வாழைப்பழ தினம்
ஏப்ரல் 18 இன்று வாழைப்பழ தினம் .வாழைப்பழம் (banana) என்பது தாவரவியலில் சதைப்பற்றுள்ளக் கனியும்,[வாழைப் பேரினத்தில் உள்ள பெரும் குறுஞ்செடி வகைப் பூக்கும் தாவரத்தில் உற்பத்தியாகும் உண்ணத்தக்க பழமாகும். மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் சில நாடுகளில் இது சமைக்கும் வாழைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பழங்கள் அளவு, நிறம், கெட்டியான தன்மை என்பவற்றால் பல வகைகளாக உள்ளபோதிலும், அவை பொதுவாக நீண்டு வளைந்திருக்கும். மிருதுவாக சதையைக் கொண்ட இது மஞ்சள், பச்சை, சிவப்பு, பளுப்பு, ஊதா நிறத் தோல்களினால் மூடப்பட்டிருக்கும்.
வரலாறு
வாழைப்பழம் முதலில் ஆசியாவில் தோன்றியது பின்னர் . மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவிற்கு போனது. கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.. அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். முற்காலத்தில் வாழைப்பழம் விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எனவே இப்பழத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம் என பலவகைகள் உள்ளன.
பேயன்
தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம்
அதிக சூடான உடம்பைப் பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். அதாவது சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது பேயன்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கணச் சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது
உடல் நலத்திற்கு நல்லது
மலச்சிக்கலை நீக்கும்
உடலில் அதிகக் குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் இது நுரையீரலில் கோழையைக் கட்ட வைத்து நுரையீரலைக் கெடுத்துவிடும். வாரத்திற்கு இரண்டோ மூன்றோ சாப்பிடலாம்.
ரஸ்தாளி
உண்பதற்கு சுவையாக இருக்கும் இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது என்பார்கள்.
இதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம் மென்று ஆகிவிடும்.
பசியை மந்தப்படுத்தும் இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப்பது நல்லது.
பலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு. உடனே சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
ஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பினும் மந்தத்தை தரும்.
அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து இருப்பதால் நீரழிவுக்காரர்கள் இப்பழத்தை நினைக்காமலிருப்பது நல்லது.
வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த நன்கு கனிந்த ரஸ்தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து, கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பச்சை
பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.
பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.
நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. (அதாவது கால தாமதமாய்ச் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுகத் தொடங்கிவிடும்.)
இப்பழம் அதிகக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது.
குறைந்த அளவே இப்பழத்தைச் சாப்பிடுவது நல்லது.
அதிக உடல் சூடுடையயவர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது.
மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.
பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.
மலை
சற்று விலை அதிகமான பழம்.
வாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம்.
நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம்.
இதிலே சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும்.
சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.
இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும்.
தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
பசினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல மலமிளக்கியாக உதவும்.
நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
அஜீரண கோளாறு நீங்க ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது.பொதுவாக இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.
செவ்வாழை
வாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது இப்பழம்
சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருப்பது
கேரளாவில் அதிகம் விளையும் இப்பழம் சாப்பிட ருசியாகவும் இருக்கும்.
சற்று விலை அதிகமானது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம்.
செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்ப ஆற்றல் பெருகும். தொற்றுநோய்கள் இவர்களிடம் தோற்று ஓடும்.
.*பல் சம்பந்தமான நோய்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போகும்.
இருதயம் பலப்படும்
பல்வேறு வகையான தொற்றுநோய்களை செவ்வாழை அண்ட விடாது.
பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.
வாழைப்பழத்திலுள்ள சத்துக்கள்
நீர் (ஈரப்பதம்) - 66.4 கிராம்
நார் - 0.4 கிராம்
கொழுப்பு - 0.3 கிராம்
புரதம் - 1.2 கிராம்
மாவுப்பொருள் - 28.0 கிராம்
சக்தி (எனர்ஜி) - 114.0 கலோரி
பாஸ்பரஸ் - 36.0 மி;.லி
இரும்புச்சத்து - 0.8 மி.கி
சுண்ணாம்புச் சத்து - 16.0 மி.கி
தையாமின் - 0.05 யு.ஜி
கரோட்டின் - 0.78 மி.கி
ரைபோஃபிளேவின் - 0.07 மி.கி
நியாசின் - 0.5 மி.கி
வைட்டமின் ஏ - 12.0 ஐ.கியு
வைட்டமின் பி1 - 0.5 மி.கி
வைட்டமின் பி2 - 0.08 மி.கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக