செவ்வாய், 12 நவம்பர், 2019

இரவு தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படுகிற ஆபத்துகள் என்னென்ன அறிவீரா?


இரவு தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படுகிற ஆபத்துகள் என்னென்ன அறிவீரா?

தாமதமாக தூங்குவது சரி, தாமதமாக சாப்பிடுவதும் சரி பல ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்கும்.

வேலையில் மூழ்கியதால் தாமதமாக சாப்பிடுவது, டிவி பார்த்து கொண்டே தாமதமாக சாப்பிடுவது, பசியில்லாததால் தாமதமாக சாப்பிடுவது என தாமதமாக சாப்பிட பல காரணங்கள் இருக்கும். ஆரம்பத்தில் இது ஜாலியாக கூட இருக்கும்.

 ஆனால் அதுவே பழக்கமான பிறகுதான் உங்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் உங்களுக்கு புரியும்.

கொஞ்சம் லேட்டாக சாப்பிடுவதால் என்ன நடக்க போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு. தாமதமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் வீக்கத்தை உண்டாக்கும். இரவு உணவு சாப்பிட சரியான நேரம் 7 முதல் 8 வரைதான். அதற்கு மேல் நீங்கள் சாப்பிடுவது நிச்சயம் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

நன்றாக தூங்கி எழுந்த பிறகு கண்ணாடியில் உங்கள் உருவத்தை பாருங்கள். உங்கள் வயிறு வீங்கியது போன்று காட்சியளிப்பதை நீங்களே பார்க்கலாம். இதற்கு காரணம் தாமதமாக உணவு உண்ணும் பழக்கம்தான். இந்த பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அதனை விடுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

 இரவு தாமதமாக சாப்பிடுவதால் வீக்கம் மட்டுமின்றி எடை அதிகரிப்பு, இன்சோமேனியா, அமில பிரச்சினைகள் போன்றவையும் ஏற்படலாம்.
வயிறு வீக்கம் என்பது சாப்பிட்ட பிறகு உங்கள் வயிறு வீங்கியது போல காட்சியளிப்பதாகும். மருத்துவரீதியாக கூற வேண்டுமென்றால் வயிறு வீக்கம் என்பது வயிறு மற்றும் குடலில் வாயு சேரும் நிலையாகும். இதற்கு காரணம் உங்கள் டயட் சமநிலையின்மைதான். இதனால் செரிமான பாதைகளில் பிரச்சினை ஏற்பட்டு உணவு செரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

 இதனால் உங்கள் வயிற்றில் உண்டாகும் வாயும் உங்களுக்கு பல அசௌகரியங்களை உண்டாக்குகிறது. ஏப்பம் விடுவது உங்களுக்கு ஓரளவு நிம்மதி தரும், ஆனால் முழுமையான தீர்வாக இருக்காது.
இரவில் தாமதமாக சாப்பிடும்போது வயிறு வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுதான்.

 உங்களின் வளர்ச்சிதை மாற்றம் இரவில் மிகவும் மெதுவாக இருக்கும், உங்கள் உடல் செரிமானத்தை காட்டிலும் ஓய்வெடுப்பதில் அதிக கவனம் செலுத்தும். இந்த நிலையில் நீங்கள் அதிகமாக சாப்பிடும்போது உங்கள் செரிமான பாதை உணவை முழுமையாக செரிக்க உதவாது. இதனால் காலையில் வீக்கம் ஏற்படலாம். எனவே சிறிய அளவிலான நார்ச்சத்துக்களும், சர்க்கரையும் இல்லாத உணவை எடுத்துகொள்ளுங்கள்.

சாப்பிட உடனேயே தூங்காதீர்கள் நீங்கள் அமர்ந்திருக்கும்போது அல்லது நிற்கும் போதோதான் உணவு வேகமாக செரிமானம் அடையும். அந்த நேரத்தில் தூங்குவது செரிமானத்தை பாதிக்கும். சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது உங்கள் செரிமானத்தை துரிதப்படுத்தும். நீங்கள் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானடைந்து விட்டால் உங்களுக்கு வீக்கம் ஏற்படாது.


Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*




திங்கள், 11 நவம்பர், 2019

100 மருத்துவக் குறிப்புகள்...


100 மருத்துவக் குறிப்புகள்...

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.
லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
நில்… கவனி… செல்!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்

*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 9 நவம்பர், 2019



காதல் கடிதம்.. என் அன்பே!!.. நீ எப்போதுமே என் இதயத்திலும், எண்ணத்திலும்..💘
ழூ நமது நித்ரா நாட்காட்டியின் முதல் பக்கத்தில் உள்ள கதைகள்ஃகட்டுரைகள் பகுதியில் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.சுபாஷ் சந்திர போஸ் எழுதிய காதல் கடிதம்..!!

💖சுபாஷ் சந்திர போஸ் எமிலிக்கு எழுதிய காதல் கடிதம் இதோ..!!

💖'என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன்.

💖நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.

💖என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?."

💖'எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம்.

💖அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய்.

💖இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" என்று சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மாவின் அன்பு :

💖அந்த கடிதத்தின் கடைசியில், 'நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்" என்று போஸ் குறிப்பிட்டுள்ளார்.

💖மேலும், இந்த கடிதத்தை படித்ததும், அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார்.

வியாழன், 7 நவம்பர், 2019



திபெத்தின் தனித்துவமான "பகோடா மலர்" புனிதமானது.  இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மகாமேரு மலர் இது.  புகைப்படங்களில் கூட, எங்கள் தலைமுறை அதைப் பார்க்க அதிர்ஷ்டசாலி.  தயவுசெய்து பகிரவும், மற்றவர்கள் அதைப் பார்க்க முடியும்.  வாழ்நாள் முழுவதும் நல்ல அதிர்ஷ்டம்!

திங்கள், 4 நவம்பர், 2019

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!


உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!

ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். அதன்படி 3 என்ற எண் மிக முக்கியமான எண்ணாக பார்க்கப்படுகிறது.

 உங்கள் பெயரில் மூன்றாவதாக வரும் எழுத்திற்கும் உங்கள் குணத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் எந்தந்தெந்த எழுத்திற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என வழங்கியுள்ளோம். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தில் என்ன குணங்கள் இருக்கிறது, உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களின் மூன்றாவது எழுத்தில் என்னென்ன குணங்கள் உள்ளது என பார்க்கலாம் வாருங்கள்.

A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.

ஆங்கிலத்தில் D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். D என்ற எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.

E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.

F - என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G- என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.

H - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.

I - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J - என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

L - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமைய ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O- என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.

Q - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.

R - என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.

S- என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.

T - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

U- ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.

V- என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.

W - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.

X - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.

Y- என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 3 நவம்பர், 2019

திருமணம் முடிந்த மற்றும் முடியாத பெண்களுக்கு ஏற்படும் நோய்கள்? மருந்துகள் என்ன?..!!


திருமணம் முடிந்த மற்றும் முடியாத பெண்களுக்கு ஏற்படும் நோய்கள்? மருந்துகள் என்ன?..!!

 
பொதுவாக பெண்களுக்கு சில சமயத்தில் உடல்நலக்குறைவானது ஏற்படும். இது அவர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தது. அந்த வகையில்., பெண்கள் தங்களின் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவரை சரி செய்யும் வழிமுறைகள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும்..


*வெள்ளைபடுதல்:*
 வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

*பிறப்புறுப்பில் புண்:*

பிறப்புறுப்பில் புண் போன்று இருந்தால்., மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

*சீரற்ற மாதவிலக்கு:*

 சீரற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வர., சீரற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.


*மாதவிலக்குக் கால வயிற்று வலி:*

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு., முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

*உடல் நாற்றம்:*

ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர., உடல் நாற்றம் நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

*திருமணத்துக்குப் பின்பு வரும் நோய்கள் மற்றும் மருந்துகள்:*

கர்ப்பகால வாந்தி: கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை சரி செய்ய அரிநெல்லிக்காயை உண்டு வர சரியாகும்..

*பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண்:*

பிரசவ காலத்தில் ஏற்பட்ட வயிற்றுப்புண்ணை சரி செய்ய வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கி., குழந்தையை பிரசவித்த பெண்கள் நலமும் பெறுவார்கள்..


*பிரசவத்திற்கு பின் உடல் மெலிவு:*

 பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் உடல் மெலிவை சரி செய்ய சீரகம்., பூண்டு மற்றும் குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்றும்.

*தாய்ப்பால் பற்றாக்குறை:*

 தாய்ப்பால் குறைவை சரி செய்ய பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

*வயிற்று சதை குறைய:*

சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி., நன்கு மெழுகு போல் அரைத்து., அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

வியாழன், 31 அக்டோபர், 2019

முப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து

♥முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு இருந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

♥பெண்களுக்கு உடலில் கொழுப்பு எளிதில் சேர்ந்துவிடும். அதனால்தான் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவில் வயதிற்குப் பொருந்தாத உடல் பருமனை அடைந்து விடுவார்கள். இதற்கு உணவு மட்டுமல்ல. உடல் சார்ந்தும், மனம் சார்ந்து பல பிரச்னைகளை முன் வைக்கின்றனர்.

♥அப்படி பெண்களுக்கு உடலில் சில இடங்களில் கொழுப்பு சேர்ந்தால் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு அதிகமாக தொடையில் கொழுப்பு சேர்வதாகவும், அவர்களுக்கு இதய நோய் அதிகமாக தாக்குவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

♥அதேசமயம் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலானோருக்கு கால்களைக் காட்டிலும் வயிற்றில் அதிக கொழுப்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதை யூரோபியன் ஹார்ட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

♥இந்த இடத்தில் மற்றொரு எச்சரிக்கையையும் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர். அதாவது ஆப்பிள் உடல் அமைப்புக் கொண்ட பெண்கள் உடனடியாக தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

♥ஆனால் இதயப் பிரச்னை, பக்கவாதம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் ஆழமான ஆய்வு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

♥இந்த ஆய்வில் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 2,600 பெண்களை ஈடுபடுத்தியுள்ளனர். அதில் இடுப்பு, தொடையில் அதிகக் கொழுப்புக் கொண்ட பெண்களைக் காட்டிலும் வயிற்றில் அதாவது தொப்பை அதிகமாகக் கொண்ட பெண்களுக்குத்தான் அதிக அளவிலான இதயப் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

♥அதேசமயம் முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கே அதிகமாக இந்தப் பிரச்னை தாக்குவதால் அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்கிறது ஆய்வு.

♥"பெண்ணின் உடல் அமைப்பு என்பது அவர்களுக்கு அதிகமாக கொழுப்பு எங்கு சேர்கிறதோ அதைப் பொருத்தே அமைகிறது. இவற்றைக் கரைக்க எந்த மாதிரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனைக்கான ஆய்வு இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப் படி உங்கள் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பது அவசியம்" என ஆய்வின் பேராசிரியர் கூறியுள்ளார்

செவ்வாய், 29 அக்டோபர், 2019

பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள் !!


பெண்களே..! இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தா யோசிக்காமல் இத செய்யுங்கள்!

பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள் !!


👩 மனஅழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும்.

👩 குறுகிய கால மனஅழுத்தத்திலிருந்து நீண்ட கால மனஅழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான்.

👩 மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி பார்ப்போம்...

👩 காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, யோகா இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்வது மனஅழுத்தத்திற்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

👩 எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள் மற்றும் பொருட்களை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது.

👩 ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வைப்பதால் நாம் எந்த வேலையையும் மறக்காமல் இருக்கவும், அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும்.

👩 பேருந்துக்காக காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். காத்திருக்கும் சமயத்தில் ஒரு புத்தகத்தை கையில் வைத்து படிப்பது காத்திருத்தலை சுகமாக்கும். அது மட்டுமல்லாமல் தேவையற்ற மனஅழுத்தத்தையும் குறைக்கும்.

👩 வேலைகளை பின்னர் செய்து கொள்ளலாம் என ஒதுக்கி வைப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

👩 ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முன்கூட்டியே செல்ல பழகுங்கள். பத்து நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

உங்கள் வீட்டு பெண்களை நீங்கள் மேலும் ஊக்குவிக்க விரும்புகிறீர்களா? கோலம், மெஹந்தி, சமையல், வீடு பராமரிப்பு என அனைத்திலும் பெண்கள் அசத்த வேண்டுமா? இதோ உங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி மகளிர் மட்டும்.


👩 தவறாய் போன ஒரு விஷயத்தை குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றை குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

👩 செல்லும் இடங்கள், புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்வது சிறந்தது. இதனால் மனஅழுத்தத்தை குறைக்க முடியும்.

👩 மனதில் கவலைகள் இருக்கும்போது உங்களுக்கு பிடித்தவர்களுடனோ, அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தின் மீதோ கவனம் செலுத்துங்கள்.

👩 மனஅழுத்தம் இருக்கும் சமயத்தில் சிறிது நேரம் அமைதியாக ஓய்வெடுங்கள்.

👩 உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

👩 எந்தவொரு செயலும் சுலபமாக செய்துவிட முடியும் என நினைத்து செயலை செய்ய தொடங்குங்கள்... கடினம் என்று நினைத்தால் நமக்கு மனஅழுத்தம்தான் அதிகமாகும்.


ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தீபாவளியை பத்தி இந்த விஷயமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?


வருஷா வருஷம் தீபாவளி கொண்டாடுறீங்களே... தீபாவளியை பத்தி இந்த விஷயமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

ஒவ்வொரு வருஷமும் தீபாவளி வந்துக்கிட்டுதான் இருக்கு, நாமளும் எல்லா வருஷமும் உற்சாகமாக கொண்டாடிட்டுகிட்டுதான் இருக்கோம். தீபாவளி பற்றிய வரலாறும், முன்கதையும் நமக்கு முழுமையா தெரியுமானு கேட்டா அதற்கு பதில் இல்லை என்பதுதான். தீபாவளியை பற்றி நமக்கு தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கு.

தீபாவளிக்காக வருடா வருடம் காத்திருப்பது இந்துக்கள் மட்டுமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? சீக்கியர்களும், சமணர்களும் கூட தீபாவளியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்கள் தீபாவளி இந்தியாவின் பண்டிகை மட்டும்தான் என்று நினைக்கின்றனர், ஆனால் உண்மையில் பல நாடுகளில் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. இந்த பதவில் தீபாவளி பற்றி உங்களுக்குத் தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்.


செல்வத்தின் பண்டிகை
செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு மரியாதை செலுத்தவும், அவரை உங்கள் வீட்டுக்கு அழைப்பதும்தான் தீபாவளி பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். இந்த நாளில் வீட்டு வாசலில் விளக்கேற்றுவது என்பது உங்கள் வீட்டுக்கு லக்ஷ்மியை அழைப்பதன் அடையாளமாகும்.


புராணங்களும், தீபாவளியும்
தீபாவளி நமக்கு பல புராணக் கதைகளை நினைவூட்டுகிறது. அதில் பரவலான நம்பிக்கை கிருஷ்ணர் நரகாசுரனை அழித்ததாகும், வடஇந்தியாவை பொறுத்தவரை தீபாவளி இராமர் இராவணனை அழித்துவிட்டு அயோத்தி திரும்பிய நாளாகும். வங்காளத்தில் தீபாவளியின் போது காளி தேவியை வழிபடுகிறார்கள்.



இந்தியாவின் பண்டிகை
தீபாவளி அளவிற்கு இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடும் திருவிழா எதுவும் இல்லை. இந்த பண்டிகை பல்வறு நிறங்களையும், கொண்டாடங்களையும், வழிமுறைகளையும் கொண்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி இந்தியாவின் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கிறது.


தீபாவளியும், சமணர்களும்
தீபாவளி என்பது சமணர்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும், ஏனெனில் அவர்கள் மதத்தின் கடைசி தீர்த்தங்கரும், கடவுளுமான மகாவீரர் 14 ஆம் நூற்றாண்டில் 527BC , அக்டோபர் 15ல் முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இது அவர்களின் மிகப்பெரிய திருவிழாவாகும்.


தீபாவளியும், சீக்கியர்களும்
சீக்கியர்கள் தீபாவளியை பந்தி சோர் திவாஸ் என்று அழைக்கிறார்கள், வரலாற்றில் கூறியுள்ள படி தீபாவளி தினத்தன்று அவர்களின் குருவான குரு ஹர் கோபிந்த ஜி பொற்கோவிலை தாக்கிய இஸ்லாமிய அரசர்களின்


பிடியில் ஜஹாங்கீரின் சிறையில் இருந்து தன்னையும், சில இந்து அரசர்களையும் விடுவித்ததாக கூறப்படுகிறது. சொல்லப்போனால் 1577 ஆம் ஆண்டு தீபாவளி நாள் அன்றுதான் பொற்கோவிலுக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. அதனால்தான் இது சீக்கியர்களின் புனித நாளாக கருதப்படுகிறது.


இந்தியாவை தாண்டி தீபாவளி
இந்தியாவின் பண்டிகையான தீபாவளியை பல நாடுகள் கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்தியாவிற்கு அடுத்து இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் நின்று வானவேடிக்கைகளையும், நடன நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பார்கள்.



தீபாவளி விடுமுறை
இந்தியாவில் தீபாவளி ஒரு முக்கியமான பொது விடுமுறையாகும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது குறிப்பாக சூரினாம், திரிநாட், டொபாகோ, கயானா, மியான்மர், சிங்கப்பூர், நேபாள், இலங்கை, பிஜி, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

பலவகையான தீபாவளி இரண்டுவிதமாக கொண்டாடும் அதிசயம்


பலவகையான தீபாவளி இரண்டுவிதமாக கொண்டாடும் அதிசயம்.

வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு கர்மாவிற்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது. அப்படி குறிப்பிட்ட கர்மாவில் மனிதன் இருந்தாலும், இறைத் தொடர்பு, நல்ல செய்கை, நல்ல எண்ணங்கள் போன்றவற்றை மறக்காமல், எந்த மனிதன் தனது கர்மாவை பூர்த்தி செய்கிறானோ அவன் தெய்வத்திற்கு சமம். கர்மா என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், வசதி வாய்ப்பு, ஏழ்மை, பசி, பட்டினி இப்படி எதுவேண்டுமானாலும் ஒரு மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட கர்மாவாக இருக்கலாம். ஒவ்வொரு கர்மாவிற்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. வறுமை, பசி, பட்டினி போன்றவற்றில் உழன்றாலும், தெய்வ பக்தி, நேர்மை, நல்ல எண்ணம், போன்றவை உள்ள மனிதன் தெய்வத்திற்கு சமமாக கருதப்படுவான். பொன்,பொருள், வசதி, வாய்ப்பு ஏனையவை அதிகம் இருந்தும் நல்ல எண்ணமும், மற்றவருக்கு உதவும் மனப்பான்மை இன்றி, இன்னும் பொன் பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தால் அவன் சாத்தானைவிட கொடூரமானவனாக கருதப்படுவான். இறக்கும் போது அவன் சேர்த்த சொத்து அவனைக் காப்பாப்பாற்றாது. ஆனால் அவன் செய்த நல்லசெயல்கள் அவனுடன் துணைக்கு செல்லும், இதை உணர்த்ததான் புராணங்கள், இதிகாசங்கள், நன்னெறி நூல்கள் போன்றவை இந்து சமயத்தில் படைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
இது போன்ற புராணங்கள் கூறும் கருத்தை மக்கள் மறக்காமல் இருக்கவே வருடம் தோறும் ஏதோ ஒருவிதத்தில், ஒரு பண்டிகையின் வடிவில் இந்து மதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்துக்களின் பண்டிகைகளில் மிக உயர்ந்த பண்டிகைதான் தீபத் திருநாள் தீபாவளிப் பண்டிகை.
இந்தப் பண்டிகையின் முக்கிய நோக்கமே அகத்திலும், புறத்திலும் உள்ள கெட்ட எண்ணங்களை விட்டு விட்டு, தூய்மையான எண்ணத்துடன் மனித மனம் புத்தொளி பெற வேண்டும் என்பதே. இதை உணர்த்தவே அரக்கர்களை, தெய்வங்கள் கொன்று உலகில் நீதியை நிலைநாட்டுவதாக இதிகாச புராணங்கள் எடுத்துக் கூறுகிறது.
மேலும் இந்தப் பண்டிகையை கொண்டாட ஒருசில விரதமுறையும், மரண பயத்தைப் போக்கவும், நரகலோகத்திற்கு செல்லாமல் இருக்கவும் முன்னோர்களால் தீபாவளிப் பண்டிகைக்கென்றே சிறப்பு விரதமுறைகள் கையாளப்பட்டிருந்தது.
அதாவது துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப் பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவி யும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடை களில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும் (தீபாவளி லேகியம் பற்றியும், அதை தயாரிக்கும் முறைபற்றியும் பக்கம் 23ல் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது), இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்கள் என்று முன்னோர்கள் கூறி யுள்ளனர்.

இரண்டு வகையான தீபாவளி:
கெடுதல் அழிந்து நன்மை பிறந்த கதையாக இருந்தாலும், வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் இந்த தீபாவளியை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

தென் இந்திய மக்கள் தீபாவளி கொண்டாட காரணம் நரகாசுரன்:
தென் இந்தியாவில் இந்த தீபாவளிப் பண்டிகையை நரகாசுரனை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.
அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில் ராவணை மையமாக வைத்து கொண்டாடும் தீபாவளி:
தென் இந்தியாவில் நரகாசுரனை அழித்ததால் கொண்டாடப்படும் பண்டியாக தீபாவளி விளங்கினாலும் வடமாநிலங்களில் ராவணனை மையமாக வைத்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சீதாப்பிராட்டியை கடத்திச் சென்ற ராவணனை வதம் செய்துவிட்டு மிதுலைக்கு வந்த ராமரின் வெற்றியை கொண்டாடும் விதமாக வட மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. வால்மிகி ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

அதிசய தீபாவளி:
தீபாவளிப் பண்டிகையை இந்து சமயத்தைச் சார்ந்த பல்வேறு மதங்களான, சமண, சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது.

சீக்கியர்களின் தீபாவளி:
1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .

சமணர்களின் தீபாவளி:
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.

தீபாவளி பண்டிகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் 'யட்ஷ ராத்திரி' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை 'சுகராத்திரி' என்றும் சொல்வதுண்டு.
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அனைத்து நீர்நிலைகளிலும் கங்கை வாசம் செய்யும் நாள்:
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொரு வர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சி எடுக்கப்பட்ட எண்ணையை தேய்த்து தான் குளிக்க வேண்டும். தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதி காலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில்பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாககருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறார்கள். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.
எனவே இந்த தீபாவளித்திருநாளின் சிறப்புகளை அறிந்து நாமும் மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் கொண்டாடி இறையருளை பெற்று உடல் அளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் வாழ்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தீப ஒளித் திருநாள்


தீப ஒளித் திருநாள்

#தீவாளி
அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி.

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

நரகாசுரன் வதம் ...

இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.

நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

தீபாவளியின் இன்னொரு கதை ...

இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட.

ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.

ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.

பிற கதைகள் ..

விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு.


வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள்.

முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினமான 2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்.

3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது.

4 நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.

பட்டாசு வெடிப்பது ஏன்:

தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு.

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.


தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி பற்றிய தகவல்கள்


தீபாவளி பற்றிய தகவல்கள்

* இந்தியாவில் மட்டுமின்றி, அண்டை நாடுகளான, வங்கதேசம், இலங்கை, மலேஷியாவிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும், கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் இருக்கும்.
* தமிழகத்தில், தீபாவளியன்று, சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவர். ஆனால், குஜராத் மாநிலத்தில், தீபாவளி அன்று யாரும் பட்டாசை பற்றி நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, சிறுவர் முதல் பெரியவர் வரை, விதவிதமான பட்டங்கள் செய்து, வானில் பறக்க விட்டு மகிழ்வர்.
* காசியில், பிரசித்தி பெற்ற அன்னபூரணி கோவில் இருக்கிறது. இந்த கோவிலில், தீபாவளி சமயத்தில், மூன்று நாட்களுக்கு மட்டும், தங்க அன்னபூரணியாக காட்சி அளிப்பார்.
* நரகாசுரனை, அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். அதுதான் இன்றளவும் தீபாவளியன்று, அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடர்கிறது.
* தாய்லாந்தில், தீபாவளியன்று, வாழை மட்டைகளில் விளக்கு ஏற்றி வைத்து, அதை நீரில் விட்டு வழிபடுவர்.
* தீபாவளி என்றால், பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவிற்கு வரும். இதற்கு ஒரு காரணம் உண்டு. விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம், வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.அயோத்திக்கு, ராமரும் - சீதையும் வந்தபோது, அந்நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும், இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 25 அக்டோபர், 2019

லட்சுமி கடாட்சம்.. செல்வம் பெருக.. 🎆தீபாவளி🌟 அன்று இதை செய்யுங்கள்..!!


லட்சுமி கடாட்சம்.. செல்வம் பெருக.. 🎆தீபாவளி🌟 அன்று இதை செய்யுங்கள்..!!

🎆தீபாவளியின் சிறப்புகள்🎇
🎉தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீய எண்ணங்கள் (அகங்காரம், பொறாமை, தலைக்கனம்...) இருக்கும். அந்த தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த தீபாவளி சிறந்த நாளாக அமைகிறது.

🎉அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடிக்கும் பட்டாசுகள், புத்தாடைகள், நாவில் ஊற வைக்கும் பலகாரங்கள் இவை மட்டுமின்றி செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் தான்.

தீபாவளி நல்ல நேரம்..!!

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்

அதிகாலை : 04.30 மணி முதல் 06.00 மணி வரை

புதிய ஆடை, அணிகலன்கள் அணிய உகந்த நேரம்

காலை : 07.44 மணி முதல் 10.14 மணி வரை

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்

பிற்பகல் : 2.00 மணி முதல் 4.30 மணி வரை

இரவு : 9.00 மணி முதல் 12.00 மணி வரை
தீபாவளி வழிபாடுகள் :

🌟லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

🌟தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக சிறப்பு வாய்ந்தது. குபேர பகவானுக்காக செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.

🌟தீபாவளி நன்னாள் முதற்கொண்டு வறுமையும், பசிப்பிணியும் விலகி நம் இல்லமும், உள்ளமும் மகிழ்வுற அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும்.

🌟தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா! முகுந்தா! முராரி! என்று சொல்லி வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

🌟செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளி அன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேலும், குலதெய்வ கோவிலிற்கு சென்று வாருங்கள்.

🌟தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

🌟தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌟தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.

தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியவை :

🌟புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடமும், வீட்டுப் பெரியோர்களிடமும் ஆசீர்வாதம் பெறுதல் சிறந்தது.

🌟தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும்.

🌟பட்டாசு, புத்தாடை, இனிப்பு கார வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியும், குதூகலமும் இல்லங்களிலும், நம் உள்ளங்களிலும் வழிந்தோடும்.

🎆தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழுங்கள்🎇


செவ்வாய், 22 அக்டோபர், 2019

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!


தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.


இன்றைய காலக்கட்டத்தில் தைராய்டு என்பது உலக வியாதியாக மாறி வருகிறது. குறிப்பாக பெண்களை அதிகளவில் தாக்கும் தைராய்டு உணவு மற்றும் ஹார்மோன் பிரச்சனைளுக்கு தொடர்புடையது.

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் என்று அடுக்கிக் கொண்டே போகும் பலரின் புலம்பலுகளை கேட்டிருப்போம்.


ஆனால், உண்மையிலேயே இந்த அறிகுறி எல்லாமே தைராய்டு நோயின் அறிகுறி தான் என்று சொல்லி விட முடியாது. அதே சமயத்தில் நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

சரி இந்த தைராய்டு பிரச்சனையை  எப்படி விரட்டுவது என்றால் வெறும் மருந்துகள் மட்டும் பற்றாது. அதனுடன் முறையான உணவு பழக்கமும் வேண்டும். அப்படியான உணவுகளில் தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால் பொருட்கள்:
கால்சியம் அதிகம் நிறைந்த பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதே சமயம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது நல்லது.

ஆல்கஹால் :

தைராய்டு பிரச்சனை இருந்தால, ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

பேக்கரி உணவுகள்:

பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.

முட்டைக் கோஸ், காலிஃப்ளவர்:

அயோடின் உறிஞ்சும் தன்மைக் கொண்ட முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்  போன்ற காய்கறிகள் ஹார்மோன்களில் பஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, முடிந்த வரையில்  இந்த மாதிரியான காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

மயோனைஸ் மற்றும் வெண்ணெய்:

இந்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்.பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று.


பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று.

இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்ட் நோய் ஏற்படுகிறது.

தைராய்ட் குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம் குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்ட் பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. அவர்களை மகப்பேறு நிபுணர்கள் முதலில் சோதிப்பது தைராய்ட் இருக்கிறதா என்பது தான். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.

ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்ட் கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.

சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.

அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தைராய்ட் மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்ட் பிரச்சினையால் தான். சோர்வு, கவலை என மனநோயாளி போல் ஆகிவிடுவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது விலகி விடும்.

கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்ட் பிரச்சினையை அதிகப்படுத்தும். மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும் .


தைராய்ட் கட்டிகளில் சில புற்று நோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC(Fine Needle Aspiration Citation) மூலம் கண்டுபிடிக்கலாம்.

டென்ஷன் காரணமாய் தைராய்ட் பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.

ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற் பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகளாகும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

தீபாவளி ஸ்பெஷல்


தீபாவளி ஸ்பெஷல் !

தீபாவளி என்றால் நினைவிற்கு வருவது புது புது ஆடை மற்றும் வெடி வெடிக்கும் பட்டாசும் தான். இந்த நாளை ஏன் தீபாவளியாக அனைவரும் கொண்டாடுகிறோம். 'தீபம்" என்றால் 'விளக்கு". 'ஆவளி" என்றால் 'வரிசை". அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும்.

புராணக் கதை :

🎉 இரண்யன் எனும் அசுரன், பு மிதேவியை கடத்தி கொண்டு பாதாளத்தில் மறைந்தான். பு மிதேவியை மீட்க, பன்றி வடிவெடுத்து, தன் பற்களால் பு மியை அகழ்ந்து சென்றார், மகாவிஷ்ணு. இரண்யனை வதம் செய்த பின், பு மியை, தன் தெற்றுப் பல் நுனியில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பு மாதேவிக்கும், வராகருக்கும் ஏற்பட்ட இந்த ஸ்பரிசத்தில், பவுமன் பிறந்தான். பவுமன் என்றால், பு மியின் பிள்ளை என்று பொருள். ஆனால், இவன் சென்றால், அவ்விடத்தில் இருள் படியும் அளவுக்கு மிகவும் கறுப்பாக இருந்தான்.

🎉 பவுமன் திருமாலின் பிள்ளை என்ற தைரியத்தில், மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்து வந்தான். அத்துடன், தேவலோகத்துக்கு சென்று, இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், அவனது தாய் அதிதி அணிந்திருந்த, அமுதம் சொட்டும் குண்டலங்களையும் பறித்து வந்தான்.

🎉 மனிதனாய் பிறந்திருந்தாலும், அசுர குணத்துடன் விளங்கியதால், இவனை, நரகாசுரன் என்றே மக்கள் அழைத்தனர். அவன் தேவர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

💣 இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பு மி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும், பு மாதேவி சத்யபாமாவாகவும் பு மியில் அவதாரம் செய்தனர். பிறகு போர் நடந்தது.

💣 அசுரன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்யபாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்யபாமா பு மியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

💣 அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், மனம் திருந்திய நரகாசுரன், தன் இறந்த நாளை மக்கள் ஆனந்த திருநாளாக கொண்டாட வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும், சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

💣 தித்திக்கும் தீபாவளியை தேன் சுவைக் கொண்ட இனிப்புகளோடு வெடி வெடித்து வண்ண வண்ண ஆடை அணிந்து கொண்டாட இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கணவன் மனைவி பாலியல் இயற்கை மருத்துவக்குறிப்புகள் :


#கணவன்_மனைவி #பாலியல்_இயற்கை #மருத்துவக்_குறிப்புகள் :-

♦மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா?

1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.

2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.

♦வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா?

ஒரு கைப்பிடி முட்கா வேளை இலையும், பத்து மிளகும், ஒரு சிட்டிகை ஜீரகமும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சங்காய் அளவு கெட்டி எருமைத் தயிரில் கலந்து குடிக்க வேண்டும். காரம், புளி உணவில் சேர்க்கக்கூடாது. வறுத்த உப்பு சேர்த்து தயிர் சோறு சாப்பிட்டு வர வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும்.

♦கருவுற்ற பெண்கள் - வாந்தி நிற்க :

புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக்கொள்ளவும். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களின் வாந்தி நின்றுவிடும்.

♦பிரசவ வேதனை குறைய வேண்டுமா?

மாலதி மலர்ச்செடியின் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, கட்டி மோருடன் கலந்து உபயோகித்தால் பிரசவ வேதனை குறையும், சுகப்பிரசவமாகும்.

♦ஆண்மை பலகீனமா?

திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனதில் உள்ள ஒருவித பயம். தகாத எண்ணம். வாதம் போன்ற நோய்களுக்கு தாளகம், மனோசிலை போன்ற சுத்தம் செய்யாத மருந்துகளை அருந்துவதுதான் காரணமாகும்.

♦வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க :

ஆனை நெருஞ்சியிலை தழையைச் சுத்தம் செய்து நீராகாரத்தில் தேய்க்க வழுவழுப்பான பொருள் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நீங்கும்.

♦மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா?

வெங்காயப் பூவை நன்றாக உலரவைத்து, இடித்துத் தூள் செய்து தினசரி ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக ஆகும். ஒரு வாரமாவது குடித்து வர வேண்டும்.

♦விதை வீக்கம் தணிய :

1. பலாப்பூவை நசுக்கி, சற்று வேக வைத்து விதை வீக்கமுள்ள இடத்தில் பற்றிட்டு வந்தால் விதை வீக்கம் தணியும்.

2. பவழமல்லிப் பூவைக் கொண்டு வந்து வதக்கி வைத்துக் கட்டினால் விi வீக்கம் குறைந்து வரும். சீக்கிரத்தில் சரியாகிவிடும்.

♦அரைக்கரப்பான் வந்துவிட்டால் :

தொடையின் இடுக்குகளில் மர்மஸ்தானங்களைப் பற்றிக்கொண்டு உண்டாகும் ஒருவகை சொரிப்புண் இது. இது நீர் சம்பந்தமாக ஏற்படக்கூடியது. கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் - வகைக்கு ஒரு கிராம் எடுத்து பொடித்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் ஏற்ற வேண்டும். தண்ணீர் சுண்டி எண்ணெய்ப் பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து அரைக்கரப்பான் மீது தடவி வந்தால் சீக்கிரத்தில் புண் ஆறிவிடும்.

♦மறைவான ரணங்கள் ஆற :

ஆண்குறி, பெண்குறி, ஆசனவாய் இங்கெல்லாம் ரணம் ஏற்பட்டிருந்தால் குங்குமப்பூவில் தேனை விட்டு நன்றாக அரைத்து சாந்து போல் ஆக்கி ரணம் ஏற்பட்டுள்ள பாகங்களில் நன்றாகப் பூசி வந்தால் சில நாட்களில் சரியாகிவிடும்.

♦கருச்சிதைவு அடிக்கடி ஏற்படுகிறதா?

மாதுளை வேர்ப்பட்டை, அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல் இவைகளை சம அளவு எடுத்து உளர்த்தி தூள் செய்து, ஒரு நாளைக்கு இரண்டுவேளை ஒரு சிட்டிகையளவு சாப்பிட்டு வந்தால் போதும். அதன்பிறகு கருச்சிதைவு ஏற்படாது. கர்ப்பம் தங்கும்.

♦மசக்கை காலத்தில் வயிற்று வலியா?

மசக்கை காலத்தில் சிலருக்கு இலேசான வயிற்று வலி ஏற்படுவதுண்டு. அதற்கு ஆம்பல் பூவுடன் விளாமிச்சை வேரையும் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி, சிறிது சர்க்கரை கலந்து சாப்பிடவும்.

♦மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா?

பயணங்களிலோ அல்லது விசேஷ காலங்களிலோ மாதவிலக்கு தள்ளி வரவேண்டும் என்று விரும்பும் பெண்கள் தினசரி காலையில் பொட்டுக் கடலையை (உடைத்த கடலையை) வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மாதவிடாய் சற்றுத் தள்ளி வெளிப்படும். எவ்வளவு நாள் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அத்தனை நாட்கள் உடைத்த கடலையை சாப்பிடலாம். உடம்புக்கு கெடுதல் இதனால் ஒன்றுமில்லை. ஆனால், இதற்குள்ள மாத்திரையை சாப்பிடுவதூன் கெடுதல்.

♦மாதவிலக்கு நின்ற சிரமப்பட்டால் :

நாட்டு வைத்தியக் கடையில் அன்னபேதி, கரியபோளம் இலை கிடைக்கும். 20 கிராம் அன்னபெதி, 10 கிராம் கரியபோளம், லவங்கப்பட்டைத் தூள் 10 கிராம் சேர்த்து இடித்து, தேன் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி, வேளைக்கு இரண்டாக நிலவேம்பு கஷாயத்துடன் சாப்பிட்டு வந்தால் அந்த சிரமம் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால் கருவுற்ற பெண்கள் இதைச் சாப்பிடக்கூடாது.

♦உற்ற வயதில் பருவமடையாவிட்டால் :

செம்பரத்தைக்கு ருது உண்டாகக்கூடிய குணம் உண்டு. அதனால் செம்பருத்திப் பூவை எந்த வகையினாலாவது உள்ளுக்குச் சாப்பிட கொடுத்து வரவும். சில நாட்களில் அந்தப்பெண் ருதுவாகிவிடுவாள்.

♦ஹிஸ்டீரியா நோய் குணமாக :

இது, நரம்பு பலவீனமான பெண்களுக்குத்தான் ஏற்படும். இதை
‘பேய் பிடித்து’ ஆடுவதாகக் கூறுவார்கள். பொன்னாவரை இலை, வேர், பூ இவைகளை வகைக்கு 40 கிராம் கொண்டு வந்து இலேசாகத்தட்டி ஒரு லிட்டர் நீரில் இட்டு, அரை லிட்டராக காய்ச்சி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் ஹிஸ்டீரியா நோய் குணமாகும்.

♦மார்பகங்கள் தேர்ச்சி பெற :

மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் நன்கு பூரித்து விம்மி புடைத்துக்கொள்ளும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனால்; மார்பகங்கள் செழித்து வளரும்.

♦பால் பெருக இலகு வைத்தியம் :

சில தாய்மார்கள், குழந்தைக்குப் போதுமான பால் பெருகாமல் சிரமப்படுவார்கள். ஒரு தோலா ஜீரகத்தையும், ஒரு தோலா வெல்லத்தையும் சேர்த்து நசுக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நன்கு பால் பெருகும்.

இனிமேல் தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மார்பகங்கள் செழித்து வளரும்.

♦தேன் நிலவுக் காலங்களில் :

குஷாலாக தேன் நிலவுக்குச் சென்று உயர்ந்த ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கியிருப்பவர்கள் இரவுக்காலங்களில் உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும்.

♦துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா?

சிலருக்கு சீக்கிரத்தில் விந்து வெளியேறிவிடும். இதைத் தடுத்து நிறுத்த தாழம் பூவின் உள்ளே இருக்கும் பட்டு போன்ற பொடியை எடுத்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து இழைத்து ஆண்குறியின் மீது பூசிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் விந்து விரைவில் வெளியேறாது.

♦விந்து கெட்டிப்பட வேண்டுமா?

பொரித்து எடுத்த படிகாரத்தை பொடியாக்கி 15 கிராம் எடுத்து அதில் கற்கண்டுத் தூள் 50 கிராம் சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு, பத்து சம பாகமாகப் பொட்டலம் கட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு ஒரு பொட்டலம் வீதம் பத்து நாட்கள் காய்ச்சிய பசும் பாலுடன் சாப்பிட்டு வரவும். நீற்றுப்போன விந்து கெட்டியாகிவிடும்.

♦விந்து பெருக வேண்டுமா?

ஆளி விதையைப் பாலில் வேக வைத்து சர்க்கரை அல்லது வெல்லம் போதுமான அளவு சேர்த்து லேகியம் பொல் கிளறி காலை - மாலை, சுண்டைக் காயளவு உட்கொண்டு வந்தால் உடல் பலகீனம் நீங்குவதுடன் விந்தும் பெருகும்.

♦நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா?

1. நரம்புத்தளர்ச்சியை நீடிக்கவிடக் கூடாது. ஜடா மஞ்சரி வேரின் தூள் 5 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும். அந்த நீரில் 1 அவுன்ஸ் வீதம் மூன்று வேளை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

2. கருவேலன் பிசினை எடுத்து காய வைத்து அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் அரை ஸ்பூன் அளவு பாலில் போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகிவிடும்.

♦கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?

ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளியேறினால் அது ஆரோக்கிமே! அதேசமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்து வெளியேறினால் அது உடலை பலகீனமாக்கிவிடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்களிலேயே ‘சொப்பன ஸ்கலிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.

♦ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா?

தனது ஆண்குறி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத ஆண்கள் உண்டா? அல்லது தனது கணவனின் ஆண்குறி வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்கள் தான் உண்டா?! இதோ அவர்கள் ஆசைக்கு அருமருந்து:

வசம்பு, அமுக்கராங் கிழங்கு, எட்டிக்கொட்டை இவைகள் சம அளவில் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வந்தால் ஆண்குறி நன்கு உறுதிப்பட்டு மிகுந்த வலிவுகொண்டு ‘துடிப்புடன்;’ என்று எழுந்து நிற்கும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பூசி வர வேண்டும்.

♦ஆண்குறி பருக்க வேண்டுமா?

சிலருக்கு ஆண்குறி வயதிற்குத் தகுந்த பருமன் இருக்காது. அவர்கள் 15 சங்கம்பழம் கொண்டு வந்து பிழிந்து சாறு எடுத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும். அரை கிராம் அளவு பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் எடுத்து வைத்து, அந்தப் பழச்சாற்றை தேவையான அளவு விட்டு நன்கு நசித்து ஆண்குறியின் மீது தடவி வர வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது தடவி வர வேண்டும். அதற்குள் ஆண்குறி நன்கு பருத்து ‘திண்’ணென்று ஆகிவிடும்.

♦தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக :

1. தாது புஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.

2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.

3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித்திப்லி, பரங்கிப்பட்டை, நிலப் பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.

4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணசமான ஆண்மை பெருகும். இரவு உணவுக்குப்பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக்குறைவு ஏற்படும்.

♦இச்சையைத் தூண்ட :

ஜாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக்கூடிய குணமுண்டு. ஆண்மைக்
குறையுள்ளவர்களுக்கும் ஜாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி இதை உபயொகித்து வந்தால் - பிறகு இது செயற்கை தூண்டியாக அமைந்து நிர்பந்தமாக உபயோகிக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி விடும். எனவே, குறையுள்ளவர்கள் சாப்பிடுவதே நல்லது.

♦இல்லற இன்பம் பெற :

பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் மூன்று சாப்பிட்டு உறவு கொள்ளலாம். அல்லது அமுக்கிராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து, உலர்த்தி இடித்து, கற்கண்டு சேர்த்து பசும்பாலில் காய்ச்சிக் கலந்து சாப்பிடலாம்.

♦அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள :

கல்யாணப் பூசணிக்காயின் (சாம்பல் பூசணி) சாற்றை ஒரு அவுன்சுக்கும் குறையாமல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது கற்கண்டோ சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ளலாம்.

(இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கலாம்.)

வியாழன், 17 அக்டோபர், 2019

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் !


பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் !

அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விடப் பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள்
அப்பாக்கள்.

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.
ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்தத் தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய்.

மூன்றாவதாகத் தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாகத் தனது இரத்தத்தின் மூலமாகக் கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள். பெரும்பாலும் ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விடஅதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாகக் கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் எனப் பெண்கள் எண்ணுகிறார்கள்.
பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர்
தந்தை தான் என்கின்றனர் பெண்கள். உலகை அறிமுகம் செய்தவர் பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகைக் கற்றுத் தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும்
கிடைக்கும் பரிசு இது.

கோபத்தைக் காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம்
செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை
மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள்
அப்பாக்கள்.

காவலன் வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்கக் காத்திருந்து
அழைத்து வரும் காவலன் அப்பா. காதலைப் புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி
உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா.

ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.சூப்பர் ஹீரோ தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும்
சூப்பர் ஹீரோ அப்பா தான்.

தைரியம் ஊட்டும் அம்மா என்ன தான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல,அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறைய
மாற்றங்களைக் காண முடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்குக் காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், வழிகாட்டி, ஆசான், ஹீரோ, காவலன்,
என எண்ணற்ற பாத்திரங்களைத் தாங்கிக்
கொண்டிருப்பவர் தான் அப்பா.

ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.

திங்கள், 14 அக்டோபர், 2019

கருவுறுதலை தடுக்கும் ஜங்க் ஃபுட் : ஆய்வு முடிவு


கருவுறுதலை தடுக்கும் ஜங்க் ஃபுட் : ஆய்வு முடிவு

ஜங்க் உணவுகள் இன்றைய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகி விட்டன. தற்போதைய சூழலில் காலத்துக்கு ஏற்றவாறு உணவு வகைகளும் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் அரிதாக இருந்த ஜங்க் ஃபுட் வகைகள் தற்போது மூலைமுடுக்கெல்லாம் கிடைக்கிறது.

நூடுல்ஸ், பர்கர், ஃபிரைட் சிக்கன், பிரெஞ்சு ப்ரைஸ் என ஜங்க் ஃபுட் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகளவு இதுபோன்ற உணவுகளையே விரும்புகின்றனர். நண்பர்களுடன் வெளியே செல்லும்போதோ, ஆன்லைனில் ஆர்டர் பண்ணும்போதோ விதவிதமான ஜங்க் ஃபுட்ஸையே வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என பல ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில், அந்த உணவுகளின் பேக்கிங்கில் உள்ள ரசாயனங்களாலும் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

இதுபோன்ற துரித உணவுகளின் பேக்கிங்கில் உள்ள ரசாயனம் கேன்சர், கருவுறுதலில் சிக்கல் போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை உடையவை என இந்த ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன.



பேக்கிங்கில் நச்சு

அமெரிக்காவில் மாசசூசெட்ஸில் உள்ள சைலண்ட் ஸ்பிரிங் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, பர்கர் ரேப்பர்கள் மற்றும் பீட்சா பேக்கிங்கில் உபயோகிக்கப்படும் பெட்டிகளில் நச்சு ரசாயனங்கள் உள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், 10,000 க்கும் மேற்பட்டவர்களிடம் பகுப்பாய்வு செய்தனர். ஆய்வுக்கு முந்தைய 24 மணிநேரம், 7 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 12 மாதங்கள் என நான்கு வெவ்வேறு கால அளவீடுகளில் அவர்கள் சாப்பிட்டதை நினைவு கூர்ந்து, அவர்களின் உணவைப் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது.மேலும் அவர்களிடம் இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ரத்தத்தில் கலந்த ரசாயனம்

இந்த ஆய்வின் முடிவில் அதிக நச்சு கொண்ட பி.எஃப்.ஏ.எஸ், (Per- and polyfluoroalkyl substances - PFAS) ரசாயனம் அவர்களது ரத்தத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் அதிக உணவைச் சாப்பிட்டவர்கள் உடலில் கணிசமாகக் குறைந்த அளவு PFAS இருப்பதையும், துரித உணவை அடிக்கடி ஆர்டர் செய்தவர்களின் ரத்தத்தில் அதிகளவில் PFAS இருப்பதையும் நிபுணர்கள் கண்டறிந்தனர்.

இந்த ரசாயனத்தால் புற்றுநோய், மற்றும் தைராய்டு நோய் போன்றவை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக மைக்ரோவேவ் பாப்கார்ன்களை உட்கொண்டவர்களின் ரத்தத்திலும் கணிசமாக பி.எஃப்.ஏ.எஸ் இருப்பதையும் இக்குழு கண்டறிந்தது. பெரும்பாலும் பாப்கார்ன் பைகளிலிருந்து வெளியேறும் ரசாயனங்களே இதற்குக் காரணம்.



கருவுறுதலைத் தடுக்கும்

பெண்கள் அளவுக்கு அதிகமாக ஜங்க் ஃபுட்களை எடுத்துக்கொள்வதாலும், அந்த பேக்கிங்கில் உள்ள ரசாயனத்தாலும் பெண்களின் கருத்தரிக்கும் திறனையே முற்றிலும் குறைத்துவிடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இதனால் பெண்கள் இதுபோன்ற உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெண்களுக்கு கருவுறுதலைத் தடுப்பது போலவே, ஆண்கள் அதிகளவு இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆண்மையைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழு நிபுணர்கள் "உணவு பேக்கேஜிங்கிலிருந்து பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் உணவுக்கு இடம்பெயர்வது இந்த வேதிப்பொருட்களின் வெளிப்பாட்டின் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வின் பொதுவான முடிவு என்னவென்றால், உங்கள் உணவுக்கும் உணவு பேக்கேஜிங்கிற்குமான இடைவெளி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அதே அளவுக்கு பி.எஃப்.ஏ. எஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் ஆகியவற்றின் பாதிப்பும் குறைவாக இருக்கும்.

இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் நுகர்வோர் ரசாயன பாதிப்புகள் கொண்ட உணவு பேக்கேஜிங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான உணவு பேக்கேஜிங் பொருட்களை உருவாக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் உதவும்" எனக் கூறியுள்ளனர்.

தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!


தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!

தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...

ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...

அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...

இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!

ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...

எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்...