செவ்வாய், 30 அக்டோபர், 2018

விதைகளில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் பற்றி அறிவோம்..

விதைகளில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் பற்றி அறிவோம்..

ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.
தர்ப்பூசணி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 
பப்பாளி விதைகள் கசப்பு தன்மை கொண்டவை. அதேவேளையில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை கொண்டவை. செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். அதில் உள்ளடங்கியிருக்கும் கசப்பு தன்மையை நீக்க தேன் கலந்து கசாயமாக தயாரித்து பருகலாம். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகளின் பங்களிப்பு அவசியமானது. புற்றுநோய் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது. பூசணி விதைகளை சூப்பாகவோ, தயிருடனோ அல்லது பிற காய்கறி, பழங்களுடன் சேர்த்து சாலட்டாகவோ சாப்பிடலாம்.

"விட்டமின் சி" நிறைந்த இஞ்சி பற்றி அறிந்து கொள்வோம்!!

"விட்டமின் சி" நிறைந்த இஞ்சி பற்றி அறிந்து கொள்வோம்!!

குளிர் காலங்களில் சூடான இஞ்சி டீ தொண்டைக்கு இதம் அளிப்பதோடு உங்கள் வயிற்றுக்கும் நல்லது.இஞ்சி டீயை அதிகாலையில் குடிக்கும் போது குமட்டல், மலம் கழிப்பதில் பிரச்சினைகள், கர்ப்ப கால அறிகுறிகள் போன்றவற்றை சரியாக்குகிறது. மேலும் நமது உடலுக்கு தேவையான விட்டமின் சி இதிலிருந்து கிடைக்கிறது. 
அதிகாலை காபிக்கு இன்னும் சுவையேற்றுங்கள். ஆமாங்க காபியில் இஞ்சி கலந்து குடிப்பது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக இது செயல்படுகிறது. ஒரு கப் காபியில் 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியைச் சேர்த்து குடிப்பதால் அதிகாலையிலயே உங்கள் சீரண மண்டலம் நன்றாக செயல்பட ஆரப்பிக்கிறது.
ஒரு கப் தேநீரில் சிறுதளவு இஞ்சியை சேர்த்து குடிப்பதாலே ஏராளமான நன்மைகளை நாம் பெற இயலும். 

நுரையீரலை சுத்தமாக வைப்பதற்கு சில காய்கறிகள் உணவாக ..!!

நுரையீரலை சுத்தமாக வைப்பதற்கு சில காய்கறிகள் உணவாக ..!!

இஞ்சி:
இஞ்சி,ஜிஞ்சரால் ஆஸ்துமா, சளி, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் குணமுடையது.உங்கள் நுரையீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள உங்கள் இஞ்சியை நசுக்கி அதனை சுடுநீரில் போட்டு குடிப்பது அதில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும்.
அவோகேடா:
அவோகேடா,வைட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின், பேன்டோதெனிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.நுரையீரல் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளை குணமாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இது மூட்டு வலிகளை குணப்படுத்தும்.
அப்ரிகாட்:
அப்ரிகாட்,வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.இனிப்பு அப்ரிகாட் சுவையான பொருள் மட்டுமல்ல அது உங்கள் நுரையீரலை பாதுகாக்கவும் உதவும் என்பது பலரும் அறியாத ஒன்று.இவை நுரையீரலை பாதுகாப்பதோடு புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்பட உதவுகிறது.

குழந்தைகள் நன்கு உறங்கினால் தான் அவர்களின் உடல் மற்றும் மூளை நன்றாக வளர்ச்சி அடையும்.


*குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது. உங்கள் குழந்தையின் தூக்கம் மற்றும் குழந்தையை தூங்க வைக்கும் முறைகள் பற்றி, பெற்றோராக நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.*
குழந்தைகள் இந்த பருவத்தில் தூங்காமல் வேறு எப்போது தூங்கி ஓய்வெடுக்க முடியும்? குழந்தைகள் நன்கு உறங்கினால் தான் அவர்களின் உடல் மற்றும் மூளை நன்றாக வளர்ச்சி அடையும்.

குழந்தை பருவத்தில் குழந்தைகளை நன்றாக தூங்க வைக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது இருந்தே தூங்க வைக்க பழக்கப்படுத்தினால் தான் பிற்காலத்தில் அவர்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த பகுதியில் குழந்தைகளின் தூக்கம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றியும், பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தையின் தூக்கத்தின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

*சரியான தூக்கம்*

பிறந்த குழந்தை ஆனது ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியமாகிறது. இந்த குழந்தைகளுக்கு இரவு பகல் வித்தியாசம் என்பது கிடையவே கிடையாது. எனவே, பிறந்த ஒரு மாதம் வரை பசிக்கும்போதும் மடி நனைக்கும் போதும் மட்டுமே விழிக்கும். மற்ற நேரங்களில் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம் சிறப்பாக இருக்கும்.

*தாயின் அரவணைப்பு*

பிறந்த குழந்தையை, தாய் அருகில் இருக்கும்போது அவரின் அரவணைப்பிலும் மற்ற நேரங்களில் பருத்தித் துணியில் கட்டிய தொட்டிலிலும் உறங்கவைக்கலாம். குழந்தை தன் தாயின் கருவறையில் உணர்ந்த அசைவைத் தொட்டிலிலும் உணர்வதாலேயே அதில் நீண்ட நேரம் உறக்கம் கொள்கிறது. மேலும், அணைத்தபடியும் போதிய காற்று கிடைக்கும்படியாகவும் இருக்கும் அதன் அமைப்பும் பாதித் தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலும் அதைத் தொடர்ந்து கண்ணயரச் செய்யும்.

*பாதுகாப்பான சூழல்*

குழந்தையின் தூக்கத்துக்கு உகந்த சூழல் வீட்டில் இருக்க வேண்டும். குழந்தை உறங்கும் அறையில் சத்தம், அதிக வெளிச்சம் இருக்கக் கூடாது; கொசுத்தொல்லை, எறும்புக் கடி உள்ளிட்ட தொந்தரவுகள் அற்ற சூழலும் தாயின் அரவணைப்பும் குழந்தைக்கு நீண்ட நேர உறக்கம் கொடுக்கும்.

*தாய்ப்பால்*

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் சில பெண்கள்கூட, நடு இரவில் விழிக்கும் குழந்தைக்குத் தங்களின் இரவுத் தூக்கம் கெடாமல் இருக்க வீட்டில் உள்ளவர்களைக் கொண்டு புட்டிப்பால் கொடுக்கவைத்துப் பழக்கப்படுத்துவார்கள். ஆனால், இது குழந்தையின் தூக்கத்துக்கு எதிரானது. பாட்டில் பால் குடிக்கும்போது குழந்தை காற்றையும் சேர்த்து உள்ளிழுத்துக் கொள்ளும்.

*வயிற்று உபாதைகள்*

அது குழந்தையின் வயிற்றில் அசௌகர்யத்தை உண்டு செய்வதால் இரவில் சரியான தூக்கம் கிடைக்காமல் அழும். குழந்தையின் அழுகையை நிறுத்த இவர்கள் மீண்டும் பாட்டில் பாலையே கொடுக்க, அழுகை அதிகமாகும். எனவே, தாய்ப்பால் கொடுக்க முடிந்தவர்கள் முடிந்தவரை இரவில் தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். பாட்டில் பால் கொடுப்பவர்கள் குழந்தையை ஒருக்களித்துப் படுக்கவைப்பதன் மூலம் அதன் வயிற்றில் உள்ள காற்று வெளியேற வாய்ப்பு உண்டாக்கலாம்.

*பகலில் அதிக தூக்கம்?*

தாய்மார்கள் பகலில் தங்கள் வேலையை முடிப்பதற்காகக் குழந்தையை அதிக நேரம் தூங்க வைப்பார்கள். இதனால் இரவில் அது விழித்துக்கொள்ளும். இரவில்தான் அதற்கு அதிக நேரம் உறக்கம் தேவை என்பதால், பகலில் அதைக் கட்டாயப்படுத்தித் தூங்க வைப்பதைத் தவிர்த்து, விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.

*சுத்தம்*

குழந்தையின் ஆடைகள், தொட்டில், மெத்தை விரிப்புகள் என அதைச் சுற்றியுள்ள சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தை சிறுநீர் கழித்த உடன் ஆடை மாற்றப்பட வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டுகளில் குழந்தையை உறங்கவைக்கும்போது அது வெளியிடும் வெப்பம் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் என்பதால் தவிர்க்கவும்.

*அதிகமான உணவு*

ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு இரவு வேளையில் பால் மட்டுமே கொடுத்துத் தூங்கவைத்தால், பசியால் அதன் தூக்கம் கெடும். எனவே, மாலை 6 மணிக்கு மேல் குழந்தைக்கு எளிதில் செரிக்கும் வகையிலான திட உணவு கொடுத்து, அது செரிமானம் ஆகும் நேரம் வரை அதை விளையாட விட வேண்டும். பின்னர் தூங்கவைத்து, விழிக்கும் இடைவெளிகளில் தாய்ப்பால் கொடுத்தால் இரவு முழுவதும் குழந்தைக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

*இதமான குளியல்*

மாலையில் ஒரு முறை குழந்தையைக் குளிக்கவைப்பது, தளர்வான ஆடை அணிவிப்பது, ‘இனி நீ தூங்கப் போகிறாய்' என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு ஏற்படுத்த அதை அணைத்தபடி இருப்பது, தொட்டிலில் கிடத்திப் பாடுவது... இவையெல்லாம் குழந்தையைத் தூக்கத்துக்குத் தயார்படுத்தும்.

*எழுப்ப கூடாது*

தூக்கத்தில் குழந்தை அசைவதும் சிணுங்குவதும் இயல்பு; உடனே தூக்கக் கூடாது. தட்டிக்கொடுக்க, தூளியை ஆட்ட என இருந்தால், மீண்டும் அது தூக்கத்தைத் தொடர்ந்துவிடும். பிறந்த ஒரு மாதத்திலிருந்தே இரவு விரைவில் தூங்கவைத்து, காலையில் விரைந்து எழக் குழந்தையைப் பழக்கப்படுத்துவது நன்று. பிறந்த குழந்தை மட்டுமல்ல, வளர்ந்த குழந்தைகளுக்கும் இரவில் ஆழ்ந்த, தடையற்ற உறக்கம் அவசியம்.

*டிவி*

குழந்தைகளை தூங்க வைத்து விட்டு அதே அறையில் டிவி பார்ப்பது, சத்தமான சூழலை உருவாக்குவது போன்றவை வேண்டாம். இது குழந்தையை சரியாக தூங்கவிடாமல் செய்யும்..


*குறைவான ஒளி*

இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது விளக்கை அணைத்து விட்டு பால் கொடுக்கவும். அல்லது குறைவான ஒளியை கொடுக்க கூடிய விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதனால் குழந்தை பால் குடித்துக் கொண்டே நிம்மதியாக தூங்கிவிடும்
👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻

வெள்ளி, 5 அக்டோபர், 2018

அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு என்ன வேண்டும்


அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு
என்ன வேண்டும்?

அமைதியான குடும்ப வாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய சில பழக்க வழக்கங்கள்

1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்

2.தான் மட்டும் எழுந்தால் போதாது தனது கணவரையும் எழுப்பி விடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திட வேண்டிய வேலைகளை  திட்டமிடல் வேண்டும்.

4. கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

5.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டு விடுங்கள். இல்லையெனில் நாளை உங்கள் பிள்ளைகளும்  உங்களைப் போலவே வருவார்கள்.

6 .பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசை பாடுவதைத் தவிருங்கள்

7.கணவரை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் திட்டாதீர்கள் "அப்பன மாதிரியே வந்திருக்கு "

8.எப்படி நீங்கள் சதா வீட்டு வேலைகளைப் பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்பாகவும் வைத்துக் கொள்ள மெனப்படுகிண்டீர்களோ உங்கள் கணவரும் அப்படித் தானே என்பதை ஒரு போதும் மறவாதீர்

9.மாமனார் மாமியாரை அம்மா அப்பா என்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்திக் கொள்ளுங்கள்

10.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யாரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலை கொடுத்து மனமார பேசிக் கொண்டு ஒரு தோழியைப் போல நடந்து கொள்ளுங்கள்

11.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்

12.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்

13.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி அனைவருக்கும் பயிற்சி கொடுத்திடுங்கள்!

14.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர். அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் .
காட்டுத்தனமாக கத்துவதால் எதும் சீராகப் போவதில்லை

15. எந்த ஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணாகப் பிறந்தோம் என்று மட்டும் எண்ணி விடாதீர். எண்ணவும் கூடாது

16. என்ன பிழைப்பு இது? நாலு சுவற்றிற்குள் எல்லோருக்கும் வடித்துக் கொட்டி.இதுக்குப் பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு .இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக் கூடாது

17.தேவையில்லாமல் பீரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்

18.
நறுக்கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்

19.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள்

19.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ள வேண்டாம்

20.நைட்டி இதனை வேலை செய்திடும் போது மட்டுமே அணியுங்கள். மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூ முடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்

21.உடை விஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக் கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்

22.வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்

23.கணவருக்கு பிடித்த மாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும்  உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்

24.குறிப்பாக உள்ளாடைகள் மீது அதிக கவனத்துடனும்  சுத்தத்திலும் முக்கிய கவனத்துடன் செயல் பட்டிடுங்கள்

25.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதைத் தவிருங்கள்

26.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

27.உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடை அணிகலன்களை உங்கள் கணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள். உங்கள் கணவரின் அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்போதும் மறக்க வேண்டாம்

28.கணவரின் தொழிலைப் பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

29.கணவரின் தொழில் அல்லது வேலை செய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள் .
30.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்

31.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதும் அதே நேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்

32.உங்கள் கணவரை ஜெயிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக் கொள்ளுங்கள்

33.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள்  பற்றி அதிகம் பேச வேண்டாம்.

34.எவ்வளவு உயிர்த்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள் .வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்

35.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

36.ஷாப்பிங் என்றவுடன் நகைக்கடை துணிக்கடை என்று மட்டும் எண்ண வேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே .
37.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்

38.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

39.உங்களின் வளர்ச்சிகளை முடிந்த மட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

40.அம்மாவின் ஆலோசனைகளை கேட்பது நல்லது தான் ஆனால் அதை அளவோடு நிறுத்திக் கொள்வது நல்லது ..

41.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது .மருமகளை சரி செய்வது போன்ற செயல்களைத் தவிர்த்திடுங்கள்.

42.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப் போவது அம்மாக்களால் தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்க முடியாத நம்பிகை மறக்க வேண்டாம்

43..கணவரின் வெளிநாடு பயணங்கள் .கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்

44.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது

45.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டு பிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்

46.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண் .ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்க வேண்டாம்

47.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கை நீளம் என்பதை மறக்க வேண்டாம்

48.ஒரு நல்ல பெண் தன் வீட்டைக் கோயிலாக மாற்றுகிறாள் என்பது வேத வாக்கியங்கள்..

49.உங்களை வைத்துத் தான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்

50.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்கு கொள்கிறது என்பதை ஒரு போதுமே மறக்க வேண்டாம்

51.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். அநேக ஆண்கள் தங்களின் மனைவியை தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்குத் தரக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.

52.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் .சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டு விடாதீர்கள்

53.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம்

54.மொத்தத்தில் நீங்கள் தாயாகத் தோழியாக மனைவியாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும்

 சமுதாயம் மதிக்கும் ... வாழ்க்கை  எளிமையாகும். இனிமையாகும். அன்பு நிலை பெற
ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.


திங்கள், 1 அக்டோபர், 2018

காந்திஜி


காந்திஜி

1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯ கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன?
➯ புத்திலிபாய்
4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
➯ 02-10-1869
5. காந்தியடிகளின் எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2018 அன்று நாம் கொண்டாடுகிறோம்?
➯ 150 வது பிறந்தநாள்
6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்
7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?
➯ அரிச்சந்திரன் நாடகம்
8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?
➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்
9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?
➯ மே 1883
10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?
➯ 13க்கும் 14க்கும் இடையில்
11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?
➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்
13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?
➯ 1888
14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?
➯ 24ம் வயதில்
15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
➯ 21 ஆண்டுகள் (1893-1914)
16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?
➯ நிறவெறி கொடுமைக்கு
17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்
18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?
➯ 09-01-1915
19. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)
20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?
➯ கோபால கிருட்டின கோகலே
21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?
➯ மிதவாதகொள்கை
22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?
➯ இந்திய தேசிய காங்கிரஸ்
23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?
➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)
24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?
➯ கேதா ஆர்ப்பாட்டம்
25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?
➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்
26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?
➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்
27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?
➯ ஒத்துழையாமை இயக்கம்
28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?
➯ சட்டமறுப்பு இயக்கம்
29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?
➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்
30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த் என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?
➯ ஒத்துழையாமை இயக்கம்
31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?
➯ உப்புசத்தியாகிரகம்
32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?
➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது
33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?
➯ 12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்
34. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?
➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக
35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?
➯ செய் அல்லது செத்துமடி (do or die)
36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?
➯ குழந்தைகள் திருமணம், திண்டாமை ஒழிப்பு, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்
37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?
➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)
38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?
➯ 30-01-1948
39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ தியாகிகள் தினம்
40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?
➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )
41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?
➯ நவஜீவன்
42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?
➯ குஜராத்தி மொழியில்
43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?
➯ சத்தியசோதனை
44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?
➯ மன்மோகன் தேசாய்
45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
➯ My Experiments with Truth.
46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?
➯ யங் இந்தியா
47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?
➯ இந்தியன் ஒப்பீனியன்
48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று அழைத்தவர் யார்?
➯ இரவீந்திரநாத் தாகூர்
49. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?
➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்
50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
➯ திரு.வி.க
51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?
➯ 2338 நாட்கள்
52. காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?
➯ எரவாடா சிறை (பூனா)
53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?
➯ 78 வயது
54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்
➯ காந்தி
55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?
➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்
57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?
➯ காந்திஜியின் பிள்ளைகள்
58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?
➯ ஹரிலால்
59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?
➯ ஹரிலால்
60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?
➯ காந்திஜி
62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?
➯ காந்திஜி
64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்
➯ காந்திஜி
65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்
➯ காந்திஜி
66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்
➯ ஹரிலால்
67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்
➯ காந்திஜி
68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்
➯ மணிலால்
69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்
➯ மணிலால்
70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்
➯ மணிலால்
71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்
➯ மணிலால்
72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்
➯ மணிலால்
73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்
➯ ஹரிலால்
74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை நடந்த இடம்
➯ சிறைச்சாலை
75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்
➯ சிறைச் சாலை வளாகம்
76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்
➯ கஸ்தூரிபாய்
77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.
➯ கஸ்தூரிபாய்
78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்
➯ காந்திஜி
79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்
➯ காந்திஜி
80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்
➯ காந்திஜி
81. காந்தியடிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எது?
➯ மது, மாமிசம் தவிர்த்தல் மற்றும் அகிம்சை வழியில் வாழ்தல்

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

நல்லவை 50


நல்லவை 50

1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? 
நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது;
 அதற்கு தூரம் தடை இல்லை.
காலம் கணக்கில்லை.
.
2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
.
6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
.
11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.
.
12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.
.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
.
16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
.
17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
.
19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
.
22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
.
23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
.
24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
.
25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
.
32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
.
33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.
.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
.
37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.
.
38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
.
39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
.
40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
.
41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
.
43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
.
44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
.
45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
.
47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
.
48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
.
49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
.
50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
.
 நல்லதே நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக...

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

போஜன திலகம் கோவை மணி ஐயர் வழங்கும் கிச்சன் டிப்ஸ்...


போஜன திலகம் கோவை மணி ஐயர் வழங்கும் கிச்சன் டிப்ஸ்...

● மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

● வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

● வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.

● அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.

● ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

● மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

● ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..

● பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

● வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

● சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

● தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

● உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

● ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

● தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

● பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

● இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

● தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

● மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

● பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

● வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

● தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

● எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

● உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

● தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

● துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

எளிய மருத்துவக் குறிப்புகள் - உங்களுக்காக மட்டுமே...!


எளிய மருத்துவக் குறிப்புகள் - உங்களுக்காக மட்டுமே...!

1)பொன்மேனி தரும் குப்பைமேனி

குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு

பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி

நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை

சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு

கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு

காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி

மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8)குழந்தையை காப்பான் கரிப்பான்

கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்

கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்

ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?

புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு

பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி

மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி

நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம்

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம்

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம்

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

புதன், 19 செப்டம்பர், 2018

அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள்


அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள்

1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்


2.தான் மட்டும் எழுந்தாள் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்


3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திடவேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்.


4.முதலில் அனைத்து வீட்டுவேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்


6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப்படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொன்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்


7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டுவிடுங்கள் ..இல்லையெனில் நாளை உங்கள் பிள்ளைகளுக்கு உங்களைப்போலவே ..


8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசைபாடுவதை தவிருங்கள்


9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பனமாதிரியே வந்திருக்கு "


10.எப்படி நீங்கள் சதா வீட்டுவேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்டீர்களோ ..

உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்


👨🏻‍🌾: 11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்


12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலைகொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்


13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்துகொள்ளுங்கள்


14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்


15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்


16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர் ..அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் ..காட்டு தனமாக கத்துவதால் எதும் சீராக போவதில்லை

 17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணைப்பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர் ..எண்ணவும் கூடாது


18.என்ன பொழப்பு இஃது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி ..இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு ..இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது


19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கைகொள்ள செய்திடும்


20.தேவையில்லாமல் பி ரொக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்


21.நறுக் கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்


22.அநேகமான நேரங்களில் நயிட்டி அணிவதால் கூடுதலான நயிட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்


23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்


24.நைட்டி இதனை வேலைசெய்திடும்போது மட்டுமே அணியுங்கள் ..மாலைவேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்


25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள்


26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்கவேண்டாம்


27.கணவருக்கு பிடித்தமாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் ..உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்


28.குறிப்பாக உள்ளடைகள் மீது அதிக கவனத்துடனும் ..சுத்தத்திலும் முக்கிய கவனதுடன் செயல் பட்டிடுங்கள்


29.கொடுமையன டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்


30.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்க்கி கொள்ளுங்கள்


31.உங்களுக்கு பிடித்தமாதிரி ஆடை அணிகலன்களை உங்கள்கணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள்


31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்கவேண்டாம்


32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்


33.கணவரின் தொழில் அல்லது வேலைசெய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைதுகொள்ளுங்கள் ..


34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிகடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேக கண் கொண்டு பார்க்காதீர்கள்


35.எல்லா கணவர்களும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்கவேண்டும் என்பதும் அதேநேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்கவேண்டும் என்பதே விருப்பம்


36.உங்கள் கணவரை ஜெயிக்கவேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்


37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்கவேண்டாம் ..தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள் ..கொடுத்தபின் புலம்பவேண்டாம்

👨🏻‍🌾: 38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் ..மற்றும் பக்கத்துவீட்டு பெண்கள் அவர்களின்p கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்


39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம் ..


40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள் ..வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்


41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே  இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்


42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்


43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ணவேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே ..


44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்துகொள்ளுங்கள் வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்


45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்


46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்தமட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்


47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்ப்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக்கொள்ளவது நல்லது ..


48.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது ..மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கல்


49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால்தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்கமுடியாத நம்பிகை மறக்கவேண்டாம்


50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அஃது சந்தேக கண்ணாக மாறவேண்டும்


51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அஃது எட்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே


52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்துகொள்ளுங்கள் அஃது தேவைஇல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க உதவும்


53.கணவரின் வெளிநாடு பயணங்கள் ..கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்


54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்தி அவர் குடிக்க விரும்பினால் ..அஃது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்


55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டுவாருங்கள் அதுவே நல்லது


56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்


57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண் ..ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்

 👨🏻‍🌾: 58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்கவேண்டாம்


59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது பைபிள் வார்த்தை


60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்


61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒருபோதுமே மறக்கவேண்டாம்


62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை ..உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை ..தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்


63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் ..சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்


64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்


65.மொத்தத்தில் நீங்கள் தாயக ..தோழியாக ..மனைவியாக ..பல பல யாக இருப்பதைவிட ..சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்


பயற்சி யாளருக்குப்பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும் ...life  எளிமையாகும் ..இனிமையாகும்


அன்பு நிலை பெற

ஆருயிர் மனைவியை

இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும்,k இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.


வாழ்க வளமுடன்...

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடாமல் பெருமாள் கோவில் போகணும் தெரியுமா?


புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடாமல் பெருமாள் கோவில் போகணும் தெரியுமா?

புரட்டாசி பிறந்தாலே அசைவ கடைகளில் காற்றாடும்... காய்கறிகள், பழங்கள் கடைகளில் கூட்டம் கூடும் கூடவே விலையும் அதிகரிக்கும். காலையிலேயே பெருமாள் கோவில்களிலும், காய்கறிகள் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
பெரும்பாலான இந்துமத மக்கள், புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.
சூரியனின் வலிமை
புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.
மழை மாதம்
தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.
அசைவம் ஆகாது
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி தீர்த்தம்
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.
புதனுக்கு உகந்த உணவு
புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.
புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.

சனி, 15 செப்டம்பர், 2018

இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர.... இனியாவது பின்பற்றுங்கள்.


இனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர....
இனியாவது பின்பற்றுங்கள்.

1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் ..
இது சொந்த வீடா ..வாடகை வீடா ...
வாடகை எவ்வளவு.... என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் ..
(அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் .
(அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)

3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.

4.வீட்டிற்கு வந்தவர்களிடம் ..
காபியா டீயா  என்றால் ..
கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள்.
அல்லது மோரோ ,குளிர்பானமோ  ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள்.
இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.

5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது ..
அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.

6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை
அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள்.
மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.

7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க ... ? அல்லது ஏன் வேலைக்கு போகல..
என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.

8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட "சாப்பிடுறீங்களா" என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக
"சாப்பிடுங்க "என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க.
உறவுகளை வளர உன்னத வழி.

9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா‌.. என்று கேட்காதீர்கள்...
வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..
கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.

10.friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு ... பொதுவுல ...அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice ஆரம்பிக்காதீர்கள்.

11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் ... பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் ...இப்படி சொல்றவங்க கிட்ட ../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க.
அல்லது உறவுகளை விட்டு விலகிடுங்க.

12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ‌‌....
வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்..
இது அவருக்கு அவர் மனைவிமுன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்....
இதை உணருங்கள்.

13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்..

மாறாக  அன்பை காட்டுங்கள்.அதற்கே உலகளவில் அதிக demand.

14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் ... என்று...
பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.

15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது
மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்..

அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்.

16.இரண்டு அல்லது மூன்று நண்பர்கள் போதும் .. உங்கள் personal / family விஷயங்களை பகிர்ந்து கொள்ள.
மற்ற அனைத்து நண்பர்களிடம் நாசூக்காகவும்,இயல்பாகவும் பழக கற்று கொள்ளுங்கள்.

🍇🍇🍇🍒🍒💐💐💐💐🎈🍡🍡🍅🍭🥦
ஆக.... உங்களுக்கு எதெல்லாம் தர்ம சங்கடத்தை உருவாக்குமோ...
அதை பிறரிடம்

"பலர் முன் "🙏🙏

கேட்காதீர்கள், பேசாதீர்கள்.

உங்களுக்கு தேவையான செய்தி உங்களுக்கு வந்து சேரும்.. அல்லது

நீங்கள் தகுதியான நபர்கள் என்றால்
உங்கள் காதுகளில்
அந்த தேவையான செய்தி personalஆக கொடுக்கப்பெறும்.

மற்ற அனைத்து செய்திகளும் உங்களுக்கு தேவையில்லாத செய்திகளே.

மேலும் உங்களிடம்
கோபத்தை காட்டும் உறவுகளை உன்னதமாக
போற்றுங்கள் .

மாறாக ..கோபம் வந்தும்
எதற்கு சங்கடம் என்று வாய் மூடி மௌனமாய் பயணிப்பவர்களிடம்

பட்டும்படாமல் எச்சரிக்கை யாய் இருங்கள்.
நன்றி.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

இந்தியாவில் விதவைகளின் வாழ்க்கை - தொடரும் கொடுமைகளும், கொடூரங்களும்!


இந்தியாவில் விதவைகளின் வாழ்க்கை - தொடரும் கொடுமைகளும், கொடூரங்களும்!

கணவனை இழப்பது துக்கம் என்றால், அதைவிட பெரும் துக்கம் இந்தியாவில் விதவையாக வாழ்வது. ஆண்கள் மறுமணம் செய்துக் கொள்ளலாம், ஆனால், பெண்கள் செய்துக் கொள்ள இயலாது.


இன்றைய சமூகத்தில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று நாம் கூறினாலும்.. இன்றும் கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்துக் கொண்டால், அவரை ஒரு தவறான கண்ணோட்டத்தில் காணும் பழக்கம் நீடித்து வருகிறது என்பது கசப்பான நிதர்சனம்.


 #1

இன்னுமா இப்படியான வழக்கம் பின்பற்றப்படுகிறது என்று நீங்கள் கருதலாம். தமிழகத்தில் இந்த வழக்கம் குறைந்து காணப்பட்டாலும் ஒட்டுமொத்த இந்தியா என்று எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் இன்னும் இந்தியாவின் பல மாநிலங்களில், பலபகுதிகளில் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை புடவை தான் உடுத்த வேண்டும் என்ற கட்டாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


 #2

இன்னும் சில பகுதிகளில், கணவனை இழந்த பெண்களை வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கும் பழக்கம் காணப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் இயல்பான வாழ்க்கை வாழ இயலாது. அவர்களை வீட்டில் இருந்து ஒதுக்குகிறார்கள். சிலர் எங்காவது ஒரு ஆசிரமத்தில் கொண்டு போய் சேர்க்கப்படுகிறார்கள். வட இந்தியாவில் விதவை பெண்கள் வாழ / தங்குவதற்கு என்றே சில ஆசிரமங்கள் இருக்கின்றன. உத்திர பிரதேசத்தின் விருந்தாவன் (Vrindavan) என்ற டவுன் பகுதியில் இதை சர்வ சாதாரணமாக காண இயலும்.


 #3

1856ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துக் கொள்ளலாம் என்ற சட்டம் கொண்டுவந்தது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் கடந்து வந்த பிறகும், இன்றும் சமூகத்தில் விதவை பெண்களை திருமணம் செய்வது என்பது தவறான பார்வையிலும், செய்யக் கூடாத விஷயமாகவும் தான் காணப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் தங்கள் அன்றாக வாழ்க்கையை நகர்த்த இன்னமும் இந்தியாவில் கஷட்டப்பட்டு வருகிறார்கள்.


 #4

இன்னமும், இந்தியாவின் சில பகுதிகளில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. கணவனை இழந்த பெண், தாலி, குங்குமம், நகை அணிய கூடாது என்பதை தாண்டி, அவர்கள் கூந்தல் கூட வளர்த்துக் கொள்ள கூடாது என்ற சடங்குகள் இன்னமும் பின்பற்றப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மீண்டும் நாம் உத்திர பிரதேசத்தின் விருந்தாவன் டவுன் பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.


 #5

உடை, அணிகலன், அலங்காரம் என்பதுமட்டுமல்ல, இந்தியாவின் சில பகுதிகளில் கணவனை இழந்த விதவை பெண்கள் சில உணவுகளை கூட சேர்த்துக் கொள்ள கூடாது. ஆம், மசாலா, வெங்காயம், பூண்டு போன்ற சில உணவுகளை விதவை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என தடை செய்து வைத்திருக்கிறார்கள். இது மத கோட்பாடு என்ற கண்ணோட்டத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.


 #6

விருந்தாவன் பகுதியில் வாழும் விதவை பெண்களின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அவர்களை தனிமைப்படுத்தி, சிறைவாசம் போன்ற வாழ்க்கையை வாழ வைக்கிறார்கள். அவர்களால் பிற மனிதர்களை போல சகஜமாக அனைவருடனும் பேசி, மகிழ்ந்திருக்க இயலாது. யாரையும் சந்திக்க இயலாது.


இன்னும் இப்படியான வாழ்க்கை முறை இருக்கிறதா என வியக்கலாம்... இருக்கிறது.. இந்தியா இன்னமும் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இருக்கிறது, முழுமையாக வளர வில்லை என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளும் ஒருவகையில் காரணாமாக இருக்கின்றன.

திங்கள், 10 செப்டம்பர், 2018

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

குளிக்கும்போது ஒரு சில விதி முறைகளை நாம் பின்பற்றவேண்டும் என்பது ஐதீகம்.


குளிக்கும்போது ஒரு சில விதி முறைகளை நாம் பின்பற்றவேண்டும் என்பது ஐதீகம்.

உத்தம திசைகள்

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும்.
(கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

கங்கா ஸ்நானம்

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும்.
குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள்.

அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.
குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது என்பது ஐதீகம்.

அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.


மண்டை ஓடு:

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.

தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர்.
அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
இதற்கு ஜேஷ்டாதேவியின் பங்கு உள்ளது.

துவட்டும் துண்டு:

குளிக்கும் நீரிலே துண்டை நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள்.
உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.

பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.

குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியங்களால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது. தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை. அதை உணரவேண்டும்.


குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.

நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை. நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.

உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். மேலே குறிப்பிட்ட அனைத்தும் குளிக்கும் போது நாம் பயன்படுத்தக்கூடிய நல்ல முறைகள் .

கைக் குழந்தைகளுக்கு வைத்தியம்...


கைக் குழந்தைகளுக்கு வைத்தியம்...

*குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷய அல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட வேண்டியதாகிவிடும்.*

குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழுகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு தெரியாம தாய்மார்கள் முழிக்க வேண்டியது தான்..

*ஐந்து மாதக் குழந்தை வயிறு வலியால் அழுதால்*

1. கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல பூசி விடவேண்டும்..

2. ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடலாம்.. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் வயிற்று வலி நீங்கி குழந்தை சிரிக்கும்.

*சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும்.*

அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, உரசிய விழுதை குழந்தையோட நாக்குல தடவினால் பிரச்னை சரியாகிடும்.

*சின்னக் குழந்தைகள் வாந்தி பண்ணினால்*.

வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினால் உடனே குணம் கிடைக்கும். கிராமங்களில் வசம்புக்கு *‘பிள்ளை வளர்ப்பான்’* என்றொரு பெயரே உண்டு.

*சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போகுதா கவலைப்பட வேண்டாம்.*

ஜாதிக்காயை கல்லில் உரைச்சு தாய்ப்பால்ல கலந்து குடுத்து பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூன்று வேளையும் இப்படிக் கொடுத்து வந்தால் முழுவதும் குணமாகிடும்.

*ஆனால், ஜாக்கிரதை!*

ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. ஜாஸ்தியாகிடுச்சினா குழந்தைக்கு மயக்கம் வரவும் வாய்ப்பு இருக்கு.

*கைக்குழந்தைகளுக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும் உரை மருந்து*

ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவைத்து, அதை எடுத்து வெயிலில் சுக்கா காய வைக்கவேண்டும். குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.

*ஆறு மாசக் குழந்தைகளுக்கு பத்து நாளுக்கு ஒருமுறை*

ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராமல் இருக்கும்.

*பிறந்த குழந்தைகளுக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது!*

தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தையின் தலையிலும், உடம்பிலும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விட்டு அது கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.

குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். குளிக்க வைக்கும் போது எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டணும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராது, மேனி பட்டு போல இருக்கும்.


*மார்கழி பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா*

 கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 2 பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அனைத்தும் மலத்தில் வெளியாகிவிடும்.

*குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது.*

*வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?*

அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம்.

வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளி, ஜலதோஷம், தலைவலி என எந்தப் பிரச்னையும் நெருங்காது.

சிலர் கசப்பான பொருட்களை நாக்கில் படாமல் அப்படியே முழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும். அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவை களையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இயற்கை வைத்தியம் பெரிதும் பயன்படுகிறது. குழந்தைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் இருமல் தாக்கும். இருமல், சளி வந்ததும் அழையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனை. இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும். இந்த வகையும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று தான்.

*குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட*

 ஓம
விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.

இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம்.


*டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது.*

 இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குளிக்க வைக்கலாம்.

*கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே அவர்கள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் குழந்தைகளுக்கு பசி எண்ணமே இருக்காது.*

இருமல் ஏன்?

டயாபர் ஒவ்வாமை குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.

இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். மேலும் இருமல் பிரச்னைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய துணியில் ஈரமாக்கி குழந்தையின் தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

*பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.*

வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை.

அப்படி பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும் அலறலுடன் அழும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாவிட்டாலும் உறிஞ்சுவது அக்குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும். சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும்.

அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும். இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும் குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும். மேலும் பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட அழலாம்.

இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.

சாதாரணமாக காய்ச்சல் உள்ள குழந்தையின் அழுகை சத்தம் குறைவாக இருக்கும். அரற்றும். வலியின் காரணம் தெரிந்தால் சரி செய்து குழந்தையை தேற்ற வேண்டும். இல்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். கால்களை உதைத்து அழும்போது அடிவயிற்று வலி இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு நேராக மேல் நோக்கி சில நொடிகள் பிடிப்பது பிரச்னையை தீர்க்கும். சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய் ஏற்பட்டதாக கருதலாம்.

இதற்கு கண்களை வெந்நீரால் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போதாவது மலம் கழிக்கும். கெட்டியாக, சிரமப்பட்டு போனால் அதற்கு மலச்சிக்கல் நோய் தொற்றியுள்ளது என்பதை உணர வேண்டும். இதற்கு பாலூட்டுவதும், ஆகாரமும் குறைவாக உள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். கூடுதல் திரவ ஆகாரங்கள், பழச்சாறு கொடுக்கலாம்.

இளகிய, நீராக மலம் போனால் சீத பேதி ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதற்கு நிறைய திரவ பதார்த்தங்களை கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ். மற்றும் தொடர்ந்து வழக்கமான ஆகாரம் கொடுக்க வேண்டும். தொடைகள் மற்றும் பின்புறம் சிவந்திருந்தாலும் நேப்பி ரேஷ் வந்துள்ளதை அறியலாம். இதற்கு நேப்பியை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தையை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும்.

*பின்புறத்திற்கு நல்ல காற்றோட்டம் தேவையாகும்.*

*தலையில் மஞ்சள் செதில்கள் உருவாகி பொடுகால் குழந்தைகள் அழலாம்.*

 இதற்கு ஒரு வாரத்திற்கு தினமும் குழந்தையின் தலைமுடிக்கு சிகைக்காய் அல்லது அரப்பு போட்டு அலசினால் பொடுகு குணமாகும்.

இவைகள் மூலம் குழந்தைகள் என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம்.


பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.

குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்