உங்கள் குழந்தைக்கு தெரிந்தே கெடுதல் செய்வீர்களா...? இத படியுங்க.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தது என்றால் இந்த இனிப்பு வகை தான். இதை வித்தியாசமாக சாக்கலேட் , பிஸ்கட், கேக், ஐஸ் கிரீம், இனிப்பு பிரெட், என பல்வேறு வகையாக தயாரித்து விற்பனை செயகின்றனர். இதை குழந்தைகள் அதிகம் உட்கொண்டால் வரும் பாதிப்புகளை பற்றி தெரியுமா? வாருங்கள் காண்போம்.
ஆனால் இப்போதெல்லாம் பாக்கெட் செய்யப்பட்ட இனிப்புகளை குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதனால் அவர்களுக்கு சர்க்கரை வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேலும் இதைய நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவும்.
வெளியில் சென்று வீடு திரும்பும்பொழுது வாங்கி வரும் தின் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
கடையில் வாங்கி தரும் பொருட்கள் நீங்கள் தயாரித்தது இல்லை என்பதை உணர வேண்டும். ஒரு சில நல்ல உண்வு படத்தை தவிர்த்து.
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும்போழுது டிவி விளம்பரங்களில் வரும் இனிப்பு பொருட்களை அவர்கள் பார்த்து அடிமையாகி விடுவார்கள் அதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும். எனவே சீமை சர்க்கரை மற்றும் அஸ்க்கா சர்க்கரை மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை முடிந்த அளவு தவிர்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக