புதன், 1 மே, 2019

வடுவூர்... பறவைகள் சரணாலயம்


வடுவூர்... பறவைகள் சரணாலயம்...!!


🐦 வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூரிலிருந்து ஏறத்தாழ 44கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 24கி.மீ தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து ஏறத்தாழ 16கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

🐦 தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இடம்தான் வடுவூர்.

🐦 பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகிய ஏரி, நடுவே கருவேள், கொடுக்காப்புளி மற்றும் நீர்க்கடம்பு என பலவகையான மரங்கள் இங்கு பறவைகளுக்கு இளைப்பாற இடம் தருகின்றன.

🐦 இங்கு பார்வையாளர்கள் பறவைகள் ரசிப்பது மட்டுமின்றி அவற்றின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள மரம் நெடுகிலும், பறவைகளின் படம், பெயர், வாழ்விடம், வருகை என எல்லாவற்றையும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.


🐦 ஏரியை சுற்றிப் பார்க்க சிமெண்ட் கட்டைகளால் பாதை அமைக்கப்பட்டிருக்க, சுற்றிலும் வளர்ந்திருக்கும் மரங்கள் நிழற்குடை விரிக்க, பைனாகுலர் உதவியோடு பறவைகளை அருகில் பார்க்கலாம்.

🐦 பல நாடுகளிலிருந்து இங்கு பறவைகள் அதிகம் வருகை தருகின்றன. அதனால் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது.

🐦 உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கான பொருத்தமான சூழலை வழங்கும் இந்த இடம் பறவைகளுக்கு மிக ஏற்றதாக உள்ளது.

🐦 இப்பகுதியின் விவசாயிகள் புலம்பெயர்ந்த பறவையின் வருகையை நேசிக்கிறார்கள். குழந்தைகளுடன் இவ்விடத்திற்கு செல்வதற்கு ஏற்ற இடமாகும்.


எப்படி செல்வது?

🚌 திருவாரூரிற்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. திருவாரூரிலிருந்து வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளது.

🚉 மேலும் தஞ்சாவூரிலிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனங்களின் மூலம் வடுவூருக்கு செல்லலாம். அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் ரயில் மற்றும் பேருந்து வசதிகள் தஞ்சாவூருக்கு உள்ளன.

எங்கு தங்குவது?

🏩 திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

மேலும், இதுபோன்ற சுவாரஸ்யமான பல சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமா? அதற்கு இதுதான் சிறந்த செயலி... 👇


இங்கே கிளிக் செய்யுங்கள்..👆👆👆
இதர சுற்றுலாத்தலங்கள் :

🐦 உதயமார்த்தாண்டபுரம் பறவையகம்.
🌳 முத்துப்பேட்டை சதுப்பு நில காடுகள்.
🙏 தியாகராஜசுவாமி திருக்கோவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக