திங்கள், 14 அக்டோபர், 2019

எதற்கும் ஒரு காலம் வரும்


‘’எதற்கும் ஒரு காலம் வரும்"..

ஒருவர் நம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால் நாமும் அவரிடம் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் பழி வாங்கும் தன்மை.

இந்தப் பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் சகிப்புத்தன்மை.  ஒரு செயலை வெற்றிகரமாக சாதிக்க வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை அவசியம் வேண்டும்.

அந்த சகிப்பு தன்மை இருந்தால் தான் நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அமைதியும் கிடைக்கும் ..

குடும்பம் தொடங்கி நாடு வரையில் அனைத்து இடங்களிலும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டால் அரிய பல செயலை சாதிக்கலாம்..

முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள முரடன் ஒருவன், உணவகத்திற்குள் வந்தான்.

அவனைப் பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் ஓடி விட்டார்கள். முல்லா இதைக் கவனித்தார்.
இருந்தாலும், அந்த முரடனைப் பார்த்து பயப்படாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

முல்லாவின் அருகில் வந்த முரடன், முல்லாவின் தலைப்பாகையை தட்டி விட்டுச் சென்றான். இப்படி ஒருமுறை அல்ல. ஒவ்வொரு நாளும் முல்லா வழக்கமாக அந்த உணவகத்திற்குச் சாப்பிட வரும்போதெல்லாம்,

அந்த முரடன் வந்து முல்லாவின் தலைப்பாகையை தட்டி விட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்து இருந்தான்.

இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் முல்லாவிடம் வந்து, “உங்களுக்கு இந்நாட்டு அரசர் நண்பர் தானே, .இந்த முரடனைப் பற்றி மன்னரிடம் சொன்னால் எல்லோருக்கும் நிம்மதியல்லவா?” என்றார்கள்.

அதற்கு முல்லா, ''அந்த முரடனிடம் விரோதம் எதற்கு?. ஒருவேளை அவன் தண்டனையில்  இருந்து விடுதலை ஆன உடன், நான் அவனுக்கு எதிரியாகத் தெரிவேன். எனது வேலை அவனுடன் மோதிக் கொண்டு இருப்பதல்ல.” என்றார்.

அப்படி என்றால் இந்த முரடனின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது” எனக் கேட்டனர் மக்கள்.
“எதற்கும் ஒரு காலம் வரும்" என்றார் முல்லா.

ஒருநாள். வழக்கம் போல உணவகம்  வந்து கொண்டிருந்தார் முல்லா. எதிரே மன்னரின் காவலரும் வந்து கொண்டு இருந்தார். முல்லாவும் அந்தக் காவலரும் நண்பர்கள்.

தன்னுடன் வந்து சிற்றுண்டி சாப்பிடும்படி காவலரை அழைத்தார் முல்லா. அவரும் சம்மதித்து இருவரும் உணவகத்திற்கு வந்து அமர்ந்தார்கள்.

அப்போது, அந்த முரடன் வருவதை கவனித்து விட்டார் முல்லா. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது நண்பரான மன்னரின் காவலரிடம்,

“நண்பரே என்னுடைய தலைப்பாகை உங்களுக்கு
அழகாக இருக்கும். அணிந்து பாருங்கள். ” என்றார் முல்லா. காவலரும் முல்லாவின் தலைப்பாகையை அணிந்தார்.உடனே முல்லா, ”இங்கேயே உட்கார்ந்து இருங்கள்.
இதோ வந்து விடுகிறேன்.” என்ற முல்லா, அங்கு இருந்து நழுவினார். முரடன் வந்தான். வழக்கமாக முல்லா அமர்ந்து இருக்கும் இருக்கையில் மன்னரின் மெய்க்காவலர் அமர்ந்து இருப்பதை கவனிக்காமல்,

தலைப்பாகையை பார்த்து முல்லா தான் அமர்ந்து இருப்பதாக நினைத்து தலைப் பாகையை தட்டி விட்டான் முரடன். மன்னரின் மெய்க்காவலருக்கு வந்ததே ஆத்திரம். தனது வாளை உருவி முரடனின் தலையை ஒரே சீவாக சீவிக் கொன்றார்.

இதைப் பார்த்த மக்கள் மகிழ்ந்தார்கள். முல்லாவைப் பாராட்டிப் பேசினார்கள்.

ஆம்.,நண்பர்களே..,

மனித குலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாகக் குறைந்தபட்சம் "சகிப்புத் தன்மை" ஆவது நம்மிடையே இருக்க வேண்டும்...

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன...???



அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன...???

அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது

60 வயசுக்கு என்ன விஷேசம்...???

சாதாரணமா கல்யாணம் ஆகி,

குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து

பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும்

நம்மள போல வேலை செய்பவர்களும்

ரிடையர்டு ஆகி ரிலாக்ஸ் ஆகிற நேரம்

அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது...

கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து

வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது

20 வயது வரை ஒரு நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை

20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை

40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை

60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்

60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது....???

மனிதன் தனக்கு

"ஆதிபௌதீகம்,
ஆதிதைவீகம்,
ஆதிஆத்மீகம்"

என்கிற இயற்கை,

தெய்வ குற்றம்,

தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து

தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும்

அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக

அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் ,

78 ஆம் ஆண்டு துவக்கம்,

80 ஆம் ஆண்டு நிறைவு,

100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில்

அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது

இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில்

நடந்த தவறுகளுக்கு வருந்தி...

குடும்ப பாரம் இறக்கி வைத்து,

ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் இதில் முக்கியம்..

பெயரிடப்பட்ட தமிழ் ஆண்டுகள் அறுபது

பிரபவ, விபவ என்று
சாஸ்திரங்களின் படி மனிதனுக்கு என்று வழங்கப்பட்ட நிறைந்த ஆயுள் என்பது 120

கிருஷ்ணர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்கிறது புராணங்கள்

பகல் இரவு என்பது போல

60 ஆண்டுகள் முதல் சுற்று முடிந்து இரண்டாம் அறுபது ஆண்டுகள் ஆரம்பமாகிறது

முதல் அறுபது ஆண்டுகளில் லௌகீக(கர்ம) வாழ்க்கை வாழ்கிறோம்

இரண்டாம் அறுபது ஆண்டுகள் கடமைகள் முடித்து தர்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்

அறுபதாம் கல்யாணம் செய்வதால்

1. நாம் நம் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கிறோம்

2. கர்மத்தின் காரணமாக நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி

பரிகாரம் என்ற பெயரில் மனதை சுத்தமாக்கிக் கொள்கிறோம்

3. இனி தர்ம வழியிலான பொதுவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உறுதிகொண்டு

இவ்வளவு காலம் கூட வந்த மனைவியை மீண்டும் மணந்து

இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத நல்லற வாழ்வை தருகிறோம்

இதைச் செய்யா விட்டால் ஒன்றும் பெரிய தவறு இல்லை

நாம் செய்த பாவங்களை எண்ணி வருந்தி புதுவாழ்வை தொடங்கா விட்டாலும்

உடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்க்கவாவது அறுபதாம் கல்யாணம் செய்யலாம் .

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்..!


ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்..!

ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது. இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள், இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்..

தாயாக ஓர் ஆணின் வாழ்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறாள். இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, இவள் மூலமாக தான் உறவுகளும் நமக்கு அறிமுகம் ஆகிறது.

ஓர் ஆண் முதன் முதலாக காவலனாக இருப்பது அவனது சகோதரிக்கு தான். ஒவ்வொரு மகளின் முதல் ஹீரோ அப்பா என்றால், முதல் காவலன் அவளது சகோதரனாக தான் இருக்க முடியும்.

உறவினர், தாய், சகோதரிக்கு பிறகு ஓர் ஆணுக்கு கிடைக்கும் முதல் வெளியுலக பெண் உறவு, தோழி தான். ஓர் உண்மையான தோழியுடன் ஆண் தன் வாழ்க்கையின் அனைத்து சுக, துக்கங்களையும் பகிர்ந்துக் கொள்கிறான். ஏனெனில், அந்த ஒரு தோழியினால் தான் அவனது துக்கத்தை குறைக்கவும், சுகத்தை பெருக்கவும் முடியும்.

சிலருக்கு காதலி மனைவியாக அமைகிறார்கள், சிலருக்கு மனைவி தான் காதலியாக அமைகிறார்கள். ஏதோ ஓர் வகையில் அனைவருக்கும் ஓர் காதலில் கிடைத்துவிடுகிறாள். ஒவ்வொரு ஆண்மகனின் பருவ வயது ஏக்கம் காதல். ஆனால் அது பதின் வயதை தாண்டியும் நிலைத்து நின்றால் மட்டுமே புனிதம் ஆகிறது. காதல் என்பது ஓர் ஆணின் வாழ்க்கையை சொர்க்கமாக்குகிறது.

தன் துணையை நம்பி உடல், பொருள், ஆவியில் பாதி அங்கம் கொடுப்பவள் மனைவி. மனைவி தவறு செய்யும் கணவன் கண்டிப்பான், அதே கணவன் தவறு செய்யும் போது மனைவி திருத்துவாள். இதுதான் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் வித்தியாசம். உண்மையிலேயே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்.

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர் பெண்ணின் கருவறையில் தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது. தாயின் கருவறையில் இருந்து இவ்வுலகில் தொடங்கி, மனைவியின் கருவில் இருந்து உதித்த மகள் எனும் புதிய உலகம் என ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன.

முதுமை எட்டிய பிறகு ஓர் ஆண் அதிகம் மனம் மகிழ்ந்து புன்னகைக்கிறான் எனில் அதற்கு முக்கிய காரணம் அவனது உயிரில் இருந்து ஜனித்த உயிரின் உயிராக தான் இருக்க முடியும். தாத்தா ஆரம்பித்து பேத்தி கேட்கும் விடைகளுக்கு ஏதேனும் ஓர் பதிலை அவன் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறான்...

வாழ்க்கை தத்துவம்


#வாழ்க்கை_தத்துவம் !!

♥அழிவை தருவது - #ஆணவம்...

♥ஆபத்தை தருவது - #கோபம்...

♥இருக்க வேண்டியது - #பணிவு...

♥இருக்கக்கூடாதது - #பொறாமை...

♥உயர்வுக்கு வழி - #உழைப்பு...

♥கண்கண்ட தெய்வம் - #பெற்றோர்...

♥செய்ய வேண்டியது - #உதவி...

♥செய்யக்கூடாதது - #துரோகம்...

♥நம்பக்கூடாதது - #வதந்தி...

♥நழுவ விடக்கூடாதது - #வாய்ப்பு...

♥நம்முடன் வருவது - #புண்ணியம்...

♥பிரியக்கூடாதது - #நட்பு...

♥மறக்கக்கூடாதது - #நன்றி...

♥மிகமிக நல்லநாள் - #இன்று...

♥மிகப்பெரிய தேவை - #அன்பு...

♥மிகக்கொடிய நோய் - #பேராசை...

♥மிகவும் சுலபமானது - #குற்றம்_காணல்...

♥மிகப்பெரிய வெகுமதி - #மன்னிப்பு...❣ ❣ ❣

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

பெண்ணை பெற்ற எல்லா தந்தைக்கும் இது சமர்ப்பணம்...


பெண்ணை பெற்ற எல்லா தந்தைக்கும் இது  சமர்ப்பணம்...

♥"அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!

♥உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.

♥வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

♥உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

♥முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான

♥இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

1) #நேர்மையான #நண்பன்:

♥தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

2) #உலகை #அறிமுகம் #செய்தவர் :

♥பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

3) #மகிழ்விப்பவன்:

♥வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

4) #காவலன் :

♥வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

5)#நண்பன் :

♥காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் #அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

6) #சூப்பர் #ஹீரோ :

♥தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

7) #தைரியம் #அளிப்பவன்:

♥அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

😎 #இறுதி #வரை #உறுதி:

♥மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

9)#அப்பா:

♥பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

ஜப்பானிய மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...!


ஜப்பானிய மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...!

*நேர்மையாக இருப்பது. அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது.
பர்சனலாகவே பொய் பேசுவதை வெறுப்பது.

*அடுத்தவரின் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருகிறார்கள்.

*பொது இடங்களில், தன்னால் யாருக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற விசயத்தில் மிகவும் கவனமாக இருகிறார்கள்.

*ரயில் பயணங்களில் செல்போன் பேசாமல் இருப்பது. முக்கியமாக சத்தம் போட்டு பேசாமல் இருப்பது. முடிந்த வரை பேசாமல் இருகிறார்கள்.

*தன் தாய்மொழியை அதிகமாக நேசிகிறார்கள்.

*ரயிலில் ஏறும்போதும் அல்லது பஸ்களில் ஏறும் போதும்(கூட்டமாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும்) யாருடைய உத்தரவின்றியும் தானாகவே க்யூவில் நின்று, பயணிகள் இறங்கியவுடன் ஒன்றன் பின் ஒன்றாக ஏறுகிறார்கள்.

*அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் இருகிறார்கள்.

*வேலை நேரத்தில் செல்ஃபோன் பேசாமல் இருகிறார்கள்

*12 மணி நேரம் வேலை செய்தாலும் சலிக்காமல் வேலை செய்வது. வேலை நேரத்தில் ஓ.பி அடிக்காமல்இருகிறார்கள்.

*எல்லா விசயங்களிலும் சிஸ்டமேட்டிக்காக இருகிறார்கள்

*விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்கு நன்கு பயன்படுத்துவாரகள்.

*அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள்.!


* சுற்றுப் புறத்தை மிகச் சுத்தமாக பேணிக் காப்பது,(உதாரணத்திற்கு குப்பைகளை எல்லாம் மட்கும்/மட்காத குப்பைகளாக பிரித்து கார்ப்பேஜில் போடுவது.ரோட்டில் எச்சில் துப்பாமல் இருப்பது,ரோட்டில் எவ்வித அசுத்தமும் செய்யாமல் இருப்பது, ரோட்டில் புகை பிடிக்காமல் இருப்பது,

* எஸ்கலேட்டர், அலுவலக படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று கொண்டு, அவசரமாக செல்வோருக்கு எப்போதும் வழி விட்டு செல்வது.

* மொழி தெரியாத நபர்கள் கேட்கும் விசயத்தை சலிக்காமல் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வது. உதாரணம். ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வியாழன், 10 அக்டோபர், 2019

போனஸ் என்றால் என்ன..? போனஸ் எப்படி உருவானது?



போனஸ் என்றால் என்ன..? போனஸ் எப்படி உருவானது?

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்)

ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்...!!(12×4=48 வாரங்கள்)

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.

இந்தியர்னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.

அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்...!!
.
அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது...!!

பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.

*_ஆக போனஸ் என்பது விடுபட்ட-கொடுக்கப்படாத-  நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம்_*

இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !!

#தெரிஞ்சிக்கோங்க_மக்களே.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

நம் உணவில் சிறுதானியங்கள்... ஏன் அவசியம்?... தெரிந்து கொள்ளுங்கள்..!! சிறுதானியங்களும்... அதன் பயன்களும்...!


நம் உணவில் சிறுதானியங்கள்... ஏன் அவசியம்?... தெரிந்து கொள்ளுங்கள்..!!
சிறுதானியங்களும்... அதன் பயன்களும்...!


👉 பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

👉 அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.

👉 நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும். சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும்.

👉 அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.

👉 குடல் புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும்.

👉 இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

👉 மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள், கால் வீக்கம், முகவீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை பயன்படுகிறது.

👉 பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். புரதம் இதில் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

👉 சோளம் செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல்பருமனை குறைக்க உதவும். செல்களை புத்துணர்வு பெறச்செய்யும். செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.

👉 கேழ்வரகு உடல்பருமன் குறைய உதவும். சர்க்கரைநோயைக் குணப்படுத்த உதவும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்யும்.

👉 கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும்.

👉 கம்பு மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவறட்சி போன்றவை நீங்க மோரில் கலந்து பருகலாம்.

👉 சிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

👉 ஏனென்றால் சிறுதானியங்களில் உள்ள உயர்ந்த அளவு மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலியினை வராமல் தடுக்கிறது.

👉 சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகின்றன.




திங்கள், 7 அக்டோபர், 2019

உலகிலேயே உயரமான பெண் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஞ்சலினா ஸ்டிஃபேன்.


உலகிலேயே உயரமான பெண் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஞ்சலினா ஸ்டிஃபேன். இவரது உயரம் 9அடி 7 இன்ச். எடை 198 கிலோ. உடன் நிற்பவர் நம்மைப்போல 5அடி 2 இன்ச் உயரம் கொண்ட பெண். அப்பா!!! எவ்ளோ உயரம்!!!!!!

பெண் ஜென்மம்


பெண் ஜென்மம்

ராக்காயிக்கு இருப்பு கொள்ளவில்லை... எங்கே தான் போச்சு இந்த கர்மம் புடிச்ச ரேஷன் கார்டு.... வீட்ல எங்க தேடியும் காணலியே... ச்சே... வீட்டுல நானு, எம்மவன், புருஷன் மருதும் தான்..... எனக்கும் நல்ல நாபகம் இருக்கு..... போன ரேசன் வாங்கிட்டு வந்து சாமி படத்துக்கு கீழ இருக்குற ஆணில எப்பவும் தூங்குற மஞ்சபைல தான் போட்டு வச்சேன். வீடாம் பெரிய வீடு... இருக்குறதே ரெண்டு, மூணு பானை.... நாலு சட்டி, ஒரு பாய் , ரெண்டு தலாணி.... எங்கன போச்சுனே தெரியலியே.... நானும் எடுக்கல, வெளிய இருந்தும் ஒரு பய வந்து எடுத்துருக்க முடியாது. எடுத்துட்டு போயி என்னத்த செய்ய முடியும். அவன் தான் அவனே தான் எடுத்ருப்பான் , என்று புருஷன் மேல் தான் சந்தேகம் வந்தது..... அப்படியே சோற்றையும் வடித்துவிட்டாள். ' நேத்து வெச்ச மீன்கறி மீதி இருக்கு, இன்னிக்கு மட்டும் தான் அரிசி இருக்கு, நாளைக்கு என்ன செய்ய' 'ஐயோ என்றிருந்தது அவளுக்கு..... இந்த கார்டு எங்கனே போயிருக்கும்... எங்கனே தேடுனாலும் இல்லியே,..... பக்கம் பக்கம் இருக்குரவ எல்லாம் மூட்ட மூட்டையா கொண்டு பொய் வீட்டுல அடுக்குவாளுகளே... கர்மம் பிடிச்ச கார்டு.... இப்படி எல்லாம் எண்ண அலைகள் மனமெனும் சுவற்றில் மோதி ஒலிக்க, அவன் கணவன் வந்து விட்டிருந்தான்.

காலையும், கையையும் திண்ணையில் இருந்த சருவத்தில் கழுவிவிட்டு ,

"ஏ ராக்காயி சோறு குடுடி..." என்று வந்தான் மருது.

அவளும் சோறும், பழைய மீன்குழம்பும் கொண்டு வைத்தாள்.

"இன்னா சோறும், பழைய மீன்கறியும் தானா, தொட்டுக்க வேற ஏதும் இல்லியா?" என்று கேட்டான் சலிப்புடன்.

"இந்தேரு, இது கெடைச்சதே பெருசுன்னு நெனச்சுக்கோ" என்றாள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,

"ஏன் ஒரு கருவாடுமா பொரிக்க இல்ல" என்று கேட்டான்.

"ஏயா கையில பத்து பைசா இல்ல, வயலு வேல தொடங்கினா காசு வரும்.... இன்னியோட அரிசியும் தீரும்.... காலங்காத்தால இருந்தே தேடுறேன் இந்த கார்ட காணல, ஆமா நீ பாத்தியா? என்று அவள் கேட்டதும் அவனுக்கு புரை ஏறியது...... தண்ணி எடுத்து வந்து வைத்தாள்.

"வெள்ளம் கூட திங்கரப்போ எடுத்து வெய்க்க துப்பு இல்லியோ" என்று சொல்லிவிட்டு தண்ணீரைக் குடித்தான்.

"அதான் மொண்டு குடுத்தாச்சு.... நீயும் குடிச்சாச்சு..... இன்னாத்துக்கு இபோ எகிறுற...விடேன்....ஆமா நீ கார்ட பாத்தியா"

"திங்குற புருசனுக்கு தண்ணி மொதவே எடுத்து வெச்சு குடுக்க துப்பு இல்ல, இதுல வாய்கிழிய பேச்சு வேற"

" இப்ப என்னா நீ புரை ஏறி செத்தா போயிட்ட"

"இப்ப நான் சாவணும்னு சொல்லுதியோ.... இல்ல தெரியாம தான் கேக்கேன், சொல்லு"

"இப்ப இன்னா சொன்னேன்னு இப்பிடி விழுந்து லாவுற...??"

"ஓ..... ஏண்டி தண்ணி வெய்க்க துப்பில்லியான்னு கேட்டா நாயாட்டம் உன்ன லாவுரியானு கேக்குற...,நா என்னா இப்போ உனக்கு அம்புட்டு கேவலமா இருக்கேனோ"

"அப்பா...சாமி.... கொஞ்சம் வாய மூடுதியா ..... சும்மா ... 'ஒணக்க ஓலைல ஒண்ணுக்கு போனது போல' சும்மா தொன தொனனு .... ஆமா உனக்கெல்லாம் வாய் வலிக்காதா.....?..."

"இந்தேரு .... எளிச்சு வந்தேன்னு வச்சுக்கோ ..... மிதி மிதின்னு மிதிச்சு தள்ளிடுவேன்.... ஆமா... சும்மா ஒண்ணுக்கு மண்ணுக்குனு"

"செரி அத்த விடு..... கார்டு எங்க?"

"எனக்கு இன்னடி தெரியும்..."

"இந்த வீட்டுல தான நீயும் இருக்க "

"பின்ன வேற எங்கன இருக்குரதாம், இத்து நா கட்டுன வீடு, உங்கொப்பனா வந்து கட்டிகுடுத்தான், அதுக்கு இன்னா இப்ப"

"இந்தேரு ... பேச்சு உனக்கும் எனக்கும் தான்.... சும்மா எதுக்கு எங்கப்பன இழுக்குற இப்ப...... என்னைய கட்டித்தந்ததே பெருசு, இத்துல வீடு வேற கட்டனுமாம்ல"

"ஆமா கட்டிக்குடுத்துட்டாலும், வக்கத்த வெறும் பய, ஒரு வண்டி உண்டா..... அவனவன், மாமனாரு வாங்கிக்குடுத்த வண்டிய எடுத்துகுனு சல்லு சல்லுனு போறானுக..... எனக்குன்னு வாச்சவன் குடுத்தான் பாரு வெறும் பத்து ஏக்கரு நெலமும், பண்டார ஓட்ட வடையும்...."

"எங்கப்பனுக்கு பத்து ஏக்கரு நெலம் இருந்த நல்ல எடத்துல என்ன குடுத்துருக்காதா ?? பாவி இந்த பாளுங்கெனத்துல கொண்டாந்து தள்ளுமா??"

"என் வீட்டுலயே இருந்துகின்னு, என் சொத்தையே தின்னுட்டு, என்னையே பாளுங்கெனருனு சொல்லுதியா, பொசகெட்ட சிறுக்கி"

"இன்னது .... உங் வீடா?? இது என் வீடுயா?? உன்கொம்மா சண்ட வளத்துகின்னு போனபோ, காதுல, கையில கெடந்தத கழற்றி அடமானம் வெச்ச பணத்துல கட்டுன வீட்ட உம்மட வீடுன்னு பீத்துரியாக்கும்....உன் வீட்டுல இருந்து ஒரு ஓட்ட பான கூட வரல ..... பெருசா பேசுற பேச்சு....!!!"

"வாய , கைய வெச்சுகினு சும்மா இருந்தா ஏன் என் ஆத்தா வெளிய தொறத்துது.... "

"நீ ஒரு நச்சவாயின்னா, ஓங்க்கொம்மா ஒரு நாறவாயி... எப்பவாது வாயி தொறந்தா பரவால, சதா தெறந்தே வெச்சுகிட்டு பொலம்பிட்டே , இது குத்தம், அது நொத்தம்னு-கிட்டு இருந்தா எவ தான் சகிச்சுப்பா..?"

"ஆத்தா , அப்பன் நல்லா வாய மட்டும் வளத்து விட்டுருக்குதுக..... அவஅவ 100 பவுன் , 200 பவுனு கொண்டு வராளுக... எனக்குன்னு வந்து வாச்ச பாரு.... வெட்டிப்பயலுக்கு பொறந்தவ.... பொண்ண மட்டும் ஓட்டி விட்டுட்டு வீட்டுலே உக்காந்துட்டான் , சொம்பப்பய"

"யோவ் ...!!! இந்தேரு ...இம்புட்டு தான் உனக்கு மருவாதி.... எங்கப்பன் காசு இல்லேனா, இரந்து குடிக்குமே தவிர , சொந்த வீட்டுலே களவாடாது....."

"இப்ப என்னத்தடி நான் திருடினேன்"

"ரேசன் கார்டு உன்னைய தவிர எங்கன போயிருக்கும்றேன்..?? இப்ப தானே நாபகம் வருது , ரெண்டு நாளு குடிச்சுக்கிட்டு வந்தியே ..... இப்போல்லே தெரியுது எப்பிடி காசு வந்திருக்கும்னு ..., எவன்கிட்டயோ ரேசன் கார்ட குடுத்து அடமானம் வெச்சுகிட்டு குடிச்சுட்டு வந்திருக்க "

"இப்போ நீ கிட்டக்க இருந்து பாத்தியா நா அடமானம் வெச்சத?"

"கிட்டக்க இருந்து வேற பாக்கணுமா.... உன் லட்சணம் தான் தெரியுமே ......"

"இங்கேரு இங்கனெ பேச்சுக்கு பேச்சு பேசுனே ....செவுள பேத்துருவேன்..."

"பேசுனா என்னைய பண்ணுவ ... பொட்டபய மாதிரி போய் அடமானம் வெச்சுட்டு வந்துருக்க, உனக்கு என்னா மருவாதி..."

அவ்ளோ தான் மருது எழுந்து வந்து சாத்து சாத்து என்று சாத்திவிட்டான்.... "இனி பேச்சுக்கு பேச்சு பேசுவியா" என்று கேட்டுவிட்டு மிதி மிதி என்றும் மிதித்து விட்டான்.

"பாவி, என்னைய போட்டு இப்பிடி பாடாப் படுத்துறியே.... உன்ன பாம்பு புடுங்க, ரேசன் கார்ட போய் எங்கனயோ அடமானம் வெச்சு குடிச்சுட்டு வந்து இப்பிடி அடிக்குறியே..... உன் கையு வெளங்காம போக , உன் காலுல கட்ட மொளைக்க,"

"என் வீட்டுல இருந்துகிட்டே எனக்கு சாபம் குடுக்குறியா....??? ஆமாடி நான் தான் டி அடமானம் வெச்சு குடிச்சேன், அவனவன் பொண்டாடியயெ வெச்சு குடிக்குறான், ரேசன் கார்ட தானே வெச்சு குடிச்சேன், உன்ன இல்லையே,... அதுக்குன்னு கண்ட பயல எல்லாம் வெச்சு அறுக்குற, இனி அவ்ளோ தான் டி... வெளிய போடி" என்று விட்டு தலைச் சிண்டைப் பிடித்து இழுத்துக் கொண்டே வீட்டின் வெளியில் தள்ளினான்.

நிலைகுலைந்து போய் தரையில் விழுந்தவள் கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தாள்..... அக்கம்பக்கம் வேடிக்கைபார்ப்பதை கண்டு எழுந்தவள் அப்படியே தளர்ந்தது விடாமல், சேலையை எடுத்து சரியாக கட்டிக்கொண்டாள். எழுந்து வீட்டுக்குள்ளே போயி குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கிக் கொண்டு விறு விறுவென கிளம்பினாள்.

போகும் வழியில் குழந்தையை படித்துறையில் படுக்க வைத்துவிட்டு குளத்தில் இறங்கி முகம் ,கை கால் அலம்பினாள்.
பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மண்பாதையில் ஊரின் குறுக்கே காணும் வழியில் நடக்கத் தொடங்கினாள்.
நேரே நடந்தவள் வரும் வழியில் இருந்த காளி கோயிலில்... "ஆத்தா நீயே கேளு, எவனாச்சும் ரேசன் கார்ட போயி அடமானம் வெச்சு குடிப்பானா?" என்று வேண்டி கன்னத்தில் போட்டுக்கொண்டு நடந்தாள் சாலையில்....

வெயில் கொளுத்தியதும் குழந்தையை முந்தானையால் இழுத்து முடிந்து கொண்டு நடந்தாள். சாலையைத் திரும்பி தோப்பைத் தாண்டி வளைவில் இருந்தது அவள் வீடு......

வீட்டில் கொல்லையில் அவள் அம்மா சட்டியில் மீனைக் கழுவிக் கொண்டிருந்தாள். இவளைக் கண்டதும் அரக்கப்பரக்க வந்ததும் ,"யாத்தே இப்ப எதுக்குத்தா வெயிலா வெளையுற நேரமா கேளம்பியாந்துருக்க, "

"யம்மா " என்று வாய் நுனியில் நின்றிருந்த அழுகை பீறிட்டுக் கொண்டு வெடித்ததும், தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"இப்போ என்னாத்துக்கு கரையுதவ, எனக்கு ஒண்ணும் இல்ல கண்ணு , வெறும் ஏழு தையலு தேன், குளிகேக்குனு கல்லுலே எறங்கி வரப்ப, காலு வழுக்கி விழுந்தனாக்கும்...... கரயாதவே என்னா பெத்த ஆத்தே.....உன்னாண்ட ஆரு சொன்னா, அந்த தீவட்டி தடியன் சேதுவா , சந்தைக்கு வந்தப்போ பாத்தியா கண்ணு, " என்று தாயும் மகளுடன் சேர்ந்து ஒப்பாரி வைத்தாள்.....

"ஏ புள்ள செல்லி, போயி அந்த மீன கழுவி குழம்பு பண்ணிட்டு, தோட்டத்துல நாலு கீரைய கிள்ளி கூட்டு ஆக்கிடு" என்று மகளையும் , பேரனையும் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.

"ஏக்கோவ் , ஆத்தா பொய்யு சொல்லுவுது.... அது ஒண்ணும் கீழ விளுவல... நம்ம அப்பாரு தான் குடிச்சுட்டு வந்து சண்டைய போட்டு அம்மாளு மண்டைய கட்டயால உடச்சுச்சு, ஏ யப்பா ...எம்புட்டு ரத்தம் தெரியுமா....." என்று அடுக்கினாள் அவள் தங்கை.

"ஏ கூறுகெட்ட சென்மம்.... இப்ப தான் அவளே வீட்டுல வந்துருக்கா அதுக்குள்ள வாய தொறக்குரியாக்கும்....போ போ ..... சீனியும் , தண்ணியும் வெச்சு அக்காவுக்கு வரக்காப்பியாச்சும் போடு ....." என்று விட்டு சுவற்றில் சாய்த்து வைத்திருந்த பாயை எடுத்து பேரனையும், மகளையும் அதில் அமர்த்தினாள்.

"அத விடுமா நம்ம அப்பா திருந்தவே திருந்தாதா ?

" அத்த விடு மா, ஏதோ குடிபோதைல செஞ்சுடுச்சு..... பெரவன நா கீழ விழுந்து கெடந்ததும் அது தான் தூக்கி சைகிழு பின்னாடி உக்கார வெச்சுகிட்டு ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயி தையலும் போட்டு கூட்டியாந்துது.... இருக்குற உன் 3 தங்கசியள குடி இல்லாதவனா பாத்து புடிச்சுக் குடுக்கணும்.... தம்பி உன்ன நல்லா பாத்துக்குதா மா....பிரச்சினை எதுவும் இல்லியே.....உன் மூஞ்சி வேற சரியா இல்ல"

"அதெல்லாம் ஏதும் இல்ல மா.... அங்க நாத்து நடுவை நடக்குது.....உம்மருமவனுக்கு சோறு குடுக்க வந்தேன் .... அப்பிடியே ஒரு எட்டு உன்ன பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்..... ஆனா வருத அவசரத்துல ஒரு வெத்தல பாக்கு கூட உனக்கு வாங்கியாரல நெனைக்கும்போ தான் மனசு வலிக்கு"

" ஏ நீ என்னா விருந்தாளியா ......இது உன் வீடு..... எப்போ வேணாலும் வரலாம்...... என் மவ நல்லா சமத்தா பொறுப்பா குடும்பம் நடத்துதே அது தான் எனக்கு வேணும்."

"அதெல்லாம் ஒரு கொறவும் வராது மா.... சரி நான் இனி பொறப்படட்டுமா"

"ஏ உச்சி வெயில்ல எங்கனே போரவ, வயத்துக்கு ரெண்டு தின்னுட்டு , ராவைக்கு தம்பிக்கு தூக்குவாளில சோத்த போட்டு எடுத்துட்டு போ"

வரக்காபியை குடித்து விட்டு சுருண்டு பாயில் படுத்தவள் தான் , எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை...... வெயில் தாழ்ந்ததும் தங்கை எடுத்துக் கொடுத்த சோத்தை தின்று விட்டு ..... தாய் கொடுத்த தூக்குவாளியில் எடுத்த சோத்தையும் எடுத்துக் கொண்டு,

"ஒரு தடவ நீயும் , தங்கச்சியளும் வீட்டுக்கு வந்துடு போயேன்..... அப்பாவையும் வரச் சொல்லுங்க..... அப்பா எங்க இன்னும் காணல "

"திருவாரூருக்கு உரமூட்ட வாங்கியார போயிருக்காக..... ஒரு நாளு காலம்பர கெளம்பி வாரோம்.....நீ கெளம்பு மா "

"சரி" என்று விட்டு பாதி தூரம் கடந்தவளின் மனதில் சிந்தனை அலைகள்...... 'ரோசத்தில புள்ளையையும் தூக்கிட்டு வந்துட்டேன்....இனி எப்பிடி ரோசங்கெட்டு போறது' என்று யோசித்துக் கொண்டே நடந்தாள்...
பாலம் கடந்து நடக்கையில் மருது சைக்கிளை மிதித்து வந்து கொண்டிருந்தான்.

இவள் அருகில் வந்து சைக்கிளை நிப்பாட்டிவிட்டு இறங்கினான். இவள் தலை கவிழ்ந்து நின்றாள்.

"இங்கேரு காலம்பர அடிசுடேனு கஷ்டமா போச்சு..... சரின்னுட்டு, இனி குடிக்கபடாது, அங்கன குடிச்சாலும் பொண்டாட்டிய அடிக்கப்படாது , எதையும் விக்கபடாதுன்னு சத்யம் பண்ணிகிட்டேன்.....இன்னிக்கு நாத்து பறிச்ச கூலிய எடுத்துப் போயி ரேசன் கார்ட திருப்பி அரிசியும் வான்கியாந்து வீட்டுல போட்டாச்சு.....உன்னையும், எம்மவனையும் எப்பிடி பிரிஞ்சு இருக்குரதாம்....அதான் சைகிளுல வெரசா மிதிச்சு வந்துட்டு இருந்தேன்....உன்ன அடிச்ச கைய அடுப்புல எரிச்ருப்பேன்... ஆனா இத வெச்சு தான நடவு வாழ்கை ஓடுது...... " என்று குழந்தையை வாங்கி முத்தமிட்டு கண்ணீருடன் அணைத்துக் கொண்டான்.

பின்னர் சைக்கிளை எடுத்து அவளையும் , குழந்தையையும் பின்னால் உட்காரவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்....

"அங்க அத்த , மாமா, உன் தங்கச்சிய எல்லாம் நல்லருக்காகளா...???"

"ம்ம்"

"அடுத்த வாரம் நானும் வரேன்....மூணு பேரும் போயி பாத்துட்டு ஒரு நாளு தங்கிட்டு வருவோம் ...சரியா " என்று விட்டு வேகமாக மிதித்தான் சைக்கிளை மருது.

பெண்களின் அந்த மூன்று நாட்கள்.....!!



பெண்களின் அந்த மூன்று நாட்கள்.....!!

பெண்கள் பருவமடைந்த நாட்களில் இருந்து மாதத்திற்கு மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை மாதவிடாய் இயற்கையாக ஏற்படுகிறது. அவ்வாறு மாதவிடாய் நடைபெறும் நேரத்தில் இரத்தத்துடன் கருத்தரிக்க தயாராக இருந்து காலாவதியான முட்டையும் சேர்ந்து வெளியேறுகிறது. தாம்பத்தியத்தின் போது வெளியாக தயாராக இருக்கும் சினை முட்டைகள் மாதவிடாயின் சமயத்தில் வெளியேறுகிறது. இந்த தருணத்தில் கருத்தரிக்க தயாராக இருக்கும் பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் மூலமாக இரத்தமானது வெளியேறாமல் பாதுகாக்கப்படுகிறது.

மாதம்தோறும் ஏற்படும் ஏற்படும் இரத்த போக்கை சரியாக நிகழ்த்துவதற்கு சுரப்பிகள் சரியாக சுரக்க வேண்டும் மற்றும் உடலில் இரத்த அளவானது பராமரிக்கப்பட வேண்டும். சிலருக்கு உடலில் உடலுக்கு தேவையான இரத்தம் இல்லாத காரணத்தால் இரத்த போக்கானது சரிவர நிகழாமல்., மாதவிடாய் சுழற்சியானது தள்ளிப்போகிறது. இதிலும் சிலருக்கு மாதவிடாய் நீரினை போல வெளியேறும். இது அளவுக்கு அதிகமாக இரத்தம் உடலில் இருக்கும் நபருக்கு ஏற்படும். சில சமயத்தில்., முதல் மாதத்தில் சரியாக இருந்த மாதவிடாய் மறு மாதத்தில் திட்டுத்திட்டாக வெளியேறலாம்.

இதுமட்டுமல்லாது சிலருக்கு உடலின் குளிர்ச்சி தன்மை., வெப்பம்., வேலை., குடும்பம் மற்றும் கல்வி போன்ற பல மன அழுத்தத்தாலும் மாதவிடாயானது சீரற்று நடக்கலாம். பொதுவாக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்களின் மாதவிடாயானது திட்டுத்திட்டாக வெளிப்படுதல்., வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இடுப்பு வலி மற்றும் முட்டி வலி போன்ற பிரச்சனைகளும்., நரம்புகளின் இழுப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். இதுமட்டுமல்லாது கருப்பையில் கட்டிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. இது கண்டிப்பாக நடந்தே தீரவேண்டும். தற்போதுள்ள இரண்டு தலைமுறைக்கு முந்தைய பெண்களுக்கு பிறந்தது முதல் இறப்பது வரை உடன் சொந்தங்கள் இருந்து தேவையான அனைத்தையும் செய்து வழங்கி வந்தனர். இதுமட்டுமல்லாது பருவமடைய துவங்கும் மாதத்தில் சீரற்ற இரத்த போக்கை தடை செய்வதற்கும்., ஈடு செய்வதற்கும் அரைவேக்காட்டில் கோழியை முட்டையுடன் சமைத்து நல்லெண்ணையை வழங்கி உண்ண
சொல்லுவார்கள்.

இதற்கு அடுத்தபடியாக அரைத்த கருப்பு உளுந்து மாவுடன் வெல்ல தூளுடன் சேர்த்து வெண்ணீரில் கலந்து பிசைந்து களியை போல வழங்குவார்கள். இவையில் இருக்கும் ஊட்டச்சத்தின் காரணமாக உடல் நலம் பெரும். இதுமட்டுமல்லாது நல்லெண்ணெய் உளுந்தங்களி., பச்சை தானிய கதிர்களின் அவல் போன்றவையும் வழங்குவார்கள்.

 உடலுக்கு தேவையான சத்துக்களை தேடி வழங்கி வந்த உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட்டது. இந்த சமயத்தில் எந்த விதமான மன அழுத்தத்திற்கும் உள்ளாகாமல்., தங்களின் உடல் ஓய்வையும் பெற்று மகிழ்வாக இருந்து வந்தனர்.

இன்றுள்ள காலகட்ட சூழ்நிலையில் மாதவிடாய் சுழற்சியை முன்கூட்டியே நிகழ்த்துவதற்கு., நாட்களை தள்ளிபோடுவதற்கு உண்ணும் மாத்திரைகள் அனைத்தும் பிற்காலத்தில் குழந்தையை பெற்றெடுக்கும் சமயத்திலும்., கருவறுதலிலும் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

எந்த விதமான சூழ்நிலைக்கும் தயாராக இருக்கும் நிலையில்., இயற்கையை அதன் பாதையிலேயே விட்டுவிடுவது நல்லது.

இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் இவ்வளவு நன்மைகளா


இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் இவ்வளவு நன்மைகளா

காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்? இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். இங்கு இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் பற்களைத் துலக்குங்கள்.

தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும் போது, பற்காறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். இவை அனைத்திற்கும் உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்திருப்பது தான். எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள்.

படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், ப்ளேக் உருவாக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்கள் இரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளை பாதிக்கும். இதன் முடிவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும்

1980ம் - டிவி யும் - ஒரு பின்னோக்கிய பார்வை.


1980ம் - டிவி யும் - ஒரு பின்னோக்கிய பார்வை.
----------------------------------------
1985 க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் படத்துல இருக்கிற ஆன்டெனாவை தெரியும், அதோட அருமையும் புரியும். இன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980 களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.

இந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் வைட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் கலர் டிவி வச்சு இருந்தா கோடீஸ்வரன் ன்னு அர்த்தம். அப்போது டிவி கிறது குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தர் மாதிரி. ஒரு தெருவுக்கு ஒரு டிவி இருந்தாலே பெரிய விஷயம். அந்த டிவி ஒரு ரெண்டு நாள் சரியா ஓடலைன்னு சொன்னா தெருவே துக்கத்தில் மிதக்கும். 1980 களில் எல்லார் வீட்டுலயும் டிவி க்கு மரத்தினால் ஆனா கூடு செஞ்சு வச்சு இருப்பாங்க அதுக்குள்ள டிவி ரொம்ப பாதுகாப்பா இருக்கும். அந்த மரப்பெட்டிக்கு மேல அழகா ஒரு பூச்சாடி இருக்கும். நமக்கு ரொம்ப பழக்கமா இருப்பாங்க ஆனா டிவி போடும்போது கதவை சாத்திக்கிடுவாங்க. யாருனே தெரியாதவங்க "ஏன் தம்பி வெளிய நிக்குற" வீட்டுக்குள்ள வந்து உட்காந்து பாரு" ன்னு அன்பா கூப்பிடுவாங்க.

80 களின் தொடக்கத்தில் பெரும்பாலும் சின்ன சைஸ் டிவி களே வந்தன, டிவி பார்க்கும் போது மேல் இருந்து கீழாக கோடு வந்து கொன்டே இருக்கும். 80 களின் மத்தியில் தான் தான் கோடு வராத டிவி வந்தது. 80 களின் இறுதியில் தான் கலர் டிவி வந்தது. சிலர் டிவியில் படம் பெரியதாக தெரிய வேண்டும் என்பதற்க்காக திரைக்கு முன்பு ஒரு அடி தூரத்திற்கு லென்ஸ் வைத்து இருப்பார்கள். சிலர், கருப்பு-வெள்ளை டிவியில் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா போன்ற வண்ணங்களால் ஆன பிளாஸ்டிக் கவர்களில் அவர்களுக்கு பிடித்த வண்ண கவர்களை வாங்கி பொருத்தி இருப்பார்கள்.

சில வீடுகளில் உள்ளெ சென்று பார்க்க வேண்டும், உள்ளே என்றால் எள் விழ இடம் இருக்காது. அவ்வளவு கூட்டம் இருக்கும் அந்த வீட்டினுள். சில வீடுகளில் வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் டிவி யை வெளியே வைத்து விடுவார்கள். அந்த தெருவில் உள்ள பெரியவர் டிவி பார்க்க வந்து விட்டால், டிவி வைத்திருக்கும் வீட்டில் உள்ள குடும்பத்த தலைவரே தான் உட்காந்து இருந்த கட்டிலில் இருந்து இறங்கி கீழே உட்காந்து கொண்டு அவருக்கு கட்டிலில் இடம் அளிப்பார்.

சில வீடுகள்ல கூட்டம் சேர்ந்துடுச்சுனா சும்மானாச்சும் ஆஃப் பண்ணிட்டு அப்புறம் கூட்டம் கலைஞ்ச உடனே டிவி மறுபடியும் ஆன் பண்ணுவாங்க. இதை தெரிஞ்சுக்கிட்ட நம்ம நண்பர்களும் ஆஃப் பண்ணும்போது "எஸ்" ஆகிட்டு, ஆன் பண்ணும் போது கரெக்ட்டா மறுபடியும் வந்துடுவாங்க. அப்படி டிவி ஆப் பண்ணிட்டு கதவை அடைச்சுட்டா எத்தனை தெரு தாண்டினாலும் டிவி இருக்கிற வீட்டை கண்டுபுடிக்க உதவுறதுதான் இந்த ஆண்டெனா. வீட்டு கூரை மேல ஆண்டெனா இருந்தா வீட்டுக்குள்ள டிவி இருக்குனு அர்த்தம்.

வீட்டின் மேல் ஆண்டெனா மாட்டி விட்டாலே நாலு தெரு வரை மக்கள் வந்து விசாரிப்பார்கள், "டிவி வாங்கிட்டிங்களாக்கும், எத்தனை ரூபாய்?, ஹையா ஜாலி, இனிமே உங்க வீட்டுலயே வந்து பாத்துக்கலாம்" என்று நட்புடன் சிலரும், "டிவி மட்டும் வாங்கி இருக்கீங்க, சீக்கிரம் அதுக்கு ஒரு பொட்டி செஞ்சு போடுங்க" என்று டிவி மீதி அக்கறையாக சிலரும் பேசுவார்கள்.

அப்போ நமக்கு இரண்டே சானெல்கள் சென்னை தொலைக்காட்சி யும், டெல்லி (Doordarshan) தொலைக் காட்சியும். இப்போது உள்ளது போல் 500 சானெல்கள் எல்லாம் கிடையாது. காலை 9.00 மணி முதல் மாலை 5.30 வரை டெல்லி தூர்ஷார்ஷன், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சென்னை தொலைக் காட்சி. ரிமோட்டிற்கு எல்லாம் அப்போது வேலையை இல்லை. டிவி ஆன் பண்ண ஆஃப் பண்ண மட்டும்தான் ரிமோட்.

வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஒரு மினி திருவிழா என்றால், ஞாயிற்றுக்கிழமை சினிமா ஒரு பெரிய திருவிழா. அதிலும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள்தான் . எப்போவது கலர் படங்கள் வரும். வெள்ளிக்கிழமை 7.00 மணிக்கு வரும் எதிரொலி நிகழ்ச்சியில் அந்த வார படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள். தங்கள் அபிமான நடிகர் படம் என்றால் அறிவிப்பு வரும்போதே கைதட்டல் காதைப் பிளக்கும்.

ஞாயிறு மாலை 5.30 க்கு படம் போடுவார்கள், இப்போது உள்ளது போல் படங்கள் இடையே விளம்பரங்கள் செய்யும் யுக்தி அப்போது இல்லை. விளம்பரம் 5.00 மணிக்கு ஆரம்பித்து, சரியாக முப்பது நிமிடங்கள் ஓடும். படம் ஆரம்பித்து விட்டால் இடையில் விளம்பரம் கிடையாது. ஒளிபரப்பு தொழில் நுட்ப பிரச்சினையில் நின்று விட்டால் "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்ற போர்டு மட்டும் வரும். படத்தின் நடுவே வேறு எந்த தொந்தரவும் இருக்காது.

பக்கத்துக்கு வீட்டு மாமி, எதுத்த வீட்டு அக்கா, அடுத்த வீட்டு பாட்டி என்று எல்லாரும் சரியாக மாலை 5.00 மணிக்கு வீட்டு வேலைகளை முடித்து விட்டு விளம்பரம் போடும்போது அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் இருக்கும், ஒரே ஒரு டிவி முன்பு ஆஜர் ஆகிவிடுவார்கள்.

பெண்கள் அனைவரும் ஏதோ கோவிலுக்கு செல்வது போல நன்றாக தலைசீவி, பூ வைத்து, பவுடர் போட்டுக் கொண்டு வருவார்கள் டிவி பார்க்க. சினிமாவே புடிக்காது என்று வீராப்பு காட்டும் மாமா கூட படம் ஆரம்பித்த பிறகு யாருக்கும் தெரியாமல் நைசாக கடைசி வரிசையில் வந்து உட்காந்து விடுவார். வழக்கமாக டிவி பார்க்க வரும் ஒருவர் அன்று வர வில்லை என்றால், ஏன் அவருக்கு உடம்பு சரி இல்லையா? என்று கூட்டம் நலம் விசாரிக்கும். "டேய், ஒரு எட்டு அந்த மாமிகிட்ட போய், படம் போட்டாச்சுன்னு சொல்லு" என்று பக்கத்துக்கு வீடு அக்கா, தன் பையனை மாமி வீட்டிற்கு அனுப்புவார்.

சோக காட்சிகளை கண்டு வெம்பி மனம் வெதும்பும் பெருசுகளைப் பார்த்து இளசுகள் கிண்டல் செய்வது தனி சுவாரசியம். சில நகைச்சுவை காட்சிகளை இளசுகள் பட்டாளம் சிரித்து ரசிக்கும் "இதுல என்ன இருக்குன்னு இப்படி சிரிக்கிறீங்க" என்று பெருசுகள் பட்டாளம் கவுண்டர் கொடுக்கும்.

சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை மாநில மொழி திரைப்படங்களின் வரிசையில் மாதம் ஒரு முறை தமிழ் படம் வரும். அதில் வீடு, உதிரிப்பூக்கள் என்று அவார்ட் வாங்கின படமாக போடுவார்கள். அன்னைக்கு மட்டும் எல்லாருக்கும் கை, கால் ஓடாது, இன்னைக்கு ரெண்டு படம், ரெண்டு படம் என்று ஊரே ஜே ஜே என்று இருக்கும்.

அதே போன்று பெரிய தலைவர்கள் யாரும் இறந்து விட்டால், டிவி யில் செய்தி தவிர, மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு சோக வயலின் இசை மட்டும் ஒலித்துக் கொன்டே இருக்கும். 1984-ல் இந்திரா காந்தி இறுதி ஊர்வலமும், 1987 ல் எம்.ஜி. ஆர். இறுதி ஊர்வலம் டிவி தந்த மிகப் பெரிய சோக சுவடுகள்.

1983-ல் கபில் தேவ் தலைமையில் ஆனா இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றது டிவி தந்த மறக்க முடியாத வெற்றி நிகழ்வு.

அப்போது எல்லாம் டிவி வைத்து இருக்கும் வீட்டுக்காரர்களிடம் யாரும் எந்த சண்டைக்கும் போக மாட்டார்கள். அவர்களின் பிள்ளைகளுடன் நட்பு வைத்துக் கொள்ள ஒரு பெரிய கூட்டம் இருக்கும், தெருவில். விளையாட்டில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிவி இருக்கும் வீட்டில் நாய் வளர்த்தால் அதற்கு பிஸ்கட் வாங்கிச் சென்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

படத்தின் போது, இடையே வரும் செய்திதான் எல்லாருக்கும் இடைவேளை. செய்தி போட ஆரம்பித்த உடன் பெண்கள் கூட்டம் கலைந்து வீட்டிற்குச் சென்று மிச்சம் மீதி உள்ள வேலைகள், குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை முடித்து கொண்டு வரும். விவரம் தெரிந்த ஆண்கள் மட்டும் உட்காந்து செய்தியை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

செய்தி முடிந்து சிறிது நேரம் விளம்பரம், அப்போது கூட்டம் அவரவர் தான் முன்பு உட்காந்து இருந்த அதே இடத்தில சண்டை போடாமல் வந்து அமர்ந்து கொள்ளும்.

அப்போது செய்தி வாசித்த, ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால், ஈரோடு தமிழன்பன், வரதராஜன், பாத்திமா பாபு என்று ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் ஷோபனா ரவியை அடிச்சுக்க இன்று வரை ஆள் இல்லை.

இப்படி படம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஒரு திருவிழாதான். பாடல் என்றால் வெள்ளிக்கிழமை போடும் ஒலியும் ஒளியும் மட்டும் தான். 5 பாடல்களை பார்க்க ஒரு வாரம் முழுவதும் தவம் இருக்க வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை கரெண்ட் போய் விட்டால் அந்த ஆற்றாமையை யாரிடமும் சொல்ல முடியாது. அப்படி இருக்கும். அந்த வாரமே கருப்பு வாரமாக மனதில் பதிந்து விடும். இப்போது உள்ளது போன்று ஆயிரத்து எட்டு மியூசிக் சேனல்கள் அன்று கிடையாது. அப்படியே கரண்ட் இருந்து ஒலியும் ஒளியும் பார்த்தாலும் நமது அபிமான நடிகர் பாடல் ஒரு இருவாராம் தொடர்ந்து வரவில்லை என்றால், "தொலைக்காட்சில வேணும்னே அவர் பாட்ட போட மாட்டுக்கிறாங்க" என்று கண்டனக் குரல்கள் மெலிதாக வரும்.

செவ்வாய்க்கிழமை போடும் ஒரு மணி நேர நாடகத்திர்ற்கு அவ்வளவு மதிப்பு. இரவு 7.30 முதல் 8.30 வரை வரும், நாடகத்தின் முடிவு ஒரே நாளில் தெரிந்து விடும். மற்ற நாட்களான திங்கள், புதன்-வெள்ளி யில் அரை மணிநேரம் இரவு 7.30 - 8.00 தொடர்கள் ஒளிபரப்பாகும். கே. பாலச்சந்தரின் "ரயில் சிநேகம்", சோ வின் "ஜனதா நகர் காலனி" நடிகை ராகவி (ராஜ சின்ன ரோஜா வில் நடித்தவர்) நடித்த "சக்தி 90", Y. G. மஹேந்திரன் இரட்டை வேடத்தில் நடித்த "சாத்தியமா சொல்றேன்", காத்தாடி ராம மூர்த்தியின் "பஞ்சு-பட்டு-பீதாம்பரம்", ரகுவரன் போதைக்கு அடிமையானவராக நடித்த "இது ஒரு மனிதனின் கதை", சுஜாதாவின், கணினியை மையமாக வைத்து ஒளிபரப்பான அறிவியல் தொடர் "என் இனிய இயந்திரா" (இன்றைய "எந்திரன்" படத்திற்கு அதுதான் முன்னோடி) போன்ற தொடர்களுக்கு தனி மவுசு. இப்போது உள்ள சீரியல்களில் உள்ளது போன்று, ஒரு குடும்பத்தைக் கெடுப்பது, கள்ள உறவுகள், பச்சிளம் குழந்தைக்கு விஷம் வைப்பது, சதி திட்டம் தீட்டுவது போன்ற எந்த காட்சியும் அன்று இருக்காது.

இதையும் தாண்டி மொழி தெரியாவிட்டாலும் நாம் பார்க்கும், புதன் கிழமை - சித்ரஹார், சாந்தி தொடர், சனிக்கிழமை ஹிந்தி படம், ஷாருக்கான் நடித்த "சர்க்கஸ்" தொடர், இந்தியாவின் பாரம்பரியத்தை சொல்லும் அற்புதமான தொடரான "சுரபி" என்று வேறு ரகங்களும் உண்டு.

ஞாயிறு காலை ஒளிபரப்பான மகாபாரதம் மற்றும் தினமும் இரவு ஒளிபரப்பான சஞ்சய் கானின் "திப்பு சுல்தான்" தொடரை பார்க்காதவர்கள், இன்று 35 வயதினைத் தாண்டியவர்களில் எவரும் இல்லை. அவ்வளவு பிரபலம். இப்போது உள்ளது தமிழ் போன்ற டப்பிங் எல்லாம் அப்போது இல்லை, புரியாத இந்தியில் தான் பார்க்க வேண்டும்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை திரைப்படத்திற்கு முன்னோட்டமாக வருவது காலை 8 மணி முதல் 8.30 வரை ஒளி பரப்பாகும் திரை மலர் தான். தீபாவளி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்மையிலேயே அனைவரிடமும் சென்று அடைந்தது அந்த கால கட்டங்களில்தான். அனைவரும் ஒரே நிகழ்ச்சிகளை பார்ப்பதால், அதன் பின்னரும் அதில் வந்த நாடகங்கள், நடிகர்களின் பேட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகளின் சிறப்புகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.

அன்று ஒரு தெருவே ஒற்றுமையாக இருந்து டிவி பார்த்த காலம் போய், இப்போது நம் குடும்ப உறுப்பினர்களுடன் கூட ஒன்றாக டிவி பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனக்கு புடித்த சானல் தான் வேண்டும் என்று சண்டை வேறு. போதாக்குறைக்கு ரூமிற்க்கு ஒரு டிவி, கைக்கு ஒரு செல் போன் வைத்துக் கொண்டு தனித்தனியாக பிரிந்து விடுகிறோம். 500 சேனல்ககள் இருந்தாலும், எதிலும் மனம் லயிப்பதில்லை. ஒரு நாளைக்கு 1000 பாடல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அன்று வாரம் ஒரு முறை ஒலியும் ஒளியும் தந்த மகிழ்ச்சி ஏனோ இப்போது வருவது இல்லை.

இன்று ஆன்டெனாக்கள் மட்டும் மறையவில்லை, நம் ஒற்றுமையும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் சேர்ந்தே மறைந்து விட்டது.

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு காரணங்கள் :


குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு காரணங்கள் :

பூ , பூத்தால் காய்காய்த்து , பழம்  பழுத்துத்தான் ஆக வேண்டும். அதே போல் ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் அவளுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயமாக இருந்து தான் ஆக வேண்டும்.

 ஆனால் சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லையே ஏன்?

ஒரு பெண் பருவம் ஆன அன்று இடது பக்கமாக அடி வயிறு வலித்தில் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது. அப் பெண்ணுக்கு அடிவயிறு சுழன்று சுழன்று வலிக்க வேண்டும். அப்படி வலித்தால்  குழந்தை பாக்கியம் உண்டு.

ஒரு பெண் பூத்த அன்று முதல் எந்த நாளும் தலைக்கு ஊற்றாமல் இருந்தால்  அந்த பெண்ணை மணம்  முடித்து வைத்தால் முதலிரவு அன்று உடலுறவு கொள்ளும் போது அளவுக்கு மீறி கர்ப்பப்பை வலிக்கும். யோணி (இனக்குறி) துவாரமும் வலிக்கும். அப்படி வலிக்கும் போது ஆண் மகனை எத்தி கீழே தள்ளி விடுவாள். அந்த பெண்ணுக்கு நாதம் பொங்காது. அந்த பெண் ஒரு ஆண்மகனை சந்தோசப்படுத்துவது கடினம்.

ஒரு பெண் பூத்ததில் இருந்து 2 மதத்திற்கு ஒரு முறை 3 மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளித்தாலோ அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை குளித்தாலோ அந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை வளரவில்லை என்று அர்த்தம். இப்படி உள்ள சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம்  கிடையாது. சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.

ஒவ்வொரு பெண்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் திரும்பப்  பார்க்கும்  அளவுக்கு சப்தமாக ஏப்பம் விடுவார்கள். ( அப்பேர்பட்ட பெண்ணுக்கு திருமணம்  ஆகாமல் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்) ஆனால் திருமணமாகி குழந்தைகள் இருப்பவர்கள் இவ்வாறு ஏப்பம் விட்டால் அவர்களுடைய உறுப்பை (இனக்குறி) கிள்ளிப் பார்த்தால் அவர்களுக்கு வலிக்காது. அந்த இடத்தில் சுரணையே இருக்காது . அப்படிப்பட்ட பெண்ணுக்கு கருப்பையில் வாயு புகுந்து விடும். உதாரணமாக வாயு பிரிகிறது என்றால், ஆண்களுக்கு ஆசண வாயு வழியே வாயு பிரியும். ஆனால், பெண்களுக்கு ஆசண வாயு வழியும் பிரியும். மூத்திரத்துவார வழியும் பிரியும். அப்பேற்பட்ட பெண்ணுக்கு சில நாட்களில் கர்பப்பபை கீழே இறங்கிவிடும். இப்படியெல்லாம்  இருக்குமா என்று நீங்கள் எண்ணலாம். வயதான பெண்ணிடம் கேளுங்கள். ஆமா என்று கூறுவார்கள். அப்பொழுதுதான் எழுதியது உண்மை என்று எண்ணுவீர்கள். எந்த நூலிலும் வெளிவராத செய்தி ஆகும். இது கொஞ்ச வயது பெண்ணாக இருந்தால் குழந்தை பிறப்பது கடினம்.

             பெண்கள் தலைக்கு குளிக்கும் இரண்டு நாள் முன்பு  வெள்ளை பட்டால் குழந்தை பிறப்பது கடினம். ஒரு சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு.

             பெண்கள் தலைக்கு குளிக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு வயிறு ஊதினால் குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம்.

பெண்கள் தலைக்கு குளிக்கும் எட்டு நாட்களுக்கு முன்பு மார்புகள் அதிகமாக வலித்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது.

பெண்கள் தனக்கு குழந்தை பாக்கியம் உண்டா என்பதை அறிய அந்த பெண் தனது சிறுநீரை மாலையில் ஒரு சிரட்டையில் எடுத்து அந்த நீரில் புது ஆணியை போட வேண்டும். அதிகாலையில் சிரட்டையில் இருக்கும் ஆணியை எழுத்து பேப்பரில் போட்டு வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து பார்க்க வேண்டும். அந்த ஆணி துருப்பிடித்து இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு என்று அறியலாம். அந்த ஆணி துருப்பிடிக்காமல் போட்ட மாதிரியே இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்று அறியலாம்.

பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்.


பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்.

*ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம்
இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான
கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம்
நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள்.
யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில்
சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம்
உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து
முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர்
மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக,
நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த
கணவனை அடைந்தவளாக இருப்பாள்.


மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும்,
அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான
ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக
இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம்
அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை
பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித்
தருவாள்.

தலையில் மச்சம்

தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும்
நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர
வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே
மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால்
வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம்
இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும்.
இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித்
துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம்
என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

அந்தஸ்து

மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம்
நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும்
அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு
இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம்
இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த
மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம்

பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில்
படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள்
அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில்
போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம்
நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த
வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம்
இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்

கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான
காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும்.
உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது
குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த
நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க
மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை

இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத
நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித்
தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும்,
தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.

இதெல்லாம் உண்மைதானான்னு சம்பந்தப்பட்ட இடத்துல மச்சம் உள்ளவங்கதான் சொல்லனும்...ஹி...ஹி..

கயிறு தாண்டல்


#கயிறு_தாண்டல்

Skipping Rope அல்லது Jump Rope

இது மற்ற உடற்பயிற்சிகளையும் விட குறைந்த நேரத்தில் அதிக அளவு சத்துக்களை எரிக்கும். கயிறு தாண்டும்போது இதயத்துடிப்பு 150 அல்லது அதற்கு மேலும் செல்லும். எனவே இது இதயத்தை வலுப்படுத்தும்.

உடல் எடையைக் குறைக்க இதைவிட சிறந்த பயிற்சி இல்லை என்றே சொல்லலாம். வழக்கமாக Zym செல்வதற்கு நீங்கள் சோம்பேறித்தனப்படுபவராக இருந்தாலும் Skipping பழகிவிட்டால், அதன்மேல் ஆர்வம் வந்துவிடும்.

நாள் தவறாமல் தினமும் 10 நிமிடம் செய்தாலே போதுமானது. நல்ல பலன் தரும். நன்கு வியர்க்கும். 20 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் செய்தால், நீங்கள் அனிந்திருக்கும் உடை நனைந்துவிடும் அளவிற்கு வியர்க்கும்.

மேலும் நீங்கள் எங்கு சென்றாலும் இதனைக் கூடவே எடுத்தும் செல்லலாம்.

ஆனால் உங்கள் இலக்கு ”கட்டுடல் மேனி” என்றால் Skipping மட்டுமே போதாது. Zym-தான் சென்றாக வேண்டும். ஆனால் Skipping உங்கள் உடலுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்கும் (கட்டுடல் அல்லாமல்).

Skipping-ல் பலவகை உள்ளது. அவற்றில் முக்கியமானவை,

1. சாதரணமாகக் குதித்துக்கொண்டே கயிற்றைச் சுற்றுவது (Regular Skipping)

2. நின்ற இடத்தில் ஓடிக்கொண்டே கயிற்றைச் சுற்றுவது (Sprint Jumping)

3. கயிற்றைப் பக்கவாட்டில் சுற்றுவது (Side Swing)

4. கயிற்றைக் குறுக்காகச் சுற்றுவது (Cross overs அல்லது Criss Cross)

5. நின்ற இடத்தில் ஓடிக்கொண்டே கயிற்றைக் குறுக்காகச் சுற்றுவது (Sprinting Cross overs)

6. ஒருமுறை தாவும்போது கயிற்றை இருமுறை சுற்றுவது (Double Unders)

7. ஒருமுறை தாவும்போது கயிற்றை இருமுறை (ஒருமுறை நேராகவும் ஒருமுறை குறுக்காகவும்) சுற்றுவது (Double Under Cross Overs)

Skipping-ல் மேலும் பலவகை உள்ளது. ஆனால் இவை ஏழும் அடிப்படையானவை.

மேலும் நாம் பயன்படுத்தும் கயிற்றின் எடையைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். கயிற்றின் எடை அதிகரிக்க அதிகரிக்க நமது உடல் வழுவும் அதிகரிக்கும். ஆனால் கனமான கயிற்றைச் சுற்றுவது எளிதல்ல. முதலில் சாதரனமான கயிற்றில் நன்கு பழகிய பின்னரே கனமான கயிற்றைப் பயன்படுத்த வேண்டும்...

ஆண்களைப் பற்றிய உண்மைகள்!!


ஆண்களைப் பற்றிய உண்மைகள்!!

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம்
தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான
படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே
செய்யத் தொடங்கி விடுகிறான்,
அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,.....

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு
வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான்.

அவன் மகள் மற்றும் சகோதரிக்காக
தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம்
கடனாளியாய் உருவாகிறான்
ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த
தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.

அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும்
குழந்தைகளுக்கான படிப்பு, திருமணம் போன்றவைகளில் எந்தவித குறையும் இல்லாமல் இருக்க தன்னையே தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும்,

தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.

எல்லா தாயும், மனைவியும் முதலாளியும்
அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்களே, உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள்.

அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான்
என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது
உங்கள் கரங்களை நீட்டுங்கள்

அவனிடமிருந்து இருமடங்காக
நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு,

அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்!

உங்களுக்கு என்ன நோய்?


#உங்களுக்கு_என்ன_நோய்?
இதில் குறிப்பிடீடுள்ளது படித்து பயன் பெறுங்கள்
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

துணுக்கு : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

துணுக்கு: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த அழுத்தத்தினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

துணுக்கு: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?

நாம் குளிர் (A.C) நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

துணுக்கு: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

துணுக்கு: அதிகப்படியான மன அழுத்தம் நெஞ்சு வலி வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

துணுக்கு: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

துணுக்கு: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

துணுக்கு: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?

நீரிழிவு நோயின் பாதிப்பு. ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

துணுக்கு: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

துணுக்கு: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

துணுக்கு: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

துணுக்கு: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

துணுக்கு: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

துணுக்கு: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

16. வாய் ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

துணுக்கு: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

துணுக்கு: பல வித சத்துமிக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் அழுத்தத்தை குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் தொற்று குறைந்து வாய்ப்புண் ஆறும்.

18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது என்ன வியாதி....?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இது ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

துணுக்கு: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.
----------------------------------------

ஏன் முதன்முதலில் அரிசியில் அல்லது நெல்லில் எழுத வேண்டும் பிள்ளைகள் !!


ஏன் முதன்முதலில் அரிசியில் அல்லது நெல்லில் எழுத வேண்டும் பிள்ளைகள் !! தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் ஞானத்தின் தேடல் என்பது பழைய காலத்திலிருந்தே குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கப்படுகிறது.

இதை சடங்காகவே நமது இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.

இந்த சடங்கு பல மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளது. வங்கத்தில், இந்த சடங்கு கூட ஹாடே கோரி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல குடும்பங்களில், இந்த சடங்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

இந்த எழுத்தறிவித்தல் சடங்கு எதற்காக முறைப்படி பின்பற்றப்படுகிறது என்பதன் முக்கியத்துவதை அறிந்துகொள்ளுங்கள்


1. கல்வி தீட்சை:
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம். கல்வி கற்பதன் மூலம் ஒருவர் இந்த பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேடத்தொடங்குகின்றார்.

எனவே, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதல் அடியை அன்னை சரஸ்வதியை பூஜை செய்து கொண்டாடி தொடங்குகின்றோம்.


2. வெற்றியின் அடையாளம்:
பல மாநிலங்களில் இந்த அக்ஷரப்யாஷம் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது. அது கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்துகின்றது.

இந்த நாளில் மூன்று விதமான சக்திகளான இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள் ஒன்றிணைகின்றன. இந்த மூன்று விதமான சக்திகள் இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன.


3. எழுதக் கற்றுக் கொள்வது:
குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர்.

அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர்.

எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.


4. ஓங்காரத்தின் முக்கியத்துவம்:
ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேழும் இது நித்தியத்தை குறிக்கின்றது.

எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சம்ஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது.

இதுவே அனைத்தினுடைய தொடக்கம். இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.

5. குழந்தைகள் மணல் / அரிசி எழுதுகிறார்கள்:
ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள்.

இப்போதெல்லாம், குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். வங்கத்தில், குழந்தைகள் ஒரு சுண்ணாம்பு கட்டி கொண்டு ஒரு ஸ்லேட்டில் எழுத ஆரம்பிக்கின்றார்கள்.


வயது :
வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

முதன் முதலில் அரிசியில் அல்லது நெல்லில் ஏன் கல்வி கற்க வேண்டும்!


முதன் முதலில் அரிசியில் அல்லது நெல்லில் ஏன் கல்வி கற்க வேண்டும்!

கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி கற்பதன் மூலம் ஒருவர் அந்தப் பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேட தொடங்குகிறார்கள்.
எனவே நாம் நம்முடைய தேடலுக்கான முதல் அடியை அன்னை சரஸ்வதி பூஜை செய்து கொண்டாடி தொடங்குகின்றோம்
பல மாநிலங்களில் இந்த அட்சராப்பியாசம் வெற்றியின் அடையாளமான விஜயதசமியன்று நிகழ்த்தப்படுகிறது.

கல்விம்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதை மறைமுகமாக உணர்த்துகிறது இந்த நாளில் மூன்று விதமான சக்திகள் ஆன இச்சா கிரியா மற்றும் ஞான சக்திகள் ஒன்றிணைக்கின்றன.
இந்த மூன்று விதமான சக்திகளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன. இந்த நாளில் தான் முதன்முதலில் எழுது தொடங்குகின்றன.
அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக் கொள்கின்றன.
அவர்கள் மீது வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது என்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது கண்டுபிடிக்கின்றனர் எனவே இந்நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செல்வம் வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது.
ஓம் காரம் செயல் மற்ற மனத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது மேலும் இது நித்தியத்தை குறிக்கின்றது

எனவே ஒரு குழந்தை ஒன்று என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய இயற்கையை தொடங்குகின்றது.
இது சமஸ்கிருதத்திற்கு சாரமாக கருதப்படுகிறது இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகிறது
ஆரம்பத்தில் குழந்தைகள் தங்களுடைய குருகுலத்திலும் என்கிற சொல்லை மனதில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தல் தொடங்கினார்கள்.
இப்போதெல்லாம் குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி என்கிற ஓம் சொல்லை எழுதுகின்றார்கள்.
வங்கத்தில் குழந்தைகள் ஒரு சுண்ணாம்பு கட்டிக்கொண்டு ஒரு சேர்ட்டில் எழுத ஆரம்பிக்கின்றார்கள் வேதகாலத்தில் உபநயனத்தின் போது ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்போது குழந்தைகளின் வயது சுமார் 5 ஆக இருக்கவேண்டும் ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.
இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் .மேலும் இதை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்து இருந்தாலும் கமென்ட்ல் தெரிவிக்கலாம்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 4 அக்டோபர், 2019

பெண்களுக்கு இடுப்பு வலி வர காரணமும், தீர்வும்


பெண்களுக்கு இடுப்பு வலி வர காரணமும், தீர்வும்

பழங்காலத்தில் பெண்கள் சமையல் அறையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள். ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது. ஆனால் இப்போது இருக்கிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம்.

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி போன்றவற்றை உபயோகித்து வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி என்பது தனியாக செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் அதிலேயே எல்லாம் கிடைத்தது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றிற்கும் மிஷின் வந்து விட்டது.

இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் இருந்து எடுத்து காய போட சோம்பேறி தனமாக இருக்கிறது. சமையலறையிலேயே இரண்டு மணி நேரமானலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சில‌பேர் தான் கிச்ச‌னில் சேர் போட்டு கொண்டு கொஞ்ச‌ம் நேர‌த்திற்கொருமுறை உட்கார்ந்து கொள்வார்க‌ள்.

ஆனால் வேலைக்கு போகும் பெண்க‌ள், அவ‌ச‌ர‌அவ‌ச‌ர‌மா ச‌மைப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் இருக்காது. தகுந்த உடற்பயிற்சியின் மூலம் இது போன்ற வலிகளை தவிர்த்து கொள்ளலாம். முடிந்தவர்கள், நான்கு முறை மாடிப்படி ஏறி இறங்கலாம்.

ஸ்கிப்பிங் ஆடலாம். நீந்துதல் உடற்பயிற்சி செய்யலாம். நீந்துதல் உடற்பயிற்சி மூலம் அதிகப்படியான முதுகுவலி, இடுப்புவலி ,கால் வலி கூட சரியாகும். மன அழுத்தத்தையும் குறைக்கலாம். முடிந்த அளவு நடைபயிற்சி செய்யுங்கள். தினம் ஒருமணி நேரம் நடப்பதன் மூலம் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த முடியும்.

வியாழன், 3 அக்டோபர், 2019

தமிழ் காய்கறி அருஞ்சொற்பொருள்/TAMIL VEGETABLES GLOSSARY


தமிழ் காய்கறி அருஞ்சொற்பொருள்/TAMIL VEGETABLES GLOSSARY -🍆🥒🌶🌶

A - வரிசை
AMARANTH - முளைக்கீரை
ARTICHOKE - கூனைப்பூ
ASPARAGUS - தண்ணீர்விட்டான் கிழங்கு

B - வரிசை
BEANS - விதையவரை
BEET ROOT - செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு
BITTER GOURD - பாகல், பாகற்காய்
BLACK-EYED PEAS - தட்டைப்பயறு
BOTTLE GOURD - சுரைக்காய்
BROCCOLI - பச்சைப் பூக்கோசு
BRUSSELS SPROUTS - களைக்கோசு

C - வரிசை
CABBAGE - முட்டைக்கோசு, முட்டைக்கோவா
CARROT - மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு
CAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
CELERY - சிவரிக்கீரை
CILANTRO - கொத்தமல்லி
CLUSTER BEANS - கொத்தவரை
COLLARD GREENS - சீமை பரட்டைக்கீரை
COLOCASIA - சேப்பங்கிழங்கு
CORIANDER - கொத்தமல்லி

D - வரிசை
DRUM STICK - முருங்கைக்காய்

E - வரிசை
ELEPHANT YAM - கருணைக்கிழங்கு

F - வரிசை
FRENCH BEANS - நாரில்லா விதையவரை

G - வரிசை
GOOSEBERRY - நெல்லிக்காய்
GREEN BEANS - பச்சை அவரை

H - வரிசை

I - வரிசை

J - வரிசை

K - வரிசை
KALE - பரட்டைக்கீரை
KOHL RABI - நூல்கோல்
KING YAM - ராசவள்ளிக்கிழங்கு

L - வரிசை
LADY'S FINGER - வெண்டைக்காய்
LEAFY ONION - வெங்காயக் கீரை
LEEK - இராகூச்சிட்டம்
LETTUCE - இலைக்கோசு
LOTUS ROOT - தாமரைக்கிழங்கு

M - வரிசை

N - வரிசை

O - வரிசை
OLIVE - இடலை

P - வரிசை
PARSLEY - வேர்க்கோசு
PLANTAIN - வாழைக்காய்
POTATO - உருளைக்கிழங்கு

Q - வரிசை

R - வரிசை
RED CARROT - செம்மஞ்சள் முள்ளங்கி
RIDGE GOURD - பீர்க்கங்காய்

S - வரிசை
SNAKE GOURD - புடல், புடலங்காய்
SPRING ONION - வெங்காயத்தடல்
SQUASH GOURD - சீமைப்பூசனி(க்காய்)
SWEET POTATO - வத்தாளக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு

T - வரிசை
TAPIOCA - மரவள்ளி(க்கிழங்கு)
TURNIP - கோசுக்கிழ‌ங்கு

U - வரிசை

V - வரிசை

W - வரிசை

X - வரிசை

Y - வரிசை
YAM - சேனைக்கிழங்கு

Z - வரிசை
ZUCCHINI - சீமைச் சுரைக்காய்

புதன், 2 அக்டோபர், 2019

காய்கறிகளின் பயன்களும் பக்கவிளைவுகளும்


காய்கறிகளின் பயன்களும் பக்கவிளைவுகளும்...

#கத்தரிக்காய்

#என்னஇருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து
#யாருக்குநல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.
யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.
#பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.

#முருங்கைக்காய்

#என்னஇருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி
#யாருக்குநல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
#யாருக்குவேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.
#பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.

#மாங்காய்

#என்னஇருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ
#யாருக்குவேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.
#பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

#அவரைக்காய்

#என்னஇருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.
#யாருக்குநல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.
#யாருக்குவேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.
#பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.

#அத்திக்காய்

#என்னஇருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து
#யாருக்குநல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
#பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.

#பீர்க்கங்காய்

#என்னஇருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்
#யாருக்குவேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
#பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும


#கோவைக்காய்

#என்னஇருக்கு : விட்டமின் ஏ
#யாருக்குநல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு
#பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.

#புடலங்காய்..

என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.
யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

#பாகற்காய்..

என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது

யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

#சுரைக்காய்...

என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்
யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு
பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.

#பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது
பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.

#கொத்தவரைக்காய்

என்ன இருக்கு : நார்ச்சத்து
யாருக்கு நல்லது : நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.
யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பலன்கள்: ருசி மட்டுமே

#வாழைக்காய்

என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் இ.
யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்
யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.

#வெள்ளரிக்காய்

என்ன இருக்கு: விட்டமின் ஏ, பொட்டாசியம்
யாருக்கு நல்லது: சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு
பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

#சுண்டைக்காய்..

என்ன இருக்கு: விட்டமின் சி
யாருக்கு நல்லது : சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்
பலன்கள்: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.

#பலாக்காய்..

என்ன இருக்கு : சுண்ணாம்புச்சத்து
யாருக்கு வேண்டாம் : வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு
பலன்கள் : செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.

#பப்பாளிக்காய்..

என்ன இருக்கு : விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.
யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்
யாருக்கு வேண்டாம் : கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்