வியாழன், 14 மார்ச், 2019

வெயில் தாகத்தை போக்க ஏற்றது மண் பானை குடிநீர்! குறைந்த விலையில் குளிர்ந்த தூய்மையான குடிநீர்.

வெயில் தாகத்தை போக்க ஏற்றது மண் பானை குடிநீர்! குறைந்த விலையில் குளிர்ந்த தூய்மையான குடிநீர்.


கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலில் பத்தடி சென்றாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.
மண்பானை குடிநீர்
பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.
இன்று நகரங்களில் கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள் மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன்
மண்பானை
மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை. நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர்.
மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகறிக்கும் கருவி மண் பானை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக