திங்கள், 27 ஜனவரி, 2020

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு! காஞ்சிவரம் பட்டுப் புடவைகள்!

 

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு!
காஞ்சிவரம் பட்டுப் புடவைகள்!

காஞ்சிபுரம் சென்னையை அடுத்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பட்டு நெசவு தவிர இயல்பில் இது ஒரு கோயில் நகரம், சோழர் காலத்திலும் அவர்களுக்குப் பின்னான பல்லவர் காலத்திலும் கட்டப்பட்ட கலைநயம் மிக்க பல கோயில்கள் இந்நகர் முழுதும் நிறைந்திருக்கின்றன. காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இரண்டுமே பல்லவர் கட்டிடக் கலைக்கு மகத்தான சான்றுகள். அது தவிர பொற்கூரை வேயப்பட்ட காஞ்சி காமாட்சியம்மன் தரிசனம் பெறாதோர் தமிழ்நாட்டில் எவருளர்? இங்குள்ள கோயில்களை ஒருமுறை கூட வாழ்நாளில் காணும் வாய்ப்பில்லாதோர் கூட அங்குள்ள சிலா ரூபங்கள், கோபுர வடிவங்கள், கடவுள் பிரதிமைகளை இங்கிருந்து உலகம் முழுமைக்கும் விற்பனை செய்யப்படும் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளின் ஜரிகைக் கரைகள் மற்றும் முந்தானை அலங்காரத்தில் கண்டு ரசிக்க முடியும். அத்தனை சிறப்பாக இங்குள்ள நெசவாளர்கள் கோயில் சிற்பங்களின் மகத்துவமிக்க அடையாளங்களை தங்களது நேர்த்தியான நெசவில் பாந்தமாகப் பதிவு செய்திருக்கின்றனர். இங்கே நெசவு செய்யப் படும் 90 சதவிகிதப் புடவைகளும் பட்டுப் புடவைகள் மட்டும் தான். வெறும் 10 சதம் தான் பிற புடவைகளின் நெசவுக்கு ஒதுக்கப்படுகிறது.


தமிழகத்தின் செல்லப் புடவை!

காஞ்சீவரம் பட்டைப் பற்றி புதிதாக நாம் வேறென்ன சொல்லி விட முடியும்! பிறந்து தொட்டிலில் போடப்படும் குழந்தைகள் முதற்கொண்டு ஆண்டு அனுபவித்துப் பழுத்துப் பழமாகி கிழமானாலும் நம்மை விடாது பின் தொடரும் மோகம் அல்லவா இந்த காஞ்சிப்பட்டு. தமிழகத்தின் செல்லப் புடவை இது! ஒவ்வொரு தீபாவளிக்கும் வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் தலை தீபாவளிக்கோ, தலைப் பொங்கலுக்கோ மட்டுமாவது பட்டு வாங்கிக் கட்டாதோர் யார்! பட்டில் அப்படி என்ன விசேஷம் என்று யாரும் கேட்டு விட முடியாது. தமிழ் நாட்டைப் பொருத்த வரை பட்டு வாங்கி உடுத்துக் கொள்வது என்பது வெறும் அந்தஸ்து மற்றும் பகட்டுக்கான வெளிப்பாடு மட்டுமில்லை அது கலாச்சார ரீதியாக அவரவர் ரசனை சார்ந்த வெளிப்பாடு என்றும் சொல்லலாம். அயல் மாநிலங்களை விட்டு விடலாம் நமது தமிழகத்தில் மட்டுமே ஆரணி, தர்மாவரம், திருபுவனம், சின்னாளம் பட்டி, என்று பல இடங்களில் பட்டு நெசவு நடைபெறுகிறது என்றாலும் காஞ்சிப்பட்டின் தனித்தன்மை தான் பெரிதாகப் பேசப்படுகிறது.


காஞ்சீவரம் நெசவுத் தொழில்நுட்பம்:

காஞ்சீவரம் பட்டுப் புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் இரண்டு பேர் தறியில் அமர வேண்டும். இந்த நெசவுக்கு மூன்று விதமான விண் குழித்தறிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தத் தறிகளில் பட்டுப் புடவைகள் ’அடை’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகின்றன. அதாவது உடல் பகுதி தனியாகவும், பல்லு எனப்படும் முந்தானைப் பகுதி தனியாகவும், பார்டர் ஜரிகைப் பகுதி தனியாகவும் முன்று விதமாக தனித் தனியாக நெசவு செய்யப்படுகிறது. காஞ்சீவரம் பட்டு நெசவில் தூய மல்பெரி பட்டு நூல் மற்றும் தூய தங்க, வெள்ளி ஜரிகை நூல் பயன்படுத்தப்படுவதால் இந்திய நெசவுக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான வகை வகையான பட்டுப் புடவைகளில் காஞ்சிப் பட்டு தான் பிரதானமாக முதல் இடம் பிடித்திருக்கிறது.

உடல் முழுதும் சரிகையில் இழைக்கப்பட்டு நெசவு செய்யப் படும் தூய காஞ்சிப் பட்டுப்புடவை ஒன்றின் எடை சுமார் 500 கிராம் வரையிலும் கூட இருக்கலாம். நெசவில் தூய வெள்ளி மற்றும் தங்க நூல் பயன்படுத்தப் படுவதால் புடவையின் கனம் பிற பட்டுப்புடவைகளைக் காட்டிலும் சற்று அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் நேர்த்தியிலும், மனம் கவரும் தன்மையிலும், மென்மையிலும் இதை அடித்துக் கொள்ள இன்னொரு புடவை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொன்னால் கூட அது மிகையில்லை.

காஞ்சீவரத்தில் கைத்தறிகளில் பட்டுப்புடவை எப்படி நெசவு செய்யப் படுகிறது என காட்சியாகக் காண விரும்புவோர் கீழே உள்ள யூ டியூப் விடியோ இணைப்பை அழுத்திப் பாருங்கள்.


விடியோவுக்கான விளக்கம்:
தறியில் அமர்ந்து நெசவு செய்வதற்கு முன்பாக முதலில் கோரா எனப்படும் வெள்ளை பட்டு நூல்களை கைகளால் சுழற்றி தனித் தனியாகப் பகுத்து சிறு சிறு நூற்கட்டுகளாக மாற்றிக் கொள்கின்றனர். பிறகு இந்த கோரா நூற் திரட்டுகளை துல்லியமாக 0.008 கிராம் மட்டுமேயான அளவில் சாயப் பொடி கலந்து கொதிக்கும் நீரில் நீளமான கொம்புகளில் தொங்கலிலிட்டு மாற்றி மாற்றி முக்கி எடுக்கின்றனர். கோரா நூலில் சாயம் ஏறியதும் சாயமேற்றப்பட்ட நூல்கள் அறை வெப்பநிலையில் குளிர்ந்த நீரில் மீண்டும் மீண்டும் அமிழ்த்தி எடுக்கப்பட்டு அதிகப்படியான சாயம் வெளியேற்றப்படுகிறது. பிறகு மாற்றி மாற்றி உதறியும் பிழிந்தும் கோரா நூலில் ஈரம் அகற்றும் வேலை தொடங்குகிறது. ஈரம் அகற்றப்பட்ட சாயமேற்றப்பட்ட பட்டு நூல் அடுத்த படியாக அந்தந்த நிறங்களுக்கு ஏற்ப சர்க்காவில் உருளை வடிவ தனித் தனி நூற்கண்டுகளாக காட் போர்டுகளில் ஸ்பிண்டில்களாகச் சுற்றப்படுகிறது. இந்த உருளை வடிவ ஸ்பிண்டில்கள் அடுத்தபடியாக தறியில் பிணைக்கப்பட்டு நெசவாளர்களால் தனித்துவம் மிக்க பட்டுப் புடவைகளாக நெசவு செய்யப்படுகின்றன. இந்த முறையில் ஒரு புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் 15 நாட்கள் தேவைப்படுகின்றனவாம்.

காஞ்சிப் பட்டின் மற்றொரு சிறப்பம்சம் அவை மடிக்கப்பட்டு கடைகளில் அடுக்கப்பட்டிருக்கும் விதம். ஒரு முறை புடவையைப் பிரித்து விட்டோம் என்றால் கடைக்காரர்கள் உதவியின்றி நம்மால் அவற்றை பழைய படி நறுவிசாக மடிக்கவே முடியாது. இதோ கீழே இணைக்கப்பட்டுள்ள இந்த யூ டியூப் விடியோவில் கோரா நூலைப் பிரித்தெடுத்து அது தறியில் புடவையாக மாறுவதிலிருந்து பிறகு ஒவ்வொரு புடவையாக நேர்த்தியாக மடித்து விற்பனைக்காக அடுக்கப்படும் அழகைக் காணலாம்.


காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீகம்:

இந்து புராணக் கதைகளின் படி காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீக கர்த்தாவாகக் கருதப்படுபவர் துறவி ”மார்கண்டேயர்” மனிதர்களுக்கு மாஸ்டர் டெய்லர் என்று சிலர் இருப்பது போல இவர் கடவுள்களுக்கு மாஸ்டர் நெசவாளர். தாமரைப் பூ தண்டிலிருந்து நூல் எடுத்து இந்துக் கடவுள்களுக்கு இவர் ஆடைகள் நெசவு செய்து தருவாராம். இதிலும் சில கடவுள்களுக்கென்று சில ஸ்பெஷல்கள் நெசவுகள் உண்டு. சிவனுக்கு பருத்தி நெசவு, விஷ்ணுவுக்கு பட்டு நெசவு என்று ஸ்பெஷலாக மார்கண்டேயர் நெய்து கொடுத்ததாக நெசவாளக் குடும்பங்களில் கதைகள் சொல்லப் படுகின்றன. அது மட்டுமல்ல அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா என்று வகைப்படுத்தப் படும் ஏழு முக்கியமான இந்தியப் புனிதத் தலங்களுக்கான வரிசையில் பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுடனான கோயில்கள் மற்றும் கைத்தறிப் பட்டு நெசவு, எனும் பெருமைக்குரிய காரணங்களால் காஞ்சிக்கும் வேத காலம் தொட்டு முக்கியப் பங்குண்டு.

என்றென்றும் மணப்பெண்களுக்கான சிறப்புப் புடவை!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிப் பட்டு என்பது திருமண விழாக்கள் மட்டுமல்ல வாழ்வின் முக்கியமான தருணங்கள் அனைத்திலும் உடுத்துவதற்கு உகந்த ஒரு பெருமை மிகு அடையாளம். பிற விசேஷமான நாட்களில் வேறு புடவைகளுக்கு முக்கியத்துவம் தந்தாலும் மணப்பெண்களுக்கான சிறப்பு உடையாக இன்னமும் கோலோச்சுவது காஞ்சீவரம் பட்டுப் புடவைகள் தான். ஆனால் இப்போது பவர்லூம்கள் அதிகரித்து வருவதால் ஹேண்ட்லூம்களுக்கான முக்கியத்துவம் குறைந்து கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் படு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்லதொரு தீர்வாகத் தான் மத்திய அரசு ”இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்” என்ற விசயத்தை தொடங்கியிருக்கிறது. தொடங்கி ஓராண்டுக்கு மேலாகிறது ஒரே தளத்தில் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான கைத்தறி நெசவாடைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது என்பதைத் தாண்டி இதில் நெசவாளர்களுக்கு குறிப்பிடத்தகுந்த நன்மைகள் என்ன கிடைக்கக் கூடும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்


பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்

விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான்.

பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்

விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை. புதியதாய் பட்டு புடவை வாங்கினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி.

உலகளவில் பல நாட்டு பெண்களும் அணிய விருப்பப்படும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன. பட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்கு அணிந்து செல்லும் போது அங்கிருக்கும் இறை சக்தியை நம் உள்வாங்கி தருகிறதாம். அதன் காரணமாய் ஆலயம் செல்லும்போது அவசியம் பட்டு சேலை கட்டி வருகின்றனர். அதுபோல் பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது.

பார்போற்றும் பட்டு சேலையை பாவையர் உடுத்தி செல்லும் போது உள்ளமெல்லாம் உற்சாகமாய் துள்ளும். அத்தகைய பட்டு சேலைகள் நெய்யப்படும் ஊர்களை வைத்துதான் அதிகமாய் பிரபலமாகின்றன. காஞ்சீபுரம், ஆரணி, தர்மாவரம், திருபுவனம் போன்ற தமிழக பகுதிகளும், பனாரஸ் போன்ற வெளி மாநிலத்தில் பல நகரங்களின் பெயர்களிலும் பட்டு சேலைகள் அழைக்கப்படுகிறது. அந்தந்த ஊரில் நெய்யப்படும் கைதிறன் அடிப்படையில் அவை தனிச்சிறப்பு சேலையாக உலக பிரசித்தி பெற்றுள்ளன.


பட்டு நூலின் முக்கியமான அம்சங்கள் :

உலகளவில் சீனாவிற்கு அடுத்தப்படியாய் இந்தியாவில் தான் பட்டு துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகளுக்கான பட்டு நூலில் நான்கு வகைகள் உள்ளன. அதாவது, மல்பரி, டஸ்ஸர், எரி, முகா போன்றவை தான் அவை.

மங்கையர் மணங்கவரும் பட்டு நூல் வகையில் உலகளவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவது மல்பரி பட்டு தான். அதாவது உலகின் மொத்த பட்டு உற்பத்தியில் 90 சதவீதம் மல்பரி பட்டு வகைதான் பயன்படுத்தப்படுகிறது.

மல்பரி வகை பட்டுப்புழுக்களில் இருந்து இந்த வகை பட்டு நூல் தயாரிக்கப்படுவதால் இதற்கு மல்பரி பட்டு எனப்பெயர். மல்பரி பட்டு நூல் வழவழப்பும், உறுதியும் கொண்டது. மல்பரி பட்டு நூலில் சாயங்கள் ஏற்றுவதும், விரும்பிய டிசைனை உருவாக்குவதும் சுலபமாக உள்ளன. அதிக உற்பத்தி, பயன்படுத்த லகுவான பட்டு நூல் என்பதால் மல்பரி பட்டு முதலிடம் பிடிக்கிறது.

டஸ்ஸர், எரி, முகா போன்ற பட்டு நூல்கள் அஸ்ஸாம் மற்றும் தென் கிழக்கு இந்தியாவில் உள்ள காட்டு பகுதியில் இயற்கையாக வளரும் பட்டு புழுவில் இருந்து தயாரிக்கப்படுபவை. இதன் உற்பத்தி மிக குறைவு என்பதால் இதன் விலையோ மிக அதிகமானது.

இந்த மூன்று ரக பட்டுகளை “வன்யா” என்று அழைப்பர். “வன்யா” ரக பட்டுகள் அதிக வழவழப்பின்றி பருத்தி நூல் போன்றே தோற்றமளிக்கும். மிகுந்த பழக்கப்பட்டவர்களுக்கு தான் இந்த பட்டை அறிய முடியும். மல்பரி பட்டு நூல் விலையை விட வன்யா ரக கழிவு பட்டே மூன்று மடங்கு விலை அதிகமானது.

அஸ்ஸாம் மக்கள் ‘வன்யா” ரக பட்டுகளைதான் விரும்பி அணிகின்றனர். உலக புகழ் பெற்ற இந்த வகை பட்டு நூல்களிலும் பல தரப்பட்ட ஆடைகள் நெய்யப்படுகிறது.

பட்டு சேலையின் தரமும், பாதுகாக்கும் விதமும் :

நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டு சேலை தரமானதா என்ற கேள்விக்கு விடையாய் மத்திய அரசு தரமான பட்டு சேலையின் மீது “சில்க் மார்க்” எனும் முத்திரையை பதித்து தருகிறது. இதன் மூலம் சாதாரண மற்றும் கலப்பட பட்டு சேலைகளை கண்டறிந்து வாங்க முடியும்.

பட்டு சேலையை வீட்டில் துவைப்பதைவிட டிரைவாஷ் கொடுப்பது உத்தமமானது. அதுபோல் பட்டு சேலையை அயர்ன் மடிப்புடன் நீண்டநாள் வைத்திருக்க கூடாது. பிறகு பட்டு புடவை எடுக்கும் போது மடிப்புபடிப்பாய் இழைவிட்டு விடும். பட்டு புடவையை அவ்வப்போது திருப்பி திருப்பி மடித்து வைக்க வேண்டும்.

அதுபோல் இதமான வெயிலில் அவ்வப்போது காயவைத்து பாதுகாக்க வேண்டும். பட்டு சேலையின் மீது ஏதும் கறை படிந்தால் உடனே சாதாரண தண்ணீர் கொண்டே துடைத்து விடவும். அதிக கறை எனில் டூத்பேஸ்ட் கொண்டு துடைத்து விடலாம். பட்டு சேலை பளபளப்புடன் திகழ சிறந்த பராமரிப்பும் அவசியம். 

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர்



திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!!
வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை
இந்த பதிவு எழுத தூண்டியது.
தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது.


இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.


திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர். இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும்
இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.


கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.
இவை எதுவும் தெரியாமல்  நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26.


இந்திய குடியரசு தினம்  ஜனவரி 26.

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.


இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

#வாழ்க_பாரதம்!!!! #ஜெய்கிந்த்!!! #republic_day


வியாழன், 23 ஜனவரி, 2020

இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24.


        இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…!     

        பெண் குழந்தையைப்பாதுகாப்போம்: பெண்மையைப்  போற்றுவோம் ...!

பெண் குழந்தைகள் வாழும் வீடு...அழகியதேவதைகள் வாழும் வீடு..

பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக ஜனவரி 24 ஆம் தேதி (இன்று)  தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.                                               

''மங்கையராய் பிறப்பதற்கே நல்ல  மாதவம்செய்திட வேண்டுமம்மா''… என்று பெண்கள்  பிறப்பின்  சிறப்பு பற்றி கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை  கூறியுள்ளார்.பெண்களை போற்றுவதற்குகிடைத்தவாய்ப்புகள் அனைத்தையும், கவிஞர்களும்,புலவர்களும்,  நன்குபயன்படுத்திவிட்டனர்.நம் இந்தியாவில்நதிகள் அனைத்திற்கும் பெண்களின்பெயரையே வைத்து பெண்மைக்கு பெருமைசேர்த்துள்ளனர் .நம்மைத் தாங்கும் பூமியைபூமாதேவி என்றும், நிலவை பெண்ணாகஉருவகப்படுத்துவதும் காலம் காலமாகநடந்து வருகிறது.

தொல்காப்பியம், போன்ற இலக்கண நூல்கள், சங்கஇலக்கியங்கள்,நீதிநூல்கள்,காப்பியங்கள் போன்ற நூல்களில்பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக்கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண்,பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழைமகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், திருந்திழாய், நெட்டிருங்கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர்மேனியர், சுடர்நுதல்குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல்மகளிர், சில் வளைவிறலி, மனைமாண்இனியோள், பொற்றொடி மகளிர், தென்தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர்,நறுநுதலாள், இல்லாள்,கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண்,இனியார் தோள் போன்ற சிறப்பானசொற்களை பாடல்வரிகளில்கையாண்டுள்ளனர் .

வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும்முக்கியம் என்பதை அறிந்து , அன்றேசங்ககாலப்  புலவர்கள் பெண்களின்பெருமையயும், முக்கியத்துவத்தையும்பாடல்களாக  அமைத்தனர். இப்பாடல்கள்2500 ஆண்டுகளாக மக்கள் மத்தியில்  பெண்பெருமை பேசிக்கொண்டு உயிருடன்உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம். இதே  போன்று சங்ககாலத்தில் ஐம்பதுக்கும்மேற்பட்ட பெண்பாற்  புலவர்கள்இருந்துள்ளனர் .

வரலாற்றில்  போற்றத்தகுந்தவகையில் ஔவையார்,காக்கைப்பாடினியார்,ஆண்டாள்,வேலு நாச்சியார்,ராணி லட்சுமிபாய் ,சாவித்திரி பாபுலே , சரோஜினி நாயுடு , ராணி மங்கம்மாள்,விஜயலட்சுமி பண்டிட் ,டாகடர் .முத்துலட்சுமி , தில்லையாடிவள்ளியம்மை, அன்னைதெரசா,இந்திராகாந்தி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ,  கல்பனா சாவ்லா  போன்றோர் சிறந்தசாதனை பெண்மணியாக  திகழ்ந்து  பெண்மைக்கே பெருமை சேர்த்துள்ளார் .

பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்ததமிழறிஞர் மாயூரம் வேதநாயகர்  பெண்கள்முன்னேற்றத்திற்காக அவர்செய்திருக்கும்தொண்டுகள் அளவிடமுடியாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக.1869-ல் பெண்களுக்கெனத்தனிப்பள்ளிஒன்றை மாயூரத்தில் சொந்தமுறையில்தொடங்கி நடத்தினார்.

வேதநாயகாரின் 'பெண்மதி மாலை', 'பெண்கல்வி', 'பெண் மானம்' என்னும்நுால்களிலும் பெண்களின்முன்னேற்றத்திற்கான பலஅரியசிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில்பெண்கள் முன்னேற்றத்திற்காகப்பாடுபட்டசான்றோர்கள் பட்டியலில்வேதநாயகருக்குமுதல் இடம் உண்டு.

பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒருபிரிக்கமுடியாத அங்கம். அவள்இல்லையேல் வீடும், நாடும் இயங்கமுடியாது . அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும் சக்தியாகவும் காணப்படுகிறாள். வரலாற்றுக்கு முற்பட்டகாலங்களிலும், சங்ககாலங்களிலும்,அவளின் அறிவாற்றல், சிறப்புகள், பெருமைகள் போன்றவற்றைபல்வேறு  நூல்களின்  வாயிலாகஅறிகின்றோம்.பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின்வளர்ச்சி காலத்தில், தனது  திறமையை யும், ஆற்றலையும்,வெளிப்படுத்தி சமூகத்தில்பெண்கள் சிறந்த நிலையைஅடைந்துள்ளனர்  என்பதுவெளிப்படையான உண்மை . பெண்குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் மகிழ்ச்சியை  அளவிட  முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும், 'ஏஞ்சல் ' எனவும், ‘பர்கத்‘ எனவும்அவரவர் மதம், இனத்திற்கு ஏற்பஒவ்வொருவகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும்பக்குவம் நமக்கு உண்டு.

பழமைவாதம், மூடநம்பிக்கைகளை ஒருகாலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக்கொண்டு பயணிக்காமல் எந்த திசையைநோக்கி பயணித்தால்,அவர்களை வழி  நடத்தலாம் என்று , நாம் அவர்களுடன்  பயணிக்க வேண்டும் . பெண் குழந்தைகள்தடம் மாறி செல்லாமலிருக்க , அவர்களையும் அவர்களின் உள்ளத்தின்உணர்வுகளையும் புரிந்து கொண்டு  அவர்களை நல்ல முறையில்  வழிநடத்தவேண்டும் .

இன்று பல சிறுமிகள்காதல்வசப்படுகிறார்கள்.  இதற்கு காரணம்பெற்றோர்கள்தான். சில பெற்றோர்கள்சுதந்திரமாக வளர வேண்டும் என்றுகுழந்தைகளின் நடத்தைகளை கண்டுகொள்ளமாட்டார்கள். இன்னும் சிலபெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம்  மிகவும் கண்டிப்புடனும் நந்துகொள்வார்கள். இவை இரண்டுமே தவறு.குழந்தைகளிடம்சில நெறிமுறைகளோடும், நட்போடும்  பழகவேண்டும்.

 அதற்கு முதலில் அவர்கள் பேசுவதைகாதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப்பேச வேண்டும். அவர்களின் நட்பைஆதரிக்க வேண்டும்.அதே நேரம்  அவர்களுக்கான எல்லையையும்அவர்களின் மனம்  நோகாதவாறு புரியவைக்க வேண்டும்.உங்கள் பெண்குழந்தையின் மேல் நீங்கள்  முழு நம்பிக்கை  வைத்திருப்பதை அவர்களுக்குத்தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள்,முடிவு எடுத்தல்  போன்றவற்றை உங்களுடன்பகிர்ந்துகொள்வார்கள்.

 பெண் குழந்தையின்  உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்துஅவர்களைப்  பாதுகாக்க அவர்களுக்குக்கற்றுத் தரவேண்டும். குழந்தைக்கு விபரம்தெரிந்ததுமே, அவர்களுக்கு ‘’குட் டச், பேட்டச்’’ பற்றிச் சொல்லி கொடுப்பதுகாலத்தின்அவசியமாகும். உங்களைச்சுற்றியிருக்கும்பெண் பிள்ளைகளை  நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின்குழந்தைப் பருவக்கொண்டாட்டத்தைசிதைக்காமல் இருந்தால் போதுமானது. மேலும் நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொருபெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்தகுறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்துவாழவிடுங்கள். அதுவே அவர்களுக்கு பெரிய வாழ்த்தாக அமையும்!.

இந்தியாவில் பெண் குழந்தைகளைவழிநடத்தும் விதம் காலம் காலமாகஅன்புடனும், அரவணைப்புடனும்தொடர்கிறது. பெரியோரை மதிப்பது, சமூகசிந்தனைகளை வளர்ப்பது  போன்றவற்றை  பெண் குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுக்கிறோம்..

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்தகல்வி மூலம் கற்று கொடுக்கவேண்டும்.அவர்களை சரியான பாதையில்கால் பதிக் வைத்து, அவர்களுடன் கைகோர்த்து,அவர்கள் செல்லும் பாதையைசெம்மைப்படுத்தி, வழித்தடங்களில்இருக்கும் கரடு முரடுகளையும், முட்புதர்களையும்,அகற்றி விட்டாலேபோதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி,பெண் குழந்தைகளிடம் உள்ளது.எந்த விதகேள்விகளுக்கும் அவர்களாவே  ஒரு சிறந்ததிறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து. எந்தஒரு சூழ்நிலையிலும்  சிக்கல்களைசமாளித்து  வெற்றி வாகை சூட சிறந்த சமூகசிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்குவழங்கப்பட வேண்டும். . கல்வி தான் சிறந்தபாதுகாப்பு என்பதை பெண்களுக்குஉணர்த்த வேண்டும்.

ஆறுதலாக இளைப்பாறும் மடிஒருதாயாகவோ... தந்தையாகவோ... சிறந்தநண்பராகவோ... இருக்க வேண்டும் .எனசொல்லி கொடுக்க வேண்டும். பெண்களைவெறும் கவர்ச்சிப் பொருளாகவும் , அழகுப்பதுமைகளாகவும்         பெண்குழந்தைகளை காட்டாமல்,தோல்விகண்டாலும், துவண்டு போகாமல், அதைஎதிர்த்துப்  போரிடும்குணத்தையும்,தன்னைத்  தானே செதுக்கிக்கொண்டு ஒருகுடும்பத்தையும்,சமூகத்தையும்  அவர்களால்மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை நாம்அனைவரும் உணரவேண்டும்.

பெண் குழந்தைகள் அழகுப்பதுமைகள்அல்ல... அறிவுச்சுடர்கள்.

இன்றைய  பெண் குழந்தைகள்..! நாளைய  சாதனைப்  பெண்மணிகள்…!

 பெண் குழந்தையைப் பாதுகாப்போம்:பெண்மையை போற்றுவோம் ...!

த.புவனேஸ்வரிமகேந்திரன், எம்.ஏ.எம்.எட்.
மதி கல்வியகம்,திருநெல்வேலி.

இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…!


     இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…!              பெண் குழந்தையைப்பாதுகாப்போம்: பெண்மையைப்  போற்றுவோம் ...! 
பெண் குழந்தைகள் வாழும் வீடு...அழகியதேவதைகள் வாழும் வீடு...
பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக ஜனவரி 24 ஆம் தேதி (இன்று)  தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.     ''மங்கையராய் பிறப்பதற்கே நல்ல  மாதவம்செய்திட வேண்டுமம்மா''… என்று பெண்கள்  பிறப்பின்  சிறப்பு பற்றி கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை  கூறியுள்ளார்.பெண்களை போற்றுவதற்குகிடைத்தவாய்ப்புகள் அனைத்தையும், கவிஞர்களும்,புலவர்களும்,  நன்குபயன்படுத்திவிட்டனர்.நம் இந்தியாவில்நதிகள் அனைத்திற்கும் பெண்களின்பெயரையே வைத்து பெண்மைக்கு பெருமைசேர்த்துள்ளனர் .நம்மைத் தாங்கும் பூமியைபூமாதேவி என்றும், நிலவை பெண்ணாகஉருவகப்படுத்துவதும் காலம் காலமாகநடந்து வருகிறது.
தொல்காப்பியம், போன்ற இலக்கணநூல்கள் ,சங்க இலக்கியங்கள்,நீதிநூல்கள்,காப்பியங்கள் போன்ற நூல்களில்பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக்கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண்,பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழைமகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், திருந்திழாய், நெட்டிருங்கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர்மேனியர், சுடர்நுதல்குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல்மகளிர், சில் வளைவிறலி, மனைமாண்இனியோள், பொற்றொடி மகளிர், தென்தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர்,நறுநுதலாள், இல்லாள்,கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண்,இனியார் தோள் போன்ற சிறப்பானசொற்களை பாடல்வரிகளில்கையாண்டுள்ளனர் .
வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும்முக்கியம் என்பதை அறிந்து , அன்றேசங்ககாலப்  புலவர்கள் பெண்களின்பெருமையயும், முக்கியத்துவத்தையும்பாடல்களாக  அமைத்தனர். இப்பாடல்கள்2500 ஆண்டுகளாக மக்கள் மத்தியில்  பெண்பெருமை பேசிக்கொண்டு உயிருடன்உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம். இதே  போன்று சங்ககாலத்தில் ஐம்பதுக்கும்மேற்பட்ட பெண்பாற்  புலவர்கள்இருந்துள்ளனர் .
வரலாற்றில்   போற்றத்தகுந்தவகையில்ஔவையார் ,காக்கைப்பாடினியார்,ஆண்டாள்,வேலு நாச்சியார்,ராணி லட்சுமிபாய் ,சாவித்திரி பாபுலே , சரோஜினி நாயுடு , ராணி மங்கம்மாள்,விஜயலட்சுமி பண்டிட் ,டாகடர் .முத்துலட்சுமி , தில்லையாடிவள்ளியம்மை, அன்னைதெரசா,இந்திராகாந்தி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ,  கல்பனா சாவ்லா  போன்றோர் சிறந்தசாதனை பெண்மணியாக  திகழ்ந்து  பெண்மைக்கே பெருமை சேர்த்துள்ளார் .
பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்ததமிழறிஞர் மாயூரம் வேதநாயகர்  பெண்கள்முன்னேற்றத்திற்காக அவர்செய்திருக்கும்தொண்டுகள் அளவிடமுடியாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக.1869-ல் பெண்களுக்கெனத்தனிப்பள்ளிஒன்றை மாயூரத்தில் சொந்தமுறையில்தொடங்கி நடத்தினார்.
வேதநாயகாரின் 'பெண்மதி மாலை', 'பெண்கல்வி', 'பெண் மானம்' என்னும்நுால்களிலும் பெண்களின்முன்னேற்றத்திற்கான பலஅரியசிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில்பெண்கள் முன்னேற்றத்திற்காகப்பாடுபட்டசான்றோர்கள் பட்டியலில்வேதநாயகருக்குமுதல் இடம் உண்டு.
பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒருபிரிக்கமுடியாத அங்கம். அவள்இல்லையேல் வீடும், நாடும் இயங்கமுடியாது . அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும்சக்தியாகவும்காணப்படுகிறாள். வரலாற்றுக்கு முற்பட்டகாலங்களிலும், சங்ககாலங்களிலும்,அவளின் அறிவாற்றல், சிறப்புகள், பெருமைகள் போன்றவற்றைபல்வேறு  நூல்களின்   வாயிலாகஅறிகின்றோம்.பல்வேறுஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின்வளர்ச்சி காலத்தில், தனது  திறமையை யும், ஆற்றலையும்,வெளிப்படுத்தி சமூகத்தில்பெண்கள் சிறந்த நிலையைஅடைந்துள்ளனர்  என்பதுவெளிப்படையான உண்மை .பெண்குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில்ஏற்படும் மகிழ்ச்சியை  அளவிட  முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும், 'ஏஞ்சல் ' எனவும், ‘பர்கத்‘ எனவும்அவரவர் மதம், இனத்திற்கு ஏற்பஒவ்வொருவகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும்பக்குவம் நமக்கு உண்டு.
பழமைவாதம், மூடநம்பிக்கைகளை ஒருகாலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக்கொண்டு பயணிக்காமல் எந்த திசையைநோக்கி பயணித்தால்,அவர்களை வழி  நடத்தலாம் என்று , நாம் அவர்களுடன்  பயணிக்க வேண்டும் . பெண் குழந்தைகள்தடம் மாறி செல்லாமலிருக்க , அவர்களையும் அவர்களின் உள்ளத்தின்உணர்வுகளையும் புரிந்து கொண்டு  அவர்களை நல்ல முறையில்  வழிநடத்தவேண்டும் . 
இன்று பல சிறுமிகள்காதல்வசப்படுகிறார்கள்.  இதற்கு காரணம்பெற்றோர்கள்தான். சில பெற்றோர்கள்சுதந்திரமாக வளர வேண்டும் என்றுகுழந்தைகளின் நடத்தைகளை கண்டுகொள்ளமாட்டார்கள். இன்னும் சிலபெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம்  மிகவும் கண்டிப்புடனும் நந்துகொள்வார்கள். இவை இரண்டுமே தவறு.குழந்தைகளிடம்சில நெறிமுறைகளோடும், நட்போடும்  பழகவேண்டும்.
 அதற்கு முதலில் அவர்கள் பேசுவதைகாதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப்பேச வேண்டும். அவர்களின் நட்பைஆதரிக்க வேண்டும்.அதே நேரம்  அவர்களுக்கான எல்லையையும்அவர்களின் மனம்  நோகாதவாறு புரியவைக்க வேண்டும்.உங்கள் பெண்குழந்தையின் மேல் நீங்கள்  முழு நம்பிக்கை  வைத்திருப்பதை அவர்களுக்குத்தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள்,முடிவு எடுத்தல்  போன்றவற்றை உங்களுடன்பகிர்ந்துகொள்வார்கள்.
 பெண் குழந்தையின்  உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்துஅவர்களைப்  பாதுகாக்க அவர்களுக்குக்கற்றுத் தரவேண்டும். குழந்தைக்கு விபரம்தெரிந்ததுமே, அவர்களுக்கு ‘’குட் டச், பேட்டச்’’ பற்றிச் சொல்லி கொடுப்பதுகாலத்தின்அவசியமாகும். உங்களைச்சுற்றியிருக்கும்பெண் பிள்ளைகளை  நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின்குழந்தைப் பருவக்கொண்டாட்டத்தைசிதைக்காமல் இருந்தால் போதுமானது. மேலும் நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொருபெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்தகுறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்துவாழவிடுங்கள். அதுவே அவர்களுக்கு பெரிய வாழ்த்தாக அமையும்!.
இந்தியாவில் பெண் குழந்தைகளைவழிநடத்தும் விதம் காலம் காலமாகஅன்புடனும், அரவணைப்புடனும்தொடர்கிறது. பெரியோரை மதிப்பது, சமூகசிந்தனைகளை வளர்ப்பது  போன்றவற்றை  பெண் குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுக்கிறோம்..
பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்தகல்வி மூலம் கற்று கொடுக்கவேண்டும்.அவர்களை சரியான பாதையில்கால் பதிக் வைத்து, அவர்களுடன் கைகோர்த்து,அவர்கள் செல்லும் பாதையைசெம்மைப்படுத்தி, வழித்தடங்களில்இருக்கும் கரடு முரடுகளையும், முட்புதர்களையும்,அகற்றி விட்டாலேபோதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி,பெண் குழந்தைகளிடம் உள்ளது.எந்த விதகேள்விகளுக்கும் அவர்களாவே  ஒரு சிறந்ததிறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து. எந்தஒரு சூழ்நிலையிலும்  சிக்கல்களைசமாளித்து  வெற்றி வாகை சூட சிறந்த சமூகசிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்குவழங்கப்பட வேண்டும். . கல்வி தான் சிறந்தபாதுகாப்பு என்பதை பெண்களுக்குஉணர்த்த வேண்டும்.
ஆறுதலாக இளைப்பாறும் மடிஒருதாயாகவோ... தந்தையாகவோ... சிறந்தநண்பராகவோ... இருக்க வேண்டும் .எனசொல்லி கொடுக்க வேண்டும். பெண்களைவெறும் கவர்ச்சிப் பொருளாகவும் , அழகுப்பதுமைகளாகவும்         பெண்குழந்தைகளை காட்டாமல்,தோல்விகண்டாலும், துவண்டு போகாமல், அதைஎதிர்த்துப்  போரிடும்குணத்தையும்,தன்னைத்  தானே செதுக்கிக்கொண்டு ஒருகுடும்பத்தையும்,சமூகத்தையும்  அவர்களால்மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை நாம்அனைவரும் உணரவேண்டும்.
பெண் குழந்தைகள் அழகுப்பதுமைகள்அல்ல... அறிவுச்சுடர்கள்.
இன்றைய  பெண் குழந்தைகள்..! நாளைய  சாதனைப்  பெண்மணிகள்…!
 பெண் குழந்தையைப் பாதுகாப்போம்:பெண்மையை போற்றுவோம் ...!