ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

விட்டமின் சி அதிகம் கொண்ட முந்திரி பழம்;-


விட்டமின் சி அதிகம் கொண்ட முந்திரி பழம்;-

முந்திரி பழம் நம்மில் பலர் அடிக்கடி ருசித்தது கிடையாது. ஆனால் இதனுடைய அசத்தலான இனிப்பு கலந்த புளிப்பு சுவை பெரும்பாலோரை கவர்ந்திழுக்கும்.

முந்திரிப் பருப்பினை பற்றி எல்லோரும் நன்கு அறிவர். ஆனால் முந்திரி பழத்தினை வெகு சிலரே தெரிந்திருப்பர்.

இப்பழமானது பொதுவாக முந்திரி ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது. இப்பழம் ஓர் ஆண்டில் குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மட்டும் கிடைக்கிறது.

முந்திரி பழம் உண்மையில் பழமல்ல. இது போலி பழவகையைச் சார்ந்தது. உண்மையில் பழம் என்பது முந்திரிக் கொட்டை ஆகும். இக்கொட்டையினுள் முந்திரிப் பருப்பு காணப்படுகிறது.

நாம் முந்திரிப் பழம் என்றழைக்கும் பகுதி பூவின் தடித்த காம்பு பகுதி ஆகும்.

இப்பழம் நீள் வட்டமாக பேரிக்காய் வடிவில் காணப்படுகிறது. இது பளபளப்பான மெல்லிய நீர்சத்து மிக்க மேல் தோலினை கொண்டுள்ளது.

இப்பழத்தின் மேல்தோல் மெல்லிதாக இருப்பதால் இப்பழம் விரைவில் சேதமுற்று சீக்கிரம் கெட்டு விடும். எனவே இப்பழத்தினை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் இப்பழம் பறித்த 24 மணி நேரத்திற்குள் கெட்டுவிடும். இதனால் இப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைப்பதில்லை.

முந்திரி அனார்க்காடியம் என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் அனார்க்காடியம் ஒசிடென்டேல் என்பதாகும்.

தாவரத்தை உண்ணும் விலங்குகளை போலிப்பழமான முந்திரிப் பழம் கவர்ந்திழுக்கிறது. இதனுடைய சுவையின் காரணமாக விலங்குகள் உண்மையான பழத்தை (முந்திரிக் கொட்டை) உண்ணாது விட்டுவிடுகின்றன.


முந்திரியின் அமைப்பு மற்றும் வாழ்விடம்

முந்திரியானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் இருக்கும் மரவகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இம்மரம் 10 மீ உயரம் வரை வளரும்.

முந்திரி மரம்

இம்மரத்தில் இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறம் முதல் அடர் பச்சை நிறம் வரை உள்ளன. இம்மரத்தில் பச்சை கலந்த இளம்சிவப்பு பூக்கள் தோன்றுகின்றன.

முந்திரி பூக்கள்


பூக்களிலிருந்து மஞ்சள் அல்லது சிவப்பு நிற முந்திரி ஆப்பிள்கள் தோன்றுகின்றன. முந்திரிக் கொட்டையானது முந்திரி ஆப்பிளின் முனைப்பகுதியில் உருவாகின்றன.

முந்திரி காய்கள் மற்றும் பழங்கள்

முந்திரி ஆப்பிளானது இனிப்பு கலந்த புளிப்பு சுவையினை உடையது. இதனை உண்ணும் போது தொண்டையில் ஒருவித கரகரப்பினை உண்டாக்குகின்றது. இந்தியாவில் இம்மரம் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூக்களைப் பூக்கின்றன.


முந்திரியின் வரலாறு:-

முந்திரியானது தென்அமெரிக்க நாடான பிரேசிலின் வடபகுதியை தாயகமாகக் கொண்டது. 1560-ல் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு இது போர்த்துக்கீசியரால் கொண்டுவரப்பட்டது.

பின் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கும் முந்திரியானது பரவியது. இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றிலும் இது காணப்படுகிறது. இந்தியா, நைஜீரியா, பிரேசில், வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இது அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

முந்திரி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

முந்திரி பழத்தில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), விட்டமின் சி (ஆரஞ்சைப் போல் ஐந்து மடங்கு) ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நீர்ச்சத்து, கரோடீனாய்டுகள், டேனின் முதலியவை உள்ளன.

முந்திரி பழத்தின் மருத்துவப் பண்புகள்:-

கல்லீரலை சுத்தப்படுத்த

இப்பழமானது கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது.

அத்துடன் உடலின் பி.எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.

இதய நலத்தை காக்க

இப்பழமானது இதய நலத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிஜென்டுகள், பாலிபீனால்கள், ஃப்ளவனாய்டுகள் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.

இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிடவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேணவிரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம்.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க

இப்பழத்தினை உண்ணும்போது அவை கொழுப்பினை எரித்து தேவையான ஆற்றலினை வழங்குகின்றன. இப்பழத்தினை உண்டு உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறது. இதனால் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.

நுரையீரல் செயல்பாட்டினை சீராக்க

இப்பழத்தில் காணப்படும் தனித்துவமான ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதுடன் அதனை சீராக செயல்பட வைக்கின்றன.

இப்பழத்தின் சாற்றினை முறையாக பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நுரையீரல் செயல்பாட்டினை சீராக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட

எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க

இப்பழத்தில் காணப்படும் அதிகளவு விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸினால் உண்டாகும் சளி, காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாவதோடு மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.

புற்றுநோயினை தடை செய்ய

இப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள், பாலிபீனாக்கில்கள் புற்றுச் செல் உருவாவதை தடைசெய்கின்றன. இப்பழத்தினை உண்பதால் நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படுகிறது.

மலச்சிக்கலினைத் தடுக்க

மலச்சிக்கலானது கழிவில் உள்ள நீர்ச்சத்தினை பெருங்குடல் உறிஞ்சும்போது உண்டாகிறது. இப்பழானது சார்பிட்டால் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.

இப்பொருளானது பெருங்குடலினை அடையும் போது பெருங்குடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கி மலத்தினை இளக்கி எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் தீரும். எனவே மலச்சிக்கல் வராதிருக்க இப்பழத்தினை உண்ணலாம்.

சருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கு

இப்பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.

கேசத்தில் இப்பழச்சாற்றினை தேய்க்கும்போது பொடுகு உள்ளிட்ட கேசப்பிரச்சினைகள் தீருகின்றன. சருமம் மற்றும் கேசத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள், சாம்புகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பில்; இப்பழச்சாறு பயன்படுத்தப்படுகிறது.

முந்திரிப்பழத்தினைப் பற்றிய எச்சரிக்கை

இப்பழமானது அதிகளவு உண்ணும்போது தொண்டையில் அதிகளவு கரகரப்பினை ஏற்படுத்தி புண்களைத் தோற்றுவிக்கும். இதனால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உண்டாகும். இதனால் இப்பழத்தினை அளவோடு உண்ண வேண்டும்.

முந்திரிப்பழத்தினை வாங்கும் முறை

இப்பழத்தினை வாங்கும்போது மேற்பரப்பில் வெடிப்புகள் இல்லாமல் ஒரே சீரான நிறத்துடன் இருப்பவற்றை வாங்க வேண்டும். இதனை அறையின் வெப்ப நிலையில் ஒரு நாள் வைத்திருந்து உண்ணலாம்.

குளிர்பதனப்பெட்டியில் பாலிதீன் கவரில் போட்டு இருவாரங்கள் வரை பாதுகாத்து பயன்படுத்தலாம். இப்பழத்தினை லேசாக அவித்தோ, உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்தோ உண்ணும்போது தொண்டையில் கரகரப்பினை உண்டாக்குவதில்லை.

இப்பழம் அப்படியேவோ, பழச்சாறாகவோ உண்ணப்படுகிறது. இதிலிருந்து ஜாம், சாலட், இனிப்புகள், கேக்குகள், ஊறுகாய்;, சட்னி, காக்டெயில், வெயின், பென்னி ஆகியவை தயார் செய்யப்படுகின்றன.

இப்பழம் உலர்த்தப்பட்டும், அழுகிய நிலையிலும் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

சத்துகள் நிறைந்த, சீசனில் கிடைக்கும் முந்திரி பழத்தினை ரசித்து உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

பாமாயில் கொடிய நஞ்சு... பாமாயில் பற்றிய விழிப்புணர்வு பதிவு...

பாமாயில் கொடிய நஞ்சு... பாமாயில் பற்றிய விழிப்புணர்வு பதிவு...

*✍சமையல் எண்ணெய்களில் நாம் பயன் படுத்துவது நல்லெண்ணை, கடலை எண்ணை, தேங்காய் எண்ணை, சூரியகாந்தி எண்ணை, பாமாயில்... இவைகளில் பாமாயில் எண்ணெய் பற்றி இன்று பார்ப்போமா?.*

*நீங்கள் நினைக்கும் பாமாயில் என்றால் என்ன?...*

*தேங்காய் எண்ணை தேங்காய் விதை பருப்பில் இருந்து எடுக்கப் படுகிறது.*

*எள் எண்ணை எள் விதையில் இருந்து எடுக்கப்படுகிறது.*

*கடலை எண்ணை கடலை விதையில் எடுக்கப் படுகிறது.*

*அதே போல் எண்ணை பனையில் இருந்து பாமாயில் ஒரு சில நாடுகளில் எடுக்கப் படுகிறது.*

*✍நம் நாட்டிற்குள் வரும் பாமோலின் எனும் பாமாயில் விதையில் இருந்து எடுக்கப்படுவது அல்ல. கொட்டையில் இருந்து எடுத்து உலகம் முழுவதும் சப்ளை செய்யவும் இயலாது.*

*✍Oil Palm எனும் எண்ணை பனை ஆப்ரிக்கா கண்டத்தின் பூர்வீகம்.*

*✍நமக்கு வருவது எண்ணை பனை பிசினில் இருந்து வரும் திரவத்தை கொதிக்க வைத்து உருவாக்கப் படுகிறது. இது குழம்பு போன்ற பதமும், துர் நாற்றமும், பிரவுன் கலரும் கூடியது.*

*✍இதை கொதிக்க வைத்து உருவாக்கப் படுவது தான் RBD எனும் Refind Bleached Deodorized Oil.*

*✍Refind என்றால் 100 டிகிரிக்கு கொதிக்க வைக்கப்பட்டு சட்டென்று குளிர்விக்கப் படும் போது சக்கை போன்ற கழிவுகள் அடியில் தங்கி விடும். இந்த எண்ணை கெட்ட கொழுப்பு எண்ணையாக மாறி விடும். அதாவது LDL எனும் Low Density Lipoprotein கொழுப்பாக ஆகிவிடும்.*

*✍இந்த எண்ணையை கெமிக்கல் போட்டு பிளீச் செய்தால் தான் கட்டி குறைந்து தண்ணீர் போல மாறும். அதன் துர்நாற்றத்தை போக்க அதற்கும் கெமிக்கல் தான். பாலோனில் இருந்து எடுக்கப்படுவது RBD பாமாயில்.*

*✍இதன் விலை குறைவு என்பதால் ரேஷன் கடைகளில் நம் மக்களின் உயிர் வாங்கியாக இந்த எண்ணை ஜெர்ஸி மாடு, பிராய்லர் கோழி, பிராய்லர் கூண்டு ஆடு, சத்துணவு சூனிய முட்டை போல் மக்களின் உயிர் வாங்கியான இலுமினாட்டியின் சதி வலைகளால் இந்த எண்ணை கொண்டு வரப்படுகிறது.*

*☘என்ன மக்காக்களே!!இதற்கெல்லாம் அசந்து விட்டால் எப்படி!?.*

*✍குரூடாயிலை லிட்டர் 80 பைசாவுக்கு வாங்கி அதில் பாமாயில் எசன்ஸ்களை கலந்து அடக்க விலை ரூபாய் 1 மட்டும்.*

*இதுதான் உங்களுக்கான நவீன பாமாயில்.*

*✍பூமியில் உள்ள குரூடாயில் தான் மினரல் பாமாயில் பெயரில் உங்களுக்கு படைக்கப் படுகிறது.*

*✍ரேஷன் என்றால் சீனி வெள்ளை விஷ சீனி, விஷ குரூட் ஆயில் பாமாயில் இப்படி தான் கிடைக்குமே தவிர கருப்பட்டி, சிறுதானியங்கள், செக்கு எண்ணை கிடைக்குமோ!!*

*✍இங்கு கலப்படத்தை தவிர வேறு எதுவும் தர மாட்டாங்க என் அருமை மக்காக்களே.*

*✍இந்திய பாமாயில் உடலுக்கு நன்மை தராது. மாறாக தீராத நோயை தருவது.*

*ஆரோக்கியமானவற்றை உண்ணுங்கள் ,வளமோடு வாழுங்கள்...

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் ஒரு நோய்கள் வராது !


சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் ஒரு நோய்கள் வராது !

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

🍄தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

🍄#சர்க்கரை_நோய் எப்படி வருகிறது ?

🍄இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

🍄#கஞ்சியின்_பயன்கள் :

🍄சாதம் வடித்த கஞ்சி சு+டாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.

🍄ஆனால் கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

🍄சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

🍄சாதத்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்?

🍄கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது.

🍄சாதத்தை மிதமான சு+ட்டிலேயே சாப்பிட வேண்டும்.

🍄ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

🍄#பழையச்_சோறு :

பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்.

🍄சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.

🍄பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

🍄#சாதத்தின்_பயன்கள் :

🍄சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.

🍄பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

🍄மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

🍄சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

🍄வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

🍄ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை :

🍄காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.

🍄உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

🍄ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

🍄மைதாவினால் செய்யப்படும் பரோட்டா போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள. இது வாழ்நாளைக் குறைக்கும்.

🍄பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதற்கு பதில் மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி சாப்பிடுங்கள்.

🍄மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

🍄உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு திட உணவு சாப்பிடக் கூடாது.

🍄பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் ஆகியவற்றை நாள்தோறும் சாப்பிடுவது நல்லது.

பாலும் பால் சார்ந்த பொருட்களும்...


பாலும் பால் சார்ந்த பொருட்களும்...

பால்... ஒரு முழுமையான உணவு நாம் மிகவும் அதிகமாகப் பருகும் பானமாக இருக்கும் பால் பெரு மற்றும் சிறு நுண்ணூட்டச் சத்துக்கள் (Macro & Micro Nutrients) நிறைந்தது. குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை அனைவருக்கும் அவசியமான பானமான பால் ஒரு முழுமையான உணவுப் பொருளாக(Complete food) போற்றப்படுகிறது. 100 மில்லி அளவுள்ள பசும்பாலில் ஆற்றல் 73 Kcal, மாவுச்சத்து 5g, புரதசத்து 3g, கொழுப்புச்சத்து 4g, மொத்த நிறைவுற்ற கொழுப்பு அமிலம் 3g, ஒற்றை நிறைவுறாத கொழுப்பு அமிலம் 1g, சோடியம் 25 mg, பொட்டாசியம் 115mg, பாஸ்பரஸ் 97mg, கால்சியம் 120mg அளவிலும் இருக்கிறது.

*மாவுச்சத்து:*

லாக்டோஸ்(Lactose) என்பது ஒரு வகையான மாவுச்சத்து. அதுவே பாலின் இனிப்புச் சுவைக்கு காரணமாக உள்ளது. நம்மில் பெரும்பாலானோர் காலையில் எடுத்துக்கொள்ளும் முதல் உணவாக பால் இருப்பதோடு, ஒரு நாளுக்குத் தேவையான முழு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் நமக்குத்
தருகிறது.

*புரதச்சத்து:*

பாலிலுள்ள புரதச்சத்தில் இருக்கும் அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடலில் இருக்கும் திசுக்களை வலுவடையச் செய்கிறது. மேலும் சேதம் அடைந்த செல்களைச் சரி செய்கிறது.

*கொழுப்புச்சத்து:*

பாலில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் (MUFA-Monounsaturated Fatty Acid) மற்றும் பிற கொழுப்பு அமிலங்களால்(Fatty acids) நம் உடலில் ஏற்படும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சுண்ணாம்புச்சத்து:
பாலில் சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இச்சத்து நம் உடலில் உள்ள பற்கள், எலும்புகளை வலுவாக்கவும், எலும்பு தேய்மானத்தை(Osteoarthritis) தடுக்கவும் உதவுகிறது.

*வைட்டமின்கள்:*

பாலில் உள்ள வைட்டமின் B மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E, K போன்றவை நம் உடலுக்கு பல வகையான நன்மைகளைத் தருகிறது. உதாரணமாக இதிலுள்ள வைட்டமின் B12 என்பது நம் உடலில் உள்ள நரம்பு மண்டலம் மற்றும் மூளையை வலுவாக்க உதவுகிறது.

*தயிர்:*

பாலைப் போன்று பாலிலிருந்து பெறப்படும் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் யோகர்ட் போன்றவற்றிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் பல உள்ளன. காய்ச்சாத பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் நுண்ணுயிரிகள்(Bacteria) பாலில் இருந்து தயிர் தயாரிக்க உதவுகிறது.

*தயிரின் பலன்கள்:*

தயிரில் உள்ள சார்பு உயிரிகள்(Probiotics) நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இது நம் வயிற்று உபாதைகளை சரி செய்ய உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான சுண்ணாம்புச்சத்து நம் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. தயிர் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நம் தோலில் உள்ள ஈரப்பதமூட்டும் விளைவுகளை உண்டாக்கி, சருமம் வறட்சி அடையாமல் தடுக்கிறது.

*யோகர்ட்:*

பாலுடன் Lactobacillus bulgaricus மற்றும் Streptococcus thermophiles இவை இரண்டும் இணைந்து புளிப்புத் தன்மையை ஏற்படுத்துவதால் உருவாகும் ஒரு வகை தயிர் யோகர்ட் என்று அழைக்கப்படுகிறது. இது பல சுவைகளில் தயார் செய்யப்படுகிறது. இது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.

*மோர்:*

நீரினில் தயிரைக் கலந்து கடைந்தால் கிடைப்பதை மோர் என்று சொல்கிறோம். இது கோடை காலத்தில் உடலுக்கு குளிரூட்டும் பானமாகத் திகழ்கிறது.

*மோரின் பலன்கள்:*

மோர் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான சிறந்த குளிரூட்டியாகத் திகழ்கிறது. இது வயிற்றின் அமிலத் தன்மையைக் குறைக்க உதவுகிறது. வாயிலுள்ள தோலின் அணுக்களை கிருமித் தாக்கத்திலிருந்து (Anti inflammatory effect) பாதுகாக்கிறது. மோருடன் இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து பருகுவதால் குடல் உபாதைகள் விலகி செரிமானத்திற்கு உதவுகிறது. வியாதியஸ்தர்கள் நடுவேளையில் வரும் பசியை அடக்குவதற்கு மோர் பருகுவதன் மூலமாக உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மேலும் அது உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

*வெண்ணெய்:*


பாலிலிருந்து பெறப்படும் மற்றொரு பொருள் வெண்ணெய். பாலிலுள்ள கொழுப்புகள் உடைக்கப்பட்டு பின்பு சேர்க்கப்பட்டு வெண்ணெய்க்கான திடத்தன்மை பெறுகிறது. தயிரிலிருந்தும் வெண்ணெய் தயார் செய்யலாம்.
வெண்ணெயின்

*பலன்கள்:*

வெண்ணெயில் அதிகளவு உள்ள வைட்டமின் A தைராய்டு மற்றும் அட்ரினல் சுரப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் D மூலமாக கால்சியம் சத்து நம் உடலில் சேர்வதற்கு (Absorption) உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நம் உடலில் உள்ள செல்கள் தீவிர சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. வெண்ணெய் உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டது. இது வாயில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.

*நெய்:*

உருக்கப்பட்ட வெண்ணெய்தான் நெய் என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்களில் நெய்யை சமையல் எண்ணெயாக பெரும்பாலானோர் பயன்படுத்தினர். நெய் ஆரோக்கியமான கொழுப்பு சத்து உடையது.

*நெய்யின் பலன்கள்:*


நெய் நமது உணவில் ருசியைச் சேர்ப்பதுடன், நிறைவாய் உணவு உட்கொண்ட திருப்தியைக் கொடுக்கிறது. இது Glycemic index அளவை நம் உணவில் குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உணவின் மூலம் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. நமது உணவில் தினமும் 2 அல்லது 3 தேக்கரண்டி நெய் சேர்த்து சாப்பிட்டால் அதிலுள்ள நிறைவுறா கொழுப்பு (Saturated fat) நமது மூளை திறம்பட செயல்பட உதவுகிறது. மேலும் இது நமது சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது. இது மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது.
மேற்சொன்ன பொருட்களைத் தவிர பாலிலிருந்து பனீர், சீஸ், ஐஸ்கிரீம் மற்றும் பல வகை இனிப்பு பண்டங்களும் தயாரிக்கப்படுகிறது. நமது அனுதின உணவில் பால் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எனவே பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.


லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Lactose Intolerance):
பாலில் உள்ள லாக்டோஸ் ஜீரணம் ஆவதற்கு நமது குடலில் லாக்டேஸ் என்கிற திரவம் சுரக்க வேண்டும். இந்த லாக்டேஸ் குறைபாடு உள்ளவர்கள் பால் உட்கொண்டால், அவர்களுக்கு வயிறு உபாதைகள், வயிற்று வலி, வயிறு உப்புதல் (Bloating), வாயு மற்றும் வாந்தி போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படும். இந்த பிரச்னை உள்ளவர்கள் முதன்மை லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Primary Lactose Intolerance), இரண்டாம் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Secondary Lactose Intolerance) என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். Primary Lactose Intolerance இந்த வகை பிரச்னை உள்ளவர்களுக்கு பிறப்பிலேயே லாக்டோஸ் திரவம் சுரக்காமல் இருக்கும் அல்லது அவர்கள் வளரும்போது அந்த திரவ அளவு குறைவுபடும்.
Secondary Lactose Intolerance:
இவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை அல்லது சிறுகுடலில் ஏற்பட்ட வியாதியின் நிமித்தமாக லாக்டோஸ் திரவம் சுரக்கும் அளவு குறைவுபடும். இந்த இருவகைப் பிரிவினரில் சிலருக்கு பாலிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்ளும் தன்மையுடையதாக இருக்கும். ஆனால் முற்றிலும் ஒவ்வாமை உள்ளவர்கள் சோயா பால், பாதாம் பால், தேங்காய் பால் மற்றும் பிற பல வகையான பாலை உட்கொள்ளலாம்.
பால் இல்லா உணவுமுறை:
Reddit என்கிற இணையதள பக்கத்தில் அசைவ உணவு முறையைத் தவிர்த்து, வீகன் உணவு முறையைப் பின்பற்றுவது மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் Veganuary என்ற பெயரில் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தில் இந்த புத்தாண்டின் முதல் ஒரு மாதம் முழுவதற்கும் இதைப் பின்பற்றும்படி பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாரம் இங்கிலாந்து உள்ளிட்ட ஐக்கிய ராஜ்ஜியங்களில் (United Kingdom) 2014-ம் ஆண்டில் Jane Land, Matthew Glover என்கிற கணவன் மற்றும் மனைவி ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரசாரத்தின்படி 192 நாடுகளைச் சேர்ந்த 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அசைவ உணவுமுறையைத் தவிர்த்து வீகன் உணவுமுறையை ஒரு மாதத்திற்கு பின்பற்றுவது என்ற உறுதிமொழியை 2020-ம் ஆண்டின் நவநாகரீக தீர்மானங்களில் ஒன்றாக எடுத்து இந்த உணவுமுறையில் இணைந்துள்ளனர். தாவரங்கள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் பொருட்களான காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் பழங்கள் போன்ற சைவ வகை உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிற உணவுமுறைக்கு வீகன் டயட்(Vegan diet) என்று பெயர்.
இந்த உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விலங்குகளின் இறைச்சி மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் பால், முட்டை போன்ற பொருட்களை எடுத்துக் கொள்வதில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்களான Joaquin Phoenix, Alicia Silverstone, Mayim Bialik ஆகியோர் இந்த பிரசாரத்தில் தங்கள் பெயரை இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் Natalie Portman என்ற நட்சத்திரம் புத்தாண்டு தினத்தன்று தன்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 59 லட்சம் பேரையும் இந்த உறுதிமொழியை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Veganuary மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஒரு மாதத்திற்கு இறைச்சி, பால் ஆகியவற்றை கைவிடுவதன் மூலம், 45 ஆயிரம் டன் அளவிலான கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக, உணவு உற்பத்தியின் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் Joseph Poore என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் இறைச்சி மற்றும் மாட்டுப் பால் அருந்தமாட்டார்கள். இதனால் உடலில் பல ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, இவர்கள் உணவியல் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி தங்கள் உணவுமுறையை சீராக அமைத்துக் கொள்வது நல்லது.
நன்றி குங்குமம் டாக்டர்!

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!


வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!

*🔻1) சோடா🔻*

இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

*🔻2) தக்காளி🔻*

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

*🔻3) மாத்திரைகள்🔻*

எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

*🔻4) ஆல்கஹால்🔻*

பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

*🔻5) காரமான உணவுகள்🔻*

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

*🔻6) காபி🔻*

காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

*🔻7) டீ🔻*

காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். அதே போல டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

*🔻8) தயிர்🔻*

தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

*🔻9) வாழைப்பழம்🔻*

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

*🔻10) சர்க்கரைவள்ளிக் கிழங்கு🔻*

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்...

ஆரோக்கியமான வாழ்வுக்கு...

ஆரோக்கியமான வாழ்வுக்கு

நம் ஆரோக்கியத்தை ஆராயும் வழி.
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை, நிறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன்,எக்ஸ்ரே, ப்லட் டெஸ்ட், யுரின் டெஸ்ட், மொஷென் டெஸ்ட் எதுவும் வேண்டாம். ஆயிரம் கணக்காக பணம் செலவழிக்கவும் வேண்டாம். கீழ் கூறப்படும் ஐந்து விஷயங்களை சரி பார்த்தாலே போதும்.

1. தரமான பசி
2. தரமான தாகம்
3. தரமான உறக்கம்
4. முழுமையான கழிவு நீக்கம்
5. மன அமைதி

*தரமான பசி*
• உழைப்புக்கேற்ற பசி இருக்க வேண்டும்
• அதிக உழைப்பு அதிக பசி, குறைந்த உழைப்பு குறைந்த பசி
• குறைந்தது 2 வேளை பசி இருக்க வேண்டும்
• உண்ட உணவு சுலபமாக செரிக்க வேண்டும்
• உண்ட பிறகு வயிறு  உப்புசம், பாரம், அசதி, தூக்கம் இருக்கக் கூடாது

*தரமான தாகம்*
• உழைப்புக்கேற்ற தாகம் இருக்க வேண்டும்
• உதடு காய்வது தாகம் அல்ல
• தாகத்தை புரிந்துகொள்ள வேண்டும்
• தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது

*தரமான உறக்கம்*
• படுத்த 10 நிமிடத்தில் உறக்கம் வர வேண்டும்
• இடையில் காலை வரை எழுந்திருக்கக் கூடாது
• தூங்கி எழும் பொழுது அசதி இருக்கக் கூடாது
• தூங்கி எழுந்ததும் சுரு சுருப்பாக இருக்க வேண்டும்

*முழுமையான கழிவு நீக்கம்*
• காலையில் தினமும் சுலபமாக மலம் கழிக்க வேண்டும்
• மலம் முழுமையாகச் சுலபமாக வெளியேற வேண்டும்
• மலம் கழித்த திருப்தி இருக்க வேண்டும்
• சிறுநீர் சுலபமாக வெளியேற வேண்டும்
• சிறுநீர் கழித்த திருப்தி இருக்க வேண்டும்

*மன அமைதி*
• மனம் அமைதியாக இருத்தல் வேண்டும் 
• எந்தச் சூல் நிலையிலும் மனம் பயம், சஞ்சலம் அடையக் கூடாது
• அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோவம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் இருக்கக் கூடாது.
• மனம் எப்பொழுதும் சம நிலையில் இருக்க வேண்டும்.


1. பசி
2. தாகம்
3. உறக்கம்
4. கழிவு நீக்கம்
5. மன அமைதி

மேலே சொன்ன ஐந்தும் குறைந்தாலும், கூடினாலும், ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். நோய்கள் உருவாகும்.

*ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ள*

• பசி இன்றி உண்பது தவறு
• தாகம்  இன்றி தண்ணீர் அருந்தக் கூடாது
• உறக்கம் கண்டிப்பாக இரவு 10 – 4 மணி வரை தூங்க வேண்டும்
• கழிவு நீக்கம் – தினமும் காலையில் கழிவுகள் வெளியேற வேண்டும்
• மன அமைதி – மனதைக் கவனிக்க வேண்டும்.


*மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாக, அளவாக இருந்தால், ஒரு மனிதன் கண்டிப்பாக* *ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான்*.
நோய்களைப் பார்த்து பயப்படத் தேவை இல்லை. எந்த நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும், நிச்சயமாக குணமாகும்.

*உங்கள் உடலை நீங்கள்  கவனித்தால், உங்கள் உடல் உங்களை கவனித்துக் கொள்ளும்*

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்..


இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்..

இதயம், உடலிலுள்ள அனைத்து இரத்தக் குழாய்களுக்கும் இரத்தத்தைச் சுழற்சி செய்யும் ஒரு மிக முக்கியமான உறுப்பு ஆகும். மேலும் இது முதல்நிலை இரத்த ஓட்ட அமைப்புப் பகுதியாக உள்ளது. இன்றைய அறிவு டோஸில், நமது இதயம் எவ்வாறான வியக்கத்தக்க பல செயல்களை செய்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள், நண்பர்களே!

ஒன்று தெரியுமா…? இதயம் துடிப்பதற்கு மூளை தேவையில்லை; ஏன், உடலும் கூட தேவையில்லை. இதயத்திற்க்குச் சொந்தமாகவே மின்சார அமைப்பு உள்ளது. இதனால், மூளை இறந்து போன பின்பும் கூட சில நிமிடங்களுக்கு இதயம் துடித்துக் கொண்டே இருக்கும்! மேலும், உடலிலிருந்து நீக்கிய பின்பும், ஒரு குறுகிய நேரத்திற்குத் துடித்துக் கொண்டிருக்கும். அதுவும் குறிப்பாக பிராணவாயு (oxygen) இருக்கும் வரை இதயத்தால் துடிக்க முடியும்! இது அற்புதம் அல்லவா?

நமது இதயம் மிகவும் சுறுசுறுப்பான ஓர் உறுப்பு ஆகும், ஏனென்றால் அது ஒரு நாளைக்கு மட்டுமே 100,000 தடவை துடிக்கின்றது. சராசரி வாழ்நாள் முழுவதும், சுமார் 2.5 பில்லியன் முறை துடிக்கிறது. உங்கள் இதயம் சுழற்சி செய்யும் இரத்தம், இரத்த நாளங்கள் வழியாக சுமார் 100,000 கிலோமீட்டர் பயணம் செய்கிறது.

இரத்த அழுத்தம் இரண்டு அளவீடு ஆகும்: சிஸ்டாலிக் அழுத்தம் என்பது இதயம் துடிக்கின்ற போது ஏற்படும் அழுத்தம், மற்றும் இதயவிரிவமுக்கம் என்பது இதய துடிப்புகளுக்கு இடையே ஏற்படும் அழுத்தம். இந்த இரண்டு அழுத்தங்களை வைத்தே முறையாக இரத்த அழுத்தத்தை அளவிட முடியும், என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், சில ஆய்வுகள் இரண்டு கைகளிலும், இரத்த அழுத்த அளவீடு எடுத்தால் மட்டுமே, சரியான முறையில் இதய நோய் ஆபத்தைத் தீர்மானிக்க முடியும் என்று கூறுகின்றன.

இதய நோய்கள், துணையை இழந்த வயதானவர்களை இரண்டு மடங்கு அதிகமாக தாக்கும் ஆபத்து உள்ளதாக சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஆண்களை விட பெண்களே அதிகமாக இதய நோய்களால் மரணிப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.



பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி – நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டர்கள்)

பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவுதான் இருக்கும்.
கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

நாம் இதயத்தின் மேல் கை வை என்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போது உருவாகிறது.

உங்கள் உடலில் இருக்கும் இந்த அதிசயமான இதயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் நண்பர்களே? உங்கள் கருத்துகளைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்

வியாழன், 13 பிப்ரவரி, 2020

வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்


வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்

(பழந்தமிழர் உணவு, உடை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு முதலான பல்வேறு செய்திகள் குறித்து விரிவாக விளக்கும்நூல் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அந்த நூலிலிருந்து..).

சித்தர் என்ற சொல்லுக்குச் சித்தமானவர்கள் என்றும் பொருள் உண்டு. அவர்கள் அறிவியலை ஞானமாக்கியவர்கள். அவர்கள்மனித வாழ்க்கைக்குச் சித்தமானதைக் கண்டு சொன்னார்கள். உணவை உண்பதில் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகளைஏற்படுத்தினார்கள். சுகவாழ்வுக்காக அறிவியல்ரீதியான சில வழக்கங் களை ஏற்படுத்தினார்கள்.

அவ்வாறு வந்தது தான் மனிதனின் தலைமுடி அளவு குறைவாய் இருத்தல் என்பது ஆரோக்கியமானது என்பது அவர்களின்கண்டுபிடிப்பு. மேலைநாடுகளில் பெரும்பாலான ஆண்கள் தலையில் அதிக முடியையும் பெரிய மீசையையும் வைப்பதேஇல்லை.

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத்தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண்கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்குஅநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக அவசியம் எனக் கண்டவர்கள் பழந்தமிழர்கள். தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலுமேஅதற்கு ஈடாகாது. இன்றைக்கு மேல்நாடுகளில் தாய்ப்பால் குந்தைகளுக்குக் கொடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றார்கள். ஆடும்,மாடும், நாயும் தாய்ப் பாலைத் தம் குட்டிகளுக்குக் கொடுக்கிறபோது மனிதர் மட்டும் ஏன் மாற்றுப்பால், மாட்டுப்பால்தேடுகின்றனர்.

குழந்தை பிறந்ததும் இயற்கையாகவே தாயின் மார்பில் பால் சுரக்கும். அது குழந்தை குடிக்கத்தான். அதனைக் கொடுக்காமல்விடுவது நாகரீகம் என்றும் மேனி அழகுக்கு நல்லது என்றும் நினைக்கின்றனர் சிலர். ஆனால் இவ்வாறு பெற்ற குழந்தைக்குப் பால்கொடுக்காமல் விடுவதால் மார்பகப் புற்றுநோயே வருகிறதாம்.

கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கைக்கு எதிராக ஊசி போட்டுக் கொள்கிறார்கள். மாத்திரை சாப்பிடுகிறார்கள். இவற்றால்உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த உடலே கர்ப்பம் தரிக்காமல் இருக்க இயற்கையான முறையில் சில வழிகளைச்சொல்லியிருக்கிறது.

வாரத்தில் ஒருநாள் மாதத்தில் பலநாள் பட்டினி(சில நோயாளிகள் தவிர்ந்த)யாய் இருப்பது உடலுக்கு நல்லது என்பதுபழந்தமிழன் மருத்துவம். பட்டினி இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடிகிறது. நோய் எதிர்ப்பாற்றலைமிகுதிப்படுத்தலாம். நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். உடலில் உள்ள மோசமான கிருமிகளை அழிக்கலாம் என்பது ஒருநம்பிக்கை.

இவற்றை நனைவில் கொண்டுதான் தவஞானிகள் உண்ணாவிரதத்தையும் பேசா விரதத்தையும் ஒருநாள் (வாரம் ஒரு முறை)பின்பற்றினர். அதிகாலைத் துயில் எழுதல் உடல் நலத்திற்கு நல்லது. நீண்ட வயது வாழ்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள்அதிகாலை எழுபவர்களாகத்தான் இருப்பார்கள். அதிகாலையில் காற்று தூய்மையாக இருக்கும். சுத்தமான பிராணவாயுதெருக்களில் அப்போது கிடைக்கும்.

குறிப்பாக மார்கழி, தை மாதங்களில் மிக நல்ல தரமான பிராண வாயு கிடைக்கும். இது பூமி சுழற்சியினால் ஏற்படும் செயல்.எனவேதான் இதனை சுவாசிக்கும் பொருட்டு ஆண்கள் மார்கழி பஜனைக்குப் போக வைக்கப்பட்டார்கள். பெண்களை வீட்டுவாசலில் கோலம் போட வைத்தார்கள்.

கோலம் போடுவது பண்பாட்டு மரபு. அதே நேரத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத சிறிய உயினங்களுக்கு உணவுக் கொடைஇடுவதே முக்கியமானது. ஆனால் இன்று தானிய மாவைத் தவிர்த்து வெள்ளைக்கல்லை அரைத்து மாவாக்கிக் கோலம்போடுகிறார் கள். இதனால் எறும்புகள் ஏமாந்தது நமக்குத் தெரியுமா என்ன?

அதே நேரத்தில் இந்த வெள்ளைக் கல் மாவு காற்றிலே கலந்து மனிதர்களின் மூச்சிலே இணைந்து நலத்திற்கு கேட்டைவிளைவிக்கும். எத்தனை பேர் இதனை உணர்ந்தோம்?.

நம்மை அறியாமலே நம் தெருக்களில் வளரும் வேப்பிலை மரம் செய்யும் நன்மை தெரியுமா? அது காற்றைத் தூய்மைப்படுத்துகிறது. நிழல் தருகிறது. தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது. அம்மை நோய் கண்டவர்களுக்கு வேப்பிலைப் படுக்கைசுகமானது. வயிற்றுப் புண், குஷ்டம், சர்க்கரை நோய்களுக்கு அதன் இலைகள் அருமருந்து. எனவே தான் தமிழர்களோடுவேப்பமரம் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.

வில்வ இலையில் மருத்துவம் இருக்கிறது. உடலில் உள்ள ஐம்பூதங்களைச் சமநிலைப்படுத்துவது அதன் தீர்த்தம். எனவேதான் சிலகோயில்களில் வில்வ இலைத் தீர்த்தம் வழங்கப்படுகிறது. வாழைப்பழம் புத்திசாலிகள் சாப்பிடும் பழம். ஏழைகளின் ஆப்பிள்.உண்பவருக்குப் பல நன்மைகள் இப் பழத்தால் கிடைக்கின்றன. இது பழந்தமிழன் பண்பாட்டுப் பழமாகவும் இருக்கிறது. அதேபோன்ற அந்தப் பழம் தரும் வாழைமரம் தமிழர்களின் பண்பாட்டு மரமாகயிருக்கிறது.

அதன் இலையில் உண்பது சுவைக்கு மட்டுமல்ல நலத்திற்கும் உதவுகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கும் நண்பனாக இருக்கிறது.தொடர்ந்து வாழை இலையில் உண்பவர்களின் கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதன் தண்டுகள் சிறுநீர்க்கல்அடைப்புகளை நீக்கும். எனவே தான் மருந்தாகப் பயன்படுகிற மரங்களைப் பழந்தமிழர் வீட்டுத் தோட்டத்துக்குள் கொண்டுவந்தனர்.

தமிழன் வீட்டுத் தோட்டத்து மரங்கள், செடிகள், கொடிகள் உணவிற்கும் மருந்திற்கும் பயன்படுகின்றன. ஆனால் இன்றையமேல்நாட்டு நிாககத்தில் வெறும் அழகுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட மரம், செடி, கொடிகளே வீட்டுத் தோட்டத்தில் இருக்கின்றன. வீட்டுத் தோட்டத்தில் கறிவேப்பிலை இருந்தால் சாம்பாருக்கு உதவும்.

துளசிச் செடியின் இலைகள் வாயில் போட்டு மெல்ல உதவும். இஞ்சிச் செடியில் கிடைக்கும் இஞ்சி செரிமானத்திற்கு உதவும்.மஞ்சள் செடியின் மஞ்சள் பூசிக் குளிக்க உதவும். மஞ்சள் சிறந்த ஒரு கிருமி நாசினி. ஆகவேதான் மஞ்சள் தூளைத் தண்ணீல்கரைத்து வீட்டு வாசலில் தெளிப்பார்கள்.

கிராமத்து திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டுதல் ஒரு அர்த்தத்தோடு வந்ததுதான்.வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் முருங்கைக்கீரைஆண்மையைப் பெருக்கும். கீழாநெல்லி மஞ்சள் காமாலை நோய்க்கு அருமருந்தாகும். அந்த மருந்து ஆங்கில மருந்தைவிடபலனை அள்ளித் தரவல்லது. அதன் சக்தி உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானிகள் கீழாநெல்லியை மாத்திரையில் கொண்டுவந்துள்ளனர். இது தமிழர் மருத்துவத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

தமிழர் மருத்துவமாகிய சித்த மருத்துவம் 2,50,000 மூலிகை களைக் கொண்டு மருத்துவம் பேசுகிறது. இவற்றை நாம், ஆங்கிலமருந்து என்பனவற்றை மட்டும் நம்பிக்கொண்டு புரிந்து கொள்ளாதது பெரிய தவறு. சித்த மருத்துவம் பக்க விளைவு அல்லது பின்விளைவு இல்லாத மருத்துவம். இந்த நாட்டின் இயற்கைச் சூழலுக்கேற்ப தட்ப- வெப்பநிலைகளுக்கேற்ப, காலமாற்றங்களுக்கேற்ப இயற்கையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளே அவைகள்.

அதே நேரத்தில் இயற்கை விதிகளுக்குட்பட்டு இயற்கை நெறியோடு உணவினை உண்ணுவதே உடலுக்கு நலம் சேர்க்கும்என்கிறது சித்த மருத்துவம். எனவே தமிழ்ச் சித்தர்களின் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்தச் சித்தமானால் அது நம்மை நிச்சயம்வாழ வைக்கும்.

‘சர்வ மங்கள மாங்கல்யே...’ சொன்ன பெண் புரோகிதர்!


‘சர்வ மங்கள மாங்கல்யே...’ சொன்ன பெண் புரோகிதர்!

பெண்கள் இந்தத் துறைக்கு எப்போது வருவார்கள் என்ற பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, சென்னையில் நடந்த புதுமை திருமணம்!

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத இனிமையான நாள் அவர்களது திருமண நாள் தான். வெளியில் எவ்வளவோ திருமணத்தைப் பற்றி ஜோக் சொல்லிக் கொண்டாலும், ஆணாகட்டும், பெண்ணாகட்டும் தங்களது வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு திருமணம் மூலம் தான் அடியெடுத்து வைக்கின்றனர். அப்படிப்பட்ட திருமணங்களை வித்தியாசமாக நடத்த சமீபகாலமாக மணமக்களே புதுமை விரும்பிகளாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படித்தான் கடந்த வெள்ளியன்று நடந்த தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர் விக்னேஷ் ராகவன் - சுஷ்மா ஹரிணி ஜோடி. அப்படியென்ன வித்தியாசமாக செய்து விட்டார்கள் என கேட்கிறீர்களா? இருக்கிறது. இவர்களது திருமணத்தை இந்து மதத்திற்கான உரிய சடங்குகளுடன் நிறைவாக செய்து முடித்து வைத்தவர் ஒரு பெண் புரோகிதர். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் சுஷ்மா ஹரிணி. இவரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட விக்னேஷ் ராகவனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட அவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். எனவே, தங்களது திருமணத்தைப் புதுமையாக அதே சமயம் இனி வருபவர்களுக்கு முன்னுதாரணமாக செய்ய வேண்டும் என திட்டமிட்டனர் சுஷ்மாவும், விக்னேஷும். பட உதவி: தினமணி, தி ஹிந்து அதன்படி, வழக்கறிஞரான சுஷ்மா, தங்களது திருமணத்தை பெண் புரோகிதர் நடத்தி வைத்தால் நன்றாக இருக்கும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். சுஷ்மாவின் இந்த விருப்பத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் சொல்லி விட்டனர். ஆனால், இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு சமூக சடங்குகளையும் இணைத்து திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைக்கும் புரோகிதர், அதிலும் பெண் புரோகிதர் கிடைப்பது அவர்களுக்கு சவாலாக மாறியது. திருமணத்திற்கு மிகக் குறைவான நாட்களே இருந்தபோதும், பெண் புரோகிதரைத் தேடும் பணியை அவர்கள் முடுக்கி விட்டனர். அப்போது தான் ஆந்திராவைச் சேர்ந்த பெண் புரோகிதர் பிரமரம்ப மகேஸ்வரி பற்றி அவர்களுக்குத் தெரிய வந்தது. மைசூரைச் சேர்ந்தவரான பிரமரம்ப மகேஸ்வரி வேத மந்திரங்களை முறையாக பயின்று அதில் தேர்ச்சியும் பெற்றவர். எனவே, சுஷ்மா - விக்னேஷ் திருமணத்தை புரோகிதராக இருந்து நடத்தி வைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று சென்னை தக்‌ஷின் சித்ராவில் இந்தத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. புரோகிதராக மகேஸ்வரி தனது பணியைச் சிறப்பாகச் செய்ததாக திருமணத்திற்கு வந்தவர்கள் பாராட்டினார்கள். இந்து திருமணங்களில் பின்பற்றப்படும் சடங்குகளை அவர் சிறப்பாக நிகழ்த்தியதுடன், மணமக்களுக்கு ஒவ்வொரு தனி மந்திரத்தின் முக்கியத்துவத்தையும் ஆங்கிலத்தில் மகேஸ்வரி விளக்கியது இங்கே குறிப்பிடத்தக்கது. “எங்கள் மகளின் திருமணத்திற்கு பெண் ஒருவர் புரோகிதராக இருப்பதற்கு ஆரம்பத்தில், நாங்கள் தயக்கம் காட்டினோம். ஏனென்றால் இதற்கு முன்னர் திருமணத்தை பெண் புரோகிதர் முன்னின்று நடத்தியதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. ஆனால் எங்கள் தயக்கத்தை மாற்றி, இந்தத் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக மகேஸ்வரி மாற்றி விட்டார்,” என்கிறார் மணப்பெண் சுஷ்மாவின் தந்தையான வழக்கறிஞார் சுரேஷ் ரெட்டி. பெண் புரோகிதர் மந்திரங்கள் ஓதி திருமணம் செய்து வைப்பது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற திருமணத்தை பெண் புரோகிதர் ஒருவர் நடத்தி வைத்தார். அப்போது வெளியுறவுத்துறை பொறுப்பாளராக இருந்த விஜய் சவுதவாலே நாக்பூரில் தனது சகோதரருடைய மகனின் திருமணத்தில் இத்தகைய புதுமையைப் புகுத்தி பாராட்டுகளைப் பெற்றார். அப்போது அது ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் நடந்தது. எனவே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மந்திரம் ஓதி அந்தத் திருமணத்தை அவர் நடத்தி வைத்தார். ஆனால் இப்போதே இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் மகேஸ்வரி. “நமது பாரம்பரியத்தில் மந்திரம் ஓதி திருமணத்தை நடத்திவைக்கும் தொழில் என்பது ஆண்களின் கோட்டையாகவே இருந்து வருகிறது. எனவே, அத்தகைய போக்கை மாற்றிக் காட்ட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பெண் புரோகிதர்களும் இருக்கிறார்கள், அவர்களாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்படமுடியும் என்பதற்கு எங்களது திருமணமே நல்லதொரு உதாரணம். இப்படிப்பட்டவர்களை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும்,” என்கிறார் மணப்பெண் சுஷ்மா. ஊரே மெச்சும்படி நடந்த இந்த திருமணத்தில் சுஷ்மாவுக்கு ஒரே ஒரு குறை தான். தன் திருமணத்தில் பெண் புரோகிதரைப் போலவே, மேளம், மிருதங்கம், நாதஸ்வரக் கலைஞர்களாகவும் பெண்களை அமர்த்த வேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால் அது மட்டும் கைகூடவில்லை என்ற வருத்தமாம் அவருக்கு. Also Read ஆசிரமத்தில் ரிசப்ஷன், ரிட்டர்ன் கிஃப்டாக இந்திய அரசியல் அமைப்புச் சட்ட புத்தகம்! மத்தபடி நினைத்தபடியே ஊரே பேசும் அளவிற்கு வித்தியாசமாக, புதுமையாக தங்களது திருமணத்தை நடத்தி முடித்து விட்டார் சுஷ்மா. இவர்களது கல்யாணத்திற்கு வந்தவர்கள் மணமக்களைவிட புரோகிதர் மகேஸ்வரியைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கேன். பெண்கள் தங்களுடைய அபரிமிதமான தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் இப்போது எல்லாத் துறையிலும் தங்களது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். இத்தனை நாட்களாக, ‘அட இதை மட்டும் இன்னமும் பெண்கள் செய்யவில்லையே’ என்று இருந்த குறையையும் தற்போது போக்கி விட்டனர். இனி நிறைய திருமணங்களில் பெண் புரோகிதர்களை பார்க்கலாம் என நம்பலாம்.
Thanks yourstory.

#WOMEN_PRIEST  #பெண்_புரோகிதர்


செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்தி கொள்வது?


தன்னம்பிக்கையை எப்படி அதிகப்படுத்தி கொள்வது?

வானம் நம்மிடமே

1) முதலில் நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள். தலையை குனிந்து கொண்டு நடப்பது மற்றவர் கண்களை நேருக்கு நேராக பார்க்காமல் தவிர்ப்பது முதலில் avoid செய்யுங்கள்.

2) எதிர்மறையான எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். Always Positive thinking

3) புன்னகை எப்போதும் இருக்கட்டும், உள்ளத்தில் எந்த கவலை இருந்தாலும்....

4) எதற்கும் பயப்படாதீர்கள். நம்மை மீறி எதுவும் நடக்காது என்று உறுதியாக நம்புங்கள்.

5) உடை அணிவதில் கவனம் தேவை. எளிமையான உடையாக இருந்தாலும் சுத்தமாக அணியுங்கள். கசங்கிய ஆடையோடு ஊர்வலம் வராதீர்கள்.

6) உங்களிடம் நீங்களே பேசி உங்களை உற்சாகபடுத்தி கொள்ளுங்கள்.

நான் தன்னம்பிக்கை மிக்கவன்
நான் சக்தி மிக்கவன்
நான் சாதனையாளன்
நான் அன்பு மிக்கவன்
என்னால் முடியும் முடியும் முடியும்
வெற்றி நிச்சயம்.....

அடிக்கடி இதை உங்களுக்குள் சொல்லி கொள்ளுங்கள்.

7) சின்னஞ் சிறு இலக்குகளை தினமும்நிர்ணயம் செய்யுங்கள். செய்து முடித்தவுடன் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். eg... சரியான நேரத்திற்கு செல்லுதல்... இனிய சொற்களை பேசுதல்... நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளல்... மற்றவர்க்கு உதவுவதல் etc etc

8) வாழ்க்கை ஒரு விளையாட்டு.ஜெயித்து காட்டுவேன்... என்று சங்கற்பம் செய்து கொள்ளுங்கள்.

9) நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.

10)Ego, Jealous, Fear, Hasitation எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூர போடுங்கள்.

ஒரே நாளில் எல்லாம் முடியாது. சிறுக சிறுக பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

இந்த 10 Pointsம் தெளிவாக எழுதி வைத்து கொண்டு, தினமும் ஒரு முறை படியுங்கள். மனதில் பதிய வைக்க வேண்டும்

ப(பி)டித்ததை பகிர்கிறேன் உங்கள் சிந்தனைக்கு (தெரியாத ரகசியம்

ப(பி)டித்ததை பகிர்கிறேன் உங்கள் சிந்தனைக்கு (தெரியாத ரகசியம்)

ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, “இதற்கு மேல் என்னால் முடியாது…’ என்று சொல்பவன் சராசரி. “என் லட்சியத்தை எட்டும் வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்…’ என்று சொல்பவன், சாதனையாளன்.

தோல்வியால் துவண்டவர்களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.

தடைக்கற்களை, முன்னேற்றத்துக்கான படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். “வீழ்ந்தோம்’ என்று இந்த உலகம், நம்மைப் பற்றிச் சொல்லும் போது, அதே உலகம், “வென்றோம்’ என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்.

தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில், சில தோல்வியைத் தழுவலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

உடனுக்குடன் பலன் எதிர்பார்ப்பது, உடனே பலன் கிடைக்காவிட்டால், சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டு, ஓடி ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால், பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. பிரச்னையின் தன்மைக்கேற்ப, தீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கிடைக்கலாம்.

விடாமுயற்சியால், வரலாற்றில் இடம் பெற்ற சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:

சிறுபிள்ளையாக இருக்கையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வில்மாருடாப் என்ற பெண்மணி, 1960 ஒலிம்பிக்கில், ஓட்டப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். ஐந்து வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஷெல்லிமான், 1956 ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கம் பெற்றார்.

ஒரு ஊருக்குச் செல்வதற்கு, பல வழிகள் இருப்பது போல, நம்முடைய இலக்கை அடைவதற்கும், பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால், மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும். மிகப் பிரபலமான விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், முட்டாள் தனத்துக்கு விளக்கம் கேட்ட போது, “ஒரே வேலையை, திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனம்…’ என்றாராம்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல், காது கேளாத தன் மனைவிக்கு, காது கேட்பதற்காக கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தான், தொலைபேசியைத் தற்செயலாக கண்டுபிடித்தார்.

உங்களுக்குப் புதிய வாய்ப்பு, பிரச்னை உருவத்தில் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நமக்குத் தோல்வியோ, பின்னடைவோ வரும் போது, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ… “தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? நான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனிமேல் இந்த மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’

சாதனையாளர்கள், தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவதில்லை. தான் இழந்த நாட்டை மீட்கப் போராடிய ராபர்ட் புரூஸ், இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் போன்ற பலரும், தங்களின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. தேசிய கவி பாரதியாரும், கவிஞர் கண்ணதாசனும், தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டியில், முதல் பரிசு பெறவில்லை.

அமெரிக்கா ஜனாதிபதியாகி, அடிமைத்தனத்தை ஒழித்து, வரலாறு படைத்த ஆபிரகாம் லிங்கன், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், ஐந்து முறை பல்வேறு தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தங்கள் பிள்ளை சரியாகப் படிக்கவில்லையே என்று புலம்பும் பெற்றோருக்கு, விஞ்ஞானி எடிசனின் நிஜவாழ்க்கைக் கதை தைரியமூட்டும். மின்சார விளக்கு உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான விஞ்ஞானி, தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, காது சரிவரக் கேட்காது.
மூன்று மாதமே பள்ளியில் படித்தவர். “அடிமக்கு’ என்று, ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு, பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார்.

ஆயிரம் முறை புதுப்புது வழிகளில் முயற்சி செய்தும், மின்சார விளக்கைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப் பார்த்து, மற்றவர்கள் கிண்டல் செய்த போது, “நான் ஆயிரம் வழிகளில் மின்சார விளக்கு எரியாது என்ற உண்மையைக் கண்டுபிடித்தேன் அல்லவா?’ என்று தமாசாகப் பதிலளித்தார். தன், 67 வயதில், இவரது ஆராய்ச்சி மையம், தீ விபத்தில் சாம்பலாகியது. அப்போது, அவர், “பரவாயில்லை, கடவுள் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளார்…’ என்று கூறினார். விடா முயற்சிக்கும், மனவலிமைக்கும் எடிசனைத் தவிர, வேறு யாரை உதாரணமாகச் சொல்லுவது?

பீதோவன் காது கேளாதவர். இளம் வயதில், இசை ஞானம் இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்டவர். ஆனால், பிற்காலத்தில் உலகிலேயே உன்னதமான இசையை உருவாக்கியவர் என்று புகழப் பட்டார்.

மிகச் சிறந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ப்ராங்ளின் ரூஸ்வெல்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்காவை வழி நடத்தி வெற்றி கண்டார்.
நேருவுக்கு பின், இந்தியப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, பள்ளிக்குச் செல்வதற்கு தினமும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆற்றின் குறுக்கே, பாலம் இல்லாததால், புத்தகத்தையும், கழற்றிய உடையையும், தலைக்கு மேல் சுமந்தபடி நீச்சலடித்து, தினமும் அக்கரையை அடைந்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டு, பள்ளிக்குச் சென்றிருக்கிறார். இப்படிச் சொல்ல ஆரம்பித்தால், சுதந்திர இந்தியாவில், அடி மட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மிகச் சிறந்த சாதனையாளர்கள் கூட, ஆரம்ப காலத்தில் தடுக்கி விழுந்திருக்கின்றனர். “போர்டு’ என்ற கார் கம்பெனியை நிறுவி, புதிய கார்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கோடீஸ்வரரான ஹென்றி போர்டு, முதல் காரை உருவாக்கும் போது, ரிவர்ஸ் கியரைப் பொருத்த மறந்து விட்டார்.

தோல்வியடைந்து விடுவோமோ, அவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தே, பலர் முயற்சி செய்வதேயில்லை.

இன்று, உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில் கேட்சும், ஆப்பிள் நிறுவனத்தின் மூலம், கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகிய இருவரும், கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டவர்கள். பில்கேட்ஸ், தன் நண்பரோடு, வீட்டில் கார் நிறுத்துமிடத்தில் ஆரம்பித்த நிறுவனம் தான், உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட்.

இந்திய கம்ப்யூட்டர் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி, கையிலிருந்த வேலையை விட்டு விட்டு, இந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னணிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தில், கம்ப்யூட்டர் தொழில் துவங்க நினைத்தார்.

இவரது ஆரம்பகால முயற்சி, தோல்வியைத் தழுவியது. இறுதியில், தொழில் துவங்க கையில் பணமில்லாமல் திண்டாடிய போது, மனைவி தன் நகையை விற்றுக் கொடுத்த, 10,000 ரூபாயை வைத்து, மற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம் தான், இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.

தனக்கு நிறைய திறமையிருந்தும், அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகழின் உச்சிக்குச் சென்ற பலர், ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல், போராட நேர்ந்திருக்கிறது.

ஒரு துறையில் சாதனை படைக்க, இளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆர்வமும், ஈடுபாடும், திறமையும், உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம்.
மிகச்சிறந்த சாதனையாளர்கள் துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும், அவர்களுடைய தன்னம்பிக்கையும், கம்பீரமும் சற்றும் குறைவதில்லை.

எல்லா தோல்விகளும், அனைவரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. உதாரணமாக, தேர்வு, போட்டி, வியாபாரம் மற்றும் காதலில் தோல்வியடைந்தவர்களில், தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு ரகம். ஆனால், அவர்களை விட மோசமான தோல்வியடைந்தவர்கள், “பரவாயில்லை, எனக்கு இது ஒரு நல்ல பாடம்…’ என்று ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்பவர்கள் மறு ரகம். நாம் இந்த இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம்! எப்போதெல்லாம் பிரச்னை மற்றும் தோல்வியைச் சந்திக்க நேர்கிறதோ, அப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம், “அதனால் என்ன? அடுத்து என்ன?’
நல்ல வழி தானாகவே பிறக்கும்.

மனதை சலனப்படுத்திய படம் இது.


மனதை சலனப்படுத்திய படம் இது.
               
அந்த வரிசையில் நானும் நிற்கிறேன் நீங்களும் நிற்கின்றீர்கள்.

எந்த இலக்குமில்லாமல் செல்லும்
வழிப்போக்கனின் பயணத்தை , ஒரு மரணம் வந்துதான் நிறுத்தும்!

உங்களுக்குத் தெரியுமா நீங்கள் சாகப்போகிறீர்கள். இது அபசகுனமல்ல, உங்களின் நிகழ்காலத்தை கவலையின்றி மாற்றும் நிகழ்வே மரணம்.

நீங்கள் காபி குடித்துக்கொண்டிருக்கும்,  கணிப்பொறியை இயக்கிக் கொண்டிருக்கும்,
கண் இமைத்துக் கொண்டிருக்கும்,
ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த  “வரிசையில்”  நின்றுகொண்டிருக்கிறோம்.

நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.

நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.

 எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.

தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.

பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.

உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.

சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.

சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.

சமாதானம் செய்யுங்கள்.

நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .

மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை .

கடலூர் மாவட்ட சிறப்புகள்



கடலூர் மாவட்ட சிறப்புகள்

கடலூர் மாவட்ட வரலாறு
முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது.

பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எல்லைகள்
கடலூர் மாவட்டம், 3,564 சதுர.கி.மீ. பரவியுள்ளது. வடக்கில் விழுப்புரம் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கே நாகப்பட்டினம், அரியலூர்,மாவட்டமும், மேற்கே பெரம்பலூர் மாவட்டமும் உள்ளது.

வரலாறு
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன, கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் , முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்படுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.

ஆங்கிலேய ஆட்சி
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது.

இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (நுஐனு Pயசசலள டுவன (1780)) சரக்குகள் கடலு}ர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

பெயர்க்காரணங்கள்
புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆறுகள்

கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

அணைக்கட்டுகள்
 திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன. வீரணாம் ஏரி சோழர்களால் கட்டப்பட்ட ஏரியாகும்.

அலையாத்திக் காடுகள்
 பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (ஆயபெசழஎந) உள்ளன.

தொழில்வளம்
நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது.

சுற்றுலாத் தலங்கள்
 மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கி.பி.1110 ல் முதலாம் குலோத்துங்கன் (சோழர்களால் கட்ட பட்டது ) பிச்சாவரம், கெடிலத்தின் கழிமுகம், கடலூர்தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில் மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது.

சிதம்பரம்
சிதம்பரத்தை தில்லை என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது. சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது.படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால் இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம். நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார மண்டபங்களில் நாயக்கர் கால ஓலியங்களைக் காணலாம். இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம்.

பிச்சாவரம்
சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலாதுளமாகும். கல்கத்தாவிலிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி

சுற்றிப்பார்க்கத் தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம். காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும் உள்ளன. இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது. 

பாடலீஸ்வரர் கோயில்
கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூரில் அமைந்துள்ள தொன்மையான சிவத் தலமிது.இங்குள்ள பிடாரியம்மன் சன்னதியும் பிரபலமானது.பிரம்மோத்ஸவம் சிறப்பாக கொண்டாடபடுகிறது.அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, ‘சொற்றுணை வேதியன்’ என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

வடலூர்
கடலூர் – விருத்தாசலம் சாலையில் வடலூர் அமைந்துள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோணமுடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் ‘ஒளி வழிபாடு’ நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலு}ருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் சித்திவளாகம் என்பது பெயர்.

வெள்ளி கடற்கரை
கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டை செயிண்ட் டேவிட் உள்ளது.

முக்கிய இடங்கள்
வெள்ளி கடற்கரை (கடலூர்)
செயிண்ட் டேவிட் கோட்டை
பாடலீஸ்வரர் கோயில்
திருவந்தீபுரம் சுவாமி கோயில்
திருவந்தீபுர ஹையக்றேவேர் கோயில்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நெய்வேலி
 சிதம்பரம் நடராஜர் கோவில்
பிச்சாவரம், உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்
திருமுடம் பூவராக சுவாமி கோயில்
வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை
குறிஞ்சிபடி சுப்றை சுவாமிகள் கோயில்
வேங்கடம்பெட் வேனுகோபல சுவாமி கோயில்
திருவதிகை வீரடநேச்வர் கோயில்
திருச்சோபுரம் சுவாமி கோயில் சிறப்புகள் : கடலூர் மாவட்டம் ( தென்னாற்காடு )
பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம்.
சங்ககால பெயர் கூடலூர் .
சோழநாட்டு படைவீரர்களின் கோட்டை
பிற்கால பல்லவர் என்றும், சோழர் சம்மந்தி என்றும் பெருமை கொண்ட காடவர் மன்னர்கள் பிறப்பிடம்.
ஆதிகாலம் முதல் சோழர்களுக்கு முடிசூடும் பேரு பெற்ற இடம்.
தில்லை நடராஜன் கோவில் உள்ள ஊர் . ஈசன் சுயம்பாக காட்சியளிக்கிறார். ஈசன் பிறந்த இடம் என்றும் புகழப்பட்ட இடம் இது.
சரஸ்வதிக்கே ஞானம் தரும் ஹைகிரீவர் உள்ள ஊர்.
முருகர் சுயம்பாக காட்சி அளிக்கும் கொளஞ்சியப்பன் இந்த ஊரில் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் முருகன் வில்லோடு காட்சியளிக்கும் வில்லுடையான்பட்டு உள்ளது.
 பண்ருட்டி ஊர் ஆனது பலாப்பழத்திற்கு பெயர்பெற்றது.
பலா, முந்திரிகளுக்கு சிறப்பு பெயர்பெற்ற ஊர்
இந்தியாவின் மாபெரும் நிலக்கரி சுரங்கம் நெய்வேலியில் உள்ளது.
 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பிச்சாவரம், உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்.
சோழர்கள் வழிவந்தவர்கள் பிச்சாவரத்தில் உள்ளனர்.
 வள்ளலார் பிறந்த ஊர் .
திருப்பாபுலியூர் , திருவதிகை , திருவந்திபுரம் , ஸ்ரீமுஷ்ணம் போன்ற எண்ணற்ற புண்ணியஸ்தலங்கள் உடையது .
வீராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் காட்டுமன்னார்கோயில். வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்ட ஏரியாகும்.
 சிறைவாசம் சென்ற முதல் உப்பு சத்தியாக்ரஹம் போராட்ட பெண்மணி திரு.அஞ்சலை அம்மாள் பிறந்த ஊர்
கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருகிறது. இங்கு நீர்வளம், ஏரிகள், கனிவளம், வேளாண்மை, ஆலைகள், மின்சார தொழில்,கடல் சார்ந்த தொழில்கல்ளும் , செயிண்ட் டேவிட் கோட்டை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்ற பல சுற்றுலா தளங்களும் அமைந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தின் சிறப்புகள்


வேலூர் மாவட்டத்தின் சிறப்புகள்

வரலாறு

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமான (1806) சிப்பாய் கலகத்தின் முதல் பொறி இம்மாவட்டத் தலைநகர் வேலூரில் இருந்து கிளம்பியது. வடாற்காடு-அம்பேத்கர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 1989, செப்டம்பர் 30 முதல் வேலூர் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் பழங்கால நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பாலாற்றின் கரையில் வேலூர் அமைந்துள்ளது. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தான் ஆகியோர் வேலூரை ஆண்டுள்ளனர். 1606-1672 விஜயநகர பேரரசின் காலத்தில் வேலூர் நகரம் அவர்களின் தலைமையிடமாக செயல்பட்டது. 17ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடக போரின் போது வேலூர் கோட்டை சிறந்த, உறுதியான படை அரணாக விளங்கியது. தலைநகரை உருவாக்குவதிலும் அரசுகளை உருவாக்குவதிலும் இந்த மாவட்டத்தில் ஏறக்குறைய 200 ஆண்டுகளாக தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தென் ஆற்காடு, வட ஆற்காடு பகுதிகள் 1810ம் ஆண்டில் முகலாயர்களின் ஆட்சி இறுதியில் வெளியிடப்பட்ட அரசியல் வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன. 1908ல் இந்த பகுதிகள் தென் ஆற்காடு, வட ஆற்காடு என இரண்டு மாவட்டங்களாக இருந்தது. தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூர் பகுதி முதலில் வட ஆற்காடு மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது. இந்த பகுதி ஆங்கிலேயர்களின் முக்கிய ராணுவ மையமாக இருந்தது. 1911ம் ஆண்டில் வேலூர், வட ஆற்காட்டின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதலில் கைப்பற்றிய இடம் ஆற்காடு. வேலூர் சிப்பாய் கலகம் மிகவும் பிரசித்தி பெற்றது. 1806ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் இந்திய சுதந்திர போராட்டத்திற்கான ஆரம்பம் ஆகும். வேலூர் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகளையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களையும் கண்கவர் சுற்றுலாதலங்களையும், பக்தி பரவசமூட்டும் ஆன்மிக திருக்கோயில்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வு மையம் இங்கு உள்ளது. காவலூர், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி, வேலூர் கோட்டை மற்றும் அகழி, வளர்ந்து வரும் வனவிலங்கு சரணாலயமான அமிர்திகாடு ஆகியவை மாவட்டத்தின் சிறப்புகள். சென்னையிலிருந்து 130 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் வேலூர் அமைந்துள்ளது.

அமைவிடம்
இதன் வடக்கே ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டமும், திருவள்ளூவர் மாவட்டத்தின் சிறுபகுதியும்; தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும்; மேற்கில் தருமபுரி மற்றும் சித்தூர் (ஆந்திரம்) மாவட்டங்களும்; கிழக்கில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

சட்டசபைத் தொகுதிகள்-12
அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு(தனி), வாணியம்பாடி, நாட்ராம் பள்ளி, திருப்பத்தூர், அணைக்கட்டு, வேலூர்.

பாராளூமன்றத் தொகுதிகள்-3
வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர்.

வழிபாட்டிடங்கள்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், இரத்தினகிரி முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் ஆலையம், வள்ளிமலைக் கோயில், மகாதேவமலை.

விழாக்கள்
வேலூர் சித்திரை பெளர்ணமி புஷ்பப் பல்லக்கு, குடியாத்தம் கங்கையம்மன் திருவிழா, மேணீஜூன் ஏலகிரி கோடைவிழா.

சுற்றுலாத்தலங்கள்
ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில்

ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில் முக்கிய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஸ்ரீநாராயணி பீடத்தினால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. ஆறு வருடங்களில், 600 கோடி ரூபாய் செலவில், 55 ஆயிரம் சதுர அடியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கராகும். வேலூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமாக உள்ள இந்த கோயில் மனதிற்கு அமைதி தருவதாக அமைந்துள்ளது.

அருங்காட்சியகம்

வேலூர் கோட்டையில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலைப்பொருட்கள், கற்சிலைகள், கல்வெட்டுகள், ஓவியங்கள், முற்காலத்தில் அச்சிட்ட நாணயங்கள், ஆதிகால மனிதர்கள் வாழ்க்கை முறை, வரலாற்று சின்னங்கள் பற்றிய பொருட்காட்சிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன

முத்துமண்டபம்

முத்துமண்டபம் வேலூர் - காட்பாடி சாலை பழைய பாலத்தின் அருகே பாலாற்றின் தென்கரையில் உள்ளது. இலங்கையில் கண்டியை ஆண்ட விக்கிரம ராஜசிங்கே வேலூர் கோட்டையில் சிறைவாசத்திற்கு பின் இறந்தார். அவரது சமாதியும் அவரது உறவினர் சிலரின் சமாதியும் இங்கு உள்ளது.

சி.எம்.சி. மருத்துவமனை

வேலூரில் டாக்டர் ஜடாஸ்கடர் சி.எம்.சி.யை தொடங்கி 100 ஆண்டுகள் ஆகி விட்டன. ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற புகழ்பெற்ற மருத்துவனையாக இது திகழ்கிறது. உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதிநவீன கருவிகளைக் கொண்டு இங்கு எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம்

வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இவ்வாலயம் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் அழகுடனும், கலை அம்சத்துடனும் ஓவியங்களும் சிற்பங்களும் அமையப் பெற்றுள்ளன. வருடம் முழுவதும் அனைத்து விழாக்களையும் பக்தர்கள் சிறப்புடன் தரிசித்து அருள்பெற்று வருகின்றனர்.

பெரிய மசூதி

வேலூர் பாக்கியாத் சாலையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த உலகப்புகழ்பெற்ற பெரிய மசூதி உள்ளது.

இம்மசூதியில் 2000 பேர் அமர்ந்து தொழுகை செய்ய முடியும். அதன் பின்புறம் ஜாமி ஆ பாக்கியாத்துஸ்ஸா லிஹாத் அரபுக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் முதல் அரபுக்கல்லூரி. இக்கல்லூரியை தென்னிந்தியாவின் இஸ்லாமியத்தாய் கல்லூரி என்கின்றனர்.

ஏலகிரி மலை

தமிழகத்தில் உள்ள முக்கிய மலைவாழ் சுற்றுலா சிறப்பிடங்களில் ஒன்று ஏலகிரி மலை. உள்ளூர் மக்களால் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. வேலூரில் இருந்து 91 கி.மீ தொலைவில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஏலகிரி மலையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது.

இங்குள்ள புங்கனூர் ஏரி, படகு சவாரி, பூங்கா மலையேற்ற வழித்தடங்கள், வேலவன் கோயில் , தொலைநோக்கு மையம், மூலிகை பண்ணை, இயற்கை எழில் மிக்க மலைப்பகுதி ஆகியவை சிறந்த பொழுதுபோக்கு மையமாக திகழ வழிவகுக்கிறது. இங்கு தோட்டக்கலைத்துறை மூலம் அபிவிருத்திப்பணிகளும் வனத்துறை மூலம் மிருக காட்சி சாலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இங்கு யாத்ரி நிவாஸ் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது இயற்கை எழில் மிக்க, காணத்தக்க சுற்றுலா ஸ்தலமாகும்.

வேலூர் கோட்டை மற்றும் அகழி

சுற்றுலாபயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கும் வகையில் வேலூரின் நடுவே அமைந்துள்ள கோட்டை கி.பி.16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் விஜயநகரப் பேரரசின் சதாசிவ தேவ மகாராயரின் கீழ் பணிபுரிந்த சின்ன பொம்மு நாயக்கரால் நிறுவப்பட்டது. விஜயநகரப் பேரரசு, இஸ்லாமிய பேரரசு, மராட்டிய பேரரசு, மற்றும் ஆங்கிலேயப் பேரரசுடன் பல்வேறு காலகட்டங்களில் தொடர்புடைய வரலாற்றுப்புகழ் பெற்ற கோட்டையாக இருந்து வந்துள்ளது.

ஆங்கிலேயர் கைக்கு இக்கோட்டை வந்தபொழுது, ஸ்ரீரங்கப்பட்டண வீழ்ச்சிக்குப் பிறகு திப்புசுல்தானின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு திப்பு மகாலில் அடைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட 1806ம் ஆண்டு நடைபெற்ற முதல் சிப்பாய்க்கலகம் இங்கு ஏற்பட்டது. ஆங்கிலேயரை எதிர்த்த இலங்கையில் உள்ள கண்டியை ஆண்ட மன்னன் விக்ரம் ராஜசிங்கே இக்கோட்டையின் உள்ளே உள்ள கண்டி மகாலில் சிறை வைக்கப்பட்டார் ஆகியவை வேலூர் கோட்டையின் சிறப்புகளாகும். நாற்கரவடிவில் அமைந்துள்ள எழில் மிக்க இக்கோட்டையினுள் திப்பு மகால், ஹைதர் மகால், பேகம் மகால், பாதுஹா மகால், கண்டி மகால், இந்திய தொல்பொருள் துறை அருங்காட்சியகம், கலையம்சத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1846ல் கட்டப்பட்ட அழகிய புனித ஜான் தேவாலயம், ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்ட சதுர வடிவ மசூதி, தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன. அகழியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துடுப்பு படகு சவாரி கட்டணம் பெரியவர் ஒருவருக்கு ரூ10வீதமும், சிறியவருக்கு ரூ.5 வீதமும், இரண்டு பேருக்கான பெடல் படகு சவாரி ரூ.50 வீதமும், வாரநாட்களில் காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 3மணி முதல் 7 மணி வரையிலும், வாராந்திர நாட்களில் மாலை 3 மணி முதல் 7 மணி வரையிலும் இயக்கப்படுகிறது.

சைதானிபீபி தர்கா

வேலூர் கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது சைதானிபீபி தர்கா. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தீர்க்கும் மருத்துவராக வணங்கி வருகிறார்கள். மத பேதமில்லாமல் அனைவரும் வந்து வணங்கும் இடம்.

விண்ணரசி பேராலயம்

வேலூர் ரவுண்டானா அருகில் கட்டப்பட்டுள்ளது விண்ணரசி பேராலயம். இது 115 அடி உயரமும், 21 ஆயிரம் சதுர அடி அகலமும் கொண்டிருக்கிறது. ஆசிய கண்டத்திலேயே அழகுமிக்க பேராலயமாகும். அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழித்துணை விநாயகர் ஆலயம், செதுவாலை

வேலூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் செதுவாலை என்னும் இடத்தில் இருந்து வடக்கே ஒரு கி.மீ., தூரத்தில் வழித்துணை நாதர் கோயிலைக் காணலாம். இறைவன் கர்நாடக மாநில மிளகு வியாபாரிக்கு காஞ்சிபுரம் வரை வழித்துணையாக சென்ற போது இவ்விடத்தில் இறைவனுடைய பாதங்கள் பட்டதால் அதன் நினைவாக உருவானது இத்திருக்கோயிலாகும். கார்த்திகை கடை ஞாயிறு திருவிழா அன்று பெண்கள் புத்திரபாக்கியம் வேண்டி பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தனை செய்வது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.

அமிர்தி காடு

வேலூரில் இருந்து தெற்கே 25 கி.மீ., தொலைவில் இயற்கை வனப்புடன் கூடிய பசுமையான வனப்பகுதி அமிர்தி காடு. இதில் ஒரு பகுதி சுற்றுலா இடமாகவும், மறு பகுதி பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயமாகவும் வளர்ந்து வருகிறது. பருவ காலங்களில் இங்குள்ள சிற்றோடை மற்றும் நீர்வீழ்ச்சி காண்போரை கவர்கிறது.

பாலமதி மலை

வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1800 சுற்றுலா இடம் பாலமதி மலை இக்குன்றில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. எட்டு கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பயணம் சுற்றுலாப்பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

டில்லி கேட்

ஆற்காடு பாலாற்றங்கரையில் செய்யாறு பைபாஸ் ரோட்டில் ஒரு நுழைவுவாயிலுக்கு டில்லி கேட் என பெயரிடப்பட்டுள்ளது. 1751ல் ஆற்காடு நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியை கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது. அப்போது ஆற்காட்டுக்குள் நுழைபவர்கள் இவ்வழியாகத்தான் வரவேண்டியிருந்தது.

ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம்

விரிஞ்சிபுரம் வேலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் சிற்ப கலைக்கும், ஓவிய கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இங்குள்ள சிம்மக்கேணி காண்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. இக்கோயில் அருணகிரிநாதன் மற்றும் திருமூலரால் பாடல் பெற்றது.

பள்ளிகொண்டா

வேலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைணவ திருத்தலம் பள்ளிகொண்டா. இங்குள்ள உத்திர ரங்கநாதர் திருக்கோயில் தொன்மை சிறப்பு மிக்க கோயிலாக விளங்கி வருகிறது. பாண்டியர் கால கட்டடப் பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி

வேலூரில் இருந்து 102 கி.மீ தொலைவிலும் திருப்பத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும், ஏலகிரி மலையின் பின்புறம் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதன் அருகில் லிங்க வடிவ முருகன் ஆலயம் உள்ளது. பருவகாலங்களில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது.

சிறப்புச் செய்திகள்
ஆசியாவிலேயே புகழ் பெற்ற சி.எம்.சி. மருத்துவமனை; உலகச் சிறப்புமிக்க எஸ்.எல்.ஆர். மற்றும் டி.சி. தொழுநோய் ஆய்வு மையம், கரிகிரி; ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலை நோக்கிமையம், காவனுர்.

வேலூர் சுற்றுலா

ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில்
Hotel image 

 ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில் முக்கிய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஸ்ரீநாராயணி பீடத்தினால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. ஆறு வருடங்களில், 600 கோடி ரூபாய் செலவில், 55 ஆயிரம் சதுர அடியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கராகும். வேலூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமாக உள்ள இந்த கோயில் மனதிற்கு அமைதி தருவதாக அமைந்துள்ளது.
அருங்காட்சியகம்
Hotel image
வேலூர் கோட்டையில் மாவட்ட அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலைப்பொருட்கள், கற்சிலைகள், கல்வெட்டுகள், ஓவியங்கள், முற்காலத்தில் அச்சிட்ட நாணயங்கள், ஆதிகால மனிதர்கள் வாழ்க்கை முறை, வரலாற்று சின்னங்கள் பற்றிய பொருட்காட்சிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன
முத்துமண்டபம்
முத்துமண்டபம் வேலூர் - காட்பாடி சாலை பழைய பாலத்தின் அருகே பாலாற்றின் தென்கரையில் உள்ளது. இலங்கையில் கண்டியை ஆண்ட விக்கிரம ராஜசிங்கே வேலூர் கோட்டையில் சிறைவாசத்திற்கு பின் இறந்தார். அவரது சமாதியும் அவரது உறவினர் சிலரின் சமாதியும் இங்கு உள்ளது.
சி.எம்.சி. மருத்துவமனை
Hotel image
வேலூரில் டாக்டர் ஜடாஸ்கடர் சி.எம்.சி.யை தொடங்கி 100 ஆண்டுகள் ஆகி விட்டன. ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற புகழ்பெற்ற மருத்துவனையாக இது திகழ்கிறது. உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதிநவீன கருவிகளைக் கொண்டு இங்கு எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
Hotel image
வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இவ்வாலயம் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் அழகுடனும், கலை அம்சத்துடனும் ஓவியங்களும் சிற்பங்களும் அமையப் பெற்றுள்ளன. வருடம் முழுவதும் அனைத்து விழாக்களையும் பக்தர்கள் சிறப்புடன் தரிசித்து அருள்பெற்று வருகின்றனர்.
பெரிய மசூதி
Hotel image
வேலூர் பாக்கியாத் சாலையில் 150 ஆண்டு பழமை வாய்ந்த உலகப்புகழ்பெற்ற பெரிய மசூதி உள்ளது.

இம்மசூதியில் 2000 பேர் அமர்ந்து தொழுகை செய்ய முடியும். அதன் பின்புறம் ஜாமி ஆ பாக்கியாத்துஸ்ஸா லிஹாத் அரபுக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் முதல் அரபுக்கல்லூரி. இக்கல்லூரியை தென்னிந்தியாவின் இஸ்லாமியத்தாய் கல்லூரி என்கின்றனர்.
ஏலகிரி மலை
Hotel image
தமிழகத்தில் உள்ள முக்கிய மலைவாழ் சுற்றுலா சிறப்பிடங்களில் ஒன்று ஏலகிரி மலை. உள்ளூர் மக்களால் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. வேலூரில் இருந்து 91 கி.மீ தொலைவில் திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஏலகிரி மலையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது.

இங்குள்ள புங்கனூர் ஏரி, படகு சவாரி, பூங்கா மலையேற்ற வழித்தடங்கள், வேலவன் கோயில் , தொலைநோக்கு மையம், மூலிகை பண்ணை, இயற்கை எழில் மிக்க மலைப்பகுதி ஆகியவை சிறந்த பொழுதுபோக்கு மையமாக திகழ வழிவகுக்கிறது. இங்கு தோட்டக்கலைத்துறை மூலம் அபிவிருத்திப்பணிகளும் வனத்துறை மூலம் மிருக காட்சி சாலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இங்கு யாத்ரி நிவாஸ் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது இயற்கை எழில் மிக்க, காணத்தக்க சுற்றுலா ஸ்தலமாகும்.
வேலூர் கோட்டை மற்றும் அகழி
Hotel image
சுற்றுலாபயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கும் வகையில் வேலூரின் நடுவே அமைந்துள்ள கோட்டை கி.பி.16ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் விஜயநகரப் பேரரசின் சதாசிவ தேவ மகாராயரின் கீழ் பணிபுரிந்த சின்ன பொம்மு நாயக்கரால் நிறுவப்பட்டது. விஜயநகரப் பேரரசு, இஸ்லாமிய பேரரசு, மராட்டிய பேரரசு, மற்றும் ஆங்கிலேயப் பேரரசுடன் பல்வேறு காலகட்டங்களில் தொடர்புடைய வரலாற்றுப்புகழ் பெற்ற கோட்டையாக இருந்து வந்துள்ளது.   
ஆங்கிலேயர் கைக்கு இக்கோட்டை வந்தபொழுது, ஸ்ரீரங்கப்பட்டண வீழ்ச்சிக்குப் பிறகு திப்புசுல்தானின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு திப்பு மகாலில் அடைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட 1806ம் ஆண்டு நடைபெற்ற முதல் சிப்பாய்க்கலகம் இங்கு ஏற்பட்டது. ஆங்கிலேயரை எதிர்த்த இலங்கையில் உள்ள கண்டியை ஆண்ட மன்னன் விக்ரம் ராஜசிங்கே இக்கோட்டையின் உள்ளே உள்ள கண்டி மகாலில் சிறை வைக்கப்பட்டார் ஆகியவை வேலூர் கோட்டையின் சிறப்புகளாகும். நாற்கரவடிவில் அமைந்துள்ள எழில் மிக்க இக்கோட்டையினுள் திப்பு மகால், ஹைதர் மகால், பேகம் மகால், பாதுஹா மகால், கண்டி மகால், இந்திய தொல்பொருள் துறை அருங்காட்சியகம், கலையம்சத்துடன் கூடிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1846ல் கட்டப்பட்ட அழகிய புனித ஜான் தேவாலயம், ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்ட சதுர வடிவ மசூதி, தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் ஆகியவை அமைந்துள்ளன. அகழியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துடுப்பு படகு சவாரி கட்டணம் பெரியவர் ஒருவருக்கு ரூ10வீதமும், சிறியவருக்கு ரூ.5 வீதமும், இரண்டு பேருக்கான பெடல் படகு சவாரி ரூ.50 வீதமும், வாரநாட்களில் காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 3மணி முதல் 7 மணி வரையிலும், வாராந்திர நாட்களில் மாலை 3 மணி முதல் 7 மணி வரையிலும் இயக்கப்படுகிறது.

சைதானிபீபி தர்கா
வேலூர் கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது சைதானிபீபி தர்கா. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தீர்க்கும் மருத்துவராக வணங்கி வருகிறார்கள். மத பேதமில்லாமல் அனைவரும் வந்து வணங்கும் இடம்.
விண்ணரசி பேராலயம்
வேலூர் ரவுண்டானா அருகில் கட்டப்பட்டுள்ளது விண்ணரசி பேராலயம். இது 115 அடி உயரமும், 21 ஆயிரம் சதுர அடி அகலமும் கொண்டிருக்கிறது. ஆசிய கண்டத்திலேயே அழகுமிக்க பேராலயமாகும். அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழித்துணை விநாயகர் ஆலயம், செதுவாலை
வேலூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் செதுவாலை என்னும் இடத்தில் இருந்து வடக்கே ஒரு கி.மீ., தூரத்தில் வழித்துணை நாதர் கோயிலைக் காணலாம். இறைவன் கர்நாடக மாநில மிளகு வியாபாரிக்கு காஞ்சிபுரம் வரை வழித்துணையாக சென்ற போது இவ்விடத்தில் இறைவனுடைய பாதங்கள் பட்டதால் அதன் நினைவாக உருவானது இத்திருக்கோயிலாகும். கார்த்திகை கடை ஞாயிறு திருவிழா அன்று பெண்கள் புத்திரபாக்கியம் வேண்டி பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தனை செய்வது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.
அமிர்தி காடு
வேலூரில் இருந்து தெற்கே 25 கி.மீ., தொலைவில் இயற்கை வனப்புடன் கூடிய பசுமையான வனப்பகுதி அமிர்தி காடு. இதில் ஒரு பகுதி சுற்றுலா இடமாகவும், மறு பகுதி பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயமாகவும் வளர்ந்து வருகிறது. பருவ காலங்களில் இங்குள்ள சிற்றோடை மற்றும் நீர்வீழ்ச்சி காண்போரை கவர்கிறது. 
பாலமதி மலை
வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1800 சுற்றுலா இடம் பாலமதி மலை இக்குன்றில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. எட்டு கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பயணம் சுற்றுலாப்பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
டில்லி கேட்
ஆற்காடு பாலாற்றங்கரையில் செய்யாறு பைபாஸ் ரோட்டில் ஒரு நுழைவுவாயிலுக்கு டில்லி கேட் என பெயரிடப்பட்டுள்ளது. 1751ல் ஆற்காடு நவாப்பிடம் இருந்து ராபர்ட் கிளைவ் ஆட்சியை கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டுள்ளது. அப்போது ஆற்காட்டுக்குள் நுழைபவர்கள் இவ்வழியாகத்தான் வரவேண்டியிருந்தது. 
ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம்
விரிஞ்சிபுரம் வேலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் சிற்ப கலைக்கும், ஓவிய கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இங்குள்ள சிம்மக்கேணி காண்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. இக்கோயில் அருணகிரிநாதன் மற்றும் திருமூலரால் பாடல் பெற்றது.
பள்ளிகொண்டா
வேலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைணவ திருத்தலம் பள்ளிகொண்டா. இங்குள்ள உத்திர ரங்கநாதர் திருக்கோயில் தொன்மை சிறப்பு மிக்க கோயிலாக விளங்கி வருகிறது. பாண்டியர் கால கட்டடப் பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
Hotel image
வேலூரில் இருந்து 102 கி.மீ தொலைவிலும் திருப்பத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும், ஏலகிரி மலையின் பின்புறம் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதன் அருகில் லிங்க வடிவ முருகன் ஆலயம் உள்ளது. பருவகாலங்களில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது.
நன்றி தினமலர்.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

வயது என்பதற்கு...எந்த வேலியுமில்லை.. Just numbers அவ்வளவுதான்...

வயது என்பதற்கு...எந்த வேலியுமில்லை..
Just numbers அவ்வளவுதான்...

வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!

20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும்,
உள் நாடும் ஒண்ணு தான்.
எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும்,
அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்.

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும்
ஒண்ணுதான்.கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்.

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும்,குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்.குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க.

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள்,
கரும் புள்ளிகள் வந்துரும்.

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணுதான்.ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணுதான்.

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ
எல்லாம் ஒண்ணுதான்.மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்.

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..!அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்.

 90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ
 ஒண்ணு தான் !ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்.

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் !
நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது.

என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..

என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு
துயரப்படுறத விட்றுவோம்...

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்...

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட
துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து
அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

 உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.

 இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே.
 இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?”
என கேட்ட கேள்விக்கு என் மனைவி
என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?”
என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

 உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது
 என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.

இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அது போல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...!

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்...

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது...

அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.

என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்...

மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...

வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா...?

மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்...
வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்....

Feel the  power of  positive  Thinking...
That is the BIGGEST SECRET OF LIFE...!!!

Age does not matter at every stage of Life !
வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!",

On my journey......
மனதை கவர்ந்தது....🌷

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...


காதல் இயற்கை மனிதனுக்கு அளித்த வரம்.காதல் இல்லாமல் இவ்வுலகம் எதுவும் இல்லை, என்றே கூறலாம்.முதல் பார்வையில் இவங்க தான் நமக்கு கடைசி வரை,என்று யாரிடம் தோணுது அவங்க தான் நம் காதல்.காதல் ஒரு குழந்தை மாதிரி அன்பு,கோபம்,சண்டை, அழுகை , சந்தோசம் இதை எல்லாத்தையும் தனக்குள் வைத்திருக்கும். சாதி, மதம் ,இனம், மொழி என இவற்றையெல்லாம் கடந்து வருவது தான் உண்மையான காதல்.
உண்மையான அன்பு தான் காதல் என்றே கூறலாம். காதல் இல்லாத உயிரினங்களும் இல்லை காதல் இல்லாமல் உலகமும் இல்லை காதலை காதலிக்கும் காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...
                          🌼வாழ்த்துக்களுடன்....
    🌸 உங்கள் சிநேகிதி - புவனாமகேந்திரன்.