளது என்று காட்டும். அதில் X, Y, Z என்று ஒவ்வொரு கதிருக்கும் எவ்வளவு அலைநீளம் இருக்கிறது என்று காட்டும். இப்படி இருப்பது இயல்பானதாகும்.

தனியார் விடுதியோ, ஹோட்டல் அறையோ நீங்கள் செல்கிறீர்கள் எனில், அங்குள்ள குளியல் அறை, உடை மாற்றும் அறையோ இருக்கிறது எனில், அங்கே சென்று உள்ளே இருக்கும் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களில் ஸ்விட்ச்களை அணைத்துவிட வேண்டும். லைட், (எக்சாஸ்ட்) பேன், வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை அணைத்துவிட்டு, இந்த ஆப்ஸில் உள்ள,  முதல் ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் மொபைலை காட்டினால், அங்கே ரகசியமாக கேமரா பொருத்தி வைக்கப்பட்டிருந்தால், ரேடியோ அலைகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் காட்டுவது மட்டுமின்றி, பீப்...பீப்...பீப்... என்று அலாரத்தையும் கொடுக்கும். அப்போது எச்சரிக்கை அடைந்து, அங்கிருந்து வெளியே வந்துவிடுங்கள். (ஆட்களின் உதவியோடு அதனை தட்டிக்கேட்கலாம்)

Detect Infrared Camera எனும் இரண்டாவது ஆப்ஷன்

அதாவது, இருட்டில் இயங்கும் கேமராதான் இன்ப்ரா ரெட் கேமரா. அதையும் இந்த ஆப்ஸின் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

மூன்றாவது ஆப்ஷன் - இந்த ஆப்ஸை எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நான்காவது ஆப்ஷன் என்னவென்றால் Manual Camera Detection என்பதாகும்.

அதாவது எங்கெங்கல்லாம் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றில் எங்கெங்கெல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைத் தாண்டியும் சில இடங்களில் பொருத்தப்பட வாய்ப்புகள் உண்டு.

மேற்குறிப்பிட்ட அறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அந்த கண்ணாடியை உங்கள் விரலை கொண்டு தொட்டுப்பாருங்கள். உங்கள் விரலுக்கும் அதன் கண்ணாடி பிம்பத்திற்கும் இடைவெளி இருப்பின் அந்த கண்ணாடியில் ஆபத்து இருக்கிறது. மறுபுறம் இருந்து உங்களை கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். விரல்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தால் அது ஆபத்தானது இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆப்ஸை பெற: http://bit.ly/2BSyM8L


(பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்...)

வெள்ளி, 30 நவம்பர், 2018

பெண்களே! உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் 50 முக்கிய குறிப்புகள்! முடி அடர்த்தியாக வளர….!


பெண்களே! உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் 50 முக்கிய குறிப்புகள்!
முடி அடர்த்தியாக வளர….!

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான்.

இன்றைய அவசர உலகில் பெண்களுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.



மேலும் நமது சுற்றுப்புற சுழலில் உள்ள மாசுக்களால் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்:

1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3. செம்பருத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.



4. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செம்பருத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6. வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

7. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.



8. மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

9. செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊர வைத்து குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தலாகி விடும்.

10. மருதாணிஇலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் (2 அல்லது 3 நாட்கள்) ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.

அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

*பொதுவான குறிப்புகள் ….!*

11. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

12. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது,

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.



13. மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.

14. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

15. பெண்களுக்கு மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

16. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

17. அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு….!

18. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

19. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

20. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும்.

21. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

22. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது,



23. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.

24. கொள்ளு பயறு அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.

25. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.

26. பீட்ருட்டை உணவில் அதிகம் சேர்த்தல் இரத்த போக்கினால் ஏற்படும் இழப்பு சமன் செய்யப்படும்.

27. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்.

28. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.

29. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!

கர்ப்பக் கால கவனிப்பு…!

30. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

31. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

32. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

33. கர்ப்பிணிகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

34. கர்ப்பக் காலத்தில் மற்றும் பிரசவ காலத்துக்குப் பின்னும் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் நடைபயிற்சி மிக நன்று.

35. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

36. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.



37. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

38. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமி மற்றும் பரம்பரை நிறம்.

39. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

40. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

41. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

42. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளை வாதத்தைக் கூட கொண்டு வரக்கூடும்.

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க….!

43. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.

44. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.

45. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

46. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

47. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து….!

48. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

49. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.உணவே மருந்து.

எல்லா வகை பழங்களையும் சாறு எடுத்து அருந்துவது உடலுக்கு நன்மை தரும்.

50. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்…

வியாழன், 29 நவம்பர், 2018

கிராமத்துத் திண்ணை வீடு


கிராமத்துத் திண்ணை வீடு

மறந்து விட்ட  மரபின் அடையாளச் சின்னம்

திண்ணை இல்லா கிராமத்து வீட்டை பார்க்க முடியாது முன்னொரு காலத்தில்

அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை.

 வீடு கட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம் வீட்டின் முன் கட்டி இருப்பர்.

திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும்.

இது வீட்டின் முன் பகுதியில் அல்லது தலைவாசல் பகுதியில் திறந்த வெளியில் அமைந்திருக்கும்.

சுவற்றில் சாய்ந்தும், காலைத் தொங்க விடுவதற்கும் வசதியான அமைப்பாக அமைத்திருப்பர்.

இதில் இருக்கும் தூண்கள் வீட்டைத் தாங்கிக் கொண்டு இருக்கும்.

திண்ணையில் உட்கார்ந்து ஊர்க் கதை பேசுவதும் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அங்கு உட்கார்ந்து ஊர்க்காரர்களோடு அளவாடுவதும்,

பள்ளிப்பாடங்களை சிறுவர்கள் அங்கு உட்கார்ந்து படிப்பதற்கும், வீட்டுப் பஞ்சாயத்து, ஊர்ப் பஞ்சாயத்து என ஒவ்வொரு திண்ணைகளும் அந்த காலக் கதையை சொல்லும்..

தங்களது அனுபவங்களைப் பகிரும் இடமாக இருந்த திண்ணை இன்று இல்லாமலே போய் விட்டது..

திண்ணை கட்டும் இடத்தில் ஒரு 4 க்கு 4 அறை கட்டி வாடகைக்கு விடும் காலம் இந்தக் காலம்...

கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம் வடியுது;

அண்ணன் எப்பப் போவான் திண்ணை எப்ப காலியாகும்...’’ கிராமங்களில் புழங்கும் இந்த சொலவடையே திண்ணைகளின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது.

ஆனால், இன்று அண்ணன்களுடன் சேர்ந்து திண்ணைகளே காலியாகி விட்டது என்பது தான் ஒரு வரலாற்றுச் சோகம்.

அன்று எல்லா வீடுகளிலும் திண்ணைகள் இருந்தன. வெளித்திண்ணை, உள் திண்ணை, வாசல் திண்ணை, சுற்றுத்திண்ணை, உயரத்திண்ணை, அகலத்திண்னை, திண்டுத்திண்ணை,
கல் திண்ணை, புறக்கடைத் திண்ணை என்று பல திண்ணைகள் வீட்டில் இருந்தன.

எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லிக் கொண்டு தான் இருந்தன.

அதில் அமர்ந்து தான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள்.

இளசுகள் பல்லாங்குழி விளையாடினார்கள், பரமபதம் ஆடினார்கள்,

அப்பாக்கள் அரசியல் பேசினார்கள்,

புறக்கடைத் திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள். 

எதிர் திண்ணைகளில் காதல் வளர்ந்தது.

பஜனைகள், பக்தி பாடல்கள், கதாகாலஷேபங்கள், கச்சேரிகள் என்று விசேஷ நாட்களின் கலை மேடைகளாக திகழ்ந்ததும் இந்த திண்ணைகள் தான்.

நாட்டு வைத்தியர்களின் மருத்துவமனையும், மருந்துக்கடையும் அவர் வீட்டுத் திண்ணைகளில் தான்.

வளையல், ஜவுளி, சோப்பு, சீப்பு, கண்ணாடி என்று பலவித  பொருட்களைக் கூவிக் கூவி விற்று வரும் தலைச்சுமை வியாபாரிகள், சுமையை இறக்கி வைத்து திடீர்க் கடை விரிப்பதும்
திண்ணைகளில் தான்.

நமது ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அங்கமாக இருந்த இந்த திண்ணைகள் இன்று நவீன நாகரிகம், வாஸ்து என்ற பலவேறு காரணங்களால் காணாமல் போய் விட்டன. வெளித் திண்ணைகளின் இடத்தைப் பிளாஸ்டிக் சேர்களும்,
உள் திண்ணைகளின் இடத்தை ஷோபா செட்களும் பிடித்து விட்டன.

வீடுகளில் திண்ணைகள் அரிதாகி விட்டதாலோ என்னவோ அனைவரையும் உற்ற சொந்தங்களாகப் போற்றும் மனப்பாங்கும் மக்கள் மத்தியில் குறுகி விட்டது

பளப் பள’ பள்ளிக்கூடங்கள், ‘கலர்புல்’ கல்லூரிகள் பல இன்று  கணக்கில்லாமல்  பெருகியுள்ளது.

குளுகுளு வகுப்பறைகளிலும், குஷன்பஞ்சு இருக்கைகளிலும் வசதியாக உட்கார்ந்து அசதி இல்லாமல் படிக்கின்றனர் இன்றைய மாணவர்கள்.

ஆனால், அந்தக் காலங்களில் அப்படிப்பட்ட வகுப்பறைகள் இல்லை. இருந்தது எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டும் தான்.

பாதக்கிண்ணம் காப்புப் பிடிக்க சம்மணம் போட்டு உட்கார்ந்து தான் குழந்தைகள் பயில வேண்டும்.

மேசையும் இல்லை, நாற்காலியும் இல்லை. திண்ணை தான் அன்றைய மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் இடமாக இருந்தது.

இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?

புதன், 28 நவம்பர், 2018

சமகால வெற்றிக்கு 16-ம் பெற்று வாழ சாணக்கியத் தன சிந்தனைகள்


சமகால வெற்றிக்கு 16-ம் பெற்று வாழ சாணக்கியத் தன சிந்தனைகள்

1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப் படுகின்றன

எப்போதும் நிமிர்ந்தே இருப்பது மரங்களைப் போலவே மனிதர்களுக்கும் ஆபத்து

2. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது

3. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம்

4. பெரும்பாலான நட்புகளின் பின்னணியில் ஏதேனும் சுயநலம் இருந்தே தீரும். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்

5. ஒவ்வொரு வேலையைத் தொடங்கும் போதும் உங்களுக்குள்ளே மூன்று கேள்விகளைக் கேளுங்கள்.

இதை ஏன் செய்கிறேன்..???

இந்தச் செயலின் விளைவுகள் என்ன..???

இதை வெற்றிகரமாகச் செய்வேனா..???

6. அச்சம் எப்போது நெருங்குகிறதோ,

அப்போதே அதை எதிர்த்து, அடித்துக் கொன்று விடுங்கள்

7. ஒரு வேலையை செய்யத் தொடங்கிய பிறகு

தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்

8. காற்று வீசும் திசையில்தான் மலரின் வாசனை பரவும்

ஆனால் உங்கள் நல்ல இயல்புகள் எல்லாத் திசையிலும் பரவும்

9. உண்மையான மகிழ்ச்சியுடன் யார் உழைக்கிறார்களோ,

அவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்

10. உங்கள் குழந்தைகளை முதல் ஐந்து வயது வரை கொஞ்சிக் கொஞ்சி வளர்த்துங்கள்

அடுத்த ஐந்து ஆண்டுகள் கண்டிப்புக் காட்டுங்கள்

அதற்குப் பிறகு நண்பர்களாய் நடத்துங்கள்

11. எல்லா இடங்களிலும் மதிப்பைப் பெற்றுத் தருவது கல்வி

இளமையின் அழகைக் காட்டிலும் உயர்ந்தது கல்வியின் மதிப்பு

12. பார்க்க முடியாதவர் முன்னால்

நிலைக் கண்ணாடி எப்படி பயன்படாதோ

அது போல் முட்டாள்களுக்குப் பரிசளிக்கும் புத்தகங்களும் பயன்படாது

13. ஆணவம் மிக்கவரை மரியாதை காட்டி வெற்றி கொள்ளலாம்

முட்டாள்களை அவர்கள் முட்டாள் தனத்தைப் பொருட்படுத்தாததன் மூலம் வெற்றி கொள்ளலாம்

அறிவாளியை உண்மையின் மூலம் வெற்றி கொள்ளலாம்

14. அற்பமான ஜந்துக்களிடம் கூட நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள்

15. அரசர் எளிய குடிமகன் போல் வாழ்கிற தேசத்தில்,

குடிமக்கள் அரசர்களைப் போல் வாழ்வார்கள்

16. தோல்வியின் இன்னொரு பெயர் பொறாமை

திங்கள், 19 நவம்பர், 2018

பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்


பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

#பெற்றோர்கள் கவனத்திற்கு:

1. பெண் குழந்தைகளுக்கு, "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

26. பாழாய்ப் போன லெக்கின்ஸை வாங்கிக் கொடுக்காதீர்கள்.  சிலவகை ஆடைகள் சிலருக்கு பொருந்துவது இல்லை. அதுவே ஆபாசமாகக் காட்சியளிக்கின்று.

#தவறாக இருந்தால் #மன்னிக்கவும்
#பிடித்து இருந்தால் அதிகம் #பகிருங்கள்

வியாழன், 8 நவம்பர், 2018

ஆணுறுப்பு எழுச்சி குறைபாட்டை சரிசெய்ய இயற்கை வழிகள்!.


ஆணுறுப்பு எழுச்சி குறைபாட்டை சரிசெய்ய
இயற்கை வழிகள்!.

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வயதான ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான
குறைபாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது
தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
40 வயதை கடந்த
ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத்திய புள்ளி விவரங்கள்
படி, 45 வயதை கடந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கும், 60 வயதை கடந்த
ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு
உள்ளது.

இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினைக் குணப்படுத்த சில மருத்துவ
வழிமுறைகளும் இருக்க தான் செய்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதை
பற்றி பேசுகையில், இயற்கை வழிமுறையே இதனை சரி
செய்வதற்கான சிறந்த
வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப்
பற்றி தான் பார்க்க போகிறோம். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான
இயற்கை சிகிச்சையில் நம் கவனத்தை செலுத்தியுள்ள நாம் கீழ் கூறியவற்றை
கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்மை குறைவை நிவர்த்தி செய்யும் உணவுகள், ஆண்மை குறைவிற்கான இயற்கை
சிகிச்சைகள், விறைப்பு செயல் பிழற்சியை குணப்படுத்தும் உணவுகள் மற்றும்
விறைப்பு செயல் பிழற்சிக்கான இயற்கை சிகிச்சைகள். சரி இப்போது ஆணுறுப்பு
எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தியங்களைப் பற்றி தெரிந்து
கொள்ளலாம்.

♦இதோ அதற்கான 9 வழிகள்…

*பூண்டு;*

பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு
எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த
ஓட்டத்தை சீராக்கி அழுத்தத்தை அதிகரிக்க பூண்டு உதவும். இதனால் பாலியல்
உறுப்பு தூண்டப்படும். மேலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை
அதிகரிப்பதற்கு பூண்டில் பல கனிமங்கள் வளமையாக உள்ளது.

*மாட்டிறைச்சி;*

மாட்டிறைச்சியில் ஜிங்க் வளமையாக உள்ளது. இந்த ஜிங்க்
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான
முதன்மையான இயற்கை பொருளாக விளங்குகிறது. இது விந்தணு எண்ணிக்கையை
மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினை
குணப்படுத்தும் சில சக்தி வாய்ந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

*மாதுளை_பழம்;*

மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்தி வாய்ந்த உணவாக
விளங்குகிறது. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்கள் வளமையாக உள்ள
இந்த பழம் இயற்கையான முறையில் ஆண்மை குறைவை நீக்கும்.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு
எண்ணிக்கையை போதிய அளவில் அதிகரிக்கும்.

*வாழைப்பழங்கள்;*

தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொண்டால போதும், ஆணுறுப்பு
எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற
முக்கிய என்ஸைம் உள்ளது. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோன்களை சீராக்க
உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போக வாழைப்பழத்தில்
வைட்டமின் ஏ மற்றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை
ஊக்குவித்து, பாலியல் மனநிலையை தூண்டி விடும்.

*வால்நட்;*

இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்
முக்கியமான பொருளான அர்கனைன் வால்நட்களில் உள்ளது. விந்தணு உற்பத்தியில்
விரைக்கு உதவிடும் அர்கனைன். திடமான விறைப்பிற்கும் கூட வால்நட்
உதவுகிறது. இது போக, வால்நட்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்கள்,
ஆண்களின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிடும்.

*அஸ்பாரகஸ்;*

அஸ்பாரகஸ் என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கில்
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும்
ஆற்றலை கொண்டுள்ளது இது. ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை ஊக்குவிக்கும்
மிகச் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

*உடற்பயிற்சி;*

இப்போது நம் கவனத்தை சற்று திருப்பி, ஆண்மை குறைவிற்கான
இயற்கை சிகிக்ச்சைகள் பக்கமாக மாற்றுவோம். உடற்பயிற்சி என்பது மிகவும்
முக்கியமாகும். உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்பு இல்லையென்றால்,
தானாகவே விந்தணு உற்பத்தி மேம்படும். அதனால் இளைத்த எடையில் ஆரோக்கியமாக
விளங்கிடுங்கள். மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும்
மெட்டபாலிச வீதத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

*கீரை_மற்றும்_பச்சை காய்கறிகள்;*

ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஜிங்க்
வளமையாக உள்ள கீரை மற்றும் பச்சை காய்கறிகள் உங்கள் ஆணுறுப்பு எழுச்சிக்
குறைபாட்டை சிறப்பாக குணப்படுத்தும்.

*பாதாம்;*

வால்நட்களை போல் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டை இயற்கையான
வழியில் குணப்படுத்தும் ஆச்சரியமளிக்கும் மற்றொரு உணவு தான் பாதாம்.

செவ்வாய், 6 நவம்பர், 2018

108 நற்பண்புகள் ... 108 Good Qualities ....



108 நற்பண்புகள் ...
108 Good Qualities ....

1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
10.கருணை (Mercy)
11.இரக்கம் (Compassion)
12.காரணம் அறிதல் (Consideration)
13.அக்கறையுடன் (Mindfulness)
14.பெருந்தன்மை (Endurance)
15.பண்புடைமை (Piety)
16. அஹிம்சை (Non violence)
17.துணையாக (Subsidiarity)
18.சகிப்புத்தன்மை (Tolerance)
19. ஆர்வம் (Curiosity)
20. வளைந்து கொடுத்தல் (Flexibility)
21.நகைச்சுவை (Humor)
22. படைப்பிக்கும் கலை (Inventiveness)
23.வழிமுறை (Logic)
24.எழுத்து கற்க பிரியம் (Philomathy)
25.காரணம் (Reason)
26.தந்திரமாக (Tactfulness)
27.புரிந்து கொள்ளுதல் (Understanding)
28.பிறர் நலம் பேணுதல் ( Altruism )
29.நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
30.அறம் (Charity)
31.உதவுகின்ற (Helpfulness)
32.தயாராக இருப்பது (Readiness)
33.ஞாபகம் வைத்தல் (Remembrance)
34.தொண்டு செய்தல் (Service)
35.ஞாபகசக்தி (Tenacity)
36மன்னித்தல் (Forgiveness)
37.வாக்குறுதி (Commitment)
38.ஒத்துழைப்பு (Cooperativeness)
39.சுதந்திரம் (Freedom)
40.ஒருங்கிணைத்தல் (Integrity)
41.பொறுப்பு (Responsibility)
42.ஒற்றுமை (Unity)
43.தயாள குணம் (Generosity)
44.இனிமை (Kindness)
45.பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
46.சுத்தமாயிருத்தல் (Cleanliness)
47.அருள் (Charisma)
48. தனித்திருத்தல் (Detachment)
49.சுதந்திரமான நிலை (Independent)
50.தனிநபர் உரிமை (Individualism)
51.தூய்மை (Purity)
52.உண்மையாக (Sincerity)
53.ஸ்திரத்தன்மை (Stability)
54.நல்ஒழுக்கம் (Virtue ethics)
55.சமநிலை காத்தல் (Balance)
56.பாரபட்சமின்மை (Candor)
57.மனஉணர்வு (Conscientiousness)
58.உள்ளத்தின் சமநிலை (Equanimity)
59.நியாயம் (Fairness)
60. நடுநிலையாக (Impartiality)
61. நீதி (Justice)
62. நன்னெறி (Morality)
63.நேர்மை (Honesty)
64.கவனமாக இருத்தல்(Attention)
65.விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
66.எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
67.சீரிய யோசனை (Consideration)
68.பகுத்தரிதல் (Discernment)
69. உள் உணர்வு (Intuition)
70.சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
71.கண்காணிப்பு (Vigilence)
72.அறிவுநுட்பம் (Wisdom)
73.லட்சியம் (Ambition)
74.திடமான நோக்கம் (Determination)
75.உழைப்பை நேசிப்பது (Diligence)
76.நம்பிக்கையுடன் (Faithfulness)
77.விடாமுயற்சி (Persistence)
78.சாத்தியமாகின்ற (Potential)
79.நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
80.உறுதி (Confidence)
81.ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
82.கண்ணியம் (Diginity)
83.சாந்த குணம் (Gentleness)
84.அடக்கம் (Moderation)
85.அமைதி (Peacefulness)
86.சாதுவான (Meekness)
87.மீளும் தன்மை (Resilience)
88.மௌனம் (Silence)
89.பொறுமை (Patience)
90.செழுமை (Wealth)
91.சுய அதிகாரம் (Autonomy)
92.திருப்தி (Contentment)
93.மரியாதை (Honor)
94.மதிப்புமிக்க (Respectfulness)
95.கட்டுப்படுத்துதல் (Restraint)
96.பொது கட்டுப்பாடு (Solidarity)
97.புலனடக்கம் (Chasity)
98.தற்சார்பு (Self Reliance)
99. சுயமரியாதை (Self-Respect)
100.உருவாக்கும் கலை (Creativity)
101.சார்ந்திருத்தல் (Dependability)
102.முன்னறிவு (Foresight)
103.நற்குணம் (Goodness)
104.சந்தோஷம் (Happiness)
105.ஞானம் (Knowledge)
106.நேர்மறை சிந்தனை (Optimism)
107.முன்யோசனை (Prudence)
108.விருந்தோம்பல் (Hospitality)

வெள்ளி, 2 நவம்பர், 2018

பன்னீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

பன்னீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

பன்னீர் ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்த நீராகும். இதனை நாம் பயன்படுத்தி நமது உடலில் உள்ள நோய்களை சரி செய்து கொள்ள முடியும் பன்னீரின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஈரப்பதம் இல்லாத சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள ரோஜா இதழின் நீர் பயன்படுகிறது.
இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தவும், சோர்வான தசைகளை புத்துணர்வு பெற வைக்கவும் பன்னீர் உதவுகிறது. மேலும், சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கிறது.பன்னீர் சருமம் மட்டுமின்றி தலைமுடிக்கும் போஷாக்கு அளிக்கிறது. முடியை பட்டுப்போன்று வைக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு தரும்.
தினசரி பயன்படுத்தும் கிரீம்களில் பன்னீரை கலந்து உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்அழுக்கு படிந்த முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புத்துணர்வு அளிக்கும்.முகப்பருக்களை போக்க பன்னீர் சிறந்த மருந்தாக திகழ்கிறது. எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை சம அளவு எடுத்துக் கொண்டு முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து இதமான நீரில் முகம் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் 2-3 வாரங்களில் முகப்பருக்கள், தழும்புகள் குறைந்து முகம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

நுரையீரல் பாதிப்பை தடுக்க இந்த பழங்கள் சாப்பிடுங்கள்!

நுரையீரல் பாதிப்பை தடுக்க இந்த பழங்கள் சாப்பிடுங்கள்!

தக்காளியில் உள்ள சத்துக்கள் நுரையீரலில் உள்ள தேவை இல்லாத நச்சுக்களை போக்க உதவுகிறது.அதனால் உணவில் இதை நீங்கள் சேர்த்து கொள்ளுங்கள்.
வாழைப்பழத்திலும் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இதுவும் நுரையீரலைப் பாதுகாக்கும்.
ஆப்பிளும் நுரையீரலுக்கு மிக நல்லது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரலுக்கும் சுவாசப் பிரச்சினைகளை நீக்கும். மூச்சுத் திணறலையும் சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்கும். இதுபோன்ற ஆன்டி- இன்ஃபிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகளும் பழங்களும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும்

வியாழன், 1 நவம்பர், 2018

"போனஸ்"ன்னா என்ன..!?


"போனஸ்"ன்னா என்ன..!?
.
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது...!!
.
ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள்  4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்...!!
.
அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
.
இந்தியர்னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.
.
அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்...!!
.
அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது...!!
.
பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.
.
இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !!
.
#தெரிஞ்சிக்கோங்க_ மக்களே
.