முடி வளர மற்றும் முடி கொட்டுவதை தடுக்கும் வழிகள்
முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும்.
பெண்கள் முக்கியமாக வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனை.எல்லோருக்கும் வெளிநாட்டில் முடி கொட்டுகிறது என்பார்கள்.
நான் படிக்கும் போதும் என் பிரண்ட்ஸ் புலம்புவார்கள்.சிலருக்கு முக்கியமாக பாராஷூட் ஒத்துக்கொள்ளாது.ஆனாலும் அதைப்பற்றி தெரியாமல் நான் சுத்தமான எண்ணெய்தான் உபயோகிக்கிறேன் ஆனாலும் கொட்டுகிறது என்பார்கள்.
முக்கியமான ஒன்று,அதிக வாசனை உள்ள எதுவும் சருமத்துக்கோ, தலைக்கோ நல்லதல்ல. தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தினால் முடிக்கு மிகவும் ஏற்றது.மேலும் இதனால் முடிக்கு ஒவ்வாமை ஏற்படாது.இதைவிட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணேய்.அதற்காக வீட்டில் தென்னை மரம் வளர்க்க முடியுமா என்று கேட்காதீர்கள்.நாம் கடையில் வாங்கும் ஒரு தேங்காயை கொண்டே வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.செய்முறையை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கிய காரணம் எண்ணெய்யை தேய்க்கும் போது தலையில் அழுத்தி தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.முடி வளர அதுவும் அவசியம்.எண்ணெய்யை வெளியில் தேய்த்தாலும் அது வேர்க்கால்களில் ஊடுருவி உள்ளே செல்லும்.அதனால் தான் சில எண்ணெய்களை,கிரீம்களை முடியில் தேய்க்கும் போது முடி கொட்டி விடுகிறது.
என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும் நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம்.ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.இதனால் சாதம் எடுத்து கொள்ளும் அளவும் குறையும்.உடம்பும் குறையும் எந்த கஷ்டமும் இல்லாமல். மலேஷியாவில் கீரையை மிக எளிதாக சமைப்பார்கள்.கீரை இல்லாமல் அவர்கள் உணவு இல்லை.ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் 3 பல் பூண்டுகளை அரிந்து போட்டு வதக்கி,கீரையை போட்டு வதக்கி 1 சிட்டிகை உப்பு போட்டு ஒரு தட்டு வைத்து மூடி 3 நிமிடம் கழித்து இறக்கவும்.So Simple.
இதைவிட அனைவருக்கும் உகந்த மருந்து பேரிட்சை பழம்.குழந்தை பிறந்தவுடன் சிலருக்கு மிகவும் அதிகமாக முடி கொட்டும்.அல்லது புது ஊரில் குடியேறும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உண்டு.தினமும் 10 பேரிட்சை பழத்தை சாப்பிடுங்கள்.முடி கொட்டுவது நிற்கும் வரை சாப்பிடுங்கள்.அப்படியே சாப்பிட பிடிக்காட்டி பாலில் நன்றாக ஊற வைத்து மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் போல சாப்பிடுங்கள்.எனக்கு தெரிந்த வரையில் இது நிச்சயம் பலன் தரும்.இதில் முக்கியமான ஒன்று எந்த இரும்பு சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.எனவே மற்ற உணவுகளை அதற்கு தகுந்தாற்போல் சாப்பிடுங்கள்.வாழைப்பழம்,தயிர்,கொய்யாப்பழம் முதலியவற்றை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு முக்கியமான ஒன்று,என்னதான் முடி கொட்டுவதற்கு பரம்பரை ஒரு காரணமென்றாலும் நீங்கள் முடியை பராமரிக்கும் விதமும் ஒரு காரணம்.தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பது,அதுவும் மிக அதிகமா உபயோகப்படுத்துவது,தலை குளித்தால் சரியாக துவட்டாமல் இருப்பது,சுடு தண்ணீரில் குளிப்பது,அதிகம் தலைக்கு தொப்பியை உபயோகப்படுத்துவது(புதிதாக ஹெல்மேட் வேறு),தலைக்கும் வியர்த்தால் அப்படியே துடைக்காமல் விடுவது,வாரம் ஒரு முறை கூட தலையில் எண்ணெய் தேய்த்து விடாமல் இருப்பது அல்லது மசாஜ் செய்து விடாமல் இருப்பது,லேசாக முடி கொட்டினாலும் உடனே கண்டதையும் வாங்கி உபயோகிக்கத் துவங்குவது என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.தினமும் ஷாம்பூ போடாதீர்கள்.இரண்டு முறை போதும்.அதுவும் மிகவும் மைல்டான ஷாம்பூ பயன்படுத்துங்கள்.தலைக்கு தனித் துண்டு உபயோகியுங்கள்.Anti Dandruff ஷாம்பூ அடிக்கடி உபயோகிக்காதீர்கள்.வாரம் ஒரு முறை போதும்.வாரம் ஒரு முறை தலையில் எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.ஆண்கள் வெளியில் அதிகம் செல்வதால் மண்,தூசும் ஒரு காரணம்.வெளியில் சென்றுவிட்டு வந்தால் தலையை நன்கு உலர விடுங்கள்.தூங்கும் முன் தலையை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுங்கள் அல்லது பிரஷ்ஷால் வாரி விடுங்கள்.தலையணை உறையை அடிக்கடி புதுசாக மாற்றுங்கள்.ஒரு முறை பொடுகு வந்து போக்குவதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்தால் அன்றே சீப்பு,தலையணை உறையை புதிதாக அல்லது துவைத்து உபயோகியுங்கள்.
இப்படி செய்தால் முடிக்கொட்டுவது நிற்கும்.
முடி உதிர்வது என்பது பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. பல ஆண்களும் இன்று வலுக்கு தலையுடனே வலம் வருகிறார்கள். காலம் கடந்த பின் சூரியன் நமஷ்காரமா என்று அவர்கள் கண்டு கொளவதுமில்லை.
ஏன் இந்த முடி உதிரும் பிரச்சனையை முன்கூட்டியே சரி செய்ய முடியாதா ? என்றால் கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். அதற்கு சற்று நேரம் ஒதுக்கி நம் முடியை பேனிக்காக்க வேண்டும். இவ்வாறு, தன் முடிக்காகவும், முக அழகிற்காகவும் இளம் பெண்கள் சற்று அதிகமாகவே நேரத்தை ஒதுக்கிறார்கள். ஆனாலும், உதிரும் மயிர்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என்று, வித விதமான எண்ணெய்களை உபயோகிப்பார்கள். அதிலும் , விளம்பரத்தில் வரும் பொருட்களுக்கே முன்னுரிமையும் வழங்குவர். ஆண்கள், ஆனால் அப்படி அதிகப்படியான நேரத்தை தன் முடிக்கு / தலைக்கு ஒதுக்குவதும் இல்லை, தடுக்க வழிமுறையும் தேடுவதும் இல்லை. பின்னர், அதிகப்படியான முடிகள் தன் தலையில் இல்லை என்ற பின்னரே ஒடுவர் என்ன செய்வதென்று.
முடி உதிர்வது என்பது ஒர் பரம்பரை வியாதியும் கூட. இதை நாம், நம் ஊரில் உள்ள ஒரு சில குடும்பத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தாத்தாவும் வலுக்கு , அப்பனுக்கும் வலுக்கு , இன்று பயனுக்கு பாதி முடிய காணல …
ஆண்களுக்கு முடி உதிர்வது என்பது, பெரும்பாலும் உச்சம் தலை வலுக்கு அல்லது முன் தலை வலுக்காக சென்று முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படி வலுக்கு தலை அளவிற்கு செல்வது இல்லை, குறைந்து கொஞ்சமாக இருக்கும் (அதைப் பார்த்து ஒர் நல்ல வார்த்தை சொல்லுவாங்க-**)…. சிலர் வெளிப்பார்வையை தடுக்க சவரி முடியைக் கொண்டு கொண்டை போட்டுக் கொள்வர்.
ஆனால் , ஆண்கள் ஆங்கில மருத்துவப்படி தன் தலைகளில் செயற்கை முடிகளை நட்டிக் கொள்கின்றனர். டோப்பாவும் சிலர் பயன் படுத்தி வருகின்றனர் என்றாலும் பெரும்பான்மையானவர் செலவற்ற தொப்பியையே பயன் படுத்தி வருகிறார்கள்.
ஒரு பெண்ணின் அழகை மேலும் கூட்ட இம்முடியும் ஒரு காரணியாகவே அமைந்துள்ளது. அப்படி இரு பாலருக்கும் முக்கியாமான அழகுக் காரணியாய் அமைந்த முடியை இழக்காமல் தடுக்க என்ன செய்யலாம்….
ஆங்கில மருத்துவ முறையில் பல மருந்துகள் வந்தாலும் அதை நம் பெண்கள் விரும்புவதில்லை. பெர்ம்பான்மையானவர் நமது தமிழ் இயற்கை சித்த வைத்திய முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.
முடி உதிர்வது என்பது ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படிகிறது என்றாலும் அதனை முழுவதுமாக தடுக்க சரியான ஆங்கில மருந்து இன்றளவும் இல்லை.
இங்கே சில சித்த மருத்துவ குறிப்புகளை உங்களின் தலைக் கூந்தல் முடி உதிர்வதனை மெல்ல தடுத்து வளர்க்க எழுதுகிறேன்:
1. முடி வளர : முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.
2. சொட்டைத் தலையில் முடி வளர : பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.
3. வழுக்கைத் தலையில் முடி வளர : கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.
4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.
5. முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.
தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக்கை மறைய இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்தச்சாறை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளர வாய்ப்பு உண்டு
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்தாலும் முடி நல்லா செழித்து வளரும். முடி கொட்டுவதும் நிற்கும்
அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை இந்த ஐந்த இலைகளையும் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள்.
இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்து விடும். தெளிந்த எண்ணெயைத் தனியாகப்பிரித்து சேமியுங்கள். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால்… கூந்தல் உதிர்வது நின்று விடும். அது எந்தக் காரணத்தினாலும் உதிர்ந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையை இந்தக் கீரைத் தைலம் பார்த்துக் கொள்ளும்.
சரியாகச் சாப்பிடாமல் ரத்த சோகையால் முடி கொட்டுகிறது என்றால்…. அதை அரைக்கீரை நிவர்த்தி செய்துவிடும். இந்தத் தைலத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை… இளநரைக்கு தடா போடும். உடல் உஷ்ணத்தால் முடி கொட்டிக் கொண்டிருந்தால் அதை தடுத்து நிறுத்தும் வேலையை பொன்னாங்கண்ணி பார்த்துக் கொள்ளும்.
பொடுகு அரிப்பினால் முடி வளர்வது தடைபட்டால் வெந்தயக்கீரை அரை விவர்த்தி செய்வதோடு… மிருதுவாகவும் மாற்றி வைக்கும். உணவு பழக்கத்தாலும் முடி உதிர்வதுண்டு…. இதன் காரணமாக முடி உதிராமல்….. கட்டுக்குள் கொண்டு வர கற்பூரவல்லி உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக