குளியலறை, படுக்கை அறையில் ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி?
முக்கியமாக இது பெண்களுக்கானது...
இன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை.
இதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி வரும் பெண்கள், சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய, தனியார் விடுதி நடத்துனரே இப்படி இருப்பது கொடுமையான, கொடூரமான, தண்டிக்க வேண்டிய செயல்.
என்ன சொன்னாலும் பாதிப்பிற்கு ஆளாவது பெண்கள் என்பதால், அவர்களைப் அவர்களே பாதுகாத்துக் கொள்வது முதலாவதாகும் அதன் பிறகே மற்றவரின் உதவியை நாடலாம். இந்த செய்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டுபிடிக்கும் ஆப் மூலம் மேலும் பல ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது.
தனியார் விடுதிகளில் தங்குவோர், பொது வெளியில் உள்ள பாத்ரூம்ங்களை பயன்படுத்துவோர், ஷாப்பிங் மால், மாபெரும் துணிக்கடைகளில் உள்ள பாத்ரூம்கள், துணிக்கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகள், சுற்றுலா செல்லும் இடங்களில் தனியார் ஹோட்டல் அறைகள் போன்றவற்றில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, உங்களது அந்தரங்க நடவடிக்கைகளை சமுதாய விரோதிகள், காம வெறியர்கள் படம் பிடிக்கும் ஆபத்து உள்ளது.
இதனை எப்படி கண்டு பிடிப்பது? இதற்கென்று ஆப்ஸ்கள் உள்ளன.
அதில் ஒரு ஆப் பற்றி இங்கே விரிவாகச் சொல்கிறேன். இதை பெண்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது.
கூகுள் ஆப் ஸ்டோரில் - Detect Hidden Cameras and Microphones - என்று டைப் செய்தால், Techno95 என்ற நிறுவனத்தின் ஆப் உங்களுக்கு கிடைக்கும். இதில் விளம்பர தொல்லைகள் இருந்தாலும், ஆப் லைன் மூலம் இதை விளம்பரத் தொல்லை இல்லாமல், பயன்படுத்த முடியும்.
இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்ததும், நான்கு ஆப்ஷன்கள் மெனுவாக கிடைக்கும்.
1.Detect by Radiotion Meter
2.Detect Infrared Camera
3.How to Use
4.Manual Camera Detection
இதில் Detect by Radiotion Meter- எனும் முதல் ஆப்ஷனை தேர்வு செய்தால், ஓர் அறையில்...
37 என்ற அளவில் ரேடியோ அலைகள் உள்ளது என்று காட்டும். அதில் X, Y, Z என்று ஒவ்வொரு கதிருக்கும் எவ்வளவு அலைநீளம் இருக்கிறது என்று காட்டும். இப்படி இருப்பது இயல்பானதாகும்.
தனியார் விடுதியோ, ஹோட்டல் அறையோ நீங்கள் செல்கிறீர்கள் எனில், அங்குள்ள குளியல் அறை, உடை மாற்றும் அறையோ இருக்கிறது எனில், அங்கே சென்று உள்ளே இருக்கும் அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களில் ஸ்விட்ச்களை அணைத்துவிட வேண்டும். லைட், (எக்சாஸ்ட்) பேன், வாட்டர் ஹீட்டர் போன்றவற்றை அணைத்துவிட்டு, இந்த ஆப்ஸில் உள்ள, முதல் ஆப்ஷனை தேர்வு செய்து, நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் மொபைலை காட்டினால், அங்கே ரகசியமாக கேமரா பொருத்தி வைக்கப்பட்டிருந்தால், ரேடியோ அலைகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் காட்டுவது மட்டுமின்றி, பீப்...பீப்...பீப்... என்று அலாரத்தையும் கொடுக்கும். அப்போது எச்சரிக்கை அடைந்து, அங்கிருந்து வெளியே வந்துவிடுங்கள். (ஆட்களின் உதவியோடு அதனை தட்டிக்கேட்கலாம்)
Detect Infrared Camera எனும் இரண்டாவது ஆப்ஷன்
அதாவது, இருட்டில் இயங்கும் கேமராதான் இன்ப்ரா ரெட் கேமரா. அதையும் இந்த ஆப்ஸின் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
மூன்றாவது ஆப்ஷன் - இந்த ஆப்ஸை எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நான்காவது ஆப்ஷன் என்னவென்றால் Manual Camera Detection என்பதாகும்.
அதாவது எங்கெங்கல்லாம் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குளியல் அறை, படுக்கை அறை, உடை மாற்றும் அறை ஆகியவற்றில் எங்கெங்கெல்லாம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைத் தாண்டியும் சில இடங்களில் பொருத்தப்பட வாய்ப்புகள் உண்டு.
மேற்குறிப்பிட்ட அறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அந்த கண்ணாடியை உங்கள் விரலை கொண்டு தொட்டுப்பாருங்கள். உங்கள் விரலுக்கும் அதன் கண்ணாடி பிம்பத்திற்கும் இடைவெளி இருப்பின் அந்த கண்ணாடியில் ஆபத்து இருக்கிறது. மறுபுறம் இருந்து உங்களை கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். விரல்கள் ஒட்டிக்கொண்டு இருப்பது போல் தெரிந்தால் அது ஆபத்தானது இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆப்ஸை பெற: http://bit.ly/2BSyM8L
(பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக