திங்கள், 11 ஜூன், 2018

வெந்நீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா?

வெந்நீர் அருந்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா?

வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் சில நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மூக்கடைப்பு குணமடைகிறது:
சூடான நீரில் இருந்து வரும் ஆவி மூக்கடைப்பை நீக்குகிறது. வெந்நீர் அருந்தும் முன்பு வெந்நீரில் இருந்து வரும் ஆவியை உள் இழுப்பதினால் மூக்கடைப்பு குணமடைகிறது. சைனஸிலிருந்து கூட விடுபட முடியும். நம் தொண்டை பகுதியில் உள்ள சளியை நீக்க வெந்நீர் ஆவி உறுதுணையாக இருக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது:
வெந்நீர் அருந்துவதால் செரிமான அமைப்பு மேம்படுகிறது மற்றும் செரிமான சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. செரிமானம் அடைய முடியாத உணவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வெந்நீர் உதவுகிறது.
நரம்பு மண்டலத்தை சரி செய்கிறது:
நரம்பு மண்டலம் சரியான முறையில் இயங்கவில்லை என்றால் உங்கள் உடல் உங்கள் கட்டளைக்கு அடிபணிந்து நடக்காது. ஏனென்றால் உடலில் நடக்கும் ஒவ்வொரு செயலும் நரம்பு மண்டலத்தை சார்ந்தே உள்ளது. நரம்பு மண்டலத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்நீர் தினமும் பருகுங்கள்.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் 70 % உடல் உபாதைகள் வராது. உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணம் உடலில் இருந்து வெளியேறாமல் தங்கி இருக்கும் அசுத்தங்கள். இந்த அசுத்தங்களை மொத்தமாக வெளியேற்ற தினமும் காலையில் எழுந்ததும் வெந்நீரில் பருகுவது நல்லது.
இரவு உறங்க செல்லும் முன்பு வெந்நீர் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முடியும். வெந்நீர் குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மதியம் வெந்நீர் குடிப்பது சரியான தேர்வு அல்ல, மூன்று வேளையும் வெந்நீர் குடித்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்காமல் அப்படியே இருக்கும். எனவே ஒரு வேளை பச்சை தண்ணீர் மட்டுமே பருகுங்கள். மதியம் என்றால் மிகவும் சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக