ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பயனுள்ள மருத்துவ குறிப்புகள் 57.



பயனுள்ள மருத்துவ குறிப்புகள் 57.

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக...


10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.



உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.


மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்... டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சனி, 16 டிசம்பர், 2017

குங்குமம்


  குங்குமம்

🌺பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடியே குங்குமம். இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்தால் குங்குமம் தயார். மஞ்சளும், காரமும் வேதிவினை புரிவதால் சிவப்பு நிறம் கிடைக்கிறது.

அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது. மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளைத் தோற்றுவிக்கும். இதை அணிந்த எவரையும் வயப்படுத்துவது கடினம்.
தெய்வத்தன்மையும் மருத்துவத் தன்மையும் உள்ள குங்குமத்தை அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

குங்குமம் இட்டுக்கொள்வதால் புத்துணர்வும், புதுத்தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.
மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம் என்பதற்கு குங்குமம் ஒரு மிக பெரிய சான்று என்றே கூறவேண்டும்.

🌸 திருமணமான பெண்கள் பலரும் நெற்றியில் குங்குமம் இடுவது வழக்கம். இதற்குப் பின்னால் உள்ள நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

என்னதான் ஸ்டிக்கர் பொட்டு இருந்தாலும், குங்குமத்திற்கு இருக்கும் மதிப்பே தனி. அதனை இளம்பெண்கள் தொடங்கி, திருமணமான பெண்கள் வரையிலும், வித்தியாசமான வடிவில் நெற்றியில் இட்டுக் கொள்வது நம் மரபு.

அப்படிச் செய்வதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீ மகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.


7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்க்க ஆயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
குங்குமம் வைக்க சிறந்த திசை எதுவென்று பார்க்கலாம்.


பெண்களுக்குரிய மங்கல அடையாளம் குங்குமம். பெண்கள், உடல்நலம் இல்லாத இல்லாத நாளிலும் கூட குங்குமம் வைப்பது அவசியம்.

சுமங்கலிகள், கிழக்கு நோக்கி நின்று, ‘’ஸ்ரீம் ஸ்ரீயை நம; ஸம் சுபம் பூயாத்,’’ என்னும் லட்சுமி மந்திரம் சொல்லி புருவ மத்தியில் குங்குமம் வைக்க வேண்டும்.

இதனால், லட்சுமி கடாட்சம் உண்டாகி, திருஷ்டி தோஷம் நீங்கும். ஆக, குங்குமம் வைக்க உகந்த திசை, கிழக்குத் திசையே ஆகும்.


முகூர்த்தம் எப்படி வரையறுக்கப்படுகிறது எனப் பார்க்கலாம். ..


முகூர்த்தம் எப்படி வரையறுக்கப்படுகிறது எனப் பார்க்கலாம். ..

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர்.

 அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முகூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.

1 ருத்ர முஹுர்த்தம் 06.00 AM – 06.48 AM

2 ஆஹி முஹுர்த்தம் 06.48 AM – 07.36 AM

3 மித்ர முஹுர்த்தம் 07.36 AM – 08.24 AM

4 பித்ரு முஹுர்த்தம் 08.24 AM – 09.12 AM

5 வசு முஹுர்த்தம் 09.12 AM – 10.00 AM

6 வராஹ முஹுர்த்தம் 10.00 AM – 10.48 AM

7 விச்வேதேவா முஹுர்த்தம் 10.48 AM – 11.36 AM

8 விதி முஹுர்த்தம் 11.36 AM – 12.24 PM

9 சுதாமுகீ முஹுர்த்தம் 12.24 PM – 01.12 PM

10 புருஹூத முஹுர்த்தம் 01.12 PM – 02.00 PM

11 வாஹிநீ முஹுர்த்தம் 02.00 PM – 02.48 PM

12 நக்தனகரா முஹுர்த்தம் 02.48 PM – 03.36 PM

13 வருண முஹுர்த்தம் 03.36 PM – 04.24 PM

14 ஆர்யமன் முஹுர்த்தம் 04.24 PM – 05.12 PM

15 பக முஹுர்த்தம் 05.12 PM – 06.00 PM

16 கிரீச முஹுர்த்தம் 06.00 PM – 06.48 PM

17 அஜபாத முஹுர்த்தம் 06.48 PM – 07.36 PM

18 அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36 PM – 08.24 PM

19 புஷ்ய முஹுர்த்தம் 08.24 PM – 09.12 PM

20 அச்விநீ முஹுர்த்தம் 09.12 PM – 10.00 PM

21 யம முஹுர்த்தம் 10.00 PM – 10.48 PM

22 அக்னி முஹுர்த்தம் 10.48 PM – 11.36 PM

23 விதாத்ரு முஹுர்த்தம் 11.36 PM – 12.24 AM

24 கண்ட முஹுர்த்தம் 12.24 AM – 01.12 AM

25 அதிதி முஹுர்த்தம் 01.12 AM – 02.00 AM

26 ஜீவ/அம்ருத முஹுர்த்தம் 02.00 AM – 02.48 AM

27 விஷ்ணு முஹுர்த்தம் 02.48 AM – 03.36 AM 28

28. த்யுமத்கத்யுதி முஹுர்த்தம் 03.36 AM – 04.24 AM

29. பிரம்ம முஹுர்த்தம் 04.24 AM – 05.12 AM

30. சமுத்ரம் முஹுர்த்தம் 05.12 AM – 06.00 AM

ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும்.

 பகல் பொழுது உத்தராயணம் என்றும், இரவுப் பொழுதை தட்க்ஷிணாயணம் என்றும் சொல்வார்கள்.

 உத்தராயணம் தொடங்கும் முன், வருகின்ற மார்கழி மாதமே தேவர்களுக்கு உஷத் காலம்.

இறைவனை எண்ணி தியானம், ஜபம் செய்ய தேவர்களின் உஷத் காலமான மார்கழி மாதம்தான் மிகவும் உயர்ந்தது.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

 மார்கழி மாத தொடக்கத்தில்தான் பாரதப் போர் தொடங்கியது.

 இந்தப் போரில் கண்ணன், உலக மக்களுக்காக வழங்கிய கீதை பிறந்ததும் மார்கழி மாதமே!

 பாரதப் போர் முடிவடையும் சமயம் பிதாமகர் பீஷ்மர், அம்புப் படுக்கையில் சயனித்திருந்த பொழுது அவர் உச்சரித்ததே விஷ்ணு சகஸ்ரநாமம்.

விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை நமக்கு அளித்த தும் மார்கழி மாதமே!

 பகவான் நாமம் ஒன்றே கலியுகத்தில் பக்தி மார்க்கத்திற்கு வழி என்று பகவானனே பீஷ்மர் வாயிலாக சகஸ்ரநாமத்தை அருளினார்.

 வைணவத் திருத்தலங்களில் பெரும் உற்சவமாகக் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருநாள், மார்கழி மாதத்தில்தான் வருகிறது.

 நடராஜப் பெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை.

 மார்கழி மாதத்தில் வருகின்ற திருவாதிரை நட்சத்திரத்தன்றுதான் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

மார்கழி மாதத்தின் மற்றொரு விசேஷ நாள் ஸ்ரீஅனுமத் ஜெயந்தி.

மார்கழி மாதம் அமாவாசைஅன்று, மூலம் நட்சத்திரத்தில் வாயு மைந்தன் ஆஞ்சநேயன் பிறந்தார். இதுவும் மார்கழி மாதத்தின் சிறப்பு.

கோதை நாச்சியார் எனப்படும் ஸ்ரீ ஆண்டாள் கண்ணபிரானை குறித்து திருப்பாவை நோன்பிருந்ததும் 30 பாசுரங்கள் கொண்ட திருப்பாவை எனும் பாடலை நமக்கு அருளியதும் மார்கழியில் தான்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழியில் நாமும் பிரம்ம முகூர்த்த காலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்களின் அருளை பெருவோமாக

வெள்ளி, 15 டிசம்பர், 2017

மார்கழி ...

மார்கழி ...

*மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல்.* ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே  ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.

மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

*அதிகாலை அற்புதம்*

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று  அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த  அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் ‘திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம்’ என்று மார்கழியின் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் கூறிவைத்தார்கள்.

இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது  பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட ஏதுவாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது  சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை வைப்பது இல்லாமல் போனது.

*சரணாகதியே வழி*

பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங் களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும்,  புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.

இறைவனை சுலபமாக அடையும் வழியானது சரணாகதி. ‘உன்னை தவிர என் வாழ்க்கை துணை வேறுயாரும் இல்லை. என்னை  சீக்கிரம் வந்து ஆட்கொள்’ என்று ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளும், பாண்டிய அரசவையில் அமைச்சர் பதவி வகித்தும்,  ‘அரச பணியை விட, ஆண்டவன் பணியே சிறந்தது’ என்று இறைவழி சென்று அவன் புகழ்பாடி தொழுத நாயன்மார்களில்  ஒருவரான மாணிக்கவாசகரும் மேற்கொண்டது இந்த சரணாகதியைத்தான். அதன் வாயிலாகவே அவர்களின் வாழ்வு உயர்வு  பெற்றது.

*மதிப்புக்குரிய மார்கழி*

மார்கழி மாதத்தை மதிப்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது  மிகையாகாது. மார்கழி மாதத்தில் பாராயணம் செய்யும்  பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர்  பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை பாராயணம் செய்யத் தொடங்கியதும் விண்ணை முட்டி நின்ற  மார்கழியின் சிறப்பு, விண்ணைத் தாண்டியும் வளரத் தொடங்கி விட்டது.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்...

*மாதங்கள் எல்லாவற்றிலும் மார்கழி மாதம் சிறந்தது என்று இந்து மதம் கூறுகின்றது.* மார்கழியை ஜோதிட சாஸ்திரம் தனூர் மாதம் என்கிறது. மார்க்கசிரம் என்பது மிருகசீரிடம் என்னும் நட்சத்திரத்தைக் குறிக்கும். சந்திரன் மிருகசீரிட நட்சத்திரத்தில், கலைகள் பதினாறும் பூர்த்தியாகி பவுர்ணமி ஆனதால் மார்கழி எனவும், சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் தனுர் மாதம் எனவும் கூறப்படுகிறது.

மார்கழி மாத நாட்கள் முழுவதும் மிகவும் விசேஷமானவை. நாள்தோறும் சகல சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.

மக்கள் யாவரும் அதிகாலையில் துயில் எழுந்து, வீடுகளை சுத்தம் செய்து, உடல் நீராடி, வீட்டு வாசல்களில் அழகிய கோலங்கள் போடுவார்கள். கோலத்தில் மார்கழி பிள்ளையார் வைத்து புஷ்பங்கள் இட்டு, ஆலயம் சென்று இறைவனை வழிபடுவார்கள். இந்த மாதத்தில் மக்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க பார்க்க முடியும்.

மனிதர்களுக்கு ஒரு நாள், 60 நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடம்). பகல் 30 நாழிகை, இரவு 30 நாழிகை. மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி இரவுக் காலம் முடிகிற தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன.

மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். ஒரு நாளின் முக்கியமான பாகம் வைகறைப் பொழுது என்றால் அது மிகையாகாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மார்கழியில்தான் இறைவனை அதிகமாக வழிபடும் நிகழ்ச்சிகள் வருகின்றன. மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.

எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். இவ்வாறு பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம்.

மார்கழி மாத அதிகாலைப் பொழுதில், மக்கள் அனைவரும் காத்திருந்து அம்மையப்பன் அருள்பெற்று சகல காரியங்களும் இடையூறின்றி இனிதே நிறைவேற பிரார்த்தனை செய்கின்றனர். இந்த நேரத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஐந்தொழில்களையும் புரிகின்றார்.

சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக, மிக விசேஷமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மார்கழியை நோன்பு மாதம் என்று கூறுவதே சாலப் பொருந்தும்.

நோன்புக்கு புலனடக்கம் இன்றியமையாதது. நமது நாட்டில் மழை, குளிர் காலங்களில் தான் பெரும்பாலும் விரத நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவர்களின் பகல் காலமான தை முதல் ஆனி வரை சுப காரியங்கள், அதாவது விவாகப் பேச்சுகள், திருமணங்கள் நடத்துகின்றோம்.

தேவர்களின் இரவு காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் விரதம், தியானம் முதலியவற்றைச் செய்கிறோம். விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனவே ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதம் மார்கழி என்று கூறப்படுகிறது.

*மகிமைமிகு மார்கழி!*

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம்.

தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும் இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தின் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் "உஷத் காலம்' என்கிறோம். ஆகையால் இம்மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி இறைவனை வணங்கினால் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக வாழ, தேவர்கள் ஆசீர்வதிப்பர் என்பது நம்பிக்கை.

அறிவியலின்படி, மார்கழி மாதத்தில் தான் ஒúஸôன் படலம் பூமிக்கு அருகாமையில் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ளது. ஒஸோனை சுவாசித்தால் உடல் நலத்திற்கு நல்லதென்ற காரணத்தாலேயே பெண்களை காலையில் கோலம் போடவும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் எனலாம்.

மார்கழியின் பெருமையை ஆண்டாள் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்ற பாடலில் விளக்குகிறார். மார்கழி முழுதும் அதிகாலை நீராடி இறைவன் நாமாவை ஒரு முறை ஜபித்தாலே கோடிமுறை ஜபித்த புண்ணியம் கிடைக்கும் என்பது பகவானே சொன்ன வாக்கு. மார்கழி மாதம் விரதம் இருந்து இறைவனை வழிபடலாம். இத்தகு பெருமை பெற்ற மார்கழியில் இறைவனை நாராயணரை வணங்கி அவர் அருள் பெறுவோம்.

தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை!



தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை!
 
கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களைத் தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில் தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திற்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறு கற்றாழை மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழை என வழங்கப்படுகிறது.

சோற்றுக்கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச்சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்நீரில் 7 - 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

சோற்றுக்கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு சக்தி கொடுக்கும் நிகரற்ற மருந்தாகும்.

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதை சேகரித்து வைத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் கூட கற்றாழைச்சாறு பயன்படும்.


கற்றாழைச்சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும். தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்துநன்குஅரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும்.

தோல் நோய் வராது. கற்றாழைக் கழியைத் தலை முடியில் தடவி சீவினால் முடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும். பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம்.

சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

தலைமுடிபராமரிப்பில்முடியின்வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும்முடிப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வரதலைமுடிநன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுகமான உறக்கம் வரும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின்மாதவிடாயைஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

கற்றாழையின் மருத்துவ பயன்கள்


கற்றாழையின் மருத்துவ பயன்கள்
.
தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.

தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். சோற்றை கரண்டியளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும். அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.

கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது.

இலை மஞ்சள் நிறத் திரவமும் (கரியபோளம்) தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.

எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும்.

முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. கற்றாழை சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகம் பளபளப்பாக மாறி விடும். இதனை குமரி களிம்பு என்பர்.

குமரி பக்குவம் – இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு கற்றாழை சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து கரண்டியளவு சாப்பிட தீரும்.

குமரி எண்ணெய் – கற்றாழை சோற்றை எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும். தூக்கம் சிறப்பாக வரும்.

மூசாம்பரம் – கற்றாழையைக் கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை இரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும். மூட்டு வீக்கத்திற்கு மூசாம்பரத்தை நீரில் அரைத்து போட தீரும்.

ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வேரை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நோய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும்.

சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. cancer என்னும் புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

நறுங் கற்றாழைக்கு வாத மேகம், கப கோபம், கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி (குஷ்டம், பால்வினை நோய்கள்), மூலம், உன்மத்தம், பகந்தரம், வயிற்று நோய், தினவுள்ள பித்த கிரிச்சரம் (அரிப்பும், பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு) ஆகிய வியாதிகள் மருண்டு ஓடும் என்று பொருள். மேலும் மது மேகத்தால் (சர்க்கரை வியாதியில்) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.

இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு, அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும். அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும். மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை. (இந்த வகை கற்றாழைக்க குமரி கற்றாழை என்றும் பெயருண்டு).

உஷ்ண பிரச்சனைகளைப் போக்கும் கற்றாழை

உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்க கூடியது. கோடைகாலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுக்கற்றாழையின் உள்ளேயுள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.

இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். நன்றாக சதைப்பற்றுள்ள கற்றாழை மடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சதை பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இந்த துண்டுகளைப் பலமுறை தண்ணீர் விட்டு கழுவவேண்டும். அவற்றின் வழுவழுப்புத் தன்மையும் நாற்றமும் அகலும் வரை கழுவி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

வாய் அகன்ற பாத்திரம் ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோ ஆமணக்கு என்ணெய் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். வெங்காயத்தை மட்டும் இடித்து சாறு எடுத்து மற்ற பொருட்களோடு கலந்து அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக எரிக்க வேண்டும்.

சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வயிற்றில் ரணம், மாந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ண வாயு தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை,கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும். கற்றாழை உடல் முதல் உள்ளம் வரை அனைத்தையும் குணப்படுத்தும் சிறந்த மருந்து.

அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் சோற்று கற்றாழை

1. சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.

2. சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.

3. சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் stress தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.

4. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

5. 100கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்து கொண்டு அத்தோடு 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தை சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.

6. சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.

7. கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.

8. சோற்றுக் கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால்ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

9. சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் இரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.

10. சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டு சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

11. சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுனஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.

12. சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது இரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

13. இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.

14. சோற்றுக் கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் பேகொசைட்டோஸிஸ் மற்றும் ஆண்டிபாடீஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

பெண்களே வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இதை செய்யுங்க



பெண்களே வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இதை செய்யுங்க

பெண்களே கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அறிவை ஊட்ட இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.

கருவில் இருக்கும் குழந்தையை ஆரோக்கியமாகவும், அறிவாகவும் உருவாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குழந்தைக்கு எப்படி கருவில் இருந்தே அறிவை ஊட்டி வளர்க்க முடியும் என்பதில் சந்தேகம் இருக்கலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் தினமும் சிறிதளவு நேரத்தையாவது ஒரு நல்ல புத்தகத்தை படிக்க எடுத்துக் கொள்ளுங்கள். தாய் ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலமாக தனது குழந்தைக்கும் அறிவை ஊட்ட முடியும்.

கர்ப்பகாலத்தில் பாட்டு பாடுவது என்பது உங்களது மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும். அதோடு மட்டுமில்லாமல் இது உங்களது குழந்தையும் மூளையையும் கூட அறிவுப்பூர்வமானதாக மாற்றும்.

கர்ப்ப காலத்தில் நமது காதுகளில் விழும் வார்த்தைகளும், நமது மனதில் தோன்றும் எண்ணங்களும், அடுத்தவர்களிடம் பேசும் வார்த்தைகளும் நல்லதாக மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் உங்களது குழந்தைக்கு கருவில் கற்பிக்கும் வாழ்க்கைப் பாடமாகும்.

கர்ப்பிணி பெண்கள் உங்களது வயிற்றினை மசாஜ் செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில் இது போன்று மசாஜ் செய்து விடுவதால் குழந்தைகளின் தொடு உணர்வு அதிகரிக்கும்.

கருவில் குழந்தை இருக்கும் போது, பெண்கள் எப்போது சிரித்துக் கொண்டே சந்தோஷமாக இருக்க வேண்டியது அவசியமாகும். வேண்டாத விஷயங்களை எல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பது கண்டிப்பாக கூடாது. இது குழந்தையை பாதிக்கும்.

கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி வெளியில் இயற்கை நிறைந்த இடங்களுக்கு சென்று வருவது வேண்டும். கடற்கரை, பசுமையான இடங்கள், அழகான உணவகங்கள் என வெளியில் சென்று வருவதால் குழந்தை கருவில் இருக்கும் இரண்டாம் பருவ காலத்தில் பல சூழ்நிலை மாற்றங்களை உணர முடியும். அதுமட்டுமின்றி தாயின் மனதும் வெளியில் சென்று வருவதால் ரிலாக்ஸ் ஆகிறது.

குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பசியுடன் இருப்பது மிகவும் தவறான ஒன்று. நீங்கள் தேவையான சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும் உங்களது குழந்தையை சிறப்பாக பெற்றெடுக்க முடியும். நிறைய பழங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள் என வகைவகையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

மார்கழி மாதம் அதிகாலையில் கோலம் போடுவது ஏன்?



மார்கழி மாதம் அதிகாலையில் கோலம் போடுவது ஏன்?

நம்முடைய இந்துக்களின் கலாச்சாரத்தில் அடங்கியுள்ள அனைத்து பழக்க வழக்கங்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப் போக இவை மூட நம்பிக்கைகள் என முத்திரைக் குத்தப்பட்டுள்ளன.
அவ்வகையில் கோலம் போடுதலில் மறைந்துள்ள அர்த்தங்கள் என்னவென்று பார்ப்போம்.
கோலம் பலவகைப்படும். பிறந்த குழந்தையை வரவேரற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோலம் ஒருவகை யந்திரமாகக் கருதப்படுகிறது. அதனாலே இவை வீட்டு வாசலில் வரையப்பட்டன. மேலும் மார்கழியின் போது கோலம் போடுவது அவசியம் என்பதற்கு முக்கியக் காரணமும் உண்டு.
மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சானம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.
மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட. இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோகியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுத்தவோடு உங்கள் சிந்ததனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும். அனுதினமும் நீங்கள் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் போது நீங்கள் தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.
மேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.

மேலும் அரிசி மாவில் கோலமிடுவது ஒரு வகை தானமே. மார்கழி மாதம் என்பது பனி, மழைக்காலம் என்பதால் எறும்பு, சிரு பூச்சிகள், மற்றும் குருவிகளுக்கு இந்த அரிசி மாவு உணவாக மாறுகிறது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.

இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் வீடு அடுக்குமாடி குடியிறுப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அ முதல் அஃகு வரை

வியாழன், 7 டிசம்பர், 2017

குளிர்கால நோய் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி?




குளிர்கால நோய் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி?

குளிர் காலத்தில், அதிக சிறுநீர் வெளியாவது இயல்பு தான்; சர்க்கரை நோய் பாதிப்பு வந்து விட்டதோ என்ற பயம் வேண்டாம். அதற்காக தண்ணீர் குடிப்பதை நிறுத்துவது, குளிருக்கு பயந்து குளிக்காமல் இருப்பது, வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்

1. குளிர்காலத்தில் தோல் சுருங்கி பாதிப்பு ஏற்படுகிறதே?
குளிர் காலத்தில் பனி அதிகம் இருக்கும். இதனால், தோலில் சுருக்கம் ஏற்படும்; தோல் காய்ந்து, உதிரும் நிலை வரலாம். உதடு, தோல்களில், வெடிப்பு, புண் வரும். மலை பிரதேசங்களில், பாதிப்பு அதிகம் இருக்கும். இதற்காக, லிக்விட் பாரபின், கோல்டு கிரீம்களை தடவிக் கொள்ளலாம். இதை வாங்க முடியாதோர், தேங்காய் எண்ணெயை, கை, கால், முகத்தில் தேய்ப்பது நல்லது.

2. மூச்சுத் திணறல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
மூச்சுப் பயிற்சி சரியாக செய்யாதோர், உடல் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், ஆஸ்துமா பாதிப்புள்ளோருக்கு, சுவாச அடைப்பு, இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. திறந்த வெளியில், குளிர் அதிகம் உள்ள பகுதியில், படுப்பதை தவிர்க்க வேண்டும். மப்ளர், ஸ்வெட்டர் மற்றும் கம்பளி உடைகள் பயன்படுத்தலாம். உடல் முழுவதும் மூடும் வகையிலான, ஆடைகள் பயன்படுத்தலாம்; திறந்த வெளியில் படுப்பதை தவிர்க்க வேண்டும்.

3. குளிர்கால பாதிப்பில், ஒற்றைத் தலைவலி வரும் எனச் சொல்லப்படுகிறதே?
பனியில் அதிகம் சுற்றுவோர், தாமதமாக வீட்டுக்கு வருவோருக்கு, குளிர் கால பிரச்னையாக, ஒற்றைத் தலைவலி வரும். பனி விழும் நேரத்தில், வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். தொப்பி, மப்ளர் அணிவது நல்லது. ஒற்றைத் தலைவலி அதிகம் இருந்தாலும், ஒற்றைத் தலைவலி தொடர்ந்தாலும், காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஆலோசனை பெறுவது நல்லது.

4. 'இன்ஹேலர்'அவசியமா?
ஆஸ்துமா பாதிப்புள்ளோருக்கு, நுரையீரலில் சளி தேங்குவதால், இடைவிடாத இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த சமயத்தில், 'இன்ஹேலர்' பயன்படுத்துவது நல்லது. இதனால் உயிருக்கு உடனடி ஆபத்தில்லை என்றாலும், நுரையீரல் பாதிப்புள்ளோர், மாதம் ஒரு முறை, நெஞ்சக மருத்துவரிடம், பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 'அலர்ஜி' தரும் உணவுகளான, தக்காளி, சில வாழைப் பழங்கள், மீன், கருவாடு வகைகளை, சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

5. முதியோருக்கு என்ன பாதிப்பு வரும்?
முதியோருக்கு மூச்சுக்குழல் சுருக்கம் ஏற்படும். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம், இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால், 'ஸ்டிரோக்' வர வாய்ப்புள்ளது. ரத்த ஓட்டம் சீராக, நீண்ட துார நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது. கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டாம்.

6. அடிக்கடி சிறுநீர் வெளியேறுகிறதே... சர்க்கரை நோய் அறிகுறியா?
குளிர் காலத்தில் வியர்வை அதிகம் வெளியேறாது; அடிக்கடி சிறுநீர் போக வேண்டிய நிலை வரும். இது இயல்பானது தான். சர்க்கரை நோய் இருக்கும் என்ற அச்சம் வேண்டாம். அதிக சிறுநீர் வெளியேறுவதால், தண்ணீர் குடிப்பதை குறைத்து விடக் கூடாது; அப்படி குறைத்தால் சிறுநீரக பாதிப்பு, கல் அடைப்பு போன்ற பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

7. வேறு ஏதேனும் பாதிப்புகள் வருமா?
குளிர் காலத்தில், மூட்டுக்கள் இறுகி காணப்படும். நடு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கை, கால்கள் மரத்துப் போவது உண்டு. இது இயல்பானது தான்; பயந்து, தேவையில்லாத மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டாம். குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.

8. குளிர் காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிப்பது சரியா?
குளிர் காலம் என்பதால், குளிக்காமல் இருப்பது, இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது சரியல்ல. அதனால், தேமல் போன்ற சரும நோய்கள் வர வாய்ப்புள்ளது; தினமும் கட்டாயம் குளிக்க வேண்டும்.

9. ஜன்னலோர பயணத்தால் பாதிப்பு வருமா?
குளிர் காலத்தில் பஸ், ரயில்களில், ஜன்னலோரத்தில் அமர்ந்து செல்வதால், குளிர் காற்று, காதுக்குள் சென்று, நரம்பு வீங்கும். இதனால் வரும் பாதிப்பால், முகத்தின் ஒரு பகுதி, கோணலாக வாய்ப்புண்டு. பிசியோதெரபி, மின் அதிர்வு சிகிச்சை கொடுத்து, சரி செய்ய வேண்டி வரும். இதைத் தவிர்க்க, பஸ், ரயில் பயணத்தின்போது, ஷட்டர்களை மூடிவிடுவதே சிறந்தது.

10. குளிர் காலத்தில் சிலருக்கு, கோபம் அதிகம் வருகிறதே...?
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, குளிர்கால மன எழுச்சி (சீசனலி அபெக்டடு டிஸ்ஆர்டர்) ஏற்பட வாய்ப்புள்ளது. எப்போது பார்த்தாலும் பேசிக் கொண்டே இருப்பர். நான் தான் பெரிய ஆள் என்கிற மாதிரி பேசுவர். எளிதில் மற்றவர்களை புண்படுத்தி விடுவர். கோபத்தின் உச்சத்தில் இருப்பர். அவர்களை கட்டுப்படுத்துவது கடினம். இதுபோன்ற பாதிப்புள்ளோர், மனநல மருத்துவரிடம் சென்று, பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மொத்தத்தில், அளவான சாப்பாடு, முறையான உடற்பயிற்சி, தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் குளியல் மற்றும் போதிய அளவில் துாக்கமும் இருந்தால், குளிர்கால பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.



How to treat a child psychologically



How to treat a child psychologically

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.🌷

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
 துணை புரியும்.💐

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்

உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?

 நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் 🌷

அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.💐

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்

டீவி பார்ப்பதையோ 🌷ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். 💐

ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.🌷

5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். 🌷

அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே  ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும். 🌷

சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
 அமையும் 💐


6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக

கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள். 💐

அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
 மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
 ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.💐

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள். 💐

ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.🌷

8. உண்மை, நேர்மை,
     துணிவு,
     விட்டுக் கொடுத்தல்,    மன்னித்தல்,
அன்பு காட்டல் 💐போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.🌷

9. பொய், ஏமாற்று,
   திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.🌷

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.

பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, 🌷நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.💐

11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள். 💐

🌷கல்வியின் முக்கியத்துவம்,

 ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.🌷

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள். 💐

பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.💐

அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.💐

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். 🌷

அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.🌷

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்; 🌷💐

அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.🌷


15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;💐

💐 கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.🌷

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும். 💐

அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.🌷💐

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.🌷💐

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள். 🌷

குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது

 (பயந்த
சுபாவத்தையும்
 தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும், 💐

சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) 💐என்பதை புரியவையுங்கள்.🌺

🌺இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.👌🏻🌷

🌷குறிப்பு:

 🌷நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு

எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

புதன், 6 டிசம்பர், 2017

மனைவியின் ஆசையை நிறைவேற்றாத அம்பேத்கர்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு!




மனைவியின் ஆசையை நிறைவேற்றாத அம்பேத்கர்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு!

*அம்பேத்கர்*

‘‘அய்யா... உங்களால் அதிக நேரம் சலிப்பின்றி, களைப்பின்றி புத்தகங்களை எப்படி வாசிக்க முடிகிறது? அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடையில், கொஞ்சநேரம்கூட ஓய்வெடுக்கமாட்டீர்களா’’ என்று கேட்கிறார் ஒரு நண்பர்.

*அதற்கு அந்த நபர்,*

‘‘எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான முற்றிலும் மாறான ஒரு புத்தகத்துக்கு மாறுவதுதான்’’ என்கிறார் சிரித்துக்கொண்டே.

*மேலும் அந்த நபர்,*

‘‘அதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு புத்த மார்க்கம்பற்றி ‘சீரியஸான’ ஆய்வு நூலைப் படித்து - சற்று நிறுத்திவிட்டு - உடனே நிகழ்கால நடவடிக்கை பற்றிய புது வெளியீடு ஒன்றை மாற்றிப் படிப்பது’’ என்கிறார்.

*அதே நண்பர். அவரிடம்,*

‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’ என்று கேட்கிறார்.

*அதற்கு அந்த நபர்,*

‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். அதில், சிறந்த தொகுப்புகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு இதனை அளித்துவிடுங்கள். இதை, விலைக்குத்தான் என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’’ என்கிறார் பெருமைபொங்க.

*இப்படிப்பட்ட பெருமைக்குரிய மனிதரைப் பற்றி ஒருவர்,*

‘‘அவர், இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர். அவர், தனது வாழ்நாள் முழுவதும் மக்களை, அறிவைப் பயன்படுத்துகிறவர்களாகவும் அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவர். அவர் நம்மைப்போலவே சாதாரண மனிதர்களில் ஒருவர். சக்திக்கு மேற்பட்ட எந்தவித தெய்வீக சக்தி என்பதோ, தன்மையோ எதுவும் அவரிடத்தில் கிடையாது. அவர் ஒரு மகானோ, மகாத்மாவோ, முனிவரோ, ரிஷியோ, தவசிரஷ்டரோ, வரப்பிரசாதியோ அல்ல... சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனிதச் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்றமுடியுமோ, அப்படிப்பட்ட தொண்டாற்றியவர்’’ என்கிறார்.

*அம்பேத்கர்*

காலம் கடக்கிறது... நேருவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் அந்த நபர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை, ‘‘காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்ட பூஷ்வா அமைச்சர்’’ என்று கிண்டலடிக்கின்றனர்.

*அதற்கு அந்த நபர்,*

‘‘எளிதில் தண்ணீரில் கரைந்தோடும் களிமண்ணைப்போல் நான் இருக்கவில்லை. நான், ஆறுகளைத் திசைதிருப்பிவிடும் உருகிவிடாத கற்பாறை போன்றவன். நான் எங்கிருந்தாலும், எப்படிப்பட்டவரின் நட்பு கிடைத்தாலும் என்னுடைய தனித்தன்மையை எப்போதும் இழக்கமாட்டேன்’’ என்று சாட்டையடி கொடுக்கிறார்.

இப்படிச் சாட்டையடி கொடுத்த அந்த நபர் பின்னாளில் உலகம் மதிக்கும் அளவுக்கு மாமேதையாகிறார். உலகத்தையும், மக்களையும் எப்படி நேசித்தாரோ, அதுபோல் தன் மனைவியையும் நேசித்தார்.

*இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் எங்கே மக்களை நேசிக்கிறார்கள்?*

வீராணம் ஊழல் செய்து   ஊழல் அரசியலை துவக்கி வைத்த உத்தமரை தொடரும் அரசியல்வாதிகள்
பேரம் பேசவும், விடுதியில் இருக்கவும்தானே ஆசைப்படுகிறார்கள்.

இதைத்தான் ஒருவர் அன்றே, “இன்றைக்கு இருக்கும் பெருந்தலைவர்கள் எனப்படும் பலரும் விளம்பரத்தாலும் மற்றவர்களுடைய பாராட்டினாலும் பெரிய ஆள்கள் ஆனார்களே தவிர, தங்களது அறிவினாலோ, அனுபவ ஆராய்ச்சி காரணமாகவோ அல்லது மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டாற்றியமை காரணமாகவோ கிடையாது.

அப்படி உண்மையான தொண்டு புரிபவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கும் புகழும் கிடைப்பதற்குப் பதில் எதிர்ப்பும் வசவுகளும்தான் கிடைக்கும்” என்றார். அதைத்தானே இன்று நம் அமைச்சர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

*அம்பேத்கர்பெருமையான விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது சில பிரச்னையான விஷயங்களும் வரத்தானே செய்யும்.*

*நெற்கதிரோடு இருக்கும் களைபோல... நாம் களையை நீக்கிவிட்டு மீண்டும் அந்த நபரின் கதைக்குள் வருவோம்...*

அந்த நபருடைய முதல் மனைவி மிகுந்த கடவுள் பக்திகொண்டவர்.

ஆகையால், பந்தார்பூர் என்ற ஊரில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் ஆசைப்படுகிறார்.

அதை, தன் கணவரிடம் தெரிவிக்கிறார்.

அந்தக் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி இல்லை...

இதனால் தன் மனைவியை அங்கு அழைத்துச் சென்று அவமானப்பட வேண்டாம் என்று நினைக்கிறார்.

ஆதலால், அவரிடம் அன்புடன் வேண்டுகோள் வைக்கிறார்...

அவரும், கணவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கேட்கிறார்.

‘‘கடவுள் சிலையை வணங்குவதை மறந்துவிடு... நம்முடைய ஒழுக்கமான வாழ்வின்மூலம் அடித்தட்டு மக்களுக்குச் சுயநலமின்றிப் பணிபுரிவதன் வழியாக என்றாவது ஒருநாள் நாம் வணங்கக்கூடிய கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்குவோம்’’ என்கிறார்.

*என்ன செய்வார் மனைவி?*

கணவரின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு இல்லாமல் மெளனம் காக்கிறார்;

கடைசிவரை தன் ஆசை நிறைவேறாமல் ஒருநாள் மரணித்தே விடுகிறார் அந்த நபரின் மனைவி.

தன் மனைவியின் ஆசையை அவர் நிறைவேற்றாதபோதிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடினார்; அதில் வெற்றியும் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன் இன்னுயிரையும் ஈந்த அந்த நபர் வேறு யாருமல்ல..

*நம் சட்ட மாமேதை*
*டாக்டர் அம்பேத்கர்தான்.*

*அவருடைய நினைவுதினம் இன்று. அவர் மறைந்து ஆண்டுகள் எத்தனை கடந்தால் என்ன? அவர் உதிர்த்துவிட்டுச் சென்ற கருத்துகள் இன்னும் பல அம்பேத்கர்களை உருவாக்கிக்கொண்டுதானே இருக்கின்றன.*

*‘‘ஆடுகளைத்தான் கோயில்களுக்கு முன்பாகப் பலியிடுவார்கள்... சிங்கங்களை அல்ல; நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்” - ஆம்... அம்பேத்கரைப்போன்று!*

செவ்வாய், 5 டிசம்பர், 2017

தேவதையின் பெயர் அம்மா ....




தேவதையின் பெயர் அம்மா ....

*பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன...

உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் பிரசவ வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன ஏதேதோ சத்தம் கேட்டது.

நமக்கு என்ன நடக்கப் போகிறதோ...!!! என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசலாடியது.

அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது..!!!

வழக்கமாக நாம் பேசும் இறைவனையே கேட்டு விடலாம் என்று குழந்தை இறைவனை அழைத்தது.


*குழந்தை :*
இறைவா ! என்னை எங்கு அனுப்பப் போகிறாய்? வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே.!!

*இறைவன்:*    
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்.

*குழந்தை :*
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்.!!

*இறைவன்:*
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் சந்தோசமாகவே இருப்பாய். சென்று வா...

*குழந்தை :*
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.?

*இறைவன்:*
கவலைப் படாதே குழந்தாய்.. அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக எல்லாம் செய்யும், உன் மீது அன்பு செலுத்தும், அந்த அன்பை நீ உணர்வாய்.


*குழந்தை :*
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய். நான் மிகச் சிறியவன், என்னால் நடக்க முடியாது, என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.                            
*இறைவன்:*
அது மிகவும் சுலபம். உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும். உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

*குழந்தை :*
(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் இறைவனையே பார்த்தது) ம்ம்ம்…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.
               
*இறைவன் :*
(மென்மையாக சிரித்து)
நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.


*குழந்தை :*
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்..?

*இறைவன் :*
(வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.


*குழந்தை:*
(மிகவும் சோகமான
முகத்துடன்)
இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா...!!!

*இறைவன் :*
(குழந்தையை அன்பாக அணைத்து)
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லித்தரும். சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திரும்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க முடியாது.



உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின...

*குழந்தை :*
(மிகவும் இறைவனைப் பிரியும் சோகத்துடன்)
இறைவா இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன்...
நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்...

*இறைவன் :*
குழந்தாய் தைரியமாக சென்று வா... உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் உனக்கு முக்கியமில்லை. ஆனால் அவளை நீ *அம்மா* என்று அழைப்பாய்.



குழந்தாய் கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன் கேள்.

நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த *தேவதை அம்மாவின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.*

குழந்தை சரி என்று வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….

தாய்மையை போற்றுவோம்

அம்மா பிடித்து இருந்தால் அதிகமாக பகிருங்கள்.

திங்கள், 4 டிசம்பர், 2017

I LOVE YOU - நகைச்சுவை கதை...



 I LOVE YOU  - நகைச்சுவை கதை...

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.

ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.

நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.

மெசேஜ்க்கு வந்த பதில்கள்...

நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??

நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??

நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??

நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??

நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??


சனி, 2 டிசம்பர், 2017

புற்றுநோயை தடுக்கும் எட்டு மூலிகைகள்



புற்றுநோயை தடுக்கும் எட்டு மூலிகைகள் !

மஞ்சள் :



புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.



மிளகு:



லுகீமியாவின் செல்களை அழிப்பதிலும், குறைப்பதிலும் மிளகின் பங்கு இன்றியமையாதது. நோய்க்கிருமிகளுக்கு மிளகைப் பார்த்தால் கொஞ்சம் பயம் தான். எதிரி வீட்டுக்கு போனாலும் 3 மிளகை சாப்பிட்டால், விஷம் கூட முறிந்து விடும்னு சும்மாவா சொல்றாங்க.



குங்குமப்பூ:



இயற்கையான காரடெனாய்டு டை கார்போசிலிக் அமிலம் எனப்படும் குரோசிடின் குங்குமப்பூவில் அதிகமாக காணப்படுகிறது. கேன்சருக்கு குட்பை சொல்லும் சக்தி குங்குமப்பூவிற்கு உண்டாம்.



சீரகம்:



சீரகத்தில் உள்ள தைமோகுயினோன் என்கின்ற மூல பொருள் புற்றுநோயை விரட்டும் தன்மை கொண்டது.



இலவங்கப்பட்டை:



தினமும் அரை கரண்டி லவங்கத்தூளை எடுத்துக்கொண்டால், புற்றுநோய் அபாயங்கலில் இருந்து நம்மை நிச்சயம் தற்காத்துக் கொள்ளலாமாம். இயர்கையாகவே உணவை கெட்டுப் போகவிடாமல் காக்கும் இதில் கூடுதலாக அயர்ன்னும், கால்சியமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



பெருஞ்சீரகம்:



பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ்சீரகத்தூள் சேர்க்கப்பட்ட தக்காளி சூப் புற்றுநோய் நோயாளிகளுக்கான விரிவான நிச்சயமாக உணவு ஆகும்.



மிளகாய் விதைகள்:



இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகல் தந்து விடுகின்றனவாம். இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன்படுகிறது



இஞ்சி:



கொழுப்பை குறைப்பதிலும், உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், புற்றுநோய் கிருமிகளை அழிப்பதிலும் வல்லவன் இஞ்சி என்பது யாவரும் அறிந்ததே.

மறைக்கப்பட்ட பழத்தின் அருமை



......மறைக்கப்பட்ட பழத்தின் அருமை.......

16 வகையான நோய்களுக்கு அருமருந்து..

இன்றும் பலரும் தவிக்கும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சர்வ ரோக நிவாரணி

மிகவும் முக்கியமானது புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட பழம் ..

கிராமங்களில் வீடுதோறும் என் பாட்டனும் பூட்டனும் விதைத்த அருமருந்து..

சென்ற தலைமுறையால் புறக்கணிக்கப்பட்ட பழம்..

தமிழ் மண்ணில் விளையக்கூடிய பராம்பரியமிக்க பழம்..

வெளிநாட்டுகாரன் இந்த பழத்தின் அருமை உணர்ந்து  எப்போதே பயிரிட ஆரம்பித்து ஒவ்வொரு கடையிலும் விற்க ஆரம்பித்துவிட்டான்..
வெளிநாடுகளில் இதன் விலை என்ன தெரியுமா?

பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மரம் இருக்க வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு செய்வது தான் நமக்கு தெரியுமா..?

இந்த பழத்தின் வெளி உருவம் பார்த்து குறைத்து மதிப்பிட்டு ஒதுக்கியதின் விளைவு இன்று வெளிநாடுகளில் வெளி மாநிலங்களில் அமோக விற்பனை
தாய் மண்ணில் இந்த பழத்திற்கு அவமரியாதை மட்டும் தான்..

பலரால் விரும்ப படாத புறகணிக்கப்பட்ட பலரால் முகம் சுழிக்கப்பட்ட பழம் இது..

ஆனால் காலம் இன்று அத்தனை பழ கடையிலும் இந்த பழம் இல்லாமல் இல்லை..
அன்று சும்மா கொடுத்தால் கூட வாங்கி சாப்பிடாத சாப்பிட விழிப்புணர்வு இல்லாத பழம் இன்று அத்தணை கடைகளிலும் அதிக காசுக்கு விற்கப்படுகிறது என்றால் மக்களிடையே அடுத்த தலைமுறையிடையே விழிப்புணர்வு வந்துள்ளது..

மருத்துவர்கள் இந்த பழத்தின் அருமை உணர்ந்து இந்த பழத்தை சாப்பிட சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்..

இந்த பழங்கள் விவசாயிகளால் பயிரிட பட்டு விற்பனைக்கு வருகிறது..

தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் மிண்டு்ம் வளர்க்கப்பட்டு வருகிறது..
நகரங்களில் இல்லை நரகங்களில் தான் இன்னும் என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பழத்தின் அருமை உணரவில்லை..

காஷ்மீர் ஆப்பிள் சாப்பிட்டு  வளர்ந்த நாமல்லவா ?
எங்கேயோ வளர்ந்து வரும் ஆப்பிள் வாங்கி சாப்பிட்டால் நமக்கு போலி கௌரம் அல்லவா?

ஆப்பிளில் உள்ள மருத்துவ குணங்களை விட இந்த பழத்திற்கு அதிக மருத்துவ குணம் உண்டு..

ஆனால் இந்த பழம் வாங்கினால் கௌரவ குறைச்சல் அல்லவா..
ஆப்பிள் போன்ற அழகான பழம் தான் நமக்கு தேவை..

பராம்பரியம் மிக்க மருத்துவத்தன்மை நிறைந்த இது போன்ற அத்துனை பழங்களையும் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு அத்தனை நோய்களையும் நம் மண்ணில்  பரப்பிய அன்னிய நாட்டின் சூழ்ச்சி அறியா நோய்களில் சிக்கினோம்..

இதன் விளைவு இன்று பிறந்த குழந்தைக்கு இரத்த அழுத்தம்
20 வயதில் இரத்த அழுத்தம்
40 வயதில் இரத்த அழுத்தம்
60 வயதில் இரத்த அழுத்தம் .. மாத்திரை இல்லாத மனிதர்களே இல்லாத கேவலமான சூழல் நம் தேசத்தில் உருவாக்கிவிட்டார்கள்..

இரத்த அழுத்தத்தை எளிதிலில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்த மருந்துவ பழம்..

போலி கௌரவம் பார்க்காமல் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் அனைவரையும் சாப்பிட சொல்லுங்கள் தங்கள் வீடுகளிலேயே இந்த மரத்தை உருவாக்குங்கள்..
விருத்தினர் விட்டுக்கு சென்றால் ஆப்பிள் தேவையி்ல்லை ஆரஞ்சு தேவையில்லை போலி  கௌரவம் தேவையில்லை இந்த பழத்தை வாங்கி சென்று கொடுங்கள்..
இந்தியாவில் அத்தனை வீடுகளிலும் எவரோ ஒருவர் இரத்த அழுத்தத்தில் தான் வாழ்கிறார் என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கை சொல்கிறது


இவ்வுளவு பெரிய பதிவு எதற்கு  அப்படி என்ன ஞானப்பழமா என்று கேட்காதிர்கள்..

சத்தியமா இல்லைங்கோ

சாதாரண மருத்துவ பழம் தான்கோ அதன் பெயர் சீத்தா பழம் கிராமங்களில் ஆத்தாபழம் என்பார்கள்..

ஏழை சொல் மேடை ஏறாது என்பது உண்மை ஆனால் ஏழை சொல்லில் தான் நியாயம் இருக்கும்..
அதுபாேல  
இந்த சீத்தாபழம் கடைக்கு வர ஒரு நூறாண்டு தேவைப்பட்டுள்ளது..
ஆனால் உண்மையான மருத்துவ குணம் கொண்டது..

லேட்ட வந்தாலும் லேட்டஸ்டா தான் வந்திருக்கிறது..சீத்தாபழம்.......மறைக்கப்பட்ட பழத்தின் அருமை.......

16 வகையான நோய்களுக்கு அருமருந்து..

இன்றும் பலரும் தவிக்கும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அல்லது சீராக வைக்கும் சர்வ ரோக நிவாரணி

மிகவும் முக்கியமானது புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்ட பழம் ..

கிராமங்களில் வீடுதோறும் என் பாட்டனும் பூட்டனும் விதைத்த அருமருந்து..

சென்ற தலைமுறையால் புறக்கணிக்கப்பட்ட பழம்..

தமிழ் மண்ணில் விளையக்கூடிய பராம்பரியமிக்க பழம்..

வெளிநாட்டுகாரன் இந்த பழத்தின் அருமை உணர்ந்து  எப்போதே பயிரிட ஆரம்பித்து ஒவ்வொரு கடையிலும் விற்க ஆரம்பித்துவிட்டான்..
வெளிநாடுகளில் இதன் விலை என்ன தெரியுமா?

பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த மரம் இருக்க வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு செய்வது தான் நமக்கு தெரியுமா..?

இந்த பழத்தின் வெளி உருவம் பார்த்து குறைத்து மதிப்பிட்டு ஒதுக்கியதின் விளைவு இன்று வெளிநாடுகளில் வெளி மாநிலங்களில் அமோக விற்பனை
தாய் மண்ணில் இந்த பழத்திற்கு அவமரியாதை மட்டும் தான்..

பலரால் விரும்ப படாத புறகணிக்கப்பட்ட பலரால் முகம் சுழிக்கப்பட்ட பழம் இது..

ஆனால் காலம் இன்று அத்தனை பழ கடையிலும் இந்த பழம் இல்லாமல் இல்லை..
அன்று சும்மா கொடுத்தால் கூட வாங்கி சாப்பிடாத சாப்பிட விழிப்புணர்வு இல்லாத பழம் இன்று அத்தணை கடைகளிலும் அதிக காசுக்கு விற்கப்படுகிறது என்றால் மக்களிடையே அடுத்த தலைமுறையிடையே விழிப்புணர்வு வந்துள்ளது..

மருத்துவர்கள் இந்த பழத்தின் அருமை உணர்ந்து இந்த பழத்தை சாப்பிட சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்..

இந்த பழங்கள் விவசாயிகளால் பயிரிட பட்டு விற்பனைக்கு வருகிறது..

தமிழகத்தில் கிராமங்களில் வீடுதோறும் மிண்டு்ம் வளர்க்கப்பட்டு வருகிறது..
நகரங்களில் இல்லை நரகங்களில் தான் இன்னும் என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பழத்தின் அருமை உணரவில்லை..

காஷ்மீர் ஆப்பிள் சாப்பிட்டு  வளர்ந்த நாமல்லவா ?
எங்கேயோ வளர்ந்து வரும் ஆப்பிள் வாங்கி சாப்பிட்டால் நமக்கு போலி கௌரம் அல்லவா?

ஆப்பிளில் உள்ள மருத்துவ குணங்களை விட இந்த பழத்திற்கு அதிக மருத்துவ குணம் உண்டு..

ஆனால் இந்த பழம் வாங்கினால் கௌரவ குறைச்சல் அல்லவா..
ஆப்பிள் போன்ற அழகான பழம் தான் நமக்கு தேவை..

பராம்பரியம் மிக்க மருத்துவத்தன்மை நிறைந்த இது போன்ற அத்துனை பழங்களையும் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு அத்தனை நோய்களையும் நம் மண்ணில்  பரப்பிய அன்னிய நாட்டின் சூழ்ச்சி அறியா நோய்களில் சிக்கினோம்..

இதன் விளைவு இன்று பிறந்த குழந்தைக்கு இரத்த அழுத்தம்
20 வயதில் இரத்த அழுத்தம்
40 வயதில் இரத்த அழுத்தம்
60 வயதில் இரத்த அழுத்தம் .. மாத்திரை இல்லாத மனிதர்களே இல்லாத கேவலமான சூழல் நம் தேசத்தில் உருவாக்கிவிட்டார்கள்..

இரத்த அழுத்தத்தை எளிதிலில் கட்டுபடுத்துவதால் அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிட சிறந்த மருந்துவ பழம்..

போலி கௌரவம் பார்க்காமல் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் அனைவரையும் சாப்பிட சொல்லுங்கள் தங்கள் வீடுகளிலேயே இந்த மரத்தை உருவாக்குங்கள்..
விருத்தினர் விட்டுக்கு சென்றால் ஆப்பிள் தேவையி்ல்லை ஆரஞ்சு தேவையில்லை போலி  கௌரவம் தேவையில்லை இந்த பழத்தை வாங்கி சென்று கொடுங்கள்..
இந்தியாவில் அத்தனை வீடுகளிலும் எவரோ ஒருவர் இரத்த அழுத்தத்தில் தான் வாழ்கிறார் என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கை சொல்கிறது

இவ்வுளவு பெரிய பதிவு எதற்கு  அப்படி என்ன ஞானப்பழமா என்று கேட்காதிர்கள்..

சத்தியமா இல்லைங்கோ

சாதாரண மருத்துவ பழம் தான்கோ அதன் பெயர் சீத்தா பழம் கிராமங்களில் ஆத்தாபழம் என்பார்கள்..

ஏழை சொல் மேடை ஏறாது என்பது உண்மை ஆனால் ஏழை சொல்லில் தான் நியாயம் இருக்கும்..
அதுபாேல  
இந்த சீத்தாபழம் கடைக்கு வர ஒரு நூறாண்டு தேவைப்பட்டுள்ளது..
ஆனால் உண்மையான மருத்துவ குணம் கொண்டது..

லேட்ட வந்தாலும் லேட்டஸ்டா தான் வந்திருக்கிறது..சீத்தாபழம்.

வெள்ளி, 1 டிசம்பர், 2017

கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்கும் வழிகள்....



கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்கும் வழிகள்....

கொசுக்கடியினால் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் பாதிப்பை குறைக்க வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொசுக்கடியினால் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் பாதிப்பை குறைக்க வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமையல் அறையில் பயன்படுத்துப்படும் பேக்கிங் சோடாவினை கொசுக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு கொசுக்கடி பாதித்த பகுதிகளில் தடவிடுங்கள். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம். பேக்கிங் சோடா பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்கள் சருமம் சென்சிடிவ்வானதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.

கொசுக்கடிக்கு டீ ட்ரீ ஆயில் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கும். கொசுக்கடி பாதிப்புகளையும் அதனால் ஏற்படும் சருமப் பிரச்சனைகள், அரிப்பு போன்றவற்றை குறைக்க டீ ட்ரீ ஆயில் பயன்படுகிறது. இரண்டு சொட்டு டீ ட்ரீ ஆயிலை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து சருமத்தில் தடவலாம்.

குளிர்ச்சியான அதே சமயத்தில் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க கற்றாழை ஜெல் பெரிதும் உதவுகிறது. கொசுக்கடியினால் சருமம் சிவந்திருந்தாலோ, அல்லது வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ கற்றாழை ஜெல் அதனை தீர்க்கும். கற்றாழை செடியின் இலையை பாதியாக நறுக்கி அதனை சருமத்தில் தேய்க்கலாம். இதனுடன் வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை. கடைகளில் தனியாக கற்றாழை ஜெல் கிடைக்கிறது. ஆனால் அதில் கெமிக்கல் கலந்திருப்பார்கள் என்பதால் இயற்கையாக கிடைத்திடும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது தான் நல்லது.

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான, ஆன்டி-பயோட்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துவது தான் சிறந்தது. ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

பெரும்பாலானோர் சருமப் பாதுகாப்பிற்கு அதிகம் பயன்படுத்துவது சந்தனம். கொசுக்கடியைத் தவிர வேறு எந்த பூச்சி பாதிப்பிகளினால் சருமம் பாதிக்கப்பட்டாலும் அதனை தவிர்க்க சந்தனம் பயன்படுகிறது. சந்தனத்தை தண்ணீரில் குழைத்து கொசுக்கடி ஏற்ப்பட்டிருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடங்கள் காய்ந்த பிறகு கழுவி விடலாம்.

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இதில் ஆண்ட்டி அலர்ஜி துகள்கள் நிறையவே இருக்கின்றன. இதனை சருமத்தில் தடவுவதால் அலர்ஜி பாதிப்புகள் மிகவும் குறைந்திடும்.

நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை வைத்திய குறிப்புகள்



நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை வைத்திய குறிப்புகள்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் கேழ்வரகில் இரும்புச் சத்தும்,  சுண்ணாம்புச் சத்தும் போதிய அளவு உள்ளது.



வேப்பம் பூவை ரசம் வைத்துச் சாப்பிட உடம்பில் உள்ள கிருமிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். பித்தம் குறையும்.



வெந்தயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர உஷ்ணம் குறைந்துவிடும். வெந்தயம் நீரிழிவு நோய்க்கு சிறந்த  மருந்து.


அன்னாசிபழம் சாப்பிட்டு வர சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.


முள்ளங்கிக் கீரையில் வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களையும் விரட்டும். விலையும் மிகக் குறைவு.


மாரடைப்பை தடுக்க, இதய நோயாளிகள் காலையில் அருகம்புல் சாறு சாப்பிட்டு வர மாரடைப்பை தடுக்கலாம்.



குழந்தைகளின் அஜீரணத்தை குணப்படுத்த, ஒரு மேஜைக் கரண்டி ஓமத்தை எடுத்து வெறும் வாணலியில் அதை வெடிக்கவிட்டு  ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதித்து சிறிது வற்றியதும் எடுத்து அதனைத் தேன் கல்ந்து மூன்று வேளை  உட்கொள்ளச் செய்யலாம்.



குழந்தைகளின் அஜீரணத்தை போக்க மிளகு அரை தேக்கரண்டி உப்பு அரைத் தேக்கரண்டி, இந்த இரண்டையும் மைபோல  அரைத்து, ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் கலந்து வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு தேனுடன் கலந்து அருந்தி வர குழந்தைகளின் செரிமானக் கோளாறுகள் நீங்கும்.



மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டால் மூலநோய், ஆசனக் கடுப்பு யாவும் குணமாகும்.



ஓமம், உப்பு, கிராம்பு சேர்த்து மென்று நீரை விழுங்கினால் சளி, கபம், இருமல் கரையும். சமையலில் பகோடா, பஜ்ஜி, பூரி  செய்ய மாவுடன் ஓமத்தை சேர்த்துப் பிசைந்தால் மணமே அலாதி. ஜீரணமும் தரும்.



மாதவிலக்கை முன்னால் வரவழைக்க மற்றும் தள்ளிப் போட உதவும் இயற்கை வழிமுறைகள்!


மாதவிலக்கை முன்னால் வரவழைக்க மற்றும் தள்ளிப் போட உதவும் இயற்கை வழிமுறைகள்!
.

குறிப்பு: முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
.

விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். இதற்கு ஆங்கில மருந்துக்களை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு, 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே பக்க விளைவுகளை ஏற்படுத்தும் கண்ட கண்ட ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாதீர்கள். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல... எதற்காக மாத்திரைகளைப் பயன்படுத்தினாலும் பலவித பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
.

சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட இந்த இயற்கை வழியை பின்பற்றலாம்.

‘சப்ஜா விதை’!

இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. இதற்கும் இதே சப்ஜா விதை தான். இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!
.

தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு!

காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான்  எதுவானாலும் சாப்பிடனும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். இது உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

.

உங்கள் மாதவிடாயை முன்னால் வரவழைக்க

இந்தியாவில் மத வழிபாடுகள் அல்லது திருவிழாக்கள், திருமணங்கள் போன்றவை நடக்கிற போது, மாதவிடாய்ப் பெண்கள் விலக்கப்படுகின்றனர். இந்த சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!

இங்கே சில சுலபமாக கிடைக்கக் கூடிய இயற்கை உணவுகள் உங்களுக்கு “உஷ்ணத்தை” உடலில் ஏற்படுத்தி, உங்கள் மாதவிடாயை முன்பாகவே வரவைப்பவை கொடுக்கப் பட்டுள்ளன. இதனால் நீங்கள் செல்ல வேண்டிய திருமண நிகழ்ச்சி அல்லது உங்கள் விடுமுறைக்கு முன்பே முடிந்து விடும்.
.

# கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்!

எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.
.

# பப்பாளி

உங்கள் உடலில் அதிக வெப்பம் உருவாக்குவதால் பப்பாளி மாதவிடாயை முன்னால் வரவழைப்பதற்கான மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். இந்த பழத்திலுள்ள கேரோடோன், உங்கள் ஹார்மோன் ஈஸ்டிரோஜனைத் தூண்டி, அதன் மூலம் உங்கள் மாதவிடாயை வெகுசீக்கிரம் வர தூண்டுவதில் உதவுகிறது.
.

# வெல்லம்

எப்போதும் சமையலறையில் கிடைக்கக் கூடிய வெல்லம், உங்கள் மாதவிடாயை முன்பாகவே தூண்டுவதில் சிறந்த வீட்டு மருத்துவமாகும். எள் விதைகளுடன் வெல்லத்தைச் சாப்பிடவும் அல்லது ஒரு டம்ளர் இஞ்சிச் சாறுடன் வெல்லத்தை, வெறும் வயிற்றில் அதிகாலையில் சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முன்பாகவே வரவழைப்பதில் உதவும் என்று நம்பப்படுகிறது.
.

# மாதுளை

உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீக்கிரம் வரவழைக்க சில நாட்களுக்கு மாதுளை சாறை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும் அல்லது ஒரு டம்ளர் (மாதுளைச் சாறுடன் கரும்புச் சாறு) கலவைச் சாற்றை ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கவும்.
.

# கேரட்

புதிய கேரட்டுகள் (அல்லது பூசணி - கரோட்டின் நிறைந்தது) அல்லது ஒரு நாளைக்கு 2-3 முறை கேரட் சாற்றை குடிக்கவும், இதிலுள்ள் கேரோடிங்கள் ஈஸ்டிரோஜன் உறபத்தியை ஊக்குவித்து அதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை முன்னால் வரவைக்கின்றது.
.

# கேரமா விதைகள்

கேரம் விதைகள் அல்லது வெந்தய விதைகளின் சாற்றை ஒரு டமளர் அருந்தினால், அது கூட உங்கள் மாதவிடாய் சுழற்சியை சில நாட்கள் முன்னால் கொண்டு வருவதில் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
.

# எள் விதைகள்

நீங்கள் ஒரு ஸ்பூன் எள்விதைகளை வெல்லத்துடன் உங்கள் எதிர்பார்க்கும் மாதவிடாய்க்கு 15 நாட்களுக்கு முன்பே சாப்பிடலாம் அல்லது ஒரு ஸ்பூன் எள் விதைகளை சூடு தண்ணீரில் தினமும் 2 முறை சாப்பிடடால் மாதவிடாய் சீக்கிரம் வரும்.
.

# அன்னாசிப்பழம்

இது திறம்பட செயல்பட தெரிந்த, நல்ல வெப்ப/உஷ்ணத்தைத் தூண்டும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது அதிக அளவு உண்ணும் போது உங்கள் மாதவிடாய் சீக்கிரமாக வந்து விடும்.
.

# மஞ்சள்

நீங்கள் எதிர்பார்க்கும் தேதிக்கு முன்னரே மாதவிடாய் வரும் வாய்ப்பை அதிகரிக்க, அதற்கு 15 நாட்களுகு முன்பிருந்தே காலையிலும், மாலையிலும் கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைக் கலந்து குடித்து வந்தால், எதிர்பார்த்த தினத்தை விட 5 நாட்களுக்கு முன்னரே மாதவிடாய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
.

.