பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள்.
அவர்கள் அழகிற்கு பெருமதிப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண்டும் என்பதும், மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பாகும்.
உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் அழகுதான பொருட்களை பெற்றுக் கொள்ளத் துடிப்பார்கள். தமிழ் பெண்களைப் பொறுத்த வரையில் கலாச்சாரம் கலந்த, நீளமான கூந்தலும், மென்மையான வசீகரமான சருமத்தை கொண்ட தோற்றம் உடையவர்களாக விளங்குவதற்கும், அவர்களின் ஆசைகளை குறைந்த செலவில் நிறைவேற்ற ஊக்குவிப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
*அழகூட்டும் வைட்டமின்கள்:*
ஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். ”பி” வைட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை. அதனால் உடலில் சேமித்து வைக்க முடியாது என்பதால் தினமும் அவற்றை சாப்பிட வேண்டியது கட்டாயமாகின்றது.
சிறுவயதிலேயே முதிய தோற்றம் ஏற்படுவதை ”தயமின் என்ற பி1 வைட்டமின்” தடுக்கும் . வைட்டமின் பி1சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கிறது.
தோல் மற்றும் உடலில் உள்ள எல்லா செல்களும் புதுப்பிக்கப் பயன்படும் ”ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2”பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.
செல் மெட்டாபாலிசம், கார்போஹைட்ட்ரேட் கிரகிப்புக்கு ”நியாசின் என்ற வைட்டமின் பி3” தேவை. இதன் மூலம் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு, புது செல்கள் உருவாக்கும் மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.
சுழற்சியை தடுத்து, கொழுப்பு உடைதலை வேகமாக்கி பருக்கள் உருவாகாமல் தடுக்கிறது ”வைட்டமின் பி5”மக்காச்சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, தக்காளியில் கிடைக்கிறது.
தோலின் எண்ணெய் பசைமிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய உதவுவது முழு தானியங்கள், கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்றவற்றில் கிடைக்கும் ”பைரிடாக்சின் என்ற வைட்டமின் பி6” ஆகும்.
கூந்தல் வளர்ச்சிக்கும், சருமம், நகங்கள் மெருகேறுவதற்கும் உதவுவது ”பயோடின் என்ற வைட்டமின் பி7” ஆகும். இவை பயறுவகைகள், பழங்கள், காய்கறிகள், முட்டை,சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.
இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகி, மெருகேற்றுவதற்கு ”போலிக் அமிலம் என்ற வைட்டமின் பி9” தேவைப்படுகிறது. இவைகள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும், இளநரையை தடுக்கவும் உதவுகிறது. இந்த சத்து வைட்டமின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.
சருமத்தின் செல்களை புதுப்பித்து அழகுப்படுத்தும் வேலையை ”கோபாலமின் என்ற வைட்டமின் பி12” செய்கிறது. இவை முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.
உடலில் செல்களைப் பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத் தேவையான கலோரிகளை பெற ”B” வைட்டமின்கள் உதவுகின்றன. இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும், வைத்திருக்க உதவும் எண்ணெய் உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன. வைட்டமின் என்பதுஅழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.
*உடலை அழகு படுத்த உபயோகப் படுத்தும் சில இயற்கை-மூலிகைகள்:*
1. நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.
2. கடலை மாவு
முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
3. மஞ்சள்
இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.
4. குங்குமப்பூ
இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.
5. ரோஸ் வாட்டர்
புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.
6. சந்தனம்
இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.
7. சீகைக்காய்
இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.
8. தயிர்
இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.
9. உதடு பராமரிப்பு
அழகிய உதடுகளை கொண்ட இந்திய பெண்கள் முக்கிய நாட்களில் மட்டும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.
10. பொட்டு
எந்த ஒரு இந்திய அழகு கலையும் பொட்டு இல்லாமல் முடிந்து விடாது. இது ஒரு ஒளிரும் சிவப்பு நிற வட்டம். அதை நெற்றியின் நடுவில் வைப்பார்கள். இதை நாம் பல வடிவங்களில் மற்றும் பல வண்ணங்களில் வாங்க முடியும். இது நாம் செய்யும் அழகிற்கு ஒரு புள்ளி வைப்பதை போல் அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக